RSS

தோல்வி ….!

18 Sep

தோல்வியும் வெற்றியும் போட்டியின் இரு பக்கங்கள்.
ஒருவனின் ஒரு சிறு தோல்வி ஊராரை மகிழ்வுநிலைக்கு கொண்டுசெல்லுமானால் அது அவர்களது பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றியாகத்தானே இருக்கமுடியும்?
பட்டகாலிலே படும் – என்று சொல்லுவார்கள். இது எதிர்மையான கெட்டவற்றிற்கு மிகவும் பொருந்தும். அதாவது அடிமேல் அடி விழுவதுபோல தோல்வி அவர்களை விடாது ஒட்டிக்கொண்டு தொடரும்.
சரித்திரத்தை புரட்டிப் பார்த்தல்,
பாதகம் செய்தவர்கள் அவர் சிறியவரோ பெரியவரோ பல வெற்றிகள் பெற்று ஓகோவென இருந்திருக்கலாம் ஆனால் முதல் தோல்வி ஆரம்பம் ஆனதும் முற்றிலும் தோல்வியாக தொடர்ந்து சகாப்தமே முடிந்துபோன சம்பவங்கள் ஏராளம் காணலாம்.
பொய்யும் புரட்டும் செய்து வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டிக் கொள்வோருக்கு தோல்வி வரும் வந்துவிட்டால் தொற்றிக்கொள்ளும் முடிவுவரையிலும் மீளமுடியாத தோல்வியே தொடரும்.
தோல்வி ஏன் ஏற்படுகிறது?
இதை விளங்கச்சொல்வது மிகவும் எளிது நமக்கு ஆனால் தோல்வியாளர்களால் எப்போதுமே விளங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால், தோல்வியை விளங்கி ஒப்புக்கொள்வானேயானால் அவனால் பிற்காலத்தில் தோல்வியை தள்ளிவிட்டுவிட முடியும்.
வெற்றி பெற்றுவிட்டால் அது நிரந்திரமானது மாறவே மாறாதது என மமதை கொள்வது தோல்வியின் கூடப்பிறப்பு.
எப்படி எப்படியோ பெற்றுவிட்ட வெற்றியை தக்கவைக்க ததிகிடதோமென்று தப்பாட்டம் ஆடுவது வெகுவிரைவில் தோல்வியை கொண்டுதரும்.
இதுதானே இப்போது நாட்டு நடப்பாக இருக்கிறது!
நல்லவர்கள் வெல்ல வேண்டும் !

1915784_1752216725002117_6437085887224788060_n

ராஜா வாவுபிள்ளை

Advertisements
 
Leave a comment

Posted by on September 18, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: