எனக்கும் ஒரு இன்விடேசன் வந்திருக்கிறது. / Vavar F Habibullah

எம்மதமும் சம்மதம்
மத நல்லிணக்க அமைச்சகம் ( Ministry of Tolerance) ஒன்றை துபை மற்றும் அபுதாபி அரசுகள் நிருவி உலக மத ஒற்றுமைக்கு வழிகாட்டி உள்ளன.
200 – க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த மக்கள் வாழும் அரபு அமீரகம் முஸ்லிம் நாடாக இருந்தாலும் மத நல்லிணக்கத்தை பேணி காப்பதில் உறுதி பூண்டுள்ளது.
இன, மத, மொழி கடந்த ‘மனித சகிப்புத்தன்மை’
அரசியல் அமைப்பின் சட்டமாக இங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது.மதத்தின் பெயரால் கலவரம் ஏற்படுத்துபவர் எவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப இயலாது.
லட்சக்கணக்கான இந்திய மக்களின் தாயகமாக திகழும் ஐக்கிய அரபு நாடுகளில்
இந்து கோவில்களும், சர்ச்சுகளும், சீக்கிய குருத்வாராக்களும் அதிக அளவில் உள்ளன. Continue reading “எனக்கும் ஒரு இன்விடேசன் வந்திருக்கிறது. / Vavar F Habibullah”

நம்ம “உலக நாயகன்” அரசியலில் குதிச்சு…

பிரேம் நசீர், மலையாள திரையுலகத்தின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். 1950 முதல் 1980 வரை மலையாளத் திரையுலகில் அவரது சாம்ராஜ்யம் கொடிகட்டி பறந்தது. எத்தனை எத்தனை சாதனைகள் புரிந்தவர் தெரியுமா?
—-725 படங்களில் கதாநாயகனாக நடித்தவர்,
—-கதாநாயகி ஷீலாவுடன் 130 படங்கள் இணைந்து நடித்தவர்
—-80 வெவ்வேறு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தவர்
—-ஒரே வருடத்தில் (1979) 39 படங்களில் கதாநாயகனாக நடித்தவர் Continue reading “நம்ம “உலக நாயகன்” அரசியலில் குதிச்சு…”

சிறகு முளைத்த பலப்பம்

நாலா பக்கமும்
சட்டங்களால் சூழப்பட்ட
ஒரு சிலேட்டுத்தீவில்
எழுதி அழித்து……
அழித்து எழுதி……
பழகி வந்தது
பலப்பமொன்று
புழுவென்று கருதியதொரு பறவை
பற்றிக்கொள்ள
அது Continue reading “சிறகு முளைத்த பலப்பம்”

இன்னும் எழுத தொடங்கி முடியவில்லை

 

இன்னும் எழுத தொடங்கி
முடியவில்லை அவளுக்கோர்
காதல் கடிதம்
ரசித்து ருசித்து
எழுதிடும் ஒவ்வோர் வார்த்தைகளும்
அவள்
நினைவை தாங்கியே நிற்கிறது
தென்றலை உவமையாய்
நீரினை உவமையாய்
மலரினை உவமையாய்
இன்னும் பல உவமையாய்
காட்டியும் Continue reading “இன்னும் எழுத தொடங்கி முடியவில்லை”

