RSS

Monthly Archives: December 2009

வால்காவிலிருந்து கங்கை வரை…..by முனைவர் கல்பனாசேக்கிழார்

நீண்ட நாட்களாக படிக்கவேண்டும் எண்ணிக்கொண்டிருந்த நூல் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூல். அண்மையில் அந்நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.கோவை சென்றிருந்த பொழுது தோழி மணிமேகலை நூலினைக்கொடுத்தார்.

இந்நூலினை கண.முத்தையா அவர்கள் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளார்கள்.இதுவரை இந்நூல் 28 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக வந்துகொண்டு இருக்கின்றது.

நூலின் நுவல் பொருள் கதையாக இருந்தாலும்,கற்பனையாக இருந்தாலும்,ஒரு சமுதாயம் என்பது இப்படி தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்னும் கருதுகோளை வைத்துக்கொண்டு அதனை நோக்கியே நகர்த்திச் செல்லுகின்றார் ஆசிரியர்.

தனி மனிதன் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயத்தின் படிநிலைகளையும் ,சமுதாயத்தில் மெல்ல மெல்ல நிகழ்ந்ந மாற்றத்தினையும் சுட்டிக் காட்டுக்கொண்டே செல்லுகின்றார். Read the rest of this entry »

Advertisements
 

இஸ்லாதில் திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா?ஏனெனில் திருமணம் செய்தால்தான் முழு முஸ்லிமாக ஆக முடியும் என்று கூறுகிறார்கள்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

திருமணத்தின் முக்கியத்துவத்தை போதிக்கும் நபிமொழி

திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திருமணமாகும். திருமணத்தின் மூலமாக ஒரு மனிதனுடைய வாழக்கையில் திருப்பு முனை ஏற்படுகிறது

திருமண ஒப்பந்தம்

  • தனிமனிதனாக வாழந்து வந்த மனிதன் தன் மனம் போன போக்கில் சென்றிருப்பான், ஆனால் திருமனம் என்ற பந்தத்தின் மூலம் அவனுக்கு என்று சில பொறுப்புகள் வந்துவிடுகின்றன அந்த பொறுப்புகளின் மூலம் அவனது வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது
  • அந்தரங்கமான விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தொழில் நுணுக்கங்கள் போன்ற இலாபம் தரும் விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியாது ஆனால் அனைத்து விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள முடியும் காரணம் அவர் உங்களின் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கெடுப்பவளாக இருக்கிறாள். எனவேதான் அல்லாஹ் கணவனுக்கு அவனுடைய மனைவியை ஆடையாக வர்ணிக்கிறான்
  • பெற்றொரின் அரவணைப்பில் வாழ்க்கை முழுவதையும் கழிக்க முடியாது அவர்கள் முதுமையை அடைந்துவிட்டால் அவர்களை கவனிக்க நல்ல மனைவியைப் போன்ற ஒரு செல்வம் வேறு இல்லை!
  • திருமணம் செய்துக்கொள்ளாமல் அல்லது மறுமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் உடன் பிறந்தவர்களுடைய அரவணைப்பில் கழித்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் காரணம் உங்கள் உடன்பிறந்தவர்கள் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கவனிப்பதே அவர்களின் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக அமைந்து விடும் எனவே உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை இறுதிவரை கவனிக்க முடியாது எனவே திருமணமாகாதவன் காலமெல்லாம் உடன்பிறந்தவர்களை நம்பியிருப்பது முட்டாள்தனமாகும். எதிர்காலத்தில் வரவிருக்கும் அவலநிலையைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.
  • ஒரு மனிதனுக்கு பிள்ளைச் செல்வம் கொடுப்பது அல்லாஹ்வின் அருளாகும் இந்த கிடைத்தற்கரிய அருள் மட்டும் மனைவியின் மூலமாக கிடைக்கிறது இதை நலுவ விடலாமா?
  • கணவன் தன் மனைவியின் வாயில் ஊட்டக்கூடிய ஒரு கவள உணவைக்கூட அல்லாஹ் கூலியாக கருதி அதை நிரப்பமாக வழங்குவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் எனவே உங்கள் கூலியை நீங்கள் அறிந்தே இழக்கலாமா? Read the rest of this entry »
 

சென்னையில் ரூ.2000 கோடியில் ‘கிரீன் பீல்ட் ஏர்போர்ட்’

Posted by அபுல் பசர்


திரிசூலத்தில் தற்போது இயங்கும் சர்வதேச

// // //

தமிழகத்தின் தலைநகரான சென்னை, கடந்த 10 ஆண்டுகளாக அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, புதிய தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. மேலும், பல நிறுவனங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

விமான நிலையத்தை 1,800 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக தமிழக அரசு 1069 ஏக்கர் நிலத்தை இலவசமாக தந்துள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய உள்நாட்டு, பன்னாட்டு முனையம், நவீன கார்கோ காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி கார் பார்க்கிங், இரண்டாவது ஓடுதளம் ஆகியவற்றை அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், சென்னையில் விமான போக்குவரத்து தேவையை சமாளிக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே “கிரீன்பீல்ட் ஏர்போர்ட்’ அமைக்கும் திட்டமும் உள்ளது. இதற்காக, 3,486 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 2,000 கோடி ரூபாய் செலவில் இங்கு “கிரீன்பீல்ட் ஏர்போர்ட்’ அமைய உள்ளது. முதலில், இத் திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையமே செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதற்காக பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்ட் ஏர்போர்ட்டில் நான்கு ரன்வேக்கள் அமையும். மிகவும் நவீன முறையில், சுற்றுச்சூழல் சார்ந்த இந்த விமான நிலையத்திற்கான வடிவமைப்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. ஏரோபிரிட்ஜுடன் கூடிய “பிளைட் பே’க்கள், நகரும் தரை மற்றும் படிக்கட்டுகள், சுற்றுச்சூழலை பாதிக்காத கட்டுமானங்கள், வருகை மற்றும் புறப்பாடு முனையங்களுக்கு வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று இறங்க வகை செய்யும் “ரேம்ப்’கள், கூடுதல் இமிகிரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் கவுன்ட்டர்கள் என ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்ட் ஏர்போர்ட் பிரம்மாண்டமாகவும், நவீனமாகவும் அமையும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து, கட்டுமானப் பணிகள் துவக்கப்படும் நாளில் இருந்து 28 மாதங்களில் கிரீன்பீல்ட் ஏர்போர்ட் பணிகள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வடிவமைப்புடனும், தரத்துடனும் அமைக்கப்பட உள்ள சென்னை கிரீன்பீல்ட் ஏர்போர்ட் செயல்படும் போது சென்னை நகரம் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பான விமான போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டிருக்கும் என்பதில் மாற்றமில்லை.

நன்றி
தினமலர்

நன்றிhttp://abulbazar.blogspot.com

 

சுக்குக் குழம்பு

உடல்வலி, மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாக, சுக்குக் குழம்பை இங்கு அறிமுகப் படுத்துகிறார் சகோதரி உம்மு ஷிஃபா.

தேவையான பொருட்கள்

சுக்கு : 1.5″ நீளம்
பெரிய வெங்காயம் : 2
தக்காளி : 3
பூண்டு் : 1
சிறு வெங்காயம் : 1 கைப்பிடி
புளி : 1 சிறு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் : 1 மேஜைக் கரண்டி
மல்லித்தூள் : 2 மேஜைக் கரண்டி
கொத்தமல்லித் தழை : 3 கீற்று
கறிவேப்பிலை : 2 கீற்று
நல்லெண்ணெய் : 1 குழிக்கரண்டி
உப்பு : தேவைக்கு ஏற்றாற்போல்

தாளிப்பதற்கு Read the rest of this entry »

 

ம‌ஸ்க‌ட்டில் த‌மிழ‌க‌ மாண‌வி இள‌நிலைப்ப‌ட்ட‌த்தில் முத‌லிட‌ம் பெற்று த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் பெற்றார்

மஸ்க‌ட் : ம‌ஸ்கட்டில் ராஞ்சி பிர்லா இஸ்ஸ்டிடியூட் ஆஃப் டெக்ணால‌ஜியில் பி.பி.ஏ. ப‌டிப்பை ஜுலை 2009 ஆம் நிறைவு செய்த‌ முதுகுள‌த்தூர் ஹெச். ஹ‌ஸ‌ன் அஹ‌ம‌து அவ‌ர்க‌ள‌து ம‌க‌ள் ஆயிஷா ம‌ர்ய‌ம் முத‌ல் இட‌த்தை டிஸ்டிங்ஷ‌னுட‌ன் பெற்று சிற‌ப்பிட‌ம் பெற்றுள்ளார். இத‌னைப் பாராட்டி ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌ ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவில் த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌ப்பட்டார்.

த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் பெற்ற‌ ஆயிஷா ம‌ர்ய‌த்தை ப‌ல்வேறு த‌மிழ் அமைப்புக‌ள் பாராட்டின‌.

நன்றி http://muthupet.org/

 

கொடுவாமீன் பொறியல்

by அன்புடன் மலிக்கா

தேவையானவைகள்

கொடுவாமீன் பீஸ் 4
சோளமாவு 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
முட்டை 1
லெமஜூஸ் கொஞ்சம்
கெச்சப் 1 ஸ்பூன்
உப்பு
ஆயில் தேவைக்கேற்ப
டெக்கரேஷனுக்கு பல்லாரி ப,மளகாய்

மீனை நன்றாக கழுவவும் ஒருபிளேட்டில்

சோளமாவு மிளகாய்தூள் லெமன் ஜூஸ் கெச்சப்
முட்டையின் வெள்ளைக்கரு உப்பு போட்டு நன்றாக கலக்கி
அதில் மீனை 10 நிமிடம் ஊறவைக்கவும்

நான்ஸ்டிக்பேனில் ஆயில் 3 ஸ்பூன் விட்டு சூடானதும் அதில்

மீனைப்போடவும்

வெந்ததும் திருப்பிபோட்டுவிட்டு

கொஞ்சநேரம்வைத்து எடுக்கவும்

முட்டையின்மஞ்சள்கருவுடன்   சிறிது உப்பு                                                                                                                  மிளகுதூள்  போட்டுநன்றாக கலக்கி Read the rest of this entry »

 

2009, a historic year for the UAE

The year 2009 was a historic one for the UAE. As a new year dawns, we look back at some of the best images of 2009.

  • Khalifa in Dubai: President His Highness Shaikh Khalifa Bin Zayed Al Nahyan paid an inspection tour to a number of major development projects in Dubai on April 14. His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, welcomed the President at the entrance to Dubai in the Jebel Ali area. Shaikh Khalifa commended the wise vision of Shaikh Mohammad which he said is complementing the strategy of the leadership and government of the UAE. Shaikh Khalifa was accompanied by General Shaikh Mohammad Bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces; Shaikh Mansour Bin Zayed Al Nahyan, Deputy Prime Minister and Minister of Presidential Affairs; Shaikh Tahnoun Bin Mohammad Al Nahyan, the Ruler’s Representative in the Eastern Region; Shaikh Hazza Bin Zayed Al Nahyan, National Security Adviser and Shaikh Mohammad Bin Khalifa Al Nahyan.
  • Image Credit: WAM

The year 2009 was a historic one for the UAE.

The election of Abu Dhabi to host the International Renewable Energy Agency (Irena) headquarters demonstrated the country’s constructive approach in combating global warming.

The completion and launch of the Dubai Metro’s first phase and the opening of other major roads and bridges across the country marked the UAE’s continuous efforts to improve infrastructure.

The year that has just passed is considered a major landmark for the UAE.

Along with great achievements came some unfortunate events, such as a plane crash in Sharjah which killed six and the trucks crisis occurring again on the Al Ghuwaifat border.

As a new year dawns, we look back at some of the best images of 2009.

Source : http://gulfnews.com/news