RSS

வன்டி நிக்கனும்!! ஆஷிப்பாய் வரனும் !!/ மைசூர் பயணக் கட்டுரை !-Abu Haashima

13 Aug

 

வன்டி நிக்கனும்!! ஆஷிப்பாய் வரனும் !! நீங்கள் எம்மேமாடு போகனும்! ! பிரமாண்ட பள்ளிவாசலுயும் அந்த ஊரின் வரலாற்றையும் நீங்கள் எழத வேண்டும்! !
வழக்கம் போல் நாங்கள் படிக்க வேண்டும்! !! இது தான் இறைவனின் அருள்! !!
ஜஸாக்கல்லாஹ்! ! குமரி மட்டுமல்ல ஆசிரியரே காவேரியும் உங்கள் எழத்தில் மனக்குது…..
தொடரட்டும் நம் பயணம்! இறையருள்பெற்று ஆமீன் ஆமீன் ஆமீன்
இறைவன் காட்டிய பாதை
எம்மேமாடு …. !
Md Yacoob
வியத்தகு ஆச்சரியங்களை அள்ளித் தந்த குடகுமலைப் பகுதியின் அதிசய மேடு ….. எம்மேமாடு !
எங்கள் பயணத்தின் பாதை மாறிய விந்தை இங்கே வந்த பிறகுதான் எங்களுக்குப் புரிந்தது !
நாங்கள் பயணம் செய்த அந்த மினி பேருந்து எம்மேமாடை நெருங்கியபோது அந்த அற்புதக் காட்சி எங்கள் கண்ணுக்குள் பூவாய் மலர்ந்து விரிந்தது .
மேட்டிலிருந்து பள்ளம நோக்கிச் சென்ற பாதையில் பச்சை மலைகளுக்கிடையே பவளப்பாறைபோல் பளீரென்று மின்னியது எம்மேமாடு பள்ளிவாசல்.
அதைத்தான் நான் சிரத்தையோடு படம் பிடித்து உங்கள் பார்வைக்கும் தந்திருக்கிறேன்.
எங்களுக்கு உதவி செய்த நண்பர் ஆஷிப் எங்களை அங்கே அனுப்பி வைத்த காரணத்தை நாங்கள் புரிந்து கொண்டு
” அல்ஹம்துலில்லாஹ் ” என்றோம்.
எம்மேமாடு முஸ்லிம்கள் வாழுகின்ற ஒரு சிறிய கிராமம். அதுவும் அழகான கிராமம். கொஞ்சம் மக்கள்.
ஆனால்…
அந்த ஊரில் அத்தனை பிரம்மாண்டமான பள்ளிவாசல் கம்பீரமாக எழுந்து நின்று காட்சியளிப்பது அல்லாஹ்வின் நாட்டமின்றி வேறொன்றுமில்லை.
அங்கே…
அந்த பள்ளிவாசல் எழுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் 366 வருடங்களுக்கு முன்னால் பாரசீகத்திலிருந்து வந்த இரு இறைநேசச் செல்வர்கள்.
அவர்கள் …
செய்யது சூபி சஹீது வலியுல்லாஹ்
செய்யது ஹசன் சஹாப் அல் ஹள்ரமி வலியுல்லாஹ்
என்னும் பெருமக்கள்.
இவர்கள் தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் அந்தப் பகுதி மக்களுக்கு ஏராள நன்மைகளைச் செய்தார்கள். அவர்களுக்காகவே உழைத்தார்கள்.
அவர்களுக்காகவே தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணித்தார்கள்.
இவர்களின் தன்னலமற்ற சேவையின் காரணத்தால் கவரப்பட்ட எம்மேமாடு மக்கள் அத்தனைபேரும் இறையருளால் முஸ்லிம்களானார்கள்.
அவர்கள் காலத்திலேயே இங்கே பள்ளிவாசல் கட்டப்பட்டது. பின்னர் இங்குள்ள முஸ்லிம்கள் பெரும் பொருட்செலவில் அதை பெரிய ஜும்மா பள்ளியாகக் கட்டியிருக்கிறார்கள்.
ஜும்மாவுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பல இடங்களிலிருந்தும் இங்கே வருகிறார்கள்.
பள்ளிவாசலையொட்டி பின்புறம் இரு அவுலியாக்களின் அடக்கஸ்தலங்களும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
தர்காவிற்கு பெண்கள் வருவதற்கும் ஜியாரத் செய்வதற்கும் அனுமதியில்லை. வருடம்தோறும் மார்ச் மாதம் நடைபெறும் உரூசிற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கலந்து கொள்கிறார்கள்.
பள்ளிவாசலுக்கு ஏராளமான சொத்துக்கள் சொந்தமாக இருக்கின்றன.
” தாஜுல் இஸ்லாம் முஸ்லிம் ஜமாஅத் ” என்னும் பெயரில் இங்குள்ள ஜமாஅத் செயல்படுகிறது.
ஏராளமான பிள்ளைகள் ஓதும் மதரசாவும் பள்ளிக்கூடமும் தங்குமிடமும் அறக்கட்டளையும் ஜமாத்தால் அழகான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
” இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை ; இறைநேசச் செல்வர்களாலேயே இந்த மண்ணில் இஸ்லாம் பரவியது ” என்று பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நெரு அவர்கள் தன்னுடைய ” டிஸ்கவரி ஆப் இந்தியா ” நூலில் அழுத்தம் திருத்தமாக எழுதி இருந்தார்.
எம்மேமாடு அதற்கு சான்று பகரும் விதத்தில் கம்பீரமாக எழுந்து நிற்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சிதான் !
பள்ளிவாசலை பார்த்துக் கொண்டே இருக்கலாம்போல் அத்தனை அழகாய் கட்டி இருக்கிறார்கள்.
நான் ஏராளமான படங்கள் எடுத்தேன். எனது ஆல்பத்தில் அவைகளும் சேர்ந்து விட்டன.
பள்ளியில் ஒரு அழகான ” ஹவுள் ” கட்டியிருக்கிறார்கள். அதில் நிரம்பியிருந்த குளிர்ந்த காவிரி நீரில் ஒழுவெடுத்து அசர் தொழுகையை நிறைவேற்றினோம்.
தலைக்காவேரியில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை எம்மேமாடில் அவனது அழகிய இல்லத்தில் அல்லாஹ் எங்களுக்கு அழகாக்கித் தந்தான். அல்ஹம்துலில்லாஹ்.!அல்லாஹ்வை தொழுத பிறகு இறைநேசச் செல்வர்களையும் ஜியாரத் செய்துவிட்டு வெளியே வந்தோம்.
பசி வயிற்றைக் கிள்ளியது.
பக்கத்திலேயே ஓரிரு சின்னச் சின்ன ஹோட்டல்கள் இருந்தன.
கண்ணூர் மலையாளி ஹோட்டலில் நாங்கள் சிலர் சுவையான நெய்ச்சோறு வயிறு நிறைய சாப்பிட்டோம் . மீதிபேர் அடுத்த ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டார்கள். வயிறும் மனசும் நிறைந்து அல்லாஹ்வைப் புகழ்ந்தோம்.
பள்ளிவாசலைச் சுற்றி அழகான இயற்கை காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவர அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் அந்த மயக்கும் மழை பெய்யும் மாலை வேளையில் வெகுநேரம் அங்கேயே நின்றோம்.
இரவு ஏழு மணிக்குமேல் புறப்பட்ட நாங்கள் மைசூர் வந்து சேர இரவு பதினோரு மணி ஆகி விட்டது. ஹோட்டல்களெல்லாம் மூடப்பட்டுவிட்டன. ஏதோ கிடைத்ததை உண்டுவிட்டு உறங்கப்போகும்போது …
தங்கள் தன்னலமற்ற தியாகத்தால் ஒரு ஊர் மக்களையே அன்பால் பொறுமையால் கருணையால் முஸ்லிம்களாக்கிய வலிமார்களின் வழிவந்த ஆஷிப் எங்களுக்கு உதவிசெய்ததன் பண்பாட்டுப் பின்னணி மனதில் வந்து பாடம் நடத்திச் சென்றது.
மானசீகமாக அந்த அவுலியாக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
மைசூர் பயணக் கட்டுரை !

Abu Haashima
Advertisements
 
Leave a comment

Posted by on August 13, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: