RSS

பள்ளிக்கூடங்கள் திறந்தன ….

08 Jun

ஜூன் மாசம் பிறந்தாச்சு
விடுமுறை பறந்தாச்சு
பள்ளிகள் திறந்தாச்சு
விளையாட்டு மறந்தாச்சு ….
மாணவ மணிகள்
வண்ணச் சீருடையணிந்து
இருகை வலித்திட
முதுகை கனமாக்கும்
புத்தக பொதிகளை
சுமப்பதை காணுகையில்
ஈன்றெடுத்த பெற்றோரது
மனசும் வலிக்குது ….
பரீட்சை விடுப்புகளில்
கழித்த பொழுதுகள்
மனசை பிசைந்தாலும்
துள்ளுகிற ஆனந்தத்தோடு
பள்ளிகளுக்கு சென்றிடுக …
இறையருளின் ஆற்றலில்
கற்றிடும் பாடங்களை
அறிவெனும் உளியெடுத்து
செதுக்கிடும் சிற்பிகளே
சிந்தனைகளை புதுப்பித்து
வெற்றிக்குரிய தடங்களை
பதிப்பித்து முன்னேறிடுக ….
கல்விக்காக பயணித்திடும்
பாதைகளை சீரமைத்து
பாரதத்தை வல்லரசாக்க
மேதைகளாய் உயர்ந்திடுக ….
புதிய கல்வியாண்டிற்காக
மாறுகிற வகுப்பறைகளில்
ஆசிரிய பெருந்தகைகள்
கூறுகிற அறிவுரைகளை
செவிப்பறைகளில் அமர்த்தி
ஊறுகிற ஞாபகங்களோடு
முயன்று பயின்றிடுக ….
வளமார்ந்த வாழ்த்துகள் …..
அப்துல் கபூர்

15622389_1801989133388713_3362029263444783598_n

Abdul Gafoor

Advertisements
 
Leave a comment

Posted by on June 8, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: