RSS

Category Archives: செய்திகள்(news)

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்

0c50137e0495f901f9427996e8d51b4b_XLதுபை (25 மார்ச் 2018) ஐக்கிய அரபு அமீரகம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக நடத்திய “கீழடி எனும் தமிழ் நிலம்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தொல்லியல் ஆராய்ச்சி என்றால் என்ன, அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவம் ஒரு நாகரீகத்தின் தொன்மையினை நிச்சயிக்கும் அடிப்படைகள் குறித்த சிறு முன் குறிப்புடன் ஆரம்பித்த முத்து கிருஷ்ணனின் சிறப்புரையில் பேசப்பட்ட முக்கிய செய்திகள் : Read the rest of this entry »

Advertisements
 

தனியே தன்னந்தனியே….!/ரபீக் சுலைமான்.

தனியே தன்னந்தனியே….!/ரபீக் சுலைமான்.

10906522_10153004102101575_2236886411995107701_n

நம்ம எல்லோருக்கும் பிரயாணத்தில் ஒரு அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். என்னவெனில், நாம் (முன்பதிவு செய்திருந்தாலும்) பயணிக்க இருக்கும் பேருந்தில் போதிய அளவு பயணிகள் ஏறவில்லையெனில் ஒன்று பேருந்து புறப்பட தாமதமாகும். அல்லது அடுத்து புறப்பட இருக்கும் பேருந்தில் சேர்ந்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்போம்.

இதேபோல் இருதினங்களுக்கு முன் அமெரிக்காவின் ‘டெல்டா’ எனும் உள்ளூர் விமானத்தில் க்ளீவ்லேண்ட் எனும் நகரத்திலிருந்து நியூயார்க் செல்வதற்காக கிறிஸ் ஓ’லெரி எனும் பயணி முன்பதிவு செய்திருந்தார். Read the rest of this entry »

 

ஏர் ஏசியா விமான விபத்து : நாற்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு!

plane-found-indonesia-sadஜகார்த்தா: இ்ந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பி நடு வழியில், மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. விமானத்தின் பாகங்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கடலில் மிதப்பதாக இந்தோனேசிய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் 30 கப்பல்கள், 15 விமானங்கள் ஈடுபட்டன. ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்பிடி படகுகள் வாயிலாகவு ஜாவா கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது Read the rest of this entry »

 

பதவியை பலி வாங்கிய 2 தவறுகள்

10712967_940974489263461_4163940456340528452_nயுகோ ஒபுச்சி. ஜப்பான் அமைச்சர். தொழில், வர்த்தகம் மின்சாரம் ஆகிய 3 முக்கிய துறைகளையும் கைவசம் வைத்திருந்தவர்.

நாட்டின் முதலாவது பெண் பிரதமராக வருவார் என கணிக்கப்பட்டவர்.

சற்று முன் ராஜினாமா செய்துள்ளார்.

1. அரசியல் நன்கொடையாக வசூலித்த பணத்தில் பெரும் பகுதியை தனக்கு மேக்-அப் சாதனங்கள் வாங்க செலவிட்டார்.

2. தன் தொகுதியில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு டோக்கியோவை சுற்றிக் காட்ட பணம் செலவிட்டார்.

இந்த 2 புகார்கள் அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளன.

வாக்காளர்களை விலைக்கு வாங்கும் முயற்சி கேவலமானது என்பது ஜப்பானியர் நம்பிக்கை.

1509273_822563767771201_2089649643210206418_nசெய்தி தந்தவர் கதிர் வேல் அவர்கள் Kathir Vel

 

சாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம்

சாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம் – அமெரிக்க யேல் பல்கலைகழகம்,போர்சுகல், லிபியா விஞ்ஞானிகள் பங்கேற்பு- பத்திரிக்கைகள் பாராட்டு

.இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் ஆராய்சி மற்றும் முதுகலை விலங்கியல்; துறை ஏற்பாடு செய்த உலக அளவிளான விஞ்ஞானிகள் கலந்து கொண்ட ஒரு நாள் சாவதேச மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்க யேல் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியரும் அமெரிக்க மருந்தியல் துறையின் ஆலோசகருமான டாக்டர் அலாவுதீன் கலந்து கொண்டு இ;ன்றைய மருந்தியல் துறையில் உயிர் பொருள்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். Read the rest of this entry »

 

Tags: , , , ,

இதயத்துடிப்பு

ஆசிரியர் : ஜி.ஜே. தமிழ்ச்செல்வி , பொறுப்பாசிரியர் : வையவன்
Heart Beat Trust
Heartbeat12 copy
இதயத்துடிப்பு புத்தக வெளியீடு
10559735_536081353188002_1550912928234268647_n
12
Heart Beat Trust – கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று உருவாகி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டு, 2009 செப்டம்பர் 24 –ந்தேதி அன்று முறையாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை இயங்கி வருகிறது.

தொடர்ந்த பணியில் இந்நிறுவனத்தால் அடிப்படை கல்வி மற்றும் கணிணி கல்வி பெற்றவர்கள் 57 பேர்கள். இது நாள் வரை பிற கல்வி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பி படிக்க வைத்தது போய் இந்நிறுவன அலுவலகத்திலேயே கணிணி கல்வி மையம் மற்றம் உண்டு உறைவிட பள்ளி அமைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
Read the rest of this entry »

 

Tags: ,

டெண்டுல்கரா யார் அவர்? – கேட்கிறார் பிரபல வீராங்கனை!

லண்டன்: டெண்டுல்கரைப் பற்றி தனக்குத் தெரியாது என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபேவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிரிக்கெட் ஜான்பவான் சச்சின் டெண்டுல்கர், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு போட்டியை சச்சின் வி.ஐ.பி. இருக்கையில் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் இணைந்து நேரில் கண்டுகளித்தார். அப்போது, அவர்களுடன் கோல்ப் வீரர் இயான் பௌல்டர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டிராஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது, வி.ஐ.பி. பார்வையாளர்கள் குறித்து நினைவு கூர்ந்த மரியா ஷரபோவா டெண்டுல்கர் குறித்துக் கேட்கையில் அவர் யார் என்று தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

  • டேவிட் பெக்காம் குறித்து கூறுகையில், “நான் இரண்டு மூன்று தடவை லண்டனில் பெக்காமை சந்தித்துள்ளேன். அவர் ஒரு நல்ல மனிதர். நம்ப முடியாத கால்பந்து வீரர். தனது வரலாற்றில் நிறைய சாதனைகளை புரிந்துள்ளார். அவர் பழகுவதற்கு அருமையான நபர்” என்று தெரிவித்தார்.

    டெண்டுல்கர் யார் என்றே தெரியாது என்று பிரபல வீராங்கனை தெரிவித்திருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.


    http://inneram.com/images/inneram/sports/mariya-sharapova.jpg

     
  •