RSS

Monthly Archives: April 2012

சந்தோஷத்தின் செய்பொருட்கள்

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم
1. நன்றியுள்ள உள்ளம் மற்றும் அல்லாஹ்வின் நினைவால் நனைந்த நாவு.
ஒரு அரபுக் கவிஞர் கூறினார்:
“நன்றியறிதல், நினைவுகூர்தல் மற்றும் பொறுமை
இதில் உள்ளது பாக்கியங்கள் மற்றும் சன்மானங்கள்.”
2. சந்தோஷத்தின் இன்னொரு செய்பொருள் இரகசியங்களை காப்பது, அதுவும் தங்களுடைய இரகசியங்களை. அரேபியர்களில் ஒரு காட்டரபியின் கதை பிரபலமானது. இரகசியத்தை தற்காக்க அவருக்கு இருபது தீனார் கட்டணம் வழங்கப்பட்டது. முதலில் அவர் அந்த பேரத்துக்கு உண்மையானவராக இருந்தார். பின் திடீரென பொறுமையற்றவராக அவர் சென்று, அப்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்- அவர் அந்த இரகசியத்தின் பாரத்திலிருந்து தன்னை விடுவிக்க விரும்பினார். இது ஏனென்றால் இரகசியத்தன்மை உறுதியின்மை, பொறுமை மற்றும் மனஉறுதியை வேண்டுகிறது.
“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்…” (திருக்குர்ஆன்: 12:5)

 • மனிதனின் ஒரு பலவீனம்- இது பல பலவீன பண்புகளில் ஒன்று- தொடர்ந்து தனது அந்தரங்க விவகாரங்களை பிறருக்கு வெளிப்படுத்த வற்புறுத்தும் தூண்டுதலை உணர்வான். வரலாற்று ஆதார ஏடுகளில் காணப்படும் ஒரு பழமையான நோய் இது. ஆன்மா இரகசியங்களை பரப்பவும், கதைகளை பரப்பவும் விரும்புகிறது. இந்த தலைப்பிற்கும், இந்த புத்தகத்திற்கும் உள்ள சம்பந்தம் என்னவென்றால் யார் தனது இரகசியங்களை பரப்புகிறாரோ அவர் உறுதியாக வருத்தத்தையும், கவலையையும், துக்கத்தையும் உணர்வார்.
  மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம். (திருக்குர்ஆன்: 18:19)

  http://theheartopener.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/13-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/

  Advertisements
   
 • Leave a comment

  Posted by on April 28, 2012 in Uncategorized

   

  Tags:

  அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்


  தோழியை அழைத்தேன்….

  இந்த வேற்றுக்கிரகவாசியைக்
  கட்டிக்கொண்டு நான் படும்பாடு
  அப்பப்பா
  எரிச்சலில் என் இதயத்தையே
  இடியாப்ப இழைகளாய்ப்
  பிழிந்துகொண்டிருக்கிறேன்
  பிறகு பேசலாமா என்றாள்

  *

  நண்பனை அழைத்தேன்…

  விமான நிலையம் வந்திறங்கினேன்
  இடி என் நடுத்தலையில்
  சன்னமாய் இறங்கியது

  எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து
  வெட்டிப்போட்ட நகங்கள் கூட
  குதித்துக் குதித்துச்
  சண்டைபோட்டுக்கொள்கின்றன
  அப்புறம் பேசலாமா நண்பா
  என்றான்

  *
  தொப்புள் கொடியால்
  பிரித்தெடுக்கப்படாத
  ஆனால் தாய்ப்பால் அருந்திய
  பாசத்தைத் தரும் உறவான
  என் அம்மாவை அழைத்தேன்

  எங்கள் குடும்பத்தில்
  எரிமலை வெடித்து
  தீக்குழம்பு
  கொட்டிக் கொண்டிருக்கிறது

  பல மாதங்களாய்ச் சூடேறியது
  இன்று வீடேறிவிட்டது

  பேசும் சூழலில்லை மகனே
  எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு

  வீடு சீரானால்
  நானும் உயிருடன் இருந்தால்
  நானே அழைப்பேன்
  அதுவரை
  வேண்டாம் உன் தொலைபேசி
  என்றார் பயத்தோடும் பாசத்தோடும்

  *
  எங்கு போனாலும்
  இதுதானா?

  என்னிடமும்
  அந்த எழவெடுத்த
  நெருப்புச் சுனாமி என்றுதானே
  தொடர்ந்து
  ஒவ்வொருவராய் அழைத்தேன்

  விட்டைவிட்டு
  வெளியேற….

  என் துக்கம் தாண்டி
  ஒரு துயரத்தில் குதிக்க…

  வாடகைக்கு நிலவறை தேடி
  அலைந்துகொண்டிருக்கிறேன்
  என் ”ஒரே படகில் பயணப்படும்”
  உறவுகளே

  இது என்ன
  விதி?

  மண்ணில்
  மனித வாழ்க்கைபோல்
  ஒரு கேடுகெட்ட நரகம்
  விண்ணில் இருக்கிறதா என்ன?

  ச்சும்மா
  பூச்சாண்டி காட்டுகிறார்கள்
  செத்தப் பேய்களிடம்

  சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது
  எனக்கு

  உங்களுக்கு???
  Source: http://anbudanbuhari.blogspot.in/2012/04/blog-post_26.html

   

  Tags: , , , ,

  நானா அஸ்மா…

  நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

  18-ஆம் நூற்றாண்டு…

  இன்று நைஜீரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி அது. மிக பரந்த அந்த நிலப்பரப்பை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் உஸ்மான் டான் போடியோ. தன்னுடைய சிறிய பகுதியை சிறப்பான முறையில் நிர்வகித்து கொண்டிருந்தார் உஸ்மான். இஸ்லாம் குறித்த அவருடைய தெளிவான பார்வை மக்களுக்கு சிறந்ததொரு நிர்வாகத்தை அளிக்க ஏதுவாய் இருந்தது.

  இத்தகையவருக்கு 1793-ஆம் ஆண்டு மகளாக பிறந்தார் நானா அஸ்மா (Nana Asma’u). நபியவர்களின் கஷ்ட காலங்களில் உறுதுணையாக இருந்த நபித்தோழியான அஸ்மா (ரலி) அவர்களின் நினைவாகவே அவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. சிறு வயதிலேயே தன் தாயை இழந்த அஸ்மா, தன் சித்திக்களின் பொறுப்பில் வளர்ந்தார். எந்தவொரு விசயத்தையும் குர்ஆனின் ஒளியில் பார்க்கும் அத்தகைய பெண்மணிகளின் வளர்ப்பில் சிறப்பான கல்வி கொடுக்கப்பட்டார். இளம்வயதிலேயே ஓரிறைக்கொள்கை குறித்த தெளிவான எண்ணங்கள் அஸ்மாவுக்கு ஏற்றிவைக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

  நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அஸ்மாவின் வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் தலைப்பட ஆரம்பித்தன. அதற்கு காரணம் உஸ்மான் டான் போடியோவின் தீவிர இறைப்பணி. சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் இஸ்லாமை நோக்கி மக்களை அழைப்பதில் தவறியதில்லை உஸ்மான். தன் இடத்தை விட்டு வெகு தூரம் சென்று பல்வேறு நிலப்பரப்புகளில் இஸ்லாமை எடுத்துக் கூறுவார். கால்நடை மேய்ப்பவர்கள், வியாபாரிகள், மார்க்கெட்கள் என்று யாரையும், எந்த இடத்தையும் விட்டதில்லை. இறைவனின் கிருபையால், உஸ்மானின் அழைப்பு பணிக்கு மகத்தான வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கையும், இஸ்லாமை சரிவர புரிந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர ஆரம்பித்தது.

  தொடர்ந்து படிக்க…http://www.ethirkkural.com/2012/04/blog-post_27.html

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

   

  Tags: ,

  ஆசை பலவிதம்!

  ஆசை பலவிதம்!
  நமக்குத்தான் எத்தனை ஆசைகள்…! எதிர்பார்ப்புகள்…! நாம் ஆசைகளையும் கனவுகளையும் வளர்த்துக்கொள்கிறோம். ஆசைகளுக்குப் பின்னால் ஓடுகின்றோம். ஓடி ஓடிக்களைத்துப் போகின்றோம். வாழ்க்கையே முடிந்து போனாலும் ஆசைகள் முடிவதில்லை.

  ஆசை இல்லாத மனிதர்களே இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. சின்னச்சின்ன அசை, பெரிய பெரிய ஆசை. மருத்துவராக ஆசை; பொறியாளராக ஆசை, வீடு கட்ட ஆசை, இன்னும் என்னென்னவோ!

