RSS

Category Archives: ஊர்

உகாண்டா

உகாண்டாவில் இந்தியர்கள்.

உகாண்டாவில் இந்தியர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களால்
இருப்புபாதை அமைப்பதற்காக 125 ஆண்டுகளுக்கு முன்பாக
கூலிகளாக அதிகமாக குஜராத்திலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். இந்த இருப்புப்பாதை கென்யா நாட்டிலுள்ள மொம்பாசா எனும் துறைமுகப் பட்டினத்தை இணைக்கிறது.
உகாண்டாவில் இருந்துதான் சகாரா பாலைவனத்தையே வளம் கொளிக்கச்செய்யும் நைல் நதி உருவானாலும் கடல்வழி மார்க்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்புப்பாதை பணிகள் முடிந்த பிறகு இந்தியர்கள் உகாண்டவிலேயே தங்கிவிட்டார்கள். அப்போது உகாண்டாவும் பரந்து விரிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடிமைனாடாகவே இருந்ததால் பிரச்சனைகள் எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர்.
Read the rest of this entry »

 

Tags:

துரிதமாக ஒரு பயணம் துருக்கி வரையில்…

குறிப்பு – இது தொடரல்ல நீளமான பதிவு

துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.

விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.

 • இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.
  என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.

  மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.

  ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.

  அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.


  இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.

  நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள். Read the rest of this entry »

 •  

  Tags: , ,

  மழை காலத்தில் நம்ம ஊர் (பாகம் – 2)

  கடும் காற்றடிக்கும், புயல் வந்து கரையைக்கடக்கும்
  வெள்ளமோ ஊரை நன்கு வெளுத்துக்க‌ட்டும்
  ம‌ழை நீர் வ‌ந்து வீட்டிற்குள் குடிபுகும்
  தெருக்க‌ளெல்லாம் சேர், ச‌க‌தியில் க‌ட்டிப்புர‌ளும்
  க‌டும் காற்றில் ம‌ர‌ங்க‌ள் ஆங்காங்கே மாண்டு போகும்.
  நொறுக்குத்தீணிக்கு நா அலைபாயும்.
  மாட‌ மாளிகையில் வீற்றிக்கும் நினைப்பில்
  அடைம‌ழை க‌ண்டு உள்ள‌ம் ஆன‌ந்த‌ம‌டையும்
  குளிர் காற்று வ‌ந்து உள்ள‌த்தை மெல்ல‌ கொல்லும்
  நீள‌ வானை மேக‌க்கூட்ட‌ம் மேய்ந்து செல்லும்
  வெண் கொக்கு கூட்ட‌ம் வானில் ப‌ற‌ந்து
  யாருக்கோ ஓட்டு கேட்டு செல்லும்
  மின்ன‌ல் வ‌ந்து ஊருக்கே மாத்தாப்பு கொளுத்தும்
  இடிச்ச‌த்த‌ம் இறைவ‌னின் ச‌க்தியை ப‌றைசாற்றும்
  சிறுவ‌ர் உள்ளமோ காகித‌ ஓட‌மிட்டு இக்கான‌க‌த்தை சுற்றிவ‌ரும்
  தும்பிகள் வானில் ப‌ற‌ந்து சிறு த‌ம்பிக‌ளை உற்சாக‌மூட்டும்.
  காளான்க‌ள் ம‌ல‌ர்ந்து யாருக்கோ குடை பிடிக்கும்.
  ப‌ச்சைபாசி ஆங்காங்கே தோன்றி ஊருக்கே போர்வை விரிக்கும்
  அடுப்பெறிக்க உதவும் விற‌குக‌ள் அழும்பு ப‌ண்ணும்.
  சோவென‌ பெய்யும் மழை சோம்ப‌லுக்கு பாய் விரிக்கும்.
  சொட்டென‌ விழும் ம‌ழை நீர் ம‌ன‌திற்கு சொட்டு நீர்ப்பாய்ச்சும்
  ம‌ழையில் ந‌னைந்த‌ காக‌ம் வெயிலுக்கு ஏங்கும்.
  க‌ருமேக‌ம் கிழ‌க்கே தோன்றி வீடு க‌ட்டுவோரை ப‌ய‌முறுத்தும்
  ப‌ழைய‌ சோற்றில் செய்த முறுக்கு வான‌ம் பார்க்க‌ அஞ்சும்
  வெண்ப‌னி மூட்ட‌த்தில் வீட்டு ம‌ர‌ங்க‌ள் த‌லைதுவ‌ட்டிக்கொள்ளும்
  ஊரோ இருளில் மூழ்கும் உள்ள‌மோ உற்சாக‌த்தில் மிளிரும்
  ப‌ள்ளி விடுமுறையை எண்ணி எங்கோ ப‌ற‌ந்து செல்லும்
  பண‌ங்காசுக‌ள் இல்லாம‌ல் இப்பாருல‌கை சுற்றித்திரியும்
  முட‌ங்கிக்கிட‌க்கும் ந‌ம்மை ப‌ள்ளியின் பாங்கொலி த‌ட்டி எழுப்பும்.
  இக்கால‌ங்க‌ள் க‌ச‌த்தாலும் அக்கால‌ங்க‌ளை எண்ணி இனிமை/இளமை கொள்வோம் என்றும் ம‌ற‌வோம்.
  ம‌ழை கால‌த்தில் ந‌ம்ம‌ ஊர் ம‌ன‌திற்குள் ஓர் க‌ற்ப‌னை செய்து பார்(ப்போம்.)
  — மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

  Source : http://adirainirubar.blogspot.com/2010/11/2.html

   
  Leave a comment

  Posted by on November 6, 2010 in ஊர்

   

  Tags: