RSS

தாம்பூலம்…!

16 Sep

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”.
விருந்தோம்பலுக்கென தனி இலக்கணமே வகுத்தவர்கள் தமிழர்கள் எனலாம்! அது எந்த வகையிலும் மிகைக்காத மிகை என்றாலும் அது மிகையில்லை!
இதைப்பற்றி அக்கால புலவர் பெருமக்கள் சங்க இலக்கிய பாடல்களின் வழியே நிறைய பாட்டாகவே பாடி படித்துக்காட்டிவிட்டு போய்விட்டார்கள்.
விருந்தோம்பல் என்கிற நிகழ்வு நிகழ்வாய் இனிதாய் நிறைவேறியதும் அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போன்று வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலம் தரித்தல் என்ற ஒன்றில் முற்றாய் முடியும்! அதைப்பற்றியே இப்பதிவு.
நான் சிறுவயது முதல் எனது கல்லூரி நாட்கள்வரை கலந்துகொண்ட எல்லா சுப விஷேச விருந்து நிகழ்வுகளில் இந்த வெற்றிலையும் பாக்கும் கொண்ட தாம்பூலம் தவறாது இடம்பெறும். அது இல்லாது எந்த விருந்தோம்பலும் நிகழ்ந்ததில்லை! அநேக வீடுகளிலும் கூட “தேப்பா” என்று அழைக்கப்பட்ட வெற்றிலைப்பெட்டி கண்டிப்பாக இருக்கவே செய்யும்.
இஸ்லாமிய வீட்டுத்திருமணம் முதலான சுப நிகழ்வுகளில் இரண்டு வெற்றிலை பாக்கு அதனுடன் சிறிது சுண்ணாம்பை உள்ளே வைத்து சமோசா போல மடித்து! அதன் இணைப்பை தைக்க பல் குத்தும் குச்சி அல்லது கிராம்பு ஒன்றை வைத்து இணைத்து “சுருள்” அல்லது “பீடா” என்று சொல்லி விருந்து முடிந்ததும் கொடுத்து நல் உபசரிப்போடு முடிப்பார்கள் இன்முகத்தோடு! அதுபோல சகோதர சமுதாயத்து விருந்து நிகழ்வுகளில் வெற்றிலையும் சீவலும் பந்தலில் வைக்கப்பட்ட வரவேற்பு மேசையில் கண்டிப்பாக இருக்கும்.
இந்த “சுருள்” இல்லாது போகுமாயின் விருந்திற்கு வந்தவர்கள் அதை ஒரு பெரும் குறையாகவே பேசுவார்கள்! ஆனால் இந்த சுருள் பீடாவெல்லாம் இப்போது எங்கோ போய் மறைந்துவிட்டது. வெறும் பாக்கெட் பாக்கு மட்டுமே சில சமயங்களில் எட்டிப்பார்க்கிறது விருந்து நிகழ்வுகளில்! அதோடு வெற்றிலை பாக்கு பழக்கம் என்பது ஒரு நாகரீகமான பழக்கம் இல்லை என்று பொதுவாக பார்க்கப்படுவதால் அதை நிறைய பேரும் இன்று தவிர்க்கவே செய்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை புகையிலை என்கிற ஒன்று அதனுடன் சேராது இருக்கும் வரையிலும்! அளவோடு எடுத்துக்கொள்ளும் வரையிலும் வெற்றிலை பாக்கு போடுவது ஆரோக்கியமான பழக்கமே! பெரிய கெடுதிகளுக்கும் வாய்ப்பில்லை!அதுபோலவே அதை துப்பும் இடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதோடு எப்படி விவசாயம் பொய்த்துப்போனதால் நெல் உற்பத்தியும் மற்ற விவசாய பயிர்களின் உற்பத்தியும் நிகழ்காலத்தில் பாதிக்கப்பட்டு போய்விட்டதோ அப்படியே வெற்றிலையின் உற்பத்தியும் கூட பாதிப்புக்குள்ளாகவே செய்திருக்கிறது.
ஒரு காலத்தில் எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம், சுந்தரபெருமாள் கோவில், கபிஸ்தலம், இராஜகிரி, பண்டாரவாடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதுபோல ஆடுதுறை-திருமங்கலக்குடியை சுற்றியுள்ள கிராமங்கள், எங்கள் ஊருக்கு அருகில் வீராணம் ஏரிப்பாசனத்தால் பயன்பெறும் இலால்பேட்டை, மானியம்-ஆடூர் பகுதிகளிலும் வெற்றிலை பயிரிடும் கொடிக்கால்கள் அதிகம்.
கபிஸ்தலத்தில் வெற்றிலையை விற்பனை செய்ய பிரத்யேகமாக “ஏலக்கடை” எனும் இடமிருந்த்தை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் காலத்தில் கண்டதும் உண்டு.
கோவில்களின் நகரமான கும்பகோணம் வெற்றிலைக்கும் சீவலுக்கும் பிரசித்தி பெற்ற ஒரு இடம் என்பதை அநேகரும் அறிந்திருப்போம்! வெற்றிலை எண்ணிக்கைக்கென்று “கவுளி” “முட்டி” என்கிற முறைகள் எல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது.
ஆனால் வெற்றிலையின் மணம் மட்டும் நிறையவே குறைந்து போய்விட்டது.

12742827_459200270950685_5381862668656371435_n

Samsul Hameed Saleem Mohamed

Advertisements
 
Leave a comment

Posted by on September 16, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: