RSS

முகநூல் நட்புகளில் சிலர்

3983நட்புகள் இப்பொழுது /தொடரும்

 
Leave a comment

Posted by on May 11, 2017 in 1

 

தாய்க்கு நிகர் தாயே

என்னுயிர் காத்திட
தன்னுயிர் இழக்கும் தாயே
எந்ததொருயிர் பெற்று
நிவர்த்தி செய்வேன் அதனை
எரியும் நெருப்பினை
அனைத்திடும் திறனுக்கு
நான் வடிக்கும்
கண்ணீரும் போதவில்லை
நான் விழுந்திடும் போதிலே
பரிதவிக்கும் -உன்
மனதிற்கு ஈடாக
உன் பரிதவிப்பிற்கிடையில்
துவாரம் வழியே
விழச்செய்தல் பெரிதல்ல
என் கை நீ பிடிக்க
உன் கை நான் பற்றிட
சக்தியில்லை இந்நேரம்
புகைமூட்டம் மத்தியிலே -உன்
மூச்சடங்கிட வேண்டாம்
அழுதிடும் ஓசையில் -உன்
குரலடங்கிட வேண்டாம் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 10, 2017 in 1

 

மன அழுத்தமும் குறைய மல்லிகைப் பூ!

01 4 - 29-3cd
மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்… Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 9, 2017 in 1

 

உடலெங்கும் ஊரும் கம்பளிப் பூச்சிகள் … !

விடிந்தால் சனிக்கிழமை
வாரத்தின் முதல் நாள் !
உடலெங்கும்
கம்பளிப் பூச்சிகள்
ஊர்வது போன்ற அவஸ்தையில்
உறக்கம் தொலையும் இரவு !
விழித்துக் கொண்டே விடியும்
விடிகாலை வேளை ….
ஏக்கம் நிறைந்த கண்களோடும்
துக்கம் கனத்த இதயத்தோடும்
ஆரம்பமாகும் !
காலை உணவு
வெறும் சாயாதான் !
அடித்துப் பிடித்து ஏறி
“ஏஸி ” பஸ்ஸில் பயணித்தாலும்
மனதில் மட்டும்
குறையவே குறையாத சூடு !
வேலை செய்யும் வேளையிலும்
உறவுகளைத் தேடி
தளையறுத்து ஓடும்
மனக் குதிரை !
பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்த
வாலிபத்தின்
வசீகர நாட்கள்
வசந்த நினைவுகளாய் வந்து
நெஞ்சில் முட்டும் !
வேதனையின் விம்மல்களோடு
வேலை முடியும்போது
வானத்தின் ஓரத்திலும்
அடிமனத்தின் ஆழத்திலும்
உற்பத்தியாகும் இருட்டு !
விரக்தியை வளர்க்கும் விடியல்கள்
துயரம் தொடரும் இரவுகள் !
************ Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 1, 2017 in 1

 

தேடல் காலம் ….!

 

புகை மூட்டம் இளங்காலை
பனியில் கலந்து
பகலை வரவேற்கும் நேரம்
தனியாய் உன்னைத்தேடி
புதிய இடம்
கண்ணில் தடம் பதித்து
நடந்தே தேடுகிறேன்
நீ இருக்கும் இடத்தை
என்னை மோதுவதுபோல்
செல்லும் வாகனக்கள் வருவது
அங்கிருந்துதானோ Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 1, 2017 in 1

 

விவசாயிகளின் போராட்டம் …

விவசாயிகளின் போராட்டம் …

வாரங்கள் நான்காய்
சாதனை விவசாயிகளின்
வீரங்கள் நிறைந்த
வேதனை போராட்டங்கள்
தொடருது தில்லியிலே ….
விதைத்து சாகுபடி
செய்திடும் விவசாயிகளை
வதைத்து சாகும்படி
அறிவுறுத்தும் நடுவணரசு …. Read the rest of this entry »

 

மொழிமின் (அத்தியாயம் – 2)

social-mediasஎன் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு நல்ல பண்பை, குணத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டிவிடுவார்.
புகழாரம் இருக்காது, நம்மைக் குளிர்வித்து அதில் அவருக்கு ஆதாயம் தேடும் எந்த நோக்கமும் இருக்காது. பிரதியுபகாரம் எதுவும் எதிர்பாராத நாலு நல்ல வார்த்தைகள். அவ்வளவுதான். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 19, 2017 in 1