RSS

Monthly Archives: September 2017

கவிஞர் ஆத்மாநாம் விருது விழா

இந்த ஆண்டுக்கான (2017) கவிஞர் ஆத்மாநாம் விருது விழாவை ஆத்மாநாம் அறக்கட்டளை மிகச் சிறப்பாக நடத்த இருக்கிறார்கள். விழா மிகச் சரியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு (செப்டம்பர் – 30) கவிக்கோ அரங்கில் (சி.ஐ.டி காலனி, மைலாப்பூர்) தொடங்க இருக்கிறது.
கவிஞர் ரவிசுப்ரமணியனின் இசையுடன் துவங்கும் நிகழ்வு, எழுத்தாளர் பெருமாள்முருகன் தலைமை உரையாற்ற, எழுத்தாளர்கள் இமையம் மற்றும் பாவண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, கவிஞர் கே. சச்சிதானந்தன் அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார். கவிதைக்கான விருது பெறும் கவிஞர் அனார் அவர்களும், மொழிபெயர்பு கவிதைக்கான விருது பெறும் மொழிபெயர்ப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களும் ஏற்புரையாற்ற இருக்கிறார்கள். Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on September 30, 2017 in 1

 

அசாதாரண வீரம் ….!

சாமானியனின் தத்தளிப்புகளில்
தவித்திரும் தருணங்கள்
தத்தித்தாவி தப்பிப்பிழைக்க
திண்டாடி மூச்சிரைக்க ஓடியும்
ஒழிந்திட முடியாமலே
எதிர்கொண்டு கையாண்டு
காலம் கடத்துவது
அசாதாரண வீரமே !
எண்ணிப் பார்த்திராத
தருணங்களில் எதிர்பாராது
வந்தேறும் வினைகளை
எதிர்கொண்டு முடிந்தவரையில்
திருவினையாக்கி
முடியாததை விட்டுவிடாமல்
முட்டிமோதி வீழ்ந்தாலும்
அடுத்த கணமே
எழுந்தோடும் நிலையும்
சாமானியனின் அசாதாரண வீரமே! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 29, 2017 in 1

 

அசரீரி ….!

அசரீரிபோல
என்றோ ஒருநாள்
கேட்ட ஒரு சொல்
வாழ்வின் ஓட்டத்தினூடே
வரும் தடைகளை தகர்த்தும்
முடியாததை தாங்கிக்கொண்டும்
திரண்டு மனவானில்
மழையை பொழிய அலையும்
சூல்கொண்ட முகிலைப்போல்
தலைக்குமேல் வட்டமிடுகிறது
அசரீரியானது
தனக்கேயான பரிபாஷையில்
உணர்த்தும் சங்கேதத்தின்
அர்த்தங்கள் தெள்ளத்தெளிவாக
எதிப்பார்க்கும் பலனை
ஆழ்மனதினூடே உரசலில்
எழும் தீப்பொறியின்
ஒளிக்கீற்று ஒரு பிம்பமாக
காட்டிச்செல்கிறது
கணிக்கமுடியாத தூரத்தில்
நிலைகொண்டு நிற்பதை
அசரீரியின்
ரீங்காரம் எழுப்பும்
இசையின் ஒலிவடிவம்
ஏழு ஸ்வரங்களிலும்
கலந்து சொல்லவொண்ணா
இன்பநிலையில் ஆழ்த்துகிறது Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 28, 2017 in 1

 

மென் குணப் பூ அவள்

தமிழ் பிரியன் நசீர்

21765277_997341197074584_5946773601125285466_nமென் குணப் பூ அவள்
மெருகுதிராச்
சிலையவள்
கண் குண மீன் நீந்தும்
கலைத்தாய் சொல்லவள்..!!
பல் முளைத்த தாமரை
பருவம் தொட்ட பனி வாடை
சொல் திறக்கும்
இதழோரம் கள் வடிக்கும் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 26, 2017 in 1

 

நாகூரின் பிரசித்திப்பெற்ற உணவு பதார்த்தங்கள்

 

நாகூர் மண்வாசனை

 
Leave a comment

Posted by on September 20, 2017 in 1

 

மிச்சமிருக்கும் பச்சையம்…!

நேற்று காவிரியில் தண்ணீர் புரள்வதை காண வேண்டி இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து என் கண் முன்னிருக்கும் அழகையெல்லாம் விண்ணிருட்டும் வேலையில் கண்டு சென்றதெப்படி….! அது பற்றி சில வரிகள்…!
இராஜகிரியின் குடமுருட்டி கரையிலிருந்து அக்கரைக்குப்போய் அதன் அக்கரையில் இருந்த திருமலைராஜனைத் தாண்டி மறுகரைக்குப்போய்! அக்கரையில் அரசலாற்றிற்றையும் அன்னை காவேரியையும் சார்ந்த குக்கிரமாங்களாய் கண்ட வன்னியடி, இளங்கார்குடி, கார்த்திகை தோட்டம் மற்றும் மேட்டுத்தெரு பகுதியெங்கும் ஒரே பச்சை போர்வை….! பெரும் கோர்வையாய்…!
குறுகிய மண் மற்றும் தார் சாலைகளின் இருமருங்கிலும் அத்தனை அடர் மரங்கள்! தேக்கு, மூங்கில், புளிய மரம் சூழப்பட்டதால் சூரிய வெளிச்சமும் சென்று சேரவில்லை சில இடங்களில்! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 19, 2017 in 1

 

தோல்வி ….!

தோல்வியும் வெற்றியும் போட்டியின் இரு பக்கங்கள்.
ஒருவனின் ஒரு சிறு தோல்வி ஊராரை மகிழ்வுநிலைக்கு கொண்டுசெல்லுமானால் அது அவர்களது பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றியாகத்தானே இருக்கமுடியும்?
பட்டகாலிலே படும் – என்று சொல்லுவார்கள். இது எதிர்மையான கெட்டவற்றிற்கு மிகவும் பொருந்தும். அதாவது அடிமேல் அடி விழுவதுபோல தோல்வி அவர்களை விடாது ஒட்டிக்கொண்டு தொடரும்.
சரித்திரத்தை புரட்டிப் பார்த்தல்,
பாதகம் செய்தவர்கள் அவர் சிறியவரோ பெரியவரோ பல வெற்றிகள் பெற்று ஓகோவென இருந்திருக்கலாம் ஆனால் முதல் தோல்வி ஆரம்பம் ஆனதும் முற்றிலும் தோல்வியாக தொடர்ந்து சகாப்தமே முடிந்துபோன சம்பவங்கள் ஏராளம் காணலாம்.
பொய்யும் புரட்டும் செய்து வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டிக் கொள்வோருக்கு தோல்வி வரும் வந்துவிட்டால் தொற்றிக்கொள்ளும் முடிவுவரையிலும் மீளமுடியாத தோல்வியே தொடரும்.
தோல்வி ஏன் ஏற்படுகிறது? Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 18, 2017 in 1