RSS

மிச்சமிருக்கும் பச்சையம்…!

19 Sep

நேற்று காவிரியில் தண்ணீர் புரள்வதை காண வேண்டி இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து என் கண் முன்னிருக்கும் அழகையெல்லாம் விண்ணிருட்டும் வேலையில் கண்டு சென்றதெப்படி….! அது பற்றி சில வரிகள்…!
இராஜகிரியின் குடமுருட்டி கரையிலிருந்து அக்கரைக்குப்போய் அதன் அக்கரையில் இருந்த திருமலைராஜனைத் தாண்டி மறுகரைக்குப்போய்! அக்கரையில் அரசலாற்றிற்றையும் அன்னை காவேரியையும் சார்ந்த குக்கிரமாங்களாய் கண்ட வன்னியடி, இளங்கார்குடி, கார்த்திகை தோட்டம் மற்றும் மேட்டுத்தெரு பகுதியெங்கும் ஒரே பச்சை போர்வை….! பெரும் கோர்வையாய்…!
குறுகிய மண் மற்றும் தார் சாலைகளின் இருமருங்கிலும் அத்தனை அடர் மரங்கள்! தேக்கு, மூங்கில், புளிய மரம் சூழப்பட்டதால் சூரிய வெளிச்சமும் சென்று சேரவில்லை சில இடங்களில்!
கரும்பும் கருணைக்கிழங்கும் சோளமும் குலை தள்ளிய வாழையும்! பதியம் பயிர் கட்டப்பயிர் என பெயர் கொண்டு அழைக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கால்களும்! அதன் இடையே அகத்தி முருங்கை செம்பை கீரை மரங்களும்! வெள்ளரிக்கொடியும் தரிசான நிலங்களில் மேய்ச்சல் புல்வெளியும்! அதனருகே சில எண்ணிக்கைகளில் நம் தேசியப் பறவையாம் மயிலும்!
ஓங்காரம் கொள்ளாமல் மாலை நேர மயக்கத்தில் தாம் கொண்ட காதலால் ரீங்காரமிட்டு துணை தேடிய பறவை கூட்டங்களும்! அத்தனையும் மொத்தமாய் அழகின் ஆழகாய்! அழகே அழகாய்! உருமாறி நிற்க! விக்கிப்போகும் நிலை வந்தும் எனை மாற்றி சொக்கிப்போனேன் அப்படியே!
வழியில் ஒரு தாத்தா தன் அகவை தொண்ணுறை தாண்டிய நிலையிலும் ஒரு கொம்பை தன் வழி துணைக்குப்பிடித்து! தன் நெற்றியில் திருநீறும் நடுவே நல் திலகமும் பூசி! சிவ கடாட்சமாய் தோற்றம் கொண்டு! தன் இன்னொரு கையில் வாழை இலையை சுருட்டி வைத்து! வாழ வேண்டிய எனது பேரப்பிள்ளைகளே…! நான் வாழ்வில் பெரும் பகுதியை ஆரோக்கியவானாய் கழித்துவிட்டேன்! இப்போது நீங்கள் வாழும் இப்பொல்லா உலகம் என்னுலகம் அல்ல! இருப்பினும் வாழ்கிறேன்! என் பேரன்களே…! நீங்கள் வாழும் நல்வாழ்வை காண! பார்த்துப்போ…! என சொல்வதுபோல் இருந்தது அவரது கருணையும் கரிசனமும் கொண்ட பார்வை!
அவரை கடந்து செல்கையில் எழுபதைத்தாண்டிய சில தாத்தாக்கள் அங்கே ஒரு வாய்க்கால் மதகடியில்! ஒருவரின் வெற்றிலை பொட்டலத்தை பிரித்து எல்லாரும் போட்டுக்கொண்டு பார்த்தாயா பேரா..! நீ சினிமாவில் கண்டது போல் சினிமாத்தனம் இல்லாமல் உண்மையாய் நாங்கள் கொண்ட நட்பை என்பது போல் இருந்தது அவர்களின் அளவளாவலும் வஞ்சகம் இல்லா வாஞ்சை சிரிப்பும்!
வன்னியடியின் ஒரு தெருவில் பயணித்தபோது கண்ட வெள்ளாட்டு மந்தை அந்த ‘அம்மா’வை ஞாபகப்படுத்தியது! கூடவே அவர் வளர்த்துவிட்டுப்போன கருப்பாட்டு மந்தைகளும் கண் முன்னே ஏனோ தெரிந்து தொலைந்தன!
இவையனைத்தையும் ஒருசேர ஒருமுகப்படுத்தி ஒருநிலையில் கண்டு களிப்புற்று! என்னிலை எனும் தன்னிலையை சற்றே மறந்தவனாக….!
இறைவா….! இக்கிராமங்களை இப்படியே வைத்திரு! இன்னும் கூட அழகாக்கு! இங்கே மிச்சமிருக்கும் பச்சையத்தை எம் மண்ணெங்கும் வியாபித்து வளரச்செய்!
குறிப்பதாக இந்த மண்ணை நேசித்து நம்மை யாசிக்கும் நிலைக்கு தள்ளிவிடாமல்! அவர்கள் சேற்றிலே கால் வைத்து நாம் சோற்றிலே கை வைக்க அத்தனை கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தனதாக்கி வாழ்வித்து வாழும் எம் #விவசாயி 💕 பேரினத்தை அளவில்லா மகிழ்ச்சி கொண்டு நாளும் வாழ அருள் புரிவாய்! என பிரார்த்தித்தவனாக திரும்பி வந்தேன்!
இறைவன் விருப்பம் அதுவாயின் திரும்ப வருவேன்!12742827_459200270950685_5381862668656371435_n

Samsul Hameed Saleem Mohamed

21903449_686663564871020_1530286827_nகாவிரியாற்று கரையில்

Advertisements
 
Leave a comment

Posted by on September 19, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: