கவிதை எழுத… பரப்பரப்பவரா நீங்கள்?

1926768_733669483369464_6327863217158497683_nகவிதை எழுத…
பரப்பரப்பவரா நீங்கள்?
பேனாவை மூடிவைத்துவிட்டு
நல்ல கவிதைத் தொகுப்புகளில்
முழுகி முத்து எடுங்கள் முதலில்!

முழுகும் ஆழம்
உங்களுக்கு சிரமமும் தரலாம்.
அந்த சிரமம்தான்
நீங்கள் எழுதப் போகும்
நாளைய கவிதைகளின்
அஸ்த்திவாரம்!
Continue reading “கவிதை எழுத… பரப்பரப்பவரா நீங்கள்?”

சாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம்

சாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம் – அமெரிக்க யேல் பல்கலைகழகம்,போர்சுகல், லிபியா விஞ்ஞானிகள் பங்கேற்பு- பத்திரிக்கைகள் பாராட்டு

.இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் ஆராய்சி மற்றும் முதுகலை விலங்கியல்; துறை ஏற்பாடு செய்த உலக அளவிளான விஞ்ஞானிகள் கலந்து கொண்ட ஒரு நாள் சாவதேச மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்க யேல் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியரும் அமெரிக்க மருந்தியல் துறையின் ஆலோசகருமான டாக்டர் அலாவுதீன் கலந்து கொண்டு இ;ன்றைய மருந்தியல் துறையில் உயிர் பொருள்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். Continue reading “சாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம்”

இதயத்துடிப்பு

ஆசிரியர் : ஜி.ஜே. தமிழ்ச்செல்வி , பொறுப்பாசிரியர் : வையவன்
Heart Beat Trust
Heartbeat12 copy
இதயத்துடிப்பு புத்தக வெளியீடு
10559735_536081353188002_1550912928234268647_n
12
Heart Beat Trust – கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று உருவாகி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டு, 2009 செப்டம்பர் 24 –ந்தேதி அன்று முறையாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை இயங்கி வருகிறது.

தொடர்ந்த பணியில் இந்நிறுவனத்தால் அடிப்படை கல்வி மற்றும் கணிணி கல்வி பெற்றவர்கள் 57 பேர்கள். இது நாள் வரை பிற கல்வி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பி படிக்க வைத்தது போய் இந்நிறுவன அலுவலகத்திலேயே கணிணி கல்வி மையம் மற்றம் உண்டு உறைவிட பள்ளி அமைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
Continue reading “இதயத்துடிப்பு”

படித்தால் மட்டும் போதுமா !?

படித்தால் மட்டும் போதுமா..??? இக்கேள்விக்கு மாணாக்கர்களே நீங்களே பதிலுரைக்க வேண்டும். ஆனாலும் அறியாதவர்களுக்கு அறியத்தரும் நோக்கத்தில் இப்பதிவை தாங்களுக்கென பதிகிறேன்.

கல்வி அறிவு பெற்றிருப்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானதாகும். கல்வியறிவு பெற்றிருப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல பொது அறிவையும் [General Knowledge] வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியமானதாக இருக்கிறது.. பொது அறிவில் பின்தங்கி கல்வியறிவு மட்டும் பெற்றிருப்பது வாழ்க்கையில் மேலும் சாதிக்க சிரமமாகவே இருக்கும். பொது அறிவில்தான் கடந்தகால,நிகழ்கால மற்றும் உலக நிலைமைகளை நன்கு அறியமுடிகிறது. அப்படி அனைத்தும் அறிந்து வைத்திருந்தால்தான் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாம் கற்ற கல்வியை பயன்படுத்தக் கொள்ளமுடியும்.
Continue reading “படித்தால் மட்டும் போதுமா !?”

பூனைகள்.

cat-breedsகுழந்தைகளுக்கு
அவை
நடமாடும் பிரியங்கள்.
மழலை தேசத்தின் ஐந்தறிவுத் தேவதைகள்.

பாட்டிகளுக்கு அவை
சமையலறைச் சாத்தான்கள்.
மின்னல் வேகத்தில்
மீன்பானை உருட்டும்
எரிச்சலின் எஜமான்கள்.

செடிகள் நட்டு வளர்க்கும்
வீட்டம்மாவுக்கு
அதன் கழிவுகள்
செடிகளை அழிக்குமோ எனும்
தாவரக் கவலை.
Continue reading “பூனைகள்.”

ஒரு நாள் விவசாயியாக வாழ்ந்துபாருங்கள் !

10703723_737811436290221_8331567506316245877_nவிடியற்காலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை உள்ள உத்தேச வேலைகளை பாருங்கள் ,

விடியலில் குடம் கொண்டு தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் ,
மாடுகளை மாற்றி கட்டி தண்ணீர் வைத்து தீனியிடுவது பிறகு தொழுவத்தை சுத்தம் செய்வது ,
பின் வயலில் நீர் கட்டுவது மாடுகளுக்கு தீனி கொண்டு வருவது ,
காலை உணவு ,

உடன் வயலில் உள்ள வேலைகள் அனைத்தும்
உதாரணமாக உழவு செய்தல் , களை பிடுங்குவது , வரப்பு வாய்க்கால் சீவுதல் , பாத்தி அமைத்தல் , உரமிடுதல் , விதையிடுதல் , வேலியமைத்தல் , மருந்து தெளித்தல் , அருவடை செய்தல் , இப்படி தொடர்ந்தே நகரும் நாளில் உருமத்தின் உணவு ,
Continue reading “ஒரு நாள் விவசாயியாக வாழ்ந்துபாருங்கள் !”

என்னை மாற்ற முயற்சிக்க தொடங்கிவிட்டேன்

panaroma_jpgநான்

என்னை மாற்ற
முயற்சிக்க தொடங்கிவிட்டேன்.

நீங்கள் … ?

இன்றைய எமது தேவை

மூல அச்சை நோக்கிய
பரிபூரண சமூக மாற்றம்.

துரித உணவு வகைகளின்
சுவையை கூட்டி

எம்மை அதன் பிடியில்
இறுக்கி உள்வாங்கி செரித்து கொண்டிருக்கும்

பாஸ்ட் புட் போல,

நமது நவீன சிந்தனை
ஏற்படுத்தி இருக்கும்

கேடான செயல்களை, சிந்தனையை,
வெளிப்பாடுகளை மாற்றி,
Continue reading “என்னை மாற்ற முயற்சிக்க தொடங்கிவிட்டேன்”

நிஷா மன்சூர் சிந்திய முத்துக்கள்.

கனவுகளில் உட்செறிந்த அபூர்வ உறவு,
நம் பிழைகளின் இருள் அறைகளில்
நிகழ்வுகளின் உட்பரிமாணச் சிதைவுகளில் உயிர்ப்புற்று வளரும்
வினோத ராட்சஷனால் மறுதலிக்கப் படுகிறது..!!

விதைத்தேன் ஒரு சிறு பொய்யை,
விளைந்தன ஆயிரம் பெரும்பொய்கள்..!!

சிறுபிழைகள் பெரும்பிழைகளிலிருந்து பாதுகாத்தன,
பிழைகளெல்லாம் புத்திக் கொள்முதல் ஆயின..!!

பிழைகளிலிருந்து அனுபவம் தேர்ந்தேன்,
அனுபவங்களால் பிழைகளைக் குறைத்தேன்..!!

வணிக உத்திகள் கற்றுத்தேர்ந்த இலக்கியவாதிகள் மிகைக்க மிகைக்க,
இலக்கியம் தேர்ந்த வணிகர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள்..!!

என்னைப்போல் இருக்கிறீர்கள் என்றான்,
என்னைப்போல்தான் இருக்கிறேன் என்றேன்..!!
Continue reading “நிஷா மன்சூர் சிந்திய முத்துக்கள்.”

ஒரு எட்டுப் போடுவோம்!

10698448_10152711153961575_1575705596347456776_nஒரு குழந்தை தவழ்ந்து முடிந்து, எழுந்து நிற்க முயலும் போது தன் இருப்பு நிலையினை சமநிலை செய்ய முடியாததால் கீழே விழுவதும், பின் எழுவதுமான நிகழ்வு நடைபெறும். எதுவரை எனில் முழுவதுமான சமநிலையோடு (Balanced Walk) நடக்கத் துவங்கும் வரையிலும் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.

நாம் அனைவருமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்கள்தான்.

இந்த Balancing எப்படி நடைபெறுகிறது என்றால், புவியீர்ப்பு விசைக்கு எதிராக நாம் நம்மை (நம் உடல் நிறையுடன்) இருப்பு நிலைக்கு கொண்டுவரவும், இயக்கத்தினூடே சமநிலைப்படுத்திக் கொள்ளவும் நிறைய விசைகள் நமக்கு உதவி செய்கின்றன. உதாரணத்திற்கு, sensorimotor control systems எனப்படும் உணர்திறன் கட்டுப்பாட்டு அமைப்புகள் பெரிதும் உதவியாய் இருக்கிறது.
Continue reading “ஒரு எட்டுப் போடுவோம்!”

சிவிட்டவேக்கியா, இட்டாலி – Civitavecchia, Italy /அன்புடன் புகாரி

10562966_849953898363118_903748553101389228_n
இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா? என்பதற்கான பொருளை முகநூலில் நண்பர் @Raphel Canada கமுக்கமாகக் கண்டுபிடித்துவிட்டார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

பயணம் முடிவானதும், ட்ரான்சாட் என்ற விமானம் மூலம் டொராண்டோவிலிருந்து ரோம் – இட்டாலி செல்கிறோம் என்று என் மனைவியிடம் சொன்னேன். அவருக்கு ஒரே உற்சாகம். அப்புறம்? என்றார்.

அங்கே Civitavecchia என்ற துறைமுகத்துக்குச் சென்றால் நமக்கான உல்லாச சொகுசு கப்பல் காத்திருக்கும் என்றேன். இதென்னங்க எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட முடியல, இதை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றார்.
Continue reading “சிவிட்டவேக்கியா, இட்டாலி – Civitavecchia, Italy /அன்புடன் புகாரி”