RSS

Category Archives: பொதுஅறிவு(General Knowledge)

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை திணறடித்த 5 வயது சிறுவன்

Xboxமுன்னணி கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் “எக்ஸ்பாக்ஸ்’ விளையாட்டுக் கணக்கை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு வளையத்தை ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளான்.

அமெரிக்காவின் சான் டைகோ நகரைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் வான் ஹùஸல் என்ற அந்தச் சிறுவன், கணினியில் தனது தந்தைக்குத் தெரியாமல் அவரது “எக்ஸ்பாக்ஸ்’ கணக்கைத் திறக்க முயன்றுள்ளான்.

ஆனால், அதற்கான கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) இல்லாததால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் விசைப்பலகையில் “ஸ்பேஸ்’ விசையை சிலமுறை தட்டிவிட்டு பிறகு “என்டர்’ விசையைத் தட்டியுள்ளான். Read the rest of this entry »

Advertisements
 

தெரிந்து கொள்வோம் வாங்க

شسي*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும். உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது. பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக நீந்தும்.
*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்.

*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.

 • *பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி. ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

  *இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.

  *ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம்.

  * *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.

  * இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.

  * ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை. இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

  * 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது. பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.

  * காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு 10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.

  * விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 4,700-க்கும் மேல் ஆகும்.

  * ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.

  எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள் வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து செல்கின்றன. குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.

  *********************

  *வரிக்குதிரையானது தனது பலம் வாய்ந்த பின்னங்கால்களினால் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தை உதைத்து தள்ளிவிடும். ஆப்பிரிக்க மானும் காட்டு எருமையும் கூட தங்களது கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கும். ஒட்டகச் சிவிங்கியும் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் உதைத்து தாக்கும்.

  *********************

  *ஆண் சிறுத்தைக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் குட்டிக்குப் பெயர் `லியோன்பான்’. ஆண் சிங்கத்திற்கும் பெண் சிறுத்தைக்கும் பிறக்கும் குட்டிக்கு `லிபார்ட்’ என்று பெயர். ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறப்பது கோவேறுக் கழுதை.

  ********************

  நன்றி: யாழ் இணையம்

  Engr.Sulthan

   
 • ஏன் அமெரிக்கா STEM பட்டதாரிகள் உருவாக்க தோற்கிறது -விளக்கப்படம்

  வேகமாக  வளர்ந்து வரும் ஐக்கிய அமெரிக்க தொழிற்சாலைகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
  ஏன் மாணவர்கள் ஸ்டெம் (STEM )பக்கம் திரும்பவிலை ? ஒருவேளை சிரமமா ? அல்லது  வேறு ஏதாவது?  அதன் காரணத்தினை  வெளிப்படுத்துவது இந்த அழகான   கையால் வரையப்பட்ட விளக்கப்படம்.  பாருங்கள்.

  STEM Shortage
  Created by: Online Engineering Degree

  by mail from Tony Shin
   

   

  Tags:

  Page Maker கற்றுக்கொள்ள உதவும் மென்புத்தகம் தமிழில்


  இந்த மென்புத்தகம் தமிழில் இருப்பதால் PageMaker கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து பேஜ் மேக்கர் மென்புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.

  Page Maker மென்புத்தகம் டவுன்லோட் செய்ய

  இங்கே கிளிக் செய்யவும்pagemaker7Thariq

   • அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக 

   

    pagemaker7Thariq.pdf

  View   Download 15k View Download

  Source  : http://vadakaraithariq.blogspot.com

   

  Tags: ,

  உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?

  by Abdul Basith

  மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் “தீம்பொருள்” என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

  மால்வேர் எப்படி தாக்குகிறது?

  மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும் மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டது.

  நமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா? 

  இதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும். Read the rest of this entry »

   

  Tags: ,

  திருக்குறள் இசைத்தமிழ் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம்

  திருக்குறள் இசைத்தமிழ் – இசைக்குறுவட்டுகள் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

   

  Tags:

  விரிவடையும் பேரண்டம்!

  நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் எவ்வாறு தோன்றியது, இது எங்கே எப்படிப் போய் முடியும், இது எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது – என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானிகள் பலருக்கு மிக விருப்பமானதொரு துறையாகும்.

  கடந்த 20 – ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை கூட விஞ்ஞானிகள் இப்பேரண்டத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்றால் – இப்பிரபஞ்சத்துக்குத் துவக்கம் என்று ஒன்று கிடையாது. இது தொடர்ந்து இப்படியே நிலை பெற்றிருக்கும். இதற்கு முடிவு என்று ஒன்றும் கிடையாது – என்பது தான். இதனையே Static Universe Model – என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது அசையா பிரபஞ்சக் கோட்பாடு என்று இதனைக் கூறலாம். Read the rest of this entry »

   

  Tags: ,