RSS

Category Archives: பொது(General)

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்

0c50137e0495f901f9427996e8d51b4b_XLதுபை (25 மார்ச் 2018) ஐக்கிய அரபு அமீரகம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக நடத்திய “கீழடி எனும் தமிழ் நிலம்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தொல்லியல் ஆராய்ச்சி என்றால் என்ன, அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவம் ஒரு நாகரீகத்தின் தொன்மையினை நிச்சயிக்கும் அடிப்படைகள் குறித்த சிறு முன் குறிப்புடன் ஆரம்பித்த முத்து கிருஷ்ணனின் சிறப்புரையில் பேசப்பட்ட முக்கிய செய்திகள் : Read the rest of this entry »

Advertisements
 

சுஜாதாவை பற்றிய நினைவுகள்

 

sujathaசுஜாதாவை பற்றிய நினைவுகள்
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்்.

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? –

பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும். Read the rest of this entry »

 

அகக்கண்….!

10409344_1610759295814528_8912476933027056721_nஎன்னுள் எல்லாமே
நிறைந்து இருந்தது
எல்லாமே என்னைத் தேடுகின்றன!

வழிகள் அனைத்தும்
எனது இருப்பிடம்
பார்த்து திருப்பி விடப் படுகின்றன!

இமைகள் மூடியபடி
காட்சிகள் கோர்வையாய்
கொண்டு செல்கின்றன!

கண்காணா தூரதேசத்தில் பரிச்சயமான மொழிகளின் சம்பாஷனை தொடர்கிறது எதுவும் புரியாமலே!

உறக்கத்தில் ஆழ்ந்தால் உண்மைகள் புறத்தாகிவிடுமோ?
அகக்கண் விழித்தே இருந்தது!!

ராஜா வாவுபிள்ளை

(சங்கம் அப்துல் காதர்)

 

அறிதல் உயர்வு

10806378_10152547827578450_5081984597764238889_n———:பொதுஅறிவு:————
*
*
* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
*
* நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
*
* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.
*
* தேன்சிட்டு, மரங்கொத்தி போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.
*
* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
*
* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
*
* நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
*
* பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
*
* ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
*
* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
*
* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். Read the rest of this entry »

 

பத்திரிகைகள் வாசிப்பு பழக்கம் எப்போது வந்தது-ரஹீம் கஸாலி மக்கள் பதிவர்

எனக்கு பத்திரிகைகள் வாசிப்பு பழக்கம் எப்போது வந்தது என்று வந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவிற்கு வரவே இல்லை. இதிலிருந்து ஒன்று மட்டும் எனக்கு விளங்குகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு காரணம் என் ஜீனாகக் கூட இருக்கலாம்.

மிக சிறு வயதில் இருந்தே எங்கள் வீட்டில் ஆனந்த விகடனும், குமுதமும் படிக்க கிடைக்கும். என் தந்தை அவர்களும் சிறிய தந்தை அவர்களும் தான் இதற்கு காரணம்.

அவர்கள் தவறாமல் இந்த புத்தகங்களை வாங்குவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை ஒரு ரூபாய்தான் இருக்கும். எப்படி சொல்கிறேன் என்றால் அதன் விலை இந்தியாவில் 100 காசுகள் என்றும் இலங்கையில் அதைவிட சற்று அதிகமாகவும் விலை அச்சிடப்பட்டிருக்கும்.அது என் நினைவில் இன்னும் இருக்கிறது. அவர்களிடமிருந்து எனக்கும் இந்தப்பழக்கம் வந்தது.

ஆரம்பத்தில் சினிமா நடிகர்களின் புகைப்படம் பார்ப்பதற்காக மட்டுமே இந்த சஞ்சிகைகளை கையில் எடுப்பேன். போகப்போக செய்திகள் ஒவ்வொன்றையும் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். முத்தாரம் என்ற சஞ்சிகையை மூத்தரம் என்று படித்து என் தந்தையால் மண்டையில் குட்டப்பட்டிருக்கிறேன். Read the rest of this entry »

 

Tags:

2012 in review( 2012-ல் SEASONSNIDUR பற்றி ஓர் ஆய்வு)

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 45,000 views in 2012. If each view were a film, this blog would power 10 Film Festivals

Click here to see the complete report.

 

Tags: , ,

கணவனும் மனைவியும் வேலைக்குப் போகலாமா ?

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?

http://nidurseasons.blogspot.in/2012/08/blog-post_3276.html

centre-of-my-universe
யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா?
நானும் எனது மனைவியும் படித்தவர்கள். எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது . சில காலம் இருவரும் வேலைக்கு சென்றோம் . அரசாங்க வேலை அதனால் சம்பளத்திற்கு குறைவில்லை அதனால் ‘கிம்பளம்’ வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எனக்கு கீழ வேலை பார்பவர்களும் மேல் வேலை பார்க்கும் எனது அதிகாரிகளும் எங்களை பல வகையில் ‘கிம்பளம்’ வாங்கும் நிலைக்கு தள்ளப் பார்கின்றனர் .அவர்களுக்கு உடன்படவில்லையென்றால் நமக்கு ஏதாவது தொல்லை வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் ஒரளவுக்கு வசதி படைத்தவர்கள் அதனால் வேலைக்குப் போய்தான் பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியமில்லை. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற நோக்கில்தான் வேலைக்குப் போனோம். இந்த தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டுமென்று இருவரும் யோசனையில் ஈடுபட்டோம். அதன் முடிவின்படி நான் மட்டும் வேலைக்குப் போனேன். ஒரு வருடம் கழித்து வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன். வேலைப் பளுவின் காரணமாக உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமானது. அதனால் நான் வீட்டில் இருந்துக் கொண்டு குழந்தைகளைக் கவணிப்பது மனைவி வேலைக்கு போவது என்ற முடிவுக்கு வந்தோம். அது வேடிக்கையாக இருக்கலாம். எங்கள் நிலையில் அதுதான் சரியாகப்பட்டது.

நான் வேலைக்குப் போனால் அதிக வேலை கொடுப்பதும் அர்த்தமில்லாத அவதியும் வரும் . பெண்கள் வேலைக்குப் போவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகம் அத்துடன் அவர்கள் அதிக நேரம் வேலைப் பார்க்க அலுவலகத்தில் கட்டாயம் செய்ய மாட்டார்கள். அவ்விதம் செய்தால் மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு சாதகமாக பதில் வரும். உலக அறிவும் மன தைரியமும் வந்து தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும். நான் இல்லையென்றாலும் என் மனைவி யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததால் அவர்களிடத்து பாசம் அதிகமானது அவர்களுக்கும் என் மீது நேசம் மிகுந்தது. சமைக்கவும் தெரிந்துக்கொண்டேன் அதனால் எனது மனைவிக்கு வீட்டு வேலை குறைந்தது. சமைப்பதில் பொதுவாக தன் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் அதிகமான பெண்களுக்குத் தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் நான் பலவகையில் சமைத்துக் கொடுத்ததில் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிட்டனர். ‘இன்று ஆட்டுக்கறி ஆனத்தில் (குழம்பு)முருங்கைக்காய் போட்டு சமைக்கப் போகின்றேன்’ என்று சொன்னபோது அப்படிச் செய்தால் ஆனம் நன்றாக இருக்காது என்று மனைவி சொன்னாள் . அவ்விதமே நான் சமைத்துக் கொடுத்தபின்பு ‘இதுவும் மிகவும் சுவையாகத்தான் இருக்கின்றது’ என்று சொல்லிவிட்டு நானும் அப்படி சமைத்துப் பார்க்கிறேன்’ என அவளது ஆர்வத்தை வெளிப்படுத்தினாள்

நான்கு ஆண்டுகள் கழிந்தன எனக்கும் எனது மனைவிக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். தங்க வீடும் கொடுத்தார்கள். மனைவிக்கு மற்றொரு குழந்தை அங்கு பிறந்தது. ஆனால் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பணத்தைவிட நம் குழந்தைகள் வாழ்வுதான் முக்கியம் என்பதால் வேலையை உதறி விட்டு இந்தியாவுக்கே திரும்பினோம். இங்கு அவள் வீட்டில் நான் அலுவலகத்தில். அவள் வீட்டு வேலையில் நானும் பகிர்ந்துக் கொள்கின்றேன். அவளுக்கு கிடைத்த அலுவலக வேலை அனுபவத்தால் எனது அலுவலக வேலையில் வீட்டில் இருக்கும் பொது உதவி செய்கின்றாள். இருவரும் கணினி பொறியாளர் படிப்பு படித்தவர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் இறைவன் அருளால் அனைத்திலும் ஒத்துப்போதலும் மகிழ்வும் நிறைவாக இருக்கின்றது. நாங்கள் இயந்திர வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மனித நேயத்தோடு, அன்போடு , ஒருவருக்கு ஒருவர் அனுசரணையோடு,இறைபக்தியோடு மகிழ்வாக வாழ விரும்புகின்றோம். சிரமங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அருளால் நாங்கள் பெற்ற அனுபவமே எங்களுக்கு உதவுகின்றது.
குர்ஆனில் சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் “அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!” என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!
ஓர் ஆடை பல நூல் இழைகளால் நெய்யப்பட்டது . ஒற்றுமை, அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல்,அனுசரித்துப்போதல் என்ற பிணைப்பால் பிணைக்கப்பட்டதுதான் கணவன் மனைவி உறவு வாழ்க்கை