கீற்றில் உங்களது படைப்பை நீங்களே வலையேற்றலாம்

கீற்று இணையதளத்தில் உங்களது படைப்புகளை நீங்களே வலையேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீற்றில் உங்களைப் பற்றிய விவரங்களை பின்வரும் பக்கத்தில் (http://www.keetru.com/index.php?option=com_user&view=register) பதிவு செய்ய வேண்டும்.

கீற்றில் படைப்பாளியாக பதிவது..

‘பெயர்’ என்ற கட்டத்தில் எந்தப் பெயரில் உங்களது படைப்புகள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்தப் பெயரை தமிழில் இடவும்.

‘பயனர் பெயர்’, ‘கடவுச்சொல்’ என்ற இரு கட்டங்களில் Username, Password விபரங்களை உள்ளீடு செய்யவும். இவற்றின் மூலம்தான் நீங்கள் கீற்று கணக்கிற்குள் புக முடியும்.

‘Country code’ என்ற கட்டத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டின் ISD code-யும், ‘தொடர்பு எண்’ என்ற கட்டத்தில் உங்களது கைப்பேசி எண்ணையும் அளிக்கவும். (இந்த எண்கள் கீற்று குழுவினரால் சரிபார்க்கப்படும்.)

இதர கட்டங்களிலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்யவும்.

பக்கத்தின் இறுதியில் தெரியும் நான்கு இலக்க எண்களை, கடைசியாக இருக்கும் கட்டத்தில் இடவும். (நான்கு இலக்க எண்கள் சரியாகத் தெரியவில்லையென்றால், ‘Letters not clear? Click to renew captcha’ என்பதை சொடுக்கவும்.)

‘பதிவு செய்க’ என்பதை பொத்தானை அழுத்தினால், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் வரும். அதில் இருக்கும் இணைப்பை சொடுக்கினால், உங்களது பதிதல் நிறைவு பெறும். கீற்றில் பதிவாகியுள்ள உங்களைப் பற்றிய‌ தகவல்கள் யாரிடமும் பகிரப்படாது என்று உறுதி கூறுகிறோம்.

கீற்றில் பதிந்துள்ளவர்களுக்கு மட்டுமே படைப்புகளை சமர்பிக்கவோ, பின்னூட்டங்களை இடவோ அனுமதி கிடைக்கும். Continue reading “கீற்றில் உங்களது படைப்பை நீங்களே வலையேற்றலாம்”

Advertisements