  “ஆசை வைக்காதே, அவதிப்படாதே!” ஆசையே துன்பங்களுக்குக் காரணம்” போன்ற சொல்வழக்குகள் எல்லா மொழிகளிலும் உண்டு. என்றாலும் நாம் ஆசைப்படுவதை விடுவதில்லை. “ஆசையே துன்பத்திற்குக்காரணம்” என்று சொன்ன புத்தர் கூட அந்த துன்பத்திலிருந்து விடுதலை பெற ஆசைப்பட்டாரே…!

 • ஆசைப்படுவது மனித இயல்பு. மனித மனங்கள் ஆசைகளால் உயிர் பெருகின்றன. ஆசையில்லாத உள்ளங்கள் பிணவறைகளே! ஆனால், நமது ஆசைகள் எப்படிப்பட்டவை என்பது மிகமிக முக்கியமானது ஆகும்.

  குறிப்பாக ஓர் இறைநம்பிக்கையாளன் எப்படிப்பட்ட ஆசைகளை தனது உள்ளத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்? தனது இறைவனிடம் எத்தகைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டும்? – இந்தக் கேள்வி முக்கியமானவை.

  நம்பிக்கையால நிறைந்த உள்ளங்கள் ஆசைகளால் நிறைந்தாலும் அவை மறுமை வெற்றிக்கும் உத்தரவாதம் தருபவையாகத் திகழும் இறை உவப்பை பெறுவதும், மறுமையின் நிரந்தர வெற்றியை ஈட்டுவதுமே ஓர் நம்பிக்கையாளரின் பெரிய பெரிய ஆசைகள்.

  ஆசைகள் குறித்து அறிஞர் பலரும் எழுதியிருக்கிறார்கள். இமாம் அபூ பக்கர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் உபைத் அல் பக்தாதி என்ற அறிஞர் அல் முத்மனீன் (ஆசைகள்) என்ற தலைப்பில் பெரிய நூலொன்றை எழுதியிருக்கிறார்கள். இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது நபிமொழித் திரட்டில் ஆசைகள் குறித்து ஓர் அத்தியாயமே எழுதியிருக்கிறார்கள். அதில் ஆசைகள் தொடர்பான பத்தொன்பது நபிமொழிகளைத் தொகுத்திருக்கின்றார்கள்.

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆசைகளுக்கு” அனுமதி தந்திருக்கின்றார்கள். “நீங்கள் இறைவனிடம் கேட்கும்போது மிக மிக அதிகமாகக் கேளுங்கள். ஏனெனில் கேட்கப்படுபவனே உங்களைப் படைத்தவனாக இருக்கின்றான்.” “இறைவனிடம் அவனது அருள்வளத்தைக் கேளுங்கள்.”

  ஆசைகள் பல வகை உண்டு. அடுத்தவ்ர் பொருள் தனக்குக் கிடைக்க வேண்டும்; அடுத்தவருக்கு அந்த பொருள் கிடைக்கக் கூடாது என்று ஆசைப்படுவது பொறாமை ஆகும். இது மிகப் பெரிய தீமையாகும். நற்செயல்களை அழித்து விடக்கூடியது.

  ஆஹா! அந்த நண்பர் என்னமாய் சம்பாதிக்கிறார்…! எப்படியெல்லாம் அதனை இறைவழியில் செலவழிக்கிறார்..! என்று ஆசைப்பட்டு, “இறைவன் அவர் மீது இன்னும் அதிகமாக அருள் பொழிவானாக” என்று பிரார்த்தித்து, எனக்கும் அப்படி பொருளும் வசதியும் கிடைக்க வேண்டும்; நானும் அதனை இறைவழியில் செலவழிக்கும் நற்பேறு கிட்ட வேண்டும்” என்று ஆசைப்படுவது தவறல்ல.

  “உலகமே என் காலடியில் இருக்க வேண்டும். மரணமே நிகழக்கூடாது” என்றெல்லாம் ஆசைப்படுவது விபரீத ஆசை. இது இறைவனின் நியதிகளை மாற்ற முனைவதாகும். இது தடுக்கப்பட்டுள்ளது.

  இப்போது சில நல்ல நல்ல ஆசைகளைப் பார்ப்போம்.

  உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆசை

  அது ஒரு பொன்மாலைப்பொழுது. கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது தோழர்கள் புடைசூழ ஒரு வீட்டில் அமர்ந்திருக்கின்றார்கள். அங்கு பஷர் பின் மூஸா அவர்களும் இருக்கின்றார்கள்.

  உமர் ரளியல்லாஹு அன்ஹு புன்னகை பூத்த வண்ணம் தம் தோழர்களைக் கேட்கிறார்கள்; “நண்பர்களே! வாருங்கள், இனிய மாலைப்பொழுதில் ஆசைகளைப் பரிமாறிக் கொள்வோம். தோழரே! உங்கள் ஆசை என்ன?” ஒருவர் கூறுகிறார்: ” எனக்கு இந்த வீடு முழுக்க தங்கக்கட்டிகளும், நகை நட்டுகளும் கிடைக்கணும். அதை நான் இறைவழியில் மகிழ்வுடன் செலவழிக்கணும் என்பதே எனது ஆசை”

  உமர் ரளியல்லாஹு அன்ஹு மற்றவரிடம் கேட்கிறார்கள்: “உங்கள் ஆசை என்ன?”

  அவர் கூறுகிறார்: “எனக்கு இந்த வீடு முழுக்க முத்துமணிகள், பவளங்கள், ரத்தினங்கள், வைரங்கள் நிரம்பி வழிய வேண்டும். அதனை நான் மகிழ்வுடன் இறைவழியில் செலவழிக்க வேண்டும் என்பதே என் ஆசை”

  உமர் ரளியல்லாஹு அன்ஹு மீண்டும்: “இன்னும் எவராவது?”

  நண்பர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களுக்கு எதை ஆசிப்படணும் என்பதே தெரியவில்லை”

  உமர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: “எனக்கு இந்த வீடு நிறைய அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற சத்திய சீலர்கள் வேண்டும்.”

  முகலாய மன்னர் அவ்ரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை

  முகலாய மன்னர் அவ்ரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை என்னவாக இருந்தது தெரியுமா?

  ஒரு நாள் அஸர் தொழுது முடித்த பிறகும் அவ்ரங்கஸேப் நீண்ட நேரம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் கண்ணீர்! அருகே நின்ற அமைச்சர் நவாப் ஸதக்கத்துல்லாஹ் கானுக்கு ஆச்சரியம்!

  பிரார்த்தனை முடிந்து எழுந்த மன்னரிடம் கேகின்றார். “மன்னரே! உங்களது அரசு காபூலில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. உங்களிடம் அப்படியென்ன நிறைவேறாத ஆசை? எதற்காக இந்தக் கண்ணீரும், பிரார்த்தனியும்?”

  அவ்ரங்கஸேப் சொல்கிறார்: “எனக்கு செயல்வீரர்கள் தேவை. இறைவழியில் உயிர்விட ஆசை! ‘’எவன் வசம் எனது உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இறைவழியில் நான் கொல்லப்பட வேண்டும் என்றே நான் விரும்பினேன்!”

  என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இறைவழியில் உயிர் துறக்க ஆசைப்படுவது இறைவனின் அருள்வளத்தை யாசிப்பது போன்றது.

  “இறைவழியில் உயிர் துறக்க வாய்மையான உள்ளத்துடன் ஒருவர் ஆசைப்பட்டால் அவருக்கு அதற்கான நற்கூலி கிடைக்கும்; அவர் உயிர் துறக்க வாய்ப்புக் கிட்டாமல் போனாலும் சரியே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

  மீண்டும் மீண்டும் உயிர்விட ஆசை

  “சுவனம் கிடைத்த பிறகு எவருமே உலகத்திற்குத் திரும்ப விரும்ப மாட்டார்கள், உயிர்த் தியாகம் செய்தவர்களைத் தவிர; இறைவழியில் உயிர்த்தியாகம் செய்வதன் மகத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர் பத்து தடவை உலகுக்கு மீண்டு வரவும், ஒவ்வொரு தடவியும் இறைவழியில் உயிர் துறக்கவும் விரும்புவார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்.

  பாவ மன்னிப்பு கிடைக்க ஆசை

  அவ்ப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவுக்காக செய்த பிரார்த்தனையை நான் நினைவில் நிறுத்திக் கொண்டேன். அந்தப் பிரார்த்தனி இதுதான்.

  “இறைவனே! இவருக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக! இவர் மீது கருணை காட்டுவாயாக! இவரை நல்ல நிலையில் வைத்திருப்பாஅயாக! இவரது மண்ணறையை விரிவுபடுத்துவாயாக! வெள்ளைத் துணியிலிருந்து அழுக்கை அகற்றி விடுவது போல இவரது பாவங்களை மன்னிப்பாயாக! சுவனத்தில் இடம் கொடுப்பாயாக! மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றுவாயாக!”

  சுவனத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்க ஆசை

  ராபிஆ பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழர் கூறுகிறா: “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகிலேயே தங்கியிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்ய தண்ணீரை கொடுப்பது எனது வழக்கமாக இருந்தது. ஒருமுறை தண்ணிரை பெற்றுக்கொண்ட பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: “கேளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்”.

  நான் பதிலளித்தேன், “நான் சுவனத்திலும் உங்களுடனேயே இருக்க விரும்புகிறேன்”.

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் கேட்டார்கள். “வேறு ஏதாவது வேண்டுமா?”

  நான் சொன்னேன், “எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை”

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், “அதிகமாக இறைவன் முன் சிரம் தாழ்த்தி எனக்கு உதவுங்கள்” (அதாவ்து அதிகமாகத் தொழுது எனக்கு உதவுங்கள் என்பது இதன் கருத்தாகும்)

  சுவனத்திற்குள் ஏழைகளுடன் நுழைய ஆசை

  ஹிஜ்ரத் செய்தவர்களில் எளியவர்கள் மகிழட்டும்! இறைவன் அவ்ர்களை பணக்காரர்களைவிட நாற்பது நாட்கள் முன்பே சுவனத்தில் நுழைத்து விடுவான். இதனைக் கேட்ட ஏழைகளின் முகம் மகிழ்ச்சிப் பெருக்கால் பிரகாசமாக இருந்தது. நானும் அவர்களில் ஒருவனாக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கியது” என்று அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

  குர்ஆனிய அறிவு கிட்ட ஆசை

  அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “குர்ஆனிய அறிவு நிரம்ப வழங்கPபட்ட ஒருவர் அதன்படிச் செயல்படுவது மட்டுமல்லாமல் அழகாக ஓதவும் செய்கிறார் எனில் அவரைப் பார்த்து எனக்கும் குர்ஆன் மனனம் செய்யும் பேறு கிட்ட வேண்டும். நானும் இவரைப் போலவே குர்ஆன் ஓத வேண்டும்” என்று ஆசைப்படுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

  – சொர்க்கத் தோழி பிப்ரவரி 2008

  http://www.nidur.info

   
 • Leave a comment

  Posted by on April 25, 2012 in Uncategorized

   

  Tags:

  ஒரு பாட்டில் “அன்பு” ஆயிரம் ரூபாய்!

  தொலைக்காட்சியில் மகளிர் அரங்கத்தில் ஒரு சிறுமி பேசிக்கொண்டிருந்தாள் வயது அநேகமாக பத்துக்குள்ளாக இருக்குமென நினைக்கிறேன் கல்வியே அறிவைத் தரும் என்ற தலைப்பில் ஆவேசமாக பேசினாள்.

  பணிக்கு புறப்பட்ட நான் ஐந்து நிமிடம் அந்த சிறுமியின் பேச்சை கேட்டுவிட்டு புறப்பட்டேன். சிந்தனை அந்த சிறுமியின் பேச்சில் சுழன்றது.

  கல்வி மட்டுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் கல்வி ஒன்றே மனிதனை உயர்வடையச் செய்யும் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள் அவர்களின் பேச்சு உண்மையானதுதான் ஆனால் கற்கும் கல்வி?

 • ஒரு மாணவனின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது அவன் படித்து முடித்து வேலைக்கு சென்று நன்கு சம்பாதித்து எல்லா வசதிகளுடனும் வாழும்போது அவனை உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்று சமுதாயம் சொல்கிறது.

  கல்வியினால் சமுதாயம் முன்னேறுகிறது என்பது மச்சி வீடு மாடி வீடாகவும், மாடி வீடு பங்களாக்களாகவும் இப்படி வசதிகள் கல்வியினால் மாற்றம் காண்கிறதே தவிர, மனித நேயத்தில், மனிதர்களின் குண நலன்களில் இன்றைய கல்வி மாற்றத்தை அதிகம் தருகிறதா(?) என்பது கேள்வியாகும்.

  இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கிராமம் வரையில் இணையதளம் வளர்ந்து விட்டது என்னவோ உண்மைதான் ஆனால் கிராமத்தில் வாழ்ந்த பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதும், முதியோர் இல்லங்கள் வளர்ந்து வருவதும் கல்வியின் முன்னேற்றமா?

  பொருளாதாரத்தை முன்வைத்து கல்விச் சாலைகளும், கற்பிக்கப்படும் ஆசிரியர்களும், கற்கும் மாணவர்களும், பெற்றோர்களும் செல்கிறார்கள் அவர்களின் சமுதாயம் எப்படிபட்டாதக இருக்கிறது என்றால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது என்பது மறந்து உதவி செய்வதற்கு ஆதாயம்தேடும் வியாபார சமுதாயமாக மாறி வருகிறது என்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.

  அண்ணன் தம்பிக்கு மத்தியில் பாசத்தைவிட தங்களிடமுள்ள பணம்தான் யார் அண்ணன் யார் தம்பி என்பதையே இன்றை சூழல் நிர்ணயிக்கிறது.

  இந்திய அரசியல்வாதிகள் எல்லாம் படிக்காதவர்களா? கல்வி கற்றவர்கள்தானே? இன்று பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் சுரண்டல்கள் எத்தனை கோடிகள் என்பதை ஊடகத்துறை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறதே இவர்களிடம் பொருளாதார ஆசையை மட்டுமே வளர்த்திருப்பது எது?

  இன்றைய காலத்தில் பெரிய தவறுகளை எல்லாம் கல்வி கற்கும் சில மாணவர்கள் சர்வ சாதரணமாக செய்கிறார்கள் அவர்களுக்கு கற்பிக்கும் அந்த ஆசிரியர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்?

  கல்விச் சாலைகளை மிக அழகாக வடிவமைத்து வருவதில் இன்று கவனமாக இருக்கும் இவர்கள் அதில் படிக்கும் மாணவர்களின் குண நலன்களை அழகுபடுத்த வேண்டிய பணி கல்விச் சாலைகளுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

  அறிவைக் கற்கும் அனைத்துமே கல்விதான் ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலோர் அறிவு பெறுவதற்காக கல்வி கற்கவில்லை பொருளீட்டுவதற்காக மட்டுமே கல்வி கற்கிறார்கள். இந்த பொருள் கல்வியானால் இந்த சமுதாயத்தில் வசதிகள் பெருகலாம் ஆனால் ஒரு இயந்திரதனமான வாழ்க்கைமுறை வளர்ந்து மனிதம் ஏழையாகவே இருக்கும்.

  பொருளாதாரத்தை வைத்து எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் வளர்ந்து வரும் சமுதாயத்தில் அன்பு என்பது மினரல் வாட்டரைபோல பாட்டல்களில் அடைத்து ஒரு பாட்டில் அன்பு ஆயிரம் ரூபாய் என சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யக்கூடிய காலம் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

  மனிதனை மனிதனாக வாழவைக்கக்கூடிய தன்னை அறியும் ஞானக்கல்வியை இணைத்து கல்லூரிகளில் அனைவரும் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். அன்பும் நேயமும்மிக்க இந்த கல்வியினால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

  “சீன தேசம் சென்றாயினும் சீரான கல்வியைத்தேடு” என்று கூறும் அண்ணல் நபிகள் ஏட்டுக் கல்வியை கற்காதவர்கள். இறைவன் கற்பித்துக் கொடுத்த கல்வியைகற்று இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

  ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்விச்சாலையாகவே இருக்கிறான் அவன் அதை அறிந்துக் கொண்டானேயானால் மனிதம் மலரும் அன்பு ஓங்கும்.தினம் அரைமணித் துளியேனும் நம்மை நாம் சிந்திக்க முற்பட்டால் நம்மிலே மாற்றங்கள் நிகழும் அந்த மாற்றம் இந்த சமுதாயத்தை மாற்றும்.!
  by கிளியனூர் இஸ்மத்
  Source : http://www.kismath.blogspot.in/2012/02/blog-post_26.html

   
 • Tags: , ,

  கழுத்து வலியைக் குணப்படுத்த வழி


  நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்பச் செயல். – குறள்.

  ஆகவே எந்த நோயாக இருந்தாலும் அது எப்படி, எதனால் வந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

  இந்த நாளில் கழுத்து வலி வருவதற்கு முக்கியமான மூன்று காரணங்கள்.

 • 1. இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் போகும்போது குண்டு குழிகளில், வேகத்தடுப்பான்களில், வேகத்தைக் குறைக்காமல் வேகமாகப் போகும்போது ஏற்படும் அதிர்ச்சி.

  2. கணிணி முன் மணிக்கணக்காக ஒரே நிலையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பது.

