RSS

Category Archives: கல்வி(EDUCATION)

Page Maker கற்றுக்கொள்ள உதவும் மென்புத்தகம் தமிழில்


இந்த மென்புத்தகம் தமிழில் இருப்பதால் PageMaker கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து பேஜ் மேக்கர் மென்புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Page Maker மென்புத்தகம் டவுன்லோட் செய்ய

இங்கே கிளிக் செய்யவும்pagemaker7Thariq

    • அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக 

 

      pagemaker7Thariq.pdf

View   Download 15k View Download

Source  : http://vadakaraithariq.blogspot.com

Advertisements
 

Tags: ,

14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன்

பதினான்கே வயதில் 32 ஆன்லைன் தேர்வுகளை எழுதி சாதனை படைத்துள்ளார், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை டாக்டர் ரத்தினவேல், டாக்டர் கலையரசி ஆகியோரது மகன் அவினாஷ் மகராஜ்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். முதலில் வீடியோ கேம்சில் ஆர்வம் காட்டியவர், பின்னர் அதில் உள்ள நுணுக்கங்களை கற்றார். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்லைன் புரொபஷனல் என்ற பெயரில் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது. இந்த தேர்வில் கலந்து கொண்ட அவினாஷ். அந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் புரொபஷனல் என்ற சான்றிதழை பெற்றுள்ளார்.
இதேபோல, ஆரக்கிள் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய 32 ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்றார். கம்ப்யூட்டர் துறை மட்டுமல்லாமல் பள்ளியிலும் முதல் மாணவராக திகழ்கிறார் அவினாஷ்.
டாக்டர் ரத்தினவேல் கூறுகையில், ‘‘3 ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மாணவனை அந்த நாடு கொண்டாடியது. ஆனால், இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஆன்லைனில் 32 தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளான் அவினாஷ். இத்தனை இளம்வயதில் இப்படி ஒரு சாதனையை உலகில் வேறு யாரும் புரிந்ததில்லை. இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பியுள்ளோம். இவனுக்கு, இளவயதில் பொறியியல் படிப்பில் சேர வயது வரம்பை தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சாதனை மாணவன் அவினாஷ் மகராஜ் கூறுகையில், ‘‘எனது 9வது வயதிலேயே கம்ப்யூட்டரின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன். பின்னர், ஆன்லைனில் 32 பரிட்சைகள் எழுதி வெற்றி பெற்றேன். ஆன்லைனில் பிராஜக்ட் செய்கிறேன். அமரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் இருந்து பலர் என்னிடம் கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு நான் ஜி&டாக் மூலம் ஆன்லைனில் பாடம் சொல்லி தருகிறேன். ரிசர்ச் டெவலப்பிங் மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் சாதனை படைக்க ஆசை’’ என்றார்.

நன்றி: http://muthupet.org

 

திருக்குறள் இசைத்தமிழ் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம்

திருக்குறள் இசைத்தமிழ் – இசைக்குறுவட்டுகள் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

 

Tags:

மனைவியின் ஆசை!

அன்போடு அழகாக  வந்து “நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்” என்றாள்.
“என் அன்பு தேவதையே நீ ஒரு  அ  ஆ  இ  ஈ உ ஊ எ ஏ ஐ  ஒ ஓ ஃ”  என்றேன்.
“நான் என்ன ஒரு அரிச்சுவடியா! ஒன்றும்  அறியாதவளா? ” என்றாள்.
“அரிசுவடியில்தான் எல்லாமே ஆரம்பமாகின்றது . உன்னை வைத்துத்தான் குடும்பமே தொடர்கின்றது.
நீ இல்லையெனில் நானில்லை” என்றதுடன்  “நீ என் அன்பானவள் ,ஆசைநாயகி .இனியவள் .உன் மீது எனக்கு உள்ள ஈடுபாடு அதிகம் அளவற்றது” என்று அன்புடன் ஆசைகொண்டு இனிய ஈடுபாட்டுடன் உயிராக ஊடல் கொண்டேன்.அவள் இதயம் இப்போது என் வசம் ஆகும் என நம்பினேன்.
ஆனால் அவள் நம்பவில்லை. கோபம் கொப்பளித்தது.அனல் பார்வை. இயற்கையான பிடிவாதம் . வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தேது!  என்னிலை பரிதாபமானது.வேடிக்கை விபரீதமானது. எல்லாம் ஏமாற்றம்.ஐயகோ! என் செய்வேன் .என்னிலை பரிதாபமானது.
ஒட்டலின்றி ஓட்டமெடுத்தேன் எஃகான உள்ளத்தோடு ஒளடதம் (மாற்று மருந்து) நாடி .

 

Tags: ,

வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை…

வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை…

ஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.
இன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில் நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :

வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் : தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.

சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ., என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்புடைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது. இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம். Read the rest of this entry »

 

கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம்

தித்திக்கும் திருமறை
—————————–
கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம்

மௌலானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th.,

கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம்
“உலகத்தோடும், அதைப் படைத்த இறைவனோடும் மனிதன் கொண்டுள்ள பல்வேறு விதமான தொடர்புகளின் தன்மை பற்றிய உள்ளுணர்வுகளை எழுப்புவதே திருமறையின் நோக்கம்.  “குர்ஆனின் போதனைகள் வெற்றியடையாமல் இருப்பதில்லை.  நம் திட்டங்கள் அனைத்தும் இப்போதனைகளைத் தாண்டிச் செல்லா (இவற்றிற்குக் கட்டுப்பட்டே இருக்கும்)” என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்” என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்” என்று அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்) கூறியிருக்கிறார்.
முனிதனின் உள்ளத்திலும், அவனைச் சுற்றிலும் உள்ள எல்லா சக்திகளையும் பக்குவப்படுத்தித் தனக்குப் பணி செய்ய அவற்றை அமைத்துக் கொள்ள மனிதனுக்குக் குர்ஆன்  பூரண உரிமை தருகிறது.  இதற்கு முதற்படியாக மனிதன் கல்வியைத் தேடவேண்டும், அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  நல்லறிவு பெறாத மனிதனின் சக்தி விரயமாகிவிடும். ஆகவேதான், “இறைவா எனக்கு அறிவை வளப்படுத்து,” என்று மனிதன் பிரார்த்திக்குமாறு திருமறை பணிக்கிறது.
திருமறையின் பெருவிளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி பெருமானாரும் கல்வியின் அவசியத்தைப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
“கல்வியைத் தேடுங்கள்: ஏனென்றால் இறைவனின் நல்லருளோடு அதைத் தேடுபவன் தூய செயல் செய்பவனாவான்;: கல்வியைப் பற்றிப் பேசுபவன் இறைவனைப் புகழ்பவனாவான்: அதை நாடிச் செல்பவன் இறைவனைத் தியானம் செய்தவனாவான்: அதைக் கற்றுக் கொடுப்பவன் தர்மம் செய்தவனாவான்: தகுதியுடையவர்களிடையே அதைச் செம்மையாகப் பரத்துபவன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தியவனாவான்.”
மேலும்: “கல்வி அதை அடைந்தவனுக்கு, ஏவப்பட்டதையும், விலக்கப்பட்டதையும் பகுத்துக் காண்பிக்கிறது:  சுவர்க்கத்தின் பாதைக்கு அது ஓர் விளக்காக இருப்பவனுக்கு அது கூட்டாளி: நட்பின்றி இருப்பவனுக்கு அது நல்ல தோழன்;: இன்பத்துக்கு அது வழி காட்டுகிறது: துன்பம் வந்துற்ற காலை அதனைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியைத் தருகிறது: அன்பர்கள் கூட்டத்திலே அது நமக்கு ஓர் ஆபரணம்: பகைவர்களின் கூட்டத்திலே அது நமக்கு ஒரு கேடயம்.”
“அறிவின் துணையால், இறைவனின் அடியான் நன்மையின் உச்சத்தை அடைகிறான்: உயர் இடங்களைப் பெறுகிறான்: அதன் துணையால் அவன்; இவ்வுலகிலே மாமன்னரின் தோர்மையையும் பெறுவான்: மறுவுலகிலே பேரின்ப வாழ்வையும் அடைவான்” என்று நாயகப் பெருந்தகை விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
“அறிஞன் ஒருவனின் பேனாவிலுள்ள ஒரு துளி மை, வீரமரணம் எய்தியவனின்; இரத்தத்தை விடத் தூய்மையானது.”
“ஒரு நாழிகை நேரம் நல்லறிஞர்களின் போதனையைக் கேட்டு; கொண்டிருப்பது, வீர மரணம் எய்திய ஆயிரம் பேரின் ஜனாஸயாத் தொழுகையில் கலந்து கொள்வதைவிட மேலானது.”
குல்வியைத் தேழ நல்லறிவு பெறச் செல்பவனுக்கு, பேரின்ப மாளிகையில் உயர்வான இடம் ஒன்றை அமைத்துத் தருவான் இறைவன்: கல்வியை நாடி அவன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் ஒரு நற்கருமத்தின் பயனாகும்.”
இத்தகைய பல்வேறு அருளுரைகளால் கல்வியின் உயர்வையும், அறிவுத் தோட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.
“கல்வி, நபிமார்களின் உரிமைப் பொருள்;;: செல்வம் பிர்அவ்ன்களின் உரிமைப் பொருள்,” என்று நபிமணியின் தோழர் முதல் கலீபா ஹல்ரத் அப+பக்ரு ஸித்தீக் (ரலி) அவர்கள் மொழந்திருக்கிறார்கள்.  “கல்வி செல்வத்தை விடச் சிறந்தது:  ஏனென்றால் கல்வி உங்களுக்குப் பாதுகாவல் தருகிறது: செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று ஹல்ரத் அலீ (ரலி) கூறியிருக்கிறார்கள்.
