RSS

Monthly Archives: August 2017

ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது

 

ஆனந்தத்தை அறுவடை செய்ய ஆளாக்கிக் கொண்டவன் நீ
துன்பத்தில் துவண்டு சுழல்பவன் நீ

சிறியதை பெரிதாக்க முயல்பவன் நீ
பெரிதானதை சிரிதாக்கியவனும் நீ

உன்னை உருவாக்கிய உயர்ந்தவனை மறந்தவனும் நீ
பணத்தை பெரிதாக நினைப்பவனும் நீ

அகங்காரத்தை தன்னகத்தே கொண்டவனும் நீ
உனைப் பெற்ற பெற்றோரையும் மறந்தவன் நீ

உனது நரம்புகள் உனது ஆணைக்கு உட்படாது
உன்னால் வந்தவர் உனை ஒதுக்கி நிற்பார்
உன்னையே நீ அறிவாய்
உனக்கு உதவ ஒருவரும் வர மாட்டார்
உழன்று பிரண்டாலும் போனது போனதுதான்

ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது
ஓரிறைவன் கொள்கையை உயர்த்தி
உன்மனதில் நிறுத்தி வாழ்ந்திடு Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on August 26, 2017 in 1

 

எனது தமிழ்த் திரையுலக அனுபவங்கள் – 20 (23 – ஆகஸ்ட் – 2017)

– இனியவன் ஹாஜி முஹம்மது.
இயக்குனர். எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லம் உள்ள சாலிகிராமத்திற்கு சென்றேன். அப்போது வீட்டில் ஷோபாக்கா மட்டும்தான் இருந்தார்கள். நான் அவரிடம் வந்த விஷயத்தைச் சொன்னேன். அவரும் ஆமாம் .. ஆமாம்.. அவங்க சொன்னாங்க… நீ நாளைக்கு உன் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடு எனச் சொன்னதைக் கேட்டதும் நான் சந்தோஷத்தோடு கே.ஆர்.ஜி. அவர்களின் கம்பெனிக்கு வந்து முதலாளியிடம் விஷயத்தைச் சொல்லி அனைவரிடமும் விடைபெற்று எஸ்.ஏ.சி அவர்களின் வீட்டிற்கு மறுநாள் சென்றேன்.
இயக்குனர் அவர்கள் தனது உதவியாளர்களுடன் தெலுங்குப் படம் ஒன்றிற்கான கதைவிவாதத்தில் இருந்தார்கள். நான் மீண்டும் ஷோபா அவர்களிடம் சென்றேன். அவர் என்னிடம் உனது முக்கியமான வேலையே இயக்குனருக்கு வேளாவேளை நான் சொல்லும் மருந்துக்களை கொடுக்க வேண்டும் எனச் சொல்லி எனக்கு ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார். இவ்வளவு மாத்திரைகளா என நான் வாய் பிளந்தேன். இப்போது வேண்டுமானால் இது சாதாரணமாகத் தெரியலாம். அப்போதெல்லாம் உணவே மருந்தாகவும் பத்தியம் இருப்பதே பெரும் பாதுகாப்பாகவும் இருந்தது. நான் எஸ்.ஏ.சியின் கடைசி உதவியாளராகத்தான் சேர்க்கப்பட்டேன். அவரிடம் ஏற்கனவே ஏராளமான உதவி இயக்குனர்கள் இருந்தார்கள் செந்தில்நாதன் (பூந்தோட்டக் காவல்காரன் இயக்குனர்) அசோஸியேட்டாகப் பணிபுரிந்து வந்தார். ராஜமன்னார் என்பவர் தெலுங்கு படங்களுக்கு அசோஸியேட்டாக இருந்தார். பின்னாட்களில் ஷங்கர் அவர்களும் (பிரமாண்ட இயக்குனராக பின்னாட்களில் உருவானவர்) இன்னும் பலரும் இருந்தார்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 23, 2017 in 1

 

சென்னை என்பதை எப்படி விளக்குவது

சென்னை என்பதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. புரியவில்லை. பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. ஆணிவேரை தொலைத்த மரங்கள் இங்கு பட்டுப் போனபடி நடமாடிக் கொண்டிருக்கின்றன. இது புலம் பெயர்ந்தவரின் நகரம். வந்தேறிகளின் வாழ்விடம். பூர்வக்குடிகளை அடித்துவிரட்டி நூற்றாண்டாகிறது. இந்தியாவிலுள்ள மூன்று பெரிய நகரங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரம். இத்யாதி, இத்யாதி என்பதான பிம்பத்தின் பின்னால் கணக்கிலடங்கா இத்யாதிகள் இருக்கின்றன.
மெரினாவும் இருக்கிறது. கூவமும் ஓடுகிறது. அண்ணா சாலையும், ஈஸிஆர் ரோடும், ராஜீவ் காந்தி சாலையும் இருப்பது போலவே பிராட்வேக்களும் நிரம்பி வழிகின்றன. கோடம்பாக்கமும் உண்டு. கொளத்தூரும் உண்டு. போட் கிளப்பும் உண்டு. புளியந் தோப்புகள், கூவம் கரை ஆகியவையும் உண்டு.
உயர் நடுத்தர வர்க்கங்கள் வாழும் அண்ணா நகரும், அடையாரும் இருப்பது போலவே நடுத்தர வர்க்கங்கள் ஒண்டுக் குடித்தனங்களில் மூச்சுத் திணறும் திருவல்லிக்கேணியும், சைதாப்பேட்டையும் உண்டு. அக்ரகாரங்கள் மாம்பலம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை ராதாநகரில் செருகப்பட்டுள்ளது போலவே ரவுடிகளும், தாதாக்களும் வாழும் தண்டையார்பேட்டைகளும், புதுப்பேட்டைகளும் செருகப்பட்டுள்ளன. குஜராத்திகளும், மார்வாடிகளும் சவுகார்பேட்டையில் சங்கமமாகியிருப்பது போலவே முகமதியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 23, 2017 in 1

 

எனது தமிழ்த் திரையுலக அனுபவங்கள் – 14 (04 – ஆகஸ்ட் – 2017)

 

– இனியவன் ஹாஜி முஹம்மது.
நான் நேர்மை படப்பிடிப்பில் அனுராதா அவர்களுக்கு உதவியாளனாக பணியாற்றினேன். வீட்டில் இருந்து பணிசெய்யாமல் உங்களுக்கு உதவியாகவும் இருப்பேன். எனது கடிதங்கள் எழுதும் பணியையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் சம்மதித்து எனது பணிகள் தொடர்ந்தது. நான் கே.ஆர்.ஜி. கம்பெனி நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பதற்கும் எங்கள் முதலாளி கே.ஆர்.கங்காதரன் அவர்களை சந்திப்பதற்கும் இது வசதியாக இருந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை படப்பிடிப்புத்தளத்தில் சந்தித்து மரியாதை செய்வதுண்டு. ஆனால் கிட்டே நெருங்க பயமாக இருக்கும். சிவாஜி சார் பற்றி மேஜர். சுந்தர்ராஜன் அவர்களும் ஆச்சி மனோரமா அவர்களும் எனக்கு பிரியமானவரான வி.கே.ராமசாமி அண்ணாச்சி அவர்களும் நிறைய சுவாரஸ்யமான படப்பிடிப்பில் நடந்த விவரங்களை எங்களுக்கெல்லாம் அவர்கள் ஓய்வாக இருக்கும் போது கூறுவார்கள்.
அனுராதாவிடம் சிலநாட்கள் விடுமுறை வாங்கிக்கொண்டு எனது கிராமத்துக்குச் சென்றேன். அதற்கு முன் ஒருநாள் எனது வீட்டிற்கு எதிரேயுள்ள எனது நண்பன் ஆரீஃப்க்கு அனுராதாவின் புகைப்படத்துடன் கூடிய ஒரு அஞ்சலை அவரது முகவரிக்கு அனுப்பியிருந்தேன். அவன் கொஞ்சம் குதூகலம் அடையட்டுமே என்று. ஆனால் அவரின் அத்தா ஒரு மெளலானா. அந்த கடிதத்தை அவர் வாங்கிப் பிரித்துப் பார்த்து அனுராதாவின் கவர்ச்சிப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டார். என் நண்பனுக்கு செம டோஸ் போல. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 20, 2017 in 1

 

மனமே மந்திரம் ….!

 

நினைவின் மின்னலில்
தெரியும் எண்ணங்கள்
நீரோட்டங்கள்போல்
செல்கின்றன
ஆழ்மன கடலின்
ஆர்ப்பரிப்புகளின் நடுவே
தத்தமது தனிவழியில்
வழி பிறழாமலே Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 18, 2017 in 1

 

எழுத்துப்பிழை மற்றும் சொற்பிழை தவிர்ப்போம்…!

இப்பதிவு யாரையும் குற்றப்படுத்தவோ குறை சொல்லவோ அல்ல! ஆனாலும் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது!
பல சகோதரர்களும் பல்வேறு தலைப்புகளில் பதிவுகளை (முக நூலில்)பதிகிறார்கள் இங்கே! அதில் பலரின் பதிவுகளில் எழுத்துப்பிழை என்பது சர்வசாதாரணமான ஒன்றாக இருக்கிறது. உங்களின் எழுத்தார்வம் போற்றத்தக்கதுதான் ஆனால் பிழையான சொற்களை கொண்டு வார்த்தைகளை வடிவமைப்பது என்பது சரியான வழிமுறை அல்ல!
மிகுதியாக நாம் பேசும் வழக்கு தமிழில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்பதெல்லாம் உற்று நோக்கி பார்க்கப்படுவதில்லை ஆனால் எழுதும்போது அவைகள் அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டிய அத்திவாசியமான மரபுகளில் ஒன்று இலக்கண வழிமுறையுடன்.
மாறிக் கடைபிடித்தால் எழுத்துப்பிழை சொற்பிழையாகி அர்த்தப்பிழையில் கொண்டு விடுவதுடன் அதைப்படிக்கும் சிலரும் கூட அறியாமையால் முன்னவர் என்ன செய்தாரோ அதையே படிப்பவர் சிலரும் அவர்களின் எழுத்துக்களில் தொடர அதிக வாய்ப்பிருக்கிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 18, 2017 in 1

 

இயற்கை / அப்துல் கபூர்

மேதினியில் சாய்ந்திருக்கும்
நில மகளின்
அலங்கார மேனியதில்
பசுந்தறியில் நெய்த
ஆடையது தழுவுகிறது ….
நீல மகளாம்
ஆகாய பெண்ணோ
வெண்மை குழைத்த
வண்ணம் சிந்தும்
மேகத் தாவணியை
குடையாய் விரிக்கிறது …. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 17, 2017 in 1