  3. தலையணையின் உயரம் ஒத்துக் கொள்ளாமல் போவது.

  முதல் இரண்டு காரணங்களையும் பலர் அறிந்திருப்பார்கள். அதற்கு உண்டான வைத்தியத்தையும் அறிந்திருப்பார்கள். இந்த மூன்றாவது தலையணை காரணத்தையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும். இது நாள் வரை டாக்டர்கள் சொல்லி வந்தது என்னவென்றால் தலையணை அதிக உயரம் கூடாது என்பதுதான்.

  என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதே. ஆகவே நீங்கள் உங்களுக்கு எவ்வளவு உயரமான தலையணை வேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டு பிடித்து அதை உபயோகப்படுத்தவேண்டும்.

  நான் உயரம் குறைவான தலையணையைத்தான் உபயோகித்து வந்தேன். கழுத்து வலி இருந்து கொண்டே இருந்தது. ஒரு பரிசோதனைக்காக ஒரு உயரமான தலையணையை உபயோகித்தேன். இரண்டு மூன்று நாளில் கழுத்து வலி குறைந்து, ஒரு வாரத்தில் முற்றிலும் சரியாகி விட்டது.

  இதுலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான தலையணையைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவேண்டும்.
  Source : http://swamysmusings.blogspot.in/2012/04/blog-post_19.html
  Cervical Spondylosis


  Cervical spondylosis is a disorder in which there is abnormal wear on the cartilage and bones of the neck (cervical vertebrae).
  Cervical spondylosis is a common degenerative condition of the cervical spine. It is most likely caused by age-related changes in the intervertebral disks. Clinically, several syndromes, both overlapping and distinct, are seen. These include neck and shoulder pain, suboccipital pain and headache, radicular symptoms, and cervical spondylotic myelopathy (CSM). As disk degeneration occurs, mechanical stresses result in osteophytic bars, which form along the ventral aspect of the spinal canal


   
 • Tags: ,

  தண்ணீர் ! தாகம் தீர்ப்பதற்கா? தாரை வார்ப்பதற்கா?

  உலக நாகரிகங்கள் நதிக்கரைகளில் தோன்றியதாக வரலாற்று ஏடுகளில் படித்துள்ளோம். நைல் நதி நாகரீகம், சிந்து நதி நாகரீகம், டைகரடீஸ், யூப்ரடீஸ் நாகரீகம் என்பவை வரலாற்றின் பாலபாடம். மனித இனம் வாழவும், வளரவும் நதிகளின் பங்கு நாடறிந்தது. மனிதன் வாழ்வதற்கு தண்ணீர் தேசங்களை தேடிப்போனான் ஆனால் அவன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது என்பதை உணர்ந்து ஏழாயிரம் ஆண்டே ஆகிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

  தண்ணீர் என்பது தயாளம் மற்றும் தாராளத்தின் அடையாளம். ‘தண்ணி மாதிரி செலவழிக்கிறான்’ என்றும் , ‘ தம்பிக்கு இது தண்ணிப்பட்ட பாடு ‘ என்றும்’ ‘ தவிச்ச வாய்க்கு தண்ணீர் கூட தரமாட்டான்’ என்றும், தண்ணீரின் எளிமையை உணர்த்தும் சொற்றொடர்கள் வழக்கில் உள்ளன. மிக எளிமையாக கைவசப்படும் சொத்துக்களுக்கு LIQUID ASSET என்பது பொருளியல் வழக்கு. தர்மம் செய்ய நினைக்கிறவர்கள் கோடைக்காலங்களில்- சாலை ஓரங்களில் தண்ணீர்ப்பந்தல் அமைப்பார்கள். கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் தண்ணீரின் பெருமையைச் சொல்லவேண்டுமானால் உயிரை உருக்கும் வரிகளில் இப்படிச் சொல்லலாம்.

  முதல் உயிர் பிறந்தது
  நீரில் என்பதால் ஒவ்வோர்
  உடம்பிலும் இன்னும்
  ஓடிக்கொண்டேயிருக்கிறது
  அந்த உறவுத் திரவம்.
  கர்ப்பத்தில் வளரும் சிசு
  தண்ணீர்க் குடத்தில்
  சுவாசிக்கிறது.

  – வைரமுத்து.

