RSS

சினிமா நாம் நினைக்குமளவுக்கு பிரும்மாண்டமான தொழில்துறை அல்ல.

05 Jul

சினிமா வர்த்தகம் குறித்த எண்கள் எப்போதுமே ஊதிப் பெருக்கப் படுவதுதான். குறிப்பாக சமூகவலைத்தளங்கள் பிரபலமான பிறகு.
ரஜினிக்கு சம்பளம் 55 கோடி என்பார்கள். கமல் 40 வாங்குகிறாராம். விஜய்க்கு 30. அஜீத் எப்படியும் 50 வாங்குவாரு. சங்கமித்ரா ஆயிரம் கோடி பட்ஜெட்டாம். நயன்தாரா எட்டை தொட்டுட்டாங்க. தனுஷுக்கே பத்துன்னா சிம்பு கண்டிப்பாக பன்னெண்டு வாங்குவாப்புலே. மூணே நாளில் நூறு கோடி கிராஸ். சூர்யாவுக்கு இருபதுன்னதுமே ஏ.ஆர்.முருகதாஸ் மேலே ஒண்ணு போட்டு இருபத்தி ஒண்ணா வாங்கிட்டாரு.
இஷ்டத்துக்கும் எழுதுகிறார்கள். தாறுமாறாக பேசுகிறார்கள். குறிப்பாக இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதியே யூட்யூப் சானல் நடத்தி ‘ப்ரெஸ்’ ஆகிவிட்டவர்கள்.
ஒரு படத்தின் தயாரிப்பு செலவு, விற்பனையான தொகை, நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம், வசூல் நிலவரம் உள்ளிட்ட விஷயங்களின் உண்மையான எண்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கும், ஆடிட்டிங் செய்பவர்களுக்கும்தான் தெரியும்.
அதனால்தான் கமல்ஹாசன் எப்போதுமே இந்த பட்ஜெட், சம்பளம் விஷயங்களை பொதுவில் கமிட் செய்துக் கொள்வதில்லை (அவருடைய கொடுக்கல் வாங்கல் மொத்தமும் வெள்ளைதான்). சில ஆண்டுகளுக்கு முன்புகூட ‘மருதநாயகம்’ பற்றிய பேச்சுவந்தபோது, “நூறு கோடி செலவாகும். யாரு அவ்வளவு முதலீடு போடமுடியும்” என்றார். “நூறு எல்லாம் இப்போதான் அசால்ட் ஆச்சே சார்” என்று பதிலுக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் சொல்லுறது நெஜமான நூறு” என்று சிரித்தார். இப்போதுகூட கமலுக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்காக 65 கோடி என்று அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில்தான் தமிழ் சினிமா வர்த்தகத்தின் ஒட்டுமொத்த வருடாந்திர டர்ன்ஓவர் எவ்வளவு என்பது தெரியவந்திருக்கிறது. தோராயமாக ஏழாயிரத்து ஐநூறு கோடி. இதில் நாலில் ஒரு பங்கு கேண்டீன் மற்றும் பார்க்கிங் வருமானம். அதாவது தமிழகத்தில் இருக்கும் (குத்துமதிப்பாக) ஆயிரம் தியேட்டர்களும் இணைந்து ஒருநாளைக்கு 20 முதல் 25 கோடி வரைதான் காசு பார்க்கின்றன. இதில் தியேட்டர் நிர்வாக செலவுகள், தியேட்டர் மற்றும் விநியோகஸ்தரின் பங்குத்தொகை பிரிப்பு, பப்ளிசிட்டி உள்ளிட்ட விஷயங்களையெல்லாம் கணக்கு போட்டால் காசு போட்டவனுக்கெல்லாம் ஆழாக்குதான் மிஞ்சும்.
சினிமா நாம் நினைக்குமளவுக்கு பிரும்மாண்டமான தொழில்துறை அல்ல. குடிசைத்தொழிலுக்கு கொஞ்சம் தேவலாம் போல.

profile photo

?????

Yuva Krishna
Advertisements
 
Leave a comment

Posted by on July 5, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: