இளகிய மனம் இறுதி வரை வேண்டும்.

ஒருவன் தன் உழைப்பால் வரும் வருமானத்திலிருந்து சிறுக,சிறுக சேமித்து அதன் மூலம் வாங்கிய தன் புதிய காரை புதுப்பொழிவுடன் என்றும் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அதை மிகவும் பாதுகாப்பாக ஏதோ வைரக்கல்லை பட்டை தீட்டி மெருகூட்டுவது போல் மெல்ல, மெல்ல அன்றாடம் துடைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் காரை துடைத்துக்கொண்டிருக்கும் சமயம் அங்கு வந்த அவனுடைய நான்கு வயதே நிரம்பிய மகன் காரின் மறுபுறம் சிறுபிள்ளைக்கே உரிய விளையாட்டுத்தனத்தில் ஒரு கல்லை எடுத்து காரில் கிறுக்கி விட்டான்.
அதைக் கண்ட காரின் முதலாளியான அவன் தந்தை என்ன செய்திருக்க வேண்டும்? தன் பிள்ளையை செல்லமாக கண்டித்து (இது மனிதர்களின் மனோபாவத்திற்கேற்ப (சாந்தமான குணம்) வேறுபடும்) அல்லது அதற்கு ஒரு படி மேலே போய் கடின சொல் மூலம் கண்டித்து லேசாக அவனைத்(அ)தட்டி அனுப்பி இருக்க வேண்டும்.
தன் மகனின் கையைப் பிடித்து கதறக்கதற தன் கையில் வாகனத்தின் பாகங்களை கழற்ற பயன் படுத்தப்படும் ஆயுதம் இருக்கின்றது என்று கூடப்பாராமல் அடித்து விட்டான் ரத்தம் சொட்ட, சொட்ட தண்டித்து விட்டான் அவன் ஈன்றெடுத்த அந்தப் பாலகனை “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழியை நிரூபிப்பவனாக.
பிறகென்ன ‘அழுதாலும் குழந்தை அவள் தானேப் பெற வேண்டும்” என்பது போல் அவன் பெற்றப் பிள்ளையல்லவா அந்த பாலகன்?. அச்சிறுவனை ரத்தம் சொட்ட, சொட்ட தன் காரிலேயே அள்ளி போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறான்.
மருத்துவமனையில் தன் மகனின் கை நரம்புகள் மிருகத்தனமான அடியால் துண்டிக்கப்பட்டு வேறு வழியின்றி கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இறுதியில் அகற்றி விடுகின்றனர். பாவம் அந்த பச்சிளம் பாலகன். Continue reading “இளகிய மனம் இறுதி வரை வேண்டும்.”