RSS

பேசுங்கள் கேட்கப்படும் ….!

13 Jun

அழகாக பேசுங்கள்,
அநாகரிக சொற்களை தவிர்த்து இனிமையான நல்ல பொருளுள்ள
சொற்களைக் கொண்டு முழுமையான வாக்கியமாக பேசுங்கள்.
அன்பாக பேசுங்கள்,
கேட்பவர் மனம் புண்படாதவாறு கனிவுடன் உண்மையை மனங்கவருமாறு பேசுங்கள்.
அறிவாக பேசுங்கள்,
ஆதாரத்தோடு அழுத்தமாக ஆனால் ஆரவாரம் இல்லாமல் எடுத்து விளக்கிப் பேசுங்கள்.
உண்மையை பேசுங்கள்,
உண்மையல்லாதவற்றை எப்போதுமே பேச்சில் தவிர்த்துவிடுங்கள். நல்ல கருத்துக்களை எல்லோரோடும் பேசுங்கள்.
புரியும்படி பேசுங்கள்,
சொல்வதை தெளிவாக கேட்பவர் காணும்படி முணுமுணுப்பதை தவிர்த்து நேராக நேர்மையாக பேசுங்கள்.
நேரடியாக பேசுங்கள்,
சுற்றிவளைக்காமல் இரட்டை அர்த்தங்கள் ஊடுருவாமல் தெளிந்த நீரோடைபோல் பேசுங்கள்.
தெரிந்ததை பேசுங்கள்,
தெரியாததை தெரிந்ததுபோல் பேசாதீர்கள் அது உங்களின் நேர்மையில்லாத நிலைப்பாட்டை தோலுரித்து காட்டிவிடும்.
இணக்கமாக பேசுங்கள்,
கொடுஞ்ச்சொற்களை தவிர்த்து சொல்லவேண்டியதை நயமாக இன்முகத்துடன் எடுத்துச்சொல்லுங்கள்.
நல்வழிப்படுத்த பேசுங்கள்,
நன்மையான கருத்துக்கள் கேட்பவர் உள்ளத்தில் விதைபோல் ஊன்றி விருட்சமாய் வளர்ந்து பலன்தரும் வகையில் பேசுங்கள்.
ஈடுபாட்டுடன் பேசுங்கள்,
ஏனோதானோ என்றில்லாமல் சுற்றிவளைக்காமல் சொல்ல வந்ததை திருத்தமாக கண்களை பார்த்து பேசுங்கள்.
முழுமையாக பேசி பரஸ்பரம் பகிரும் நற்குணத்தை இறைவன் மனிதருக்கு மட்டுமே வழங்கியுள்ளான் என்பதை உணர்ந்து உருப்படும்படி பேசுங்கள்.
எண்ண ஓட்டம் ….!
தொடரலாம்.1915784_1752216725002117_6437085887224788060_n

ராஜா வாவுபிள்ளை
Advertisements
 
Leave a comment

Posted by on June 13, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: