RSS

பேரறிஞர் அண்ணா …. / அப்துல் கபூர்

15 Sep

21731379_1928702897384002_1246662569740990168_nஅமுதமாய் இனித்திடும்
தமிழ் மொழியினை
குழைத்து சுவைத்திட
சிமிழ் தந்தவரே ….
மிடுக்கு நடையினில்
அரசியல் மேடையேறி
அடுக்கு மொழியினில்
நாக்கு வார்த்தெடுக்கும்
துடுக்கு வார்த்தைகளால்
கேட்போரை அமர்த்திட
தடுக்கு விரித்தவரே ….
மக்களின் அவைதனில்
எதுகையும் மோனையும்
அணிகள் வகுத்திட
இலக்கிய சேனையோடு
கலக்கிய தமிழூற்றே ….
பேச்சுக் கலைகளை
கழகத்தார் கற்றுணர
பல்கலை கழகமாய்
வாழ்ந்து மறைந்தவரே ….
தி மு கழகத்தை
ஈன்றெடுத்த தாயுமானவரே
பயிற்சியெனும் கருவறையில்
அறிவார்ந்த தலைவர்களை
கருவாக்கி பிரசவித்து
அரசியலெனும் பாலூட்டி
உருவாக்கி வளர்த்தவரே ….
தரணியின் சபைதனில்
சிலேடையில் சொல்லாட
ஆங்கில மொழிக்கு
அங்கி அணிவித்து
அணிகலன் பூட்டியவரே ….
யாரோடு உறவாடினால்
அறிவென்று கணக்கிட்டு
பெரியாரோடு உறவாடியவரே
கலைஞருக்கு தம்மிதயத்தில்
அறைகள் கட்டியவரே ….
தமிழ் மண்ணை
எழுத்தாற்றலால் வசீகரித்து
அமைதியாய் தூங்குபவரே
தமிழர்களின் இதயங்களில்
கட்சி பேதங்களின்றி
என்றென்றும் தங்குபவரே ….
தமிழகத்தை ஆண்டவரே
நேர்மையான அறிவாற்றலால்
நல்லாட்சி பூண்டவரே
அண்ணா உனை
தமிழகம் தேடுகிறது ….
unnamஅப்துல் கபூர்

Advertisements
 
Leave a comment

Posted by on September 15, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: