RSS

Author Archives: S.E.A.Mohamed Ali. "nidurali"

About S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

ஓவியா!

 

Mohamed Rafiudeen
இந்த க்யூட் லிட்டில் கேர்ளால பேஸ்புக் ரெண்டா பிரிஞ்சிடும்போல!
இவரோட ஆதரவாளர்கள் அட்ராஸிட்டீஸ் தாங்க முடியல! பட் இப்ப டாப்பிக் இவரை பற்றியதா இருந்தாலும் மேட்டர் பொதுவானது!
இந்தப் பெண் பேசற டயலாக் சம்திங் வெரி லவ்வபிள் அண்ட் இன்ட்ரஸ்டிங்!
“பொய் யார் வேணா பேசிடலாம் உண்மை பேச பெரிய தைரியம் வேணும்” க்ரேட் வேர்ட்ஸ் நெஜமா சத்தியமான வார்த்தை!
“என் கண்ணை பார்த்து பேசு ஜூலி! அப்பத்தான் நம்புவேன்” அய்யோ ஒரு மனிதன் கண்களை பார்த்து பேசினால் நேர்மையாளன் என்று அர்த்தம்! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 25, 2017 in 1

 

கட்டுரை எழுதுவது எப்படி?

maalan

‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.

அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.

ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.

‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.
——————– Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 16, 2017 in 1

 

குழப்பத்துக்கு பிறந்தவனுங்க!

cycleநான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சப்போ கடையிலே பத்தாம் நம்பர் சைக்கிள் இல்லைன்னா, ஆணியே புடுங்க வேணாம்னு போயிடுவேன். கடைக்காரர், ‘டேய், ஏழாம் நம்பர் எடுத்துட்டு போடா’ன்னு சொல்லுவாரு. பசங்க யாருமே ஏழாம் நம்பரை தொடமாட்டோம். பார் இல்லாத சைக்கிளை ஓட்டிக்கிட்டு போனா, ஆண்மைக்கு இழுக்குன்னு அப்படியொரு மூடநம்பிக்கை அப்போ.

இப்போ ஒரு இருபத்தஞ்சி வருஷம் கழிச்சிப் பார்த்தா எந்த சைக்கிளிலும் பாரே இல்லை. கேட்டா unisex சைக்கிள்னு சொல்றானுங்க. சைக்கிள் ரேட்டும் பன்னெண்டாயிரம், பதினஞ்சாயிரமாம். வாடகை சைக்கிள் கடையே எங்கேயும் இருக்குறதா தெரியலை. சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னா சொந்தமாதான் சைக்கிள் வாங்கணும். அதுவுமில்லாமே இப்போ யாரு சைக்கிள் கத்துக்கறாங்க, டைரக்டா பைக்குதான். முன்னாடி டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்டுக்கு போய் ஜூனியர், சீனியர், ஹைஸ்பீடுன்னு எக்ஸாமெல்லாம் எழுதி கவர்மெண்ட் சர்ட்டிஃபிகேட் வாங்குவோம். இப்போ டைரக்டா எல்லாரும் கம்ப்யூட்டரில் டைப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 9, 2017 in 1

 

கிண்ணத்தப்பமும் திருவாங்கோடும்..!!

Noor Mohamed

சிலவகை பதார்த்தங்களுக்கு சில ஊர்கள் புகழ் பெற்றிருக்கும்.திருநெல்வேலி அல்வா போல.எல்லா ஊர்லயும்தான் அல்வா கிண்டுறாங்க.கோதுமை நெய் சீனி இவைதான் மூலப்பொருட்கள்.ஆனாலும் திருநெல்வேலி அல்வாண்ணா தனி சுவைதான்!நெல்லையின் புகழ்பெற்ற ஒரிஜினல் அல்வாக்கடைக்காரர்கள் இரண்டுபேரிடமும் இதுபற்றி விசாரித்த போது தெரியவந்தது :பஞ்சாப்பின் ஊசி கோதம்பும் காங்கேயம் நெய்யும் இருந்தாலும் தாமிரபரணி தண்ணிதான் முக்கியம்!அதுதான் அல்வாவுக்கு தனிச்சுவை தருவது.நீங்க தாமிரபரணி தண்ணியை உங்க ஊர்ல கொண்டுபோய் அல்வா கிண்டினாலும் அந்தச் சுவையைப் பெறலாம் என்று விளக்கினார்கள்!என்னடா,கிண்ணத்தப்பத்தைப் பற்றி பேசவந்தவன் அல்வாவ பற்றி பேசுகிறானேண்ணுதானே பாக்கிறீங்க?காரணமிருக்கு!
கிண்ணப்பத்தின் பூர்வீகம் கோட்டார் என்று Abu Haashima வும்
குளச்சல்தான் என்று Abu Fahadம் இல்லையில்லை திருவிதாங்கோடுதான் என்று நாங்க திருவைக காரங்களும்
பட்டணம்தான் என்று பட்னணத்து காரங்களும் மல்லுகெட்டுறாங்க முகநூலில்!Mujeeb Rahman பழங்கால ஓலைச்சுவடி படம் போட்டு குளச்சல்தான் என்று கூறுகிறார் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 6, 2017 in 1

 

சினிமா நாம் நினைக்குமளவுக்கு பிரும்மாண்டமான தொழில்துறை அல்ல.

சினிமா வர்த்தகம் குறித்த எண்கள் எப்போதுமே ஊதிப் பெருக்கப் படுவதுதான். குறிப்பாக சமூகவலைத்தளங்கள் பிரபலமான பிறகு.
ரஜினிக்கு சம்பளம் 55 கோடி என்பார்கள். கமல் 40 வாங்குகிறாராம். விஜய்க்கு 30. அஜீத் எப்படியும் 50 வாங்குவாரு. சங்கமித்ரா ஆயிரம் கோடி பட்ஜெட்டாம். நயன்தாரா எட்டை தொட்டுட்டாங்க. தனுஷுக்கே பத்துன்னா சிம்பு கண்டிப்பாக பன்னெண்டு வாங்குவாப்புலே. மூணே நாளில் நூறு கோடி கிராஸ். சூர்யாவுக்கு இருபதுன்னதுமே ஏ.ஆர்.முருகதாஸ் மேலே ஒண்ணு போட்டு இருபத்தி ஒண்ணா வாங்கிட்டாரு.
இஷ்டத்துக்கும் எழுதுகிறார்கள். தாறுமாறாக பேசுகிறார்கள். குறிப்பாக இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதியே யூட்யூப் சானல் நடத்தி ‘ப்ரெஸ்’ ஆகிவிட்டவர்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 5, 2017 in 1

 

பான்-ஆதார் இணைப்பு – இன்பாக்ஸ் கேள்விகள்

• பான் கார்டையும் ஆதாரையும் இணைக்க வேண்டுமா?
— ஆமாம் இணைக்க வேண்டும்.
• ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னதாக இணைத்தாக வேண்டும், இல்லையேல் பான் கார்டு செல்லாதாகி விடுமா?
— இல்லை. அப்படி ஏதும் இல்லை. பீதியடைய வேண்டாம்.
• பின்னே ஜூலை 1 என்னும் குழப்பம் என்ன?
— ஜூலை 1ஆம் தேதி முதல் புதிதாக பான் கார்டு வாங்குவோர், கட்டாயமாக ஆதாருடன் இணைக்கப்படுவார்கள்.
ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி பான் கார்டு வைத்திருப்பவர்கள் – அதாவது, ஏற்கெனவே பான் கார்டு வாங்கியவர்கள், தமது ஆதார் கார்டு எண்ணை அரசு குறிப்பிடும் கெடு தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அந்தத் தேதிக்குள் தெரிவிக்காவிட்டால் அதற்குப் பிறகு பான் கார்டு ரத்தாகி விடும்.
அதாவது, அந்தக் கெடு தேதி இன்னும் அரசே அறிவிக்கவில்லை. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 1, 2017 in 1

 

ஏழ்மையும்_எளிமையும்!

ஏழ்மையில் எளிமை என்பதைவிட!
எந்நிலையிலும் எளிமை என்பதே ஏற்றம்!
ஏழ்மை இல்லாததை பறைசாற்றும்!
எளிமையோ ஏற்றத்திற்கு கட்டியம் கூறும்!
ஏழ்மையிலும் இரவா நிலை கொள்ளல் செம்மை!
எளிமையில் இருக்கும் நிலையோ கொள்கை! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on June 27, 2017 in 1