கல்வியின் அவசியத்தை வற்புறுத்தாத இடமே இஸ்லாமிய இலக்கியத்தில்; இல்லையெனலாம்.  அதோடு,
“நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரை – அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கை நாடினால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை: அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளருமில்லை.” (13:11)
நல்லறிவு பெற்று மனிதன் நல்லவனாக வாழும் போதுதான், அவன் இறைவனின் பிரதிநிதியாகும் தகுதியைப் பெறுகிறான்.  அம்மனிதனுக்கு இறைவன் நல்கிய பெரும் அருட்கொடை யாது? இறைவனே தன் திருமறையில் இதனைக் குறிக்கிறான்.
“(நபியே) ஓதுவீராக! ஊம்முடைய ரப்பு தயாளமானவன் – அவன் எத்தகையோனென்றால் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.  மனிதனுக்கு அவன் அறியாதவற்றை (யெல்லாம்) அவன் கற்றுக் கொடுத்தான்.” (96:3,4.5)
இத்திருவாக்கியங்கள் “ஸ_ரத்துல் அலக்” (இரத்தக்கட்டி) எனும் அத்தியாயத்தில் வருகின்றன. இந்த அத்தியாயத்துக்கு விளக்கம் தரும் ஜாருல்லாஹ் அஸ்ஸமக்~ரீ தங்களுடைய ‘க~;~hப்’ என்னும் விரிவுரையில்:
“மனிதன் அறியாதவற்றையெல்லாம் இறைவன் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்: இதுவே அவன் பேரருளுக்கு ஒரு சான்றாகும்… மனிதன் அறியாமலிருந்த பொருள்களின் உண்மையெல்லாம் அவனுக்கு இறைவன் வெளிப்படுத்துகிறான்.  அறியாமையென்னும் இருளிலிருந்து நல்லறிவென்னும் பிரகாசத்துக்கு மனிதனை இறைவன் கொண்டு வருகிறான்.  (எழுதுகோலால் கற்றுக் கொடுத்த) இறைவன், எழுத்தறிவின் அருள் தன்மையை மனிதனுக்கு உணர்த்தியிருக்கிறான்.  இதிலிருந்து எத்தகைய நன்மை மனித குலத்துக்குக் கிடைக்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.  எழுத்தறிவில்லாமல் வேறெந்த அறிவும் பெற முடியாது: எந்த நுண்ணறிவும் மனிதனுக்குக் கிட்டாது.  முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் மனிதனுக்குக் கிட்டாது.  முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் தம் நல்லுரைகளையும் எழுதுகோல் என்னும் பெருங்கொடையின்றி வரைய முடியாது: இறைவன் இறக்கிய வேதங்களையும் குறித்திருக்க முடியாது.  அந்த எழுத்தறிவில்லாமல் தீனின் (மத) வி~யங்களையும், துன்யாவின் (உலக) வி~யங்களையும் ஒழுங்குபடுத்த முடியாது” என்று விளக்கியிருக்கிறார்கள்.
“அவன் தான் எழுதுகோல் கொண்டு கற்றுக்கொடுத்தான்” (96:4) என்ற ஒரு சிறு வாக்கியத்தின் விளக்கமாக மேற்கண்ட கருத்துகளைத் தந்திருக்கிறார்கள் அஸ்;ஸமக்~ரீ.  இப்படி ஒவ்வொரு வாக்கியத்துக்கும் மனித அறிவின் எல்லைக்கோடுவரை சென்று விரிவுரைகளும், விளக்க உரைகளும் தேடியிருக்கிறார்கள் பேரறிஞர்கள். Read the rest of this entry »

 

Tags: , , ,

How to handle Sibling Rivalries

How to handle Sibling Rivalries Sibling rivalry is a common issue faced in most families. It starts with your firstborn getting a new member in the family; he will feel huge changes and may even feel deserted. He was the centre of attention, now he has to compete for it, therefore most of the time he’ll misbehave to get your attention. It’ll continue with the next child until the last one. As a parent, you will want you children to grow up together as friends. There are a few tips from Parentline Plus (Parentlineplus.org.uk), a UK a national charity that works for, and with, parents.

Age dissimilarity means that your children will be at different stages of learning. Acquaint your kids with activities suitable for all age groups and let them participate actively. Encourage the older siblings to assist the younger ones. This step will make the older family members feel important and will boost up their confidence in themselves. Allow your older children to participate actively in the new baby’s life. Let them look after their baby brother or sister or get them to change the nappy if they want to, or you can get them to read stories to the baby. Such activities will make the brotherly or sisterly connection stronger. Read the rest of this entry »

 

Tags: , , ,