RSS

Category Archives: வாழ்க்கை(Life and Works)

அம்மா

அம்மா

அம்மாவைப்பற்றி எவ்வளவு எழுதினாலும் தீராத அளவுக்கு நிறைய இருக்கிறது. சிறுவயதில் என் பாதங்களில் வெடிப்புகளின் காரணமாக இரவுகளில் தூங்க முடியாமல் தவிக்கும்போது தன் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு மெல்லிய வாயல் துணியால் வருடிக்கொண்டே இருந்த அம்மா… வளர்ந்து பெரியவனாகி வேலைக்குப் போனபிறகு, வேலைக்கு மட்டம்போட்டுவிட்டு காசுவைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவனைக் கையும் சீட்டுமாகக் கண்டபிறகும் அடிக்கவோ திட்டவோ செய்யாமல் இதுமட்டும் வேண்டாம்டா என்று கண்ணீர்விட்டுக் கெஞ்சி அழுத அம்மா…

1979இல் அப்பா ஆஸ்துமாவால் மறைந்தார்
1980இல் அக்கா மகள் சிறுமி ஃபரீதா புற்றுநோயால் மறைந்தாள்.
1981இல் அம்மா புற்றுநோயால் மறைந்தார்.

படம், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் அக்ஃபா கேமராவில் எடுத்தது. ஸ்லிப்பர் எனப்படும் ஹவாய் செருப்புக்கு மேலே அம்மா எதையும் அனுபவித்தது இல்லை.

அப்பாக்கள் பெரும்பாலும் படுத்துபவர்களாகவே இருக்க, அம்மாக்கள் படுத்தப்படுபவர்களாகவே இருப்பார்கள். அம்மாவின் நினைவுகளைத் தோண்டிப் பார்க்கிறேன். எப்படிப்பார்த்தாலும் அவர் இருந்தவரையில் பெரிய அளவுக்கு அவருக்கு நிம்மதி கொடுக்கும் வகையில் நடந்து கொண்டதாக நினைவில்லை. என்ன பாடு படுத்தியிருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது. எல்லாம் காலம் கடந்த ஞானோதயம்தான்.

அப்போது படுத்தியதற்கு இப்போது பிராயச்சித்தம் செய்து கொள்கிறேனோ என்னவோ தெரியவில்லை. Read the rest of this entry »

Advertisements
 

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்

0c50137e0495f901f9427996e8d51b4b_XLதுபை (25 மார்ச் 2018) ஐக்கிய அரபு அமீரகம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக நடத்திய “கீழடி எனும் தமிழ் நிலம்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தொல்லியல் ஆராய்ச்சி என்றால் என்ன, அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவம் ஒரு நாகரீகத்தின் தொன்மையினை நிச்சயிக்கும் அடிப்படைகள் குறித்த சிறு முன் குறிப்புடன் ஆரம்பித்த முத்து கிருஷ்ணனின் சிறப்புரையில் பேசப்பட்ட முக்கிய செய்திகள் : Read the rest of this entry »

 

நாணயம் – நன்றி இவை இரண்டும் எனது மந்திரச் சொற்கள். நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்.’

12243084_940987969304280_6632634808486392539_nசென்னையில் யாரையுமே அவருக்குத் தெரியாது. வீதியோரத்தில்தான் அவரது வீடு ஆனது. கையில் காசு கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள உணவுச்சாலைகள், பயணமுககவர்நிறுவனங்களில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என்று துரத்திவிட்டர்கள். தோல்விமேல் தோல்வி. பசியுடன் எழும்பூர் தொடருந்து நிலையத்தில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பின்பைக்களவுக்காரர்கள் என விளிம்புநிலை மனிதர்களுடன் படுத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் தொடருந்து நிலைய வீதியோரத்தில் படுத்திருந்தபோது படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்து பார்த்தால், அங்கே படுத்திருந்தவர்களை எல்லாம் சந்தேக கேஸ் போடுவதற்காக கா.துறைக்காரர்கள் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தனர். அடுத்து ஜெயிலுக்குப் போகப்போவது நிச்சயமானது. அவர், சடாரென்று ஓட்டம்பிடித்தார். கா.து ஒருவர் துரத்தினார். கா.து காரரால் அந்த இளைஞரைப் பிடிக்க முடியவில்லை. Read the rest of this entry »

 

*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*

இளம் வயது மாது ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான மாது ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது மாதின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் மாதினை நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த இளம் மாதிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் மாதிடம், “ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்,” என ஆதங்கப்பட்டார். Read the rest of this entry »

 

விவசாயிகளின் போராட்டம் …

விவசாயிகளின் போராட்டம் …

வாரங்கள் நான்காய்
சாதனை விவசாயிகளின்
வீரங்கள் நிறைந்த
வேதனை போராட்டங்கள்
தொடருது தில்லியிலே ….
விதைத்து சாகுபடி
செய்திடும் விவசாயிகளை
வதைத்து சாகும்படி
அறிவுறுத்தும் நடுவணரசு …. Read the rest of this entry »

 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்!

android_appபத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான இந்த மென்பொருள் மூலம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கடந்த வருட கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். Read the rest of this entry »

 

ஆளுமைகளை தெரிந்து கொள்வோம்:- தாஜ் தீன்

Hajee.S.E.Aநீடூர் – அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.
——————————————————
(எங்கள் வட்டாரத்தில்
நம் மக்களிடையே அன்றும் சரி / இன்றும் சரி
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஒத்த
இத்தனைப் பெரிய ஆளுமை கொண்டவர்கள் குறைவு!
அவர்களை தவிர்த்து இன்னொருவர்
இந்தப் பக்கம் இருந்ததில்லையென்றும் கூட சொல்லலாம்.

மேன்மை மிகு
நீடூர் அல்ஹாஜ் சி ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்களை
வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில்
மிகுந்த பெருமை உண்டு.

கீர்த்திகள் பல கொண்ட இந்த பெருந்தகையின்
வரலாற்றுப் பக்கங்களை
இங்கே F/B வாசகர்களுக்காக
ரொம்ப… ரொம்ப…சுறுக்கி – தந்திருக்கிறேன்.}
தாஜ் Taj Deen

Read the rest of this entry »

 

Tags: ,