RSS

நாகூர் தர்காவில் நான் .!

13 Aug

20621884_1727250810914203_759132559171171788_nநாகூர் தர்காவில் நான் .! முப்பது வருடத்திற்கு பிறகு..!!!
முன்பு பக்திமானாக. இன்று வெறும் பார்வையாளனாக.!
முன்பு தெளிவில்லாமல் இருந்தேனா.. அல்லது இப்போது ஆன்மீக ஞானம் இல்லாமல் இருக்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை.!
எதுவாக இருந்தாலும் இறையச்சமே என்னை தடுக்கிறது.
ஃபாதிஹா தட்டு வாங்க வில்லை.
தாயத்து முடிந்து கட்ட வில்லை..
உண்டியலில் காசும் போட வில்லை..!
சாம்பிராணி புகை காட்ட வில்லை..!
நெய் விளக்கு ஏற்றி தடவ வில்லை.! அங்கே
எந்த வேண்டுதலும் எனக்கு இல்லை.!
ஆனாலும் ஏதோ ஒரு பிரமாண்ட மான வரலாற்று சாட்சியாக, அழியாத அடையாளமாக, என் முன்னோர்களை
எல்லாம் எனக்கு நினைவு படுத்தியது.
இறைவா அனைத்துமே உன் செயலாகவே தெரிகிறது.!
அனைத்தையும் அறிந்தவனும் நீயாகவே இருக்கின்றாய்.!
இனை வைப்பதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக.!.
எங்களுக்கு உன் சங்கையான மார்க்கத்தை எத்திவைத்த நல்லோர்களை நீ மேலான கண்ணியத்தை வழங்குவாயாக.!
(நாகூருக்கு லண்டனில் இருந்து வந்த ஒரு நண்பரை காணவே போய் இருந்தேன்).

20729527_1728188794153738_3918896300273856464_n

 

Haja Maideen

Advertisements
 
Comments Off on நாகூர் தர்காவில் நான் .!

Posted by on August 13, 2017 in 1

 

Comments are closed.

 
%d bloggers like this: