RSS

கிண்ணத்தப்பமும் திருவாங்கோடும்..!!

06 Jul

Noor Mohamed

சிலவகை பதார்த்தங்களுக்கு சில ஊர்கள் புகழ் பெற்றிருக்கும்.திருநெல்வேலி அல்வா போல.எல்லா ஊர்லயும்தான் அல்வா கிண்டுறாங்க.கோதுமை நெய் சீனி இவைதான் மூலப்பொருட்கள்.ஆனாலும் திருநெல்வேலி அல்வாண்ணா தனி சுவைதான்!நெல்லையின் புகழ்பெற்ற ஒரிஜினல் அல்வாக்கடைக்காரர்கள் இரண்டுபேரிடமும் இதுபற்றி விசாரித்த போது தெரியவந்தது :பஞ்சாப்பின் ஊசி கோதம்பும் காங்கேயம் நெய்யும் இருந்தாலும் தாமிரபரணி தண்ணிதான் முக்கியம்!அதுதான் அல்வாவுக்கு தனிச்சுவை தருவது.நீங்க தாமிரபரணி தண்ணியை உங்க ஊர்ல கொண்டுபோய் அல்வா கிண்டினாலும் அந்தச் சுவையைப் பெறலாம் என்று விளக்கினார்கள்!என்னடா,கிண்ணத்தப்பத்தைப் பற்றி பேசவந்தவன் அல்வாவ பற்றி பேசுகிறானேண்ணுதானே பாக்கிறீங்க?காரணமிருக்கு!
கிண்ணப்பத்தின் பூர்வீகம் கோட்டார் என்று Abu Haashima வும்
குளச்சல்தான் என்று Abu Fahadம் இல்லையில்லை திருவிதாங்கோடுதான் என்று நாங்க திருவைக காரங்களும்
பட்டணம்தான் என்று பட்னணத்து காரங்களும் மல்லுகெட்டுறாங்க முகநூலில்!Mujeeb Rahman பழங்கால ஓலைச்சுவடி படம் போட்டு குளச்சல்தான் என்று கூறுகிறார்
படத்தை பார்த்தவர் சுவடியில் என்ன எழுதியிருக்கிறது என்று ஆய்வு செய்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டார்!😇😇
தொல்லெழுத்து ஆய்வாளரான நம்ம ப்ரண்ட் ஒருத்தரிடம் காட்டி அதை ஆய்வு செய்தபோதுதான் தெரியவந்தது கிண்ணத்தப்பத்தின் பூர்வீகம் திருவைதான் என்று!!!
எல்லா ஊர்லையும் கிண்ணத்தப்பம் அவிச்சாலும் திருவை கிண்ணத்தப்பம் அதன் தனிச்சுவைக்காக புகழ்பெற்றது!
அதனுடைய மூலப் பொருட்கள் திருவையைச் சார்ந்தவையாக இருந்தால் தான் அந்தச்சுவை கிடைக்கும் என்று சுவடியின் சூத்திரம் சொல்கிறது!
திருவையைச் சுற்றியுள ள பகுதிகளில் விளையும் நெல்லே அதற்குத் தோதுவானது!
திருவை ஏலா திருநெல்லறுத்து
அரைவேக்காட்டில் அரியாயாக்கி
அரைத்தரைத்து மேலுமரைத்து
பட்டினுமெல்லிய மாவாயாக்கி
வட்டிலில்விட்டே ஆவியில் அவிக்கணும்..
என்றுபோகிறது சூத்திரம்!
அதுமட்டுமல்ல.திருவையின் ஒரு குறிப்பிட்ட வீட்டு கிணற்று நீரே அதன் சுவைக்குக் காரணமாம்!அந்தகாலத்தில ஊரில் கிண்ணத்தப்பம் அவிக்க விரும்புவோர் அந்த வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப்போவார்களாம்!ஏராளமான மக்களுக்கு தண்ணீர் வழங்கியதால் அந்த வீட்டின் பெயரே தண்ணிவீடு எனப்புகழ்பெற்றது என்ற தகவலையும் சுவடி தருகிறது!இன்றுகூட அந்த தண்ணிவீடு இருக்கிறது என்பதிலிருந்து அது உண்மை என்றுணரமுடியும்!
வேறு இரண்டு மூலப்பொருட்களான முட்டை மற்றும் பாலுக்குத்தேவையான தேங்காயும் கூட ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து வாங்கினால் மிகவும் சுவையாக இருக்குமென்று அனுபவபூர்வமாக கண்டுபிடித்து ,அவற்றை அங்கிருந்தே வாங்கிப் பயன்படுத்தினராம்!இப்போது கூட அந்தவீடு
முட்டையும்பாலும் வீடு என்றே அழைக்கப்படுகிறது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்!
இவ்வாறாக தன்பூர்வீகமான திருவிதாங்கோட்டில் பிறந்த அந்த அப்பத்தின் பெயர் ஆரம்பத்தில் பாலப்பம் என்றுதான் இருந்ததாம் என்கிறது சுவடியின் தகவல்!பிறகு எப்படி கிண்ணத்தப்பம் என்றாயிற்று!
அதையும் சுவடி சொல்வதையே பாருங்கள்!
சிலநூறு வருடங்களுக்குமுன் திருவிதாங்கூரின் ஸ்ரீமூலம்திருநாள் மகாராஜா பத்மநாபபுரம் கொட்டாரத்தில் தங்கியிருந்தபோது திருவையிலிருந்து உணவுகள் அனுப்பி உபசரித்தனர்!அதில் கிண்ணத்தப்பமும் உண்டு!திருவையின் உணவுகளை உண்டு மகிழ்ந்த மன்னர் தலைநகர் திரும்பியபிறகு அரண்மனையில் நாள்தோறும் அவற்றை தயாரிக்க திருவையிலிருந்து சமையல கலைஞர்களை வரவழைத்தார்!பாலப்பம் என்ற பெயர் தெரியாத மன்னர்
கிண்ணத்தில் வெச்சிருந்ந அப்பம் வளர நந்நாயிருந்நு அது திவசவும் உண்டாக்கணெம் என்று ஆணையிட்டார்!அதிலிருந்து கிண்ணத்தப்பம் என்ற பெயர் பிரபலமாயிற்று!
ஆகவே, நண்பர்களே கிண்ணத்தப்பம் தோன்றியது திருவையில்தான் என்பதை இனியாவது உணருங்கள்!
சுவடிகளின் போட்டோவில் படிக்கமுடிந்த பகுதிகளிலிருந்தே இவற்றை அறிகிறோம்!முழுச்சுவடிகளும் கிடைத்தால் திருவையின் இதர புகழ்பெற்ற பதார்த்தங்களான ஒறட்டி பாலாடை சக்கோலி போன்றவற்றின் வரலாறையும் அறியலாம்!

Noor Mohamed

Advertisements
 
Leave a comment

Posted by on July 6, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: