RSS

சுங்கம் இலவச அங்காடிகள் ….

20 Jun

சுங்கம் இலவச அங்காடிகள் ….
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
வளைகுடா விமான நிலையங்களில் பன்னாட்டு பயணிகளின் நெரிசலான நடமாட்டத்தோடு மிகவும் பரபரப்பாக மின்னொளியில் இயங்குவது துபாய் ஏர்போர்ட் எனபதை பயணிகள் நன்கறிவர் ….
அவரவர் புறப்படும் பல்வேறு நாடுகளிலிருந்து துபாய் ஏர்போர்ட் வந்திறங்கியதும் தங்களது குழந்தைகளுக்கும் உறவுகளுக்கும் சாக்லேட் மற்றும் இதர பொருட்களை டூட்டி ப்ரீ ஷாப்புகளில் இரண்டு அல்லது மூன்றுக்கு ஒன்று இலவசம் எனபதில் மயங்கி அதிகமான விலைகள் கொடுத்து கிலோ கணக்கில் வாங்கி இரண்டு மூன்று தோள் பைகளில் அடைத்து துபாய் ஏர்போர்ட்டில் சுங்க வரிகள் எதுவும் செலுத்தாமல் ஊருக்கு கொண்டு வருவது நேற்று வரை சாதாரண நிகழ்வாய் அமைந்தது ….
ஆனால் தற்போது சில மாதங்களாக டூட்டி ப்ரீ ஷாப்புகளில் வாங்கும் பொருட்களுக்கு சுங்க வரிகள் செலுத்த வேண்டுமென்று துபாய் ஏர்போர்ட் புதிய நிபந்தனை விதித்துள்ளதால் பயணிகள் நிந்தனை அடையும் சூழல்கள் ஏற்பட்டுள்ளது ….
அதுவும் தாங்கள் பணியாற்றும் நாடுகளிலிருந்து ஏழு கிலோ தோள் பையில் எடுத்து வந்தாலும் டூட்டி ப்ரீயில் வாங்கிய பொருட்களோடு சேர்த்து ஒரு பயணிக்கு பத்து கிலோ மட்டுமே அனுமதிக்கிறார்கள் …
பத்துக்கு மேல் ஒரு கிலோ அதிகமாக இருந்தாலும் அதற்கு 35 திரகம்ஸ் வரி விதிக்கிறார்கள் …
விவரங்கள் தெரியாத பயணிகள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குகையில் டூட்டி ப்ரீயின் விற்பன்னர்கள் இது குறித்து எதுவும் நம்மிடம் சொல்வதில்லை வாங்கிய பின்னரே வரிகள் குறித்து சொல்கிறார்கள் ….
கழிந்த ஞாயிறு அதிகாலை சவுதியிலிருந்து பயணித்து எங்களோடு இணைந்த குமரி மாவட்டம் சார்ந்த பயணி ஒருவர் 200 டாலருக்குரிய சாக்லேட் உட்பட்ட பொருட்களை அதிக சுமை என்று வரிகள் கட்ட இயலாமலும் வாங்கியவைகளை திருப்பி கொடுக்க அனுமதிக்காததாலும் அவர் கோபத்தோடு அப்படியே வெளியில் போட்டு விட்டு பயணத்தார் ….
இன்னும் சிலர் புதிய சூழல்கள் தெரியாமல் அதிக பொருட்கள் வாங்கியதால் கூடுதல் வரிகள் கட்டி பயணித்தனர் ….
ஆகவே சகோதர பயணிகளே இனி மேல் சுங்கம் இலவச அங்காடிகளில் அதிக பொருட்கள் வாங்கும் ஆசையை விட்டு குறைவான பொருட்கள் மட்டும் வாங்கவும் ….
நீங்கள் அவதியுறுவதை தவிர்க்கவே இந்த பதிவை எழுதியுள்ளேன் ….
அன்புடன்

அப்துல் கபூர்
20.06.2017 ….

படங்கள் உதவி

Advertisements
 
Comments Off on சுங்கம் இலவச அங்காடிகள் ….

Posted by on June 20, 2017 in 1

 

Comments are closed.

 
%d bloggers like this: