RSS

பான்-ஆதார் இணைப்பு – இன்பாக்ஸ் கேள்விகள்

01 Jul

• பான் கார்டையும் ஆதாரையும் இணைக்க வேண்டுமா?
— ஆமாம் இணைக்க வேண்டும்.
• ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னதாக இணைத்தாக வேண்டும், இல்லையேல் பான் கார்டு செல்லாதாகி விடுமா?
— இல்லை. அப்படி ஏதும் இல்லை. பீதியடைய வேண்டாம்.
• பின்னே ஜூலை 1 என்னும் குழப்பம் என்ன?
— ஜூலை 1ஆம் தேதி முதல் புதிதாக பான் கார்டு வாங்குவோர், கட்டாயமாக ஆதாருடன் இணைக்கப்படுவார்கள்.
ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி பான் கார்டு வைத்திருப்பவர்கள் – அதாவது, ஏற்கெனவே பான் கார்டு வாங்கியவர்கள், தமது ஆதார் கார்டு எண்ணை அரசு குறிப்பிடும் கெடு தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அந்தத் தேதிக்குள் தெரிவிக்காவிட்டால் அதற்குப் பிறகு பான் கார்டு ரத்தாகி விடும்.
அதாவது, அந்தக் கெடு தேதி இன்னும் அரசே அறிவிக்கவில்லை.
“Every person who has been allotted permanent account number as on the 1st day of July, 2017, and who is eligible to obtain Aadhaar number, shall intimate his Aadhaar number to such authority in such form and manner as may be prescribed, on or before a date to be notified by the Central Government in the Official Gazette: Provided that in case of failure to intimate the Aadhaar number, the permanent account number allotted to the person shall be deemed to be invalid and the other provisions of ..
எனவே, இன்று இரவுக்குள் இணைக்காவிட்டால் ரத்தாகி விடும் என்ற பீதியில் இன்கம்டாக்ஸ் வலைதளத்தில் போய் தட்டாதீர்கள். அந்த வலைதளம் லோடு தாங்காமல் திணறி கிராஷ் ஆகி இருக்கிறது. நிதானமாகச் செய்யலாம். (அது யாருப்பா டிஜிட்டல் இந்தியான்னு சத்தம் போடறது…!!)
அப்புறம்…
எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைக்கலாம்.
ஆதார் அட்டை வாங்கும்போது பதிவு செய்த செல்பேசியிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்டவாறு சேதி அனுப்பவும்.
(Send SMS to 567678 or 56161 from your registered mobile number in following format)
UIDPAN<SPACE><12 digit Aadhaar><Space><10 digit PAN>
Example: UIDPAN 123456789123 AKPLM2124M
எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்க வேண்டும் என்றால், பான் கார்டு, ஆதார் கார்டு இரண்டிலும் பிறந்த தேதி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைக்கவும்.
பி.கு. – வருமான வரி அறிக்கை – இன்கம் டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பிக்க ஆதார் – பான் இணைப்பு அவசியம் என்று அரசு சொன்னது. ஆனால் உச்சநீதிமன்றம் இப்போதைக்கு தடை விதித்திருக்கிறது. பான்-ஆதார் இரண்டும் வைத்திருப்பவர்கள் இரண்டையும் குறிப்பிடலாம். ஆதார் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, பான் மட்டும் வைத்திருப்பவர்கள் ஆதார் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்று சொல்லியிருக்கிறது.

15977501_1291765494179554_1397526056403255663_n

Shahjahan R

Advertisements
 
Leave a comment

Posted by on July 1, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: