RSS

Category Archives: கட்டுரைகள்(Article)

விவேகானந்தரும் பசுமாடுகளும்

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக் கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார். மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் – இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர். Read the rest of this entry »

 

அது என்ன காதலர் தினம் !?- அதிரை மெய்சா

imagesகாதலர்கள் தினம் என்ற பெயரில் போலி முகம் கொண்ட கள்ளக்காதலர்கள் காம போதையை அனுஷ்டிக்கவும் தன் இச்சைகளை தீர்த்துக்கொள்ளவும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு காதலர்கள் தினமென்று பெயரிட்டு கொண்டாடுகிறார்கள்.

மனதும் மனதும் உள்ளத்தால் மட்டும் நேசிக்கப்படுவதுவே உண்மைக்காதலாகும். உண்மைக்காதல் ஒரு போதும் விழாவாக வீதிக்கு வராது. காதல் என்ற பெயரில் என்ன நடக்கிறது என்று இன்றைய காலத்தில் நாம் கண்கூட காண்கின்றோம்.

உண்மைக்காதலென்று காதலர்கள் தினம் கொண்டாடுபவர்கள் காதலியோ, காதலனோ தன் கையைதொடவோ, முத்தமிடவோ சம்மதிக்க வில்லையெனில் அக்காதலை ஏற்றுக்கொள்வார்களா..? Read the rest of this entry »

 

எந்த முகவரியில் தன் ஆறு சகாக்களையும் கண்டானோ -கே. என். சிவராமன்

10429846_10206100385818235_2665674475978084583_nப்ளஸ் 2 முடித்தபோது அவனுக்கு வயது பதினேழு. ஷார்ட் ஹேண்ட், டைப்ரைட்டிங்கில் கில்லாடி. காற்றுக்கு சமமாக கீ போர்டில் பயணிப்பதில் கெட்டிக்காரன். எனவே அமைந்தகரையில் இருந்த அந்த நிறுவனத்தில் ஸ்டெனோவாக வேலைக்கு சேர்ந்தான்.
அடுத்த மூன்றாண்டுகளில் நம்பர் 5, 2வது லைன் பீச் சாலையில் இயங்கி வந்த அந்த லாஜிஸ்டிக் நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தான். முன்பை விட கொஞ்சம் சம்பளம் அதிகம். ஆனால், பணி நேரம் அதிகம். ஆபீஸ் பாயில் ஆரம்பித்து, குப்பைகளை பெருக்குவதில் தொடங்கி சகலமும் அவனே. பெரும்பாலான நாட்கள் அலுவலகத்திலேயேதான் உறங்குவான். அலுவலக பூட்டு அவனால்தான் திறக்கப்படும். அவன் கரங்களால்தான் பூட்டப்படும். சாவியின் அளவு எப்படியிருக்கும் என்று கூட நிறுவன முதலாளிக்கு தெரியாது.
எந்த நேரத்தில் உறங்கினாலும் அதிகாலை 4.45க்கு எழுந்து விடுவான். 5 மணிக்கு பீச் ஸ்டேஷனில் இருப்பான். 6 மணிக்குள் அம்பத்தூரில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்து விடுவான்.
அவன் அம்மா அவனுக்காகவே காத்திருப்பார். சுடச்சுட டிபன், உணவு தயாராக இருக்கும். குளித்துவிட்டு சாப்பிடுவான். டிபன் பாக்ஸுடன் அலுவலகத்துக்கு கிளம்பி விடுவான். சரியாக கடிகார முள் பத்தை தொடும்போது அலுவலக மேஜை நாற்காலிகளை துடைத்து சுத்தமாக வைத்திருப்பான். Read the rest of this entry »

 

லஞ்சத்தை ஒழிக்க முடியாதா !?

00182_1லஞ்சம் என்பது குணப்படுத்த முடியாத புற்றுநோயாக அனைத்து துறையிலும் வளர்ந்து வேரூன்றி விட்டது..லஞ்சம் வாங்குவதும் குற்றம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று நாட்டில் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் எத்தனை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்துப் பிடித்து தண்டனை வழங்கிவந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் குறைந்துகொண்டு போனாலும் லஞ்சத்தை ஊக்கப்படுத்துவதுபோல லஞ்சம் கொடுக்கும் நாட்டுமக்கள் பெருகிக் கொண்டு போகிறார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும்.. Read the rest of this entry »

 

தனித்தமிழா? தனித்துவிடப்பட்ட தமிழா?

மொழி, கவிதை, அன்பு, அறிவு என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்கள்

அதை எந்தத் தமிழனும் மொடி, கவ்டை, ஆன்பே, அடிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. சரியாகத்தான் எழுதுகிறான்.

கிருஷ்ணன், ஜெயபாரதன், ஜான், ஹரிஹரன் என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள்.

அவை தமிழ்ச்சொற்கள் அல்ல. Read the rest of this entry »

 

தவறான உறவு விபரீதத்தை ஏற்படுத்துமா !?

இன்றைய நிலையில் நம்நாட்டிலும் மேலைநாட்டுக் கலாச்சார வாழ்க்கைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உட்புகுந்து ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டன. அதன் தாக்கமாக ஆண் பெண் அன்னியோன்யமாக பழகுதல் திருமணமானவர்கள் வேறுஒருவருடன் தகாத உறவுகள் வைத்துக் கொள்ளுதல் உறவு முறைகளுக்குள் கள்ள உறவுகளை ஏற்படுத்தி கொள்ளுதல் போன்ற சமூகச் சீரழிவை ஏற்ப்படுத்தும் பாதையில் சிலர் பயணிக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கக் கூடியதாக உள்ளது.

தவறான உறவுகளைப் பற்றி நினைக்கும்போது நம் முன்னோர்கள் சொன்ன ஆசை அறுவதுநாள் மோகம் முப்பதுநாள் என்கிற பழமொழிதான் ஞாபகத்திற்க்கு வருகிறது. இது முழுக்கமுழுக்க தவறான உறவுகளுக்கே ஒருவகையில் பொருத்தமாக இருக்கும்.. காரணம் தவறான உறவுகள் வைத்துக் கொள்பவர்கள்தான் தனது ஆசையும் மோகமும் தீர்ந்தபின் அதிகபட்சமாக கைகழுவி விட்டுவிடுவார்கள். Read the rest of this entry »

 

சமஸ்கிருதம்:

10897848_782284098508002_1200098641214079875_nஅன்றைக்கு மறுத்த உயர் ஜாதிகாரர்கள்
இன்றைக்கு வலிய திணிக்கிறார்கள்!
———————————————-
சமஸ்கிருதம்…
இந்திய ஆதிபாஷை!
இரண்டு கருத்திருக்க முடியாது.

இந்தியத் துணைக்கண்டத்தில்
தமிழுக்கு நிகரான
அல்லது அதற்கும் மேலான
பழமையும் வலுவும் கொண்ட மொழி சமஸ்கிருதம்.
இதிலும், இரண்டு கருத்திருக்க முடியாது.

சரி..,
பின் எப்படி அது
மக்கள் புழக்கத்திலிருந்து
அத்து இத்து மறைந்து போனது…?

இன்றைக்கு
சமஸ்கிருதத்தை முன்னிறுத்தி
மக்கள் அதனை படிக்க வேண்டும் என்று
ஏன் வலிய குரல் எழுகிறது? Read the rest of this entry »

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 28 other followers