புத்தம் புதிய உலகமொன்றில் சில மணிநேரம் வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பொன்று / நெகிழ்வும் மகிழ்வும் ….

Abu Haashima / அப்துல் கபூர்
புத்தம் புதிய உலகமொன்றில் சில மணிநேரம் வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பொன்று
எனக்கும் நண்பர்கள் சிலருக்கும்
இன்று கிடைத்தது.
பொய் , புறம் , வஞ்சகம் , சதி , வெறுப்பு
எதுவுமில்லாத அந்த உலகம்
அழகானது.
கோட்டாறில் இயங்கி வரும்
#உகாசேவா மருத்துவமனையின்
ஒன்பதாவது ஆண்டு துக்க நாளான இன்று
அந்த வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கினான்.
இந்த நிகழ்வைப் பற்றி
அன்புக்குரிய தம்பிகள்
Bhuvan
Abdul Basith
மாப்பிள்ளை
Mohamed Kowdu
ஆகியோர் ஏற்கனவே பதிவுகள் போட்டு விட்ட நிலையில் புதிதாக நான் சொல்வதற்கு
ஒன்றுமில்லைதான்.
இருந்தாலும் …
சொல்ல வேண்டிய சில செய்திகள் இருக்கு.
மாவட்டத்தின் இரு பகுதிகளில் இயங்கிவரும்
இரு ஆதரவற்றோர் காப்பகங்களிலிருந்து
மன வளம் குன்றிய குழந்தைகளும்
மன நலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலரும்
உகாசேவாவின் இன்றைய நிகழ்ச்சிக்கு
அழைத்து வரப்பட்டார்கள்.
அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் உணவும் வழங்கப்பட்டன என்பது செய்தி.
நான் சொல்ல நினைப்பது …
அந்தக் குழந்தைகளைப் பற்றி.
நம் குழந்தைகளைப் போலத்தானே
இந்த குழந்தைகளையும்
அவர்களின் பெற்றோர்
ஆசையாக அருமையாக
பெற்றிருப்பார்கள் ?
அந்த அரும்புகளின் முகங்களைப் பார்க்கும் போதும் கள்ளங்கபடமற்ற அவர்களின்
சிரிப்பை பார்க்கும் போதும்
தேவதைகளின் உலகத்தில்
நுழைந்து விட்டதைப் போன்ற
உணர்வு நம்மை ஆட் கொள்கிறது.
கிரிஜா என்ற ஒரு குழந்தை .
கை நீட்டி கை குலுக்கி சிரித்து நேசம் காட்டுகிறது.
அப்துல்லாஹ் என்ற சிறுவன்
முகம் பார்த்து மெல்லிசாய்
சிரித்து முகம் கவிழ்கிறான்.
இன்னொரு சிறுவன் அழகாகப் பாடுகிறான்.
மற்றக் குழந்தைகளெல்லாம்
நம்மை சினேகத்தோடு பார்த்து சிரிக்கின்றன.
தங்களுக்கு குணப்படுத்த முடியாத நோய் இருக்கிறது என்பதே தெரியாமல்
வாழும் பொழுதுகளை
சிரித்துக் கொண்டே
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
” மன நலம் குன்றியவர்களிடம் இருந்து இறைவனின் எழுதுகோல் உயர்த்தப்பட்டு விடுகிறது. அவர்களிடம் எந்த கேள்வி கணக்கும் கேட்கப்படாமல் அவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பப் படுவார்கள் ”
என்று ஒரு நபிமொழியை படித்த ஞாபகம்
இருக்கிறது.
இந்தக் குழந்தைகளை பார்த்தபோது
நாமும் இப்படி ஒரு குழந்தையாக
இருந்திருந்தால்
பழிபாவங்களுக்கும்
பழிச் சொல்லுக்கும்
மற்றவர்களின் பகைக்கும்
வெறுப்புக்கும்
கோபத்திற்கும்
பாவத்துக்கும் ஆளாகாமல்
இறைவனின் கருணைக்கு மட்டும்
உரியவனாகி இருக்கலாமே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் …
இந்தக் குழந்தைகளை பராமரிக்கக் கூடிய பெண்கள் …
” தாயினும் சாலப்பரிந்து … ”
என்று பாடி வைத்தார்களே …
பெற்ற தாய்மார்களை விட மேலாக
இந்த குழந்தைகளை அரவணைத்து
அவர்களுக்கு இந்த பெண்கள் உணவை ஊட்டி விடுகின்ற காட்சிகளைக் கண்டு
அப்படியே நெகிழ்ந்தேன்.
அந்தப் பெண்கள்தான்
இந்தப் பிள்ளைகளின் ஆசிரியர்கள்.
வருமானத்தை எதிர்பாராமல்
முழுக்க முழுக்க தாயுள்ளத்தோடு
சேவை செய்யும் இந்த பெண்கள்
அத்தனை பேரும்
#அன்னை_தெரசாக்கள்!
இப்படி ஒரு காப்பகத்தை நடத்தி வரும்
பெரியவர் பாலசுப்ரமணியம்
போற்றுதலுக்குரிய மனிதர்.
இன்னொருபுறம்
வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள்
மனிதர்களால்
குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்டு
துரத்தியடிக்கப்பட்டு
வாழ்க்கையில் விரக்தியடைந்து
மன நோயாளிகளாக மாறிய ஆண்கள்.
இவர்களை அழைத்து வந்தவர்
தர்மா என்பவர்.
இவர்களும் குழந்தைகளைப்போலவே
காணப்படுகிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் தேவை …
மனித நேயத்தோடு கூடிய உதவிகளும்
அரவணைப்பும்
ஆறுதலும் மட்டுமே.
இவர்களை இனம் கண்டு அழைத்து வந்து
அவர்களோடு கலந்து நம்மையும்
கலக்க வைத்து புத்தம் புது அனுபவத்தை
பெற்றுத்தந்த உகாசேவா செயர்மேன்
Mohamed gaffoor
முகம்மது கபூருக்கும்
உகாசேவா நிர்வாகிகள் அதன் அங்கத்தினர்கள்
மற்றும் இதற்காக உழைத்தவர்கள்
அதில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும்
என் இதயம் நிறைந்த நன்றி.
@ இது சம்பந்தமாக
இன்னும் ஓரிரு பதிவுகள் நான்
இடக்கூடும்.
சொல்வதற்கு
அத்தனை செய்திகள் இருக்கிறது.
@ நண்பர்களோடு கூடிய படங்களும்
செய்திகளும் நாளை ..
இன்ஷா அல்லாஹ் !
===================
நெகிழ்வும் மகிழ்வும் ….
கொஞ்ச நேரம் என்னோடு அமருங்கள் நட்புகளே ….
பேரிறைவனின் பேரருள் பட்டு மருத்துவ சேவையில் அயராத அர்பணிப்பை இட்டு ஒற்றுமையையும் உழைப்பையும் நட்டு தடையின்றி தொடருகிற பயணத்தில் எட்டு ஆண்டுகளை எட்டுகிற உகாசேவா மருத்துவமனை புதிய திட்டங்களோடு ஒன்பதில் நுழைகிறது என்பதில் எமக்கு பெரும் மகிழ்ச்சியே ….
ஆதரவற்றோரின் உள்ளத்தில் ஆனந்த நிழலை ஏற்படுத்தவும் ஆண்டு விழாவில் வித்தியாசமான சூழலை உருவாக்கவும் வாசனை மிகுந்த யோசனை ஒன்றை எமது நிர்வாகம் பரிசீலித்தது ….
கலந்துரையாடலின் முடிவில் பூதப்பாண்டி அனுகிரஹா மற்றும் கோழிக் கோட்டு பொத்தை அன்னை இல்லங்களின் சிறுவர் சிறுமியர் முதியோர்கள் பொறுப்பாளர்கள் என்று நூறை தாண்டிய ஏழைகளை வரவழைத்து 06.01.2018 சனிக்கிழமை காலை துவங்கி மதியம் முடிய இறைப் புகழ்ச்சி பதியம் போட நிகழ்ந்தேறிய வைபவம் நமது மனசை நெகிழ்வுச் சிறகுகளால் மென்மையாக வருடியது ….
உற்சாகம் தரித்து மனம் குன்றிய மக்களை ஆதரித்து மனம் ஒன்றிய மக்களாய் நாம் அவர்களோடு உரையாடி உறவாடி உடல் நிலையை பரிசோதித்து இலவச மருத்துவ முகாம் நிகழ்த்திய தருணத்தில் அரவணைப்பான அன்புக்காக ஏங்கி வாழுகிற ஆதரவற்றோரின் முகம் மகிழ்வை தாங்கி புன்னகை பூக்களை விரித்து சிரித்து இதழ்களை அழகாய் விரிந்தது ….
விஷேச சாப்பாடு நமக்கும் கிடைக்குமா என்று எண்ணுகிற ஆதரவற்றோருக்கு திருமணம் பால்காய்ச்சு நிகழ்வுகளில் நாம் உண்ணுகிற உணவுகள் போல் சுவையான மதிய விருந்து பரிமாறி உள்ளத்திலிருந்து சரிக்கப்பட்ட அன்போடு உபசரிக்கப்பட்ட பொழுதுகள் நிகழ்வுக்கு மெருகூட்டியது ….
எம்மோடு கலந்த செயற்குழு பொதுக்குழுவினருக்கும் ஆர்வலர்களுக்கும் முகநூல் நட்புகளுக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் சிப்பந்திகளுக்கும் இமாம்கள் பிலால்கள் ஆகியோருக்கும் விழாவுக்கு உழைத்த யாவருக்கும் உளமார்ந்த நன்றிகளால் குழைத்த பாராட்டுகளை அள்ளி வழங்குகிறேன் ….
நம்மதம் மட்டுமின்றி மும்மதம் சங்கமித்து நிகழ்தேறிய நிகழச்சிக்கு சம்மதம் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உகாசேவா நிர்வாகிகளுக்கும் சிறப்புகளால் பொதிந்த பாராட்டுகளை உரித்தாக்குகிறேன் ….
நிகழ்வு நன்குற கிருபை நல்கிய இறைவனுக்கே புகழ்வு அனைத்தும் உரித்தாகுக ….
வைபவம் முடிந்து வழி அனுப்புகையில் ஆதரவற்றோரின் நிலை குறித்து நமது மனங்களில் வலி ஏற்பட்டாலும் அவர்கள் சுபிட்சமான வாழ்வு பெறும் பாக்கியங்களை இறைவன் வழங்கிட நாம் துவாக்கள் செய்கையில் நமது விழிகளில் கண்ணீர் மெதுவாய் உருண்டது ….
அன்புடன்
அப்துல் கபூர்
06.01.2018 ….
அழகிய வேண்டுகோள் ….
பதிவும் படங்களும் தனித்தனியே பிரிந்து செல்வதை தவிர்க்க படங்களுக்கு தனியான லைக்குகளை இட வேண்டாமென பரிவோடு கேட்கிறேன் ….
நிகழ்வின் படங்களை எனக்கு தந்தவர்
மருத்துவமனை ஆலோசகர்களில் ஒருவரான அன்புச் சகோதரர்
Mohamed Kowdu …
இன்றைய நிகழ்ச்சியை சுடச்சுடவென படபடவென முகநூலில் அவ்வப்போது பதிவேற்றியவர் அன்புச் சகோதரர்
ஊடகவியல் வல்லுனர்
Abdul Basith …
நிகழ்வின் தகவல்களை தந்தவர்
சேர்மன்
Mohamed Gaffoor …

Advertisements

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s