RSS

Category Archives: 1

மென் குணப் பூ அவள்

தமிழ் பிரியன் நசீர்

21765277_997341197074584_5946773601125285466_nமென் குணப் பூ அவள்
மெருகுதிராச்
சிலையவள்
கண் குண மீன் நீந்தும்
கலைத்தாய் சொல்லவள்..!!
பல் முளைத்த தாமரை
பருவம் தொட்ட பனி வாடை
சொல் திறக்கும்
இதழோரம் கள் வடிக்கும் Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on September 26, 2017 in 1

 

நாகூரின் பிரசித்திப்பெற்ற உணவு பதார்த்தங்கள்

 

நாகூர் மண்வாசனை

 
Leave a comment

Posted by on September 20, 2017 in 1

 

மிச்சமிருக்கும் பச்சையம்…!

நேற்று காவிரியில் தண்ணீர் புரள்வதை காண வேண்டி இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து என் கண் முன்னிருக்கும் அழகையெல்லாம் விண்ணிருட்டும் வேலையில் கண்டு சென்றதெப்படி….! அது பற்றி சில வரிகள்…!
இராஜகிரியின் குடமுருட்டி கரையிலிருந்து அக்கரைக்குப்போய் அதன் அக்கரையில் இருந்த திருமலைராஜனைத் தாண்டி மறுகரைக்குப்போய்! அக்கரையில் அரசலாற்றிற்றையும் அன்னை காவேரியையும் சார்ந்த குக்கிரமாங்களாய் கண்ட வன்னியடி, இளங்கார்குடி, கார்த்திகை தோட்டம் மற்றும் மேட்டுத்தெரு பகுதியெங்கும் ஒரே பச்சை போர்வை….! பெரும் கோர்வையாய்…!
குறுகிய மண் மற்றும் தார் சாலைகளின் இருமருங்கிலும் அத்தனை அடர் மரங்கள்! தேக்கு, மூங்கில், புளிய மரம் சூழப்பட்டதால் சூரிய வெளிச்சமும் சென்று சேரவில்லை சில இடங்களில்! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 19, 2017 in 1

 

தோல்வி ….!

தோல்வியும் வெற்றியும் போட்டியின் இரு பக்கங்கள்.
ஒருவனின் ஒரு சிறு தோல்வி ஊராரை மகிழ்வுநிலைக்கு கொண்டுசெல்லுமானால் அது அவர்களது பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றியாகத்தானே இருக்கமுடியும்?
பட்டகாலிலே படும் – என்று சொல்லுவார்கள். இது எதிர்மையான கெட்டவற்றிற்கு மிகவும் பொருந்தும். அதாவது அடிமேல் அடி விழுவதுபோல தோல்வி அவர்களை விடாது ஒட்டிக்கொண்டு தொடரும்.
சரித்திரத்தை புரட்டிப் பார்த்தல்,
பாதகம் செய்தவர்கள் அவர் சிறியவரோ பெரியவரோ பல வெற்றிகள் பெற்று ஓகோவென இருந்திருக்கலாம் ஆனால் முதல் தோல்வி ஆரம்பம் ஆனதும் முற்றிலும் தோல்வியாக தொடர்ந்து சகாப்தமே முடிந்துபோன சம்பவங்கள் ஏராளம் காணலாம்.
பொய்யும் புரட்டும் செய்து வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டிக் கொள்வோருக்கு தோல்வி வரும் வந்துவிட்டால் தொற்றிக்கொள்ளும் முடிவுவரையிலும் மீளமுடியாத தோல்வியே தொடரும்.
தோல்வி ஏன் ஏற்படுகிறது? Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 18, 2017 in 1

 

உழைப்போடு ஒன்றிவாழ்….!

தேவையுள்ள மனிதன்
உழைத்துக் கொண்டிருப்பான்
தேவையற்ற மனிதன்
ஜெபித்துக் கொண்டு மட்டும் இருப்பான்
உண்மையான மனிதன்
உழைப்பை பிரார்த்தனையாய் செய்திருப்பான்
பொய்யான மனிதன் ஊர்வம்பை விலைபேசி அடுத்தவர்க்கு நஷ்ட்டத்தை பெருக்குவான் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 17, 2017 in 1

 

தாம்பூலம்…!

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”.
விருந்தோம்பலுக்கென தனி இலக்கணமே வகுத்தவர்கள் தமிழர்கள் எனலாம்! அது எந்த வகையிலும் மிகைக்காத மிகை என்றாலும் அது மிகையில்லை!
இதைப்பற்றி அக்கால புலவர் பெருமக்கள் சங்க இலக்கிய பாடல்களின் வழியே நிறைய பாட்டாகவே பாடி படித்துக்காட்டிவிட்டு போய்விட்டார்கள்.
விருந்தோம்பல் என்கிற நிகழ்வு நிகழ்வாய் இனிதாய் நிறைவேறியதும் அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போன்று வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலம் தரித்தல் என்ற ஒன்றில் முற்றாய் முடியும்! அதைப்பற்றியே இப்பதிவு.
நான் சிறுவயது முதல் எனது கல்லூரி நாட்கள்வரை கலந்துகொண்ட எல்லா சுப விஷேச விருந்து நிகழ்வுகளில் இந்த வெற்றிலையும் பாக்கும் கொண்ட தாம்பூலம் தவறாது இடம்பெறும். அது இல்லாது எந்த விருந்தோம்பலும் நிகழ்ந்ததில்லை! அநேக வீடுகளிலும் கூட “தேப்பா” என்று அழைக்கப்பட்ட வெற்றிலைப்பெட்டி கண்டிப்பாக இருக்கவே செய்யும். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 16, 2017 in 1

 

பேரறிஞர் அண்ணா …. / அப்துல் கபூர்

21731379_1928702897384002_1246662569740990168_nஅமுதமாய் இனித்திடும்
தமிழ் மொழியினை
குழைத்து சுவைத்திட
சிமிழ் தந்தவரே ….
மிடுக்கு நடையினில்
அரசியல் மேடையேறி
அடுக்கு மொழியினில்
நாக்கு வார்த்தெடுக்கும்
துடுக்கு வார்த்தைகளால்
கேட்போரை அமர்த்திட
தடுக்கு விரித்தவரே …. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 15, 2017 in 1