RSS

Category Archives: கவிதைகள்(Poem)

அழகான கண்ணிமைகளில் .. அழுகைப்பூ பூத்திருக்கு !…

-ஜே .பானு ஹாரூன்

=======================

அழகான கண்ணிமைகளில் …
அழுகைப்பூ பூத்திருக்கு !…
விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் …
விண்ணிலே பூத்திருக்கு !…
தனித்த வெண்ணிலவாய் …
வெள்ளிகளின் மத்தியிலே ..
உண்ணா நோன்பிருந்து ..நீ ,
உடல் வருத்தி லாபமென்ன ?…
சத்தியமாய் பாதைமாறா …
உத்தமியாய் வாழ்ந்திருந்தாய் !…
சங்கோஜம் நிறைந்தவளாய் …
செல்வியாய் வளர்ந்திருந்தாய் !..
எதற்குமே குறைவில்லை …
எண்ணி மனம் பூரித்திருந்தாய் !.. Read the rest of this entry »

Advertisements
 

ஒருநாள் போதுமா?!

ஆயுளுக்கும் தீராக் கடன்.
ஆண்டுக்கொரு வாழ்த்தில்
அடைப்ப தெங்ஙனம்?

காலந்தோறும்
கைப்பிடிக்கும் துணை.
கணக்குப் பார்த்தால்
காலம் போதுமா?

முழு வாழ்வை வசந்தமாக்கும்
முத்தனைய அன்பும்
மனம் நிறைக்கும் ஆலோசனையும்.
ஒற்றை நாளில் நன்றி
உரைத்துக் கழியுமோ?

என்றாலும்… Read the rest of this entry »

 

தளும்பும் புத்தகத்தால் தள்ளாடும் நடை…..

10556323_950352291665557_8639950434531028323_n

தளும்பும் புத்தகத்தால்
தள்ளாடும் நடை;
உண்மையானக்
குடிமகன்கள்!

வருங்காலச் சுமைக்கு
ஒத்திகை;
கனமானத் திட்டத்தால்
நிறைவானது எங்கள் பை!

பால் சோறு
ஊட்டிவிட அம்மாவைத் தேடும்;
பாழாய்ப் போன
புத்தகத்தைத் தூக்க
சிறு பயில்வானாய் நான்! Read the rest of this entry »

 

அழுகைதான் மனித நாகரிகத்தின் முதல் படி

10250322_675639732482679_222954225213308352_n

அழுகைதான்
மனித நாகரிகத்தின்
முதல் படி

ஆண் அழுவது
அழகல்ல என்பது
அழகல்ல Read the rest of this entry »

 

Tags:

இயலாமை -நிஷா

398686_187146784762580_1432636873_nநான் புகைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு சிகரெட்டைப் போல

நான் கரைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு சிகரெட்டைப் போல

இயலாமையின் வெம்மையில்
புழுங்கிக் கொண்டிருக்கிறேன்
ஒரு சிகரெட்டைப் போல

சுயத்தின் அடையாளம்
தொலைத்து விட்டிருக்கிறேன்
ஒரு சிகரெட்டைப் போல

குற்ற உணர்ச்சியின் தீராநெருப்பில்
எரிந்து கொண்டிருக்கிறேன்
ஒரு சிகரெட்டைப் போல…!!

10690059_570490846428170_4178803401116655780_nநிஷா மன்சூர்

 

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

4545கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள் Read the rest of this entry »

 

உயிர்மெய் / தாஜ்

10982237_815695568500188_8234936627007366807_nபசுமையின் அந்தி
இலையுதிர் கோலம்.
சிதிலம் காண்
யௌவனத்தின் கூறு.
நொருங்கிக் கிடக்கும்
கரிக்கட்டைகளும்
நின்ற மரத்தின் சாட்சி.
இருள் வழியில் இடறும்
ஏதோ அது நான். Read the rest of this entry »