அசோகமித்ரன் பேட்டி

17021385_10155861846009202_6592965092186398440_n

அசோகமித்ரன் பேட்டி விகடன் தடம் இதழில் வந்திருக்கிறது. மிகவும் நல்ல பேட்டி. நிறைவாழ்வுக்குப் பிறகு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாதவர். விகடனுக்கு நன்றி!
86 வயது அசோகமித்திரன்! எங்களை எதிர்பார்த்து பால்கனியில் நின்றிருந்தார். பார்த்துச் சிரித்து, கைகளை வாஞ்சையோடு அசைத்து, மேலே வரச் சொன்னார். கதவை முறையாகச் சாத்தி, மின்விசிறியை அளவாக வைத்து, மிக மிக மெல்லிய குரலில் நலம் விசாரிக்கிறார். ஜன்னலுக்கு வெளியே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பக்கத்துக் கட்டடத்தில ரெண்டு பறவைகள் இருந்துச்சு. ஒண்ணு எங்கோ காணாமப் போயிடுத்து. சில நாட்களாவே அதைத் தேடி விடாம சத்தம் போட்டுட்டிருந்த இன்னொரு பறவையையும் இன்னிக்குக் காலையில இருந்து காணல. இந்த அமைதி என்னவோ பண்ணுது” என்றார். அந்த அமைதியை உணர்ந்தோம். பின், மௌனம் கலைத்தோம். தன் நினைவு அடுக்குகளிலிருந்து தேடித் தேடிக் கோத்து சொற்களாக்கி வெகு நிதானமாகப் பேசுகிறார் அசோகமித்திரன். Continue reading “அசோகமித்ரன் பேட்டி”

இயற்கையும் இறைவனும்

 

by அப்துல் கையூம்
இறைவனையும் இயற்கையையும் பாடாத கவிஞன் உலகிலேயே இல்லை எனலாம். இயற்கையின் அழகில் இறைவனின் சக்தியை உணர வைப்பதுதான் கவிஞனின் தலையாய பணி. “அழகின் சிரிப்பு” என்று இயற்கையை வருணிப்பார் பாவேந்தர் பாரதிதாசன்.
பூவின் மலர்ச்சியிலும், ஆற்றின் சலசலப்பிலும், மரங்களின் அசைவிலும், பறவைகள் எழுப்பும் ஒலிகளிலும், காற்றின் சுகந்தத்திலும் இறைவனைக் காண்பவன் கவிஞன்.
அவன் நிசப்தங்களில் சப்தங்களையும், சப்தங்களில் நிசப்தங்களையும் இனம் காண வல்லவன். இயற்கையின் வனப்பை இழை இழையாக பிரித்தெடுக்கத் தெரிந்தவன். படைப்புக்களில் படைத்தவனைக் காணத் தெரிந்த படைப்பாளியே கவிஞன். Continue reading “இயற்கையும் இறைவனும்”

சிந்திப்பதே ஆரோக்கியம். இறைவனின் கருணை துணை நிற்குமாக.

அன்பு நண்பர்களுக்கு
’குங்ஃபூ’வை நினைவுபடுத்தும் ‘ஃபெங்ஃபூ’ என்ற ஐஸ் கட்டி சிகிச்சை பற்றி ஒரு நண்பர் ஒரு பதிவை இட்டிருக்கிறார். இதுபோன்ற பதிவுகளில் உள்ள பிரச்சனை பற்றி நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.
உதாரணமாக வெண்டைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள், ஆப்பிள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள், இது சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள், அது சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் – இப்படி ஆயிரக்கணக்கான விஷயங்கள் பற்றி அன்றாடம் செய்திகள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன.
ஆரோக்கியம் மிக முக்கியமானதுதான். ஆனால் அது பற்றியே சிந்திக்கொண்டிருப்பது ஆரோக்கியக் குறைவுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்ல. நாம் எல்லோரும் மனிதர்கள்தான் என்றாலும் என் உடலைப் போன்றதல்ல உங்கள் உடல். எனக்குப் பொருந்துவது உங்களுக்குப் பொருந்தாது. உங்களுக்குப் பொருந்துவது எனக்குப் பொருந்தாது. எனவே எல்லா சிகிச்சைகளும், அது அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா, அக்யுபஞ்சர், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம், வர்மா, குருமா, டார்ன் சிகிச்சை, ஃபெங்ஃபூ, குங்ஃபூ எதுவாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் மனநிலைக்கும் தகுந்தவாறு பொருந்தும். அல்லது பொருந்தாது. Continue reading “சிந்திப்பதே ஆரோக்கியம். இறைவனின் கருணை துணை நிற்குமாக.”