  ஒரு நாட்டின் மண்ணை நேசிப்பது போலவே அந்நாட்டின் நீர்க்குடும்பத்தின் அங்கங்களான ஆறுகளையும், ஓடைகளையும், சிற்றோடைகளையும், ஏரிகளையும், குளங்களையும் நேசிக்கும் இதயங்கள் எண்ணற்றவை. (இன்றும் கூட சி.எம்.பி. வாய்க்காலையும் , செடியன் குளத்தையும் நேசிக்கும் இனியவர்கள் நம்மிடையே உண்டு.) பல சிறப்புக்களுக்கு தகுதிபடைத்த தண்ணீர் இன்று தனிச்சொத்தாக மாற்றப்பட்டு – ஒரு வணிகப்பொருளாக ஆக்கப்பட்டு – உலகமயமாக்கல் என்ற வித்தைக்காரியின் கரங்களில் அகப்பட்டுக்கொள்ள அஸ்திவாரம் தோண்டப்படும் அவலத்தைப் பற்றித்தான் இங்கு அலச இருக்கிறோம்.

 • மத்திய அரசில் நீர்வள அமைச்சகம் (MINISTRY OF WATER RESOURCES) என்று (மாநிலங்களுக்கிடையே நடைபெறும் நதிநீர் பங்கீடு சண்டைகளை வேடிக்கை பார்ப்பதற்காக) ஒரு அமைச்சகம் இருக்கிறது. கடந்த 31.1.2012 அன்று இந்த அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிக்கை இந்த அமைச்சகத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான கொள்கை வரைவை உள்ளடக்கிய அறிக்கையாகும். (Draft – National Water Policy 2012) . அதாவது எப்படி இரயில்வே அமைச்சகம் தனது நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ, நிதி அமைச்சகம் எப்படி வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ அதேபோல்தான் இதுவும்.

  நியாயமாக இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிடும்போது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் விவசாயப் பிரதிநிதிகள் உட்பட எல்லாத்தரப்பு மக்களிடமும் இந்த அறிக்கையின் சாராம்சங்கள் பற்றியும் கூட்டம் கூட்டி விவாதித்து இருக்க வேண்டியதும் அரசு தரப்பு கடப்பாடாகும். பேய் அரசாள வந்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் இன்றைய நிலை. ஆகவே இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வளவு பீடிகை போட்டு ஆரம்பிக்கிறாயே என்று நீங்கள் நெற்றி சுருக்குவது தெரிகிறது.

  இரண்டே வரிகளில் சொல்லப் போனால் பொது நன்மைக்குரிய வளமாக இருக்கும் தண்ணீரை (COMMON GOODS) சந்தைப் பொருளாக – பொருளாதார போகப் பொருளாக (ECONOMIC GOODS) மாற்றி வரையறுத்து, தண்ணீரை முற்றிலும் தனியார் மயமாக்குவதே மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை கொள்கை வரைவின் அடிப்படை நோக்கமாகும். சாலைகளைப் பயன்படுத்தும்போது சுங்கம் கட்டுவதுபோல் இனி தண்ணீரை அடிப்படை தேவைக்கும், விவசாய பாசனத்துக்கும் பயன்படுத்தவும் சுங்கம் கட்டும் நிலைமைக்கு அடிகோலப்பட்டு இருக்கிறது.

  நான் குறிப்பிடும் இந்தக் கொடிய தேசிய நீர்க் கொள்கை வரை வின் பத்தி 3.3 கீழ் வருமாறு கூறுகிறது.

  “மனித இனம் உயிர் வாழ்வதற்கும், சுற்றுச் சூழல் அமைப்புகள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் தேவையான குறைந்த அளவு தண்ணீரைத் தவிர மற்ற தண்ணீரெல்லாம் பொருளியல் வளமாகப் பேணப்பட வேண்டும்”. (TO BE CONSIDERED AS RESOURCES OF ECONOMY).

  தேவையான குறைந்தபட்ச தண்ணீரின் அளவு என்ன என இக்கொள்கை வரையறுக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் முற்றிலும் தனியார் பெருங் குழுமங்களுக்கு வழங்கப்பட இக் கொள்கை வழிவகுக்கிறது.

  மேலும் இந்த அறிவிக்கையின் பத்தியான 13.4 –யில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.

  “தண்ணீர் தொடர்பான பணிகளில் அரசின் பங்கும் பொறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணியைத் தமது அடிப்படைக் கடமையாக அரசு மேற்கொள்ளக் கூடாது. தண்ணீர் தொடர்பான அனைத்துப்பணிகளும் சமூகத்திற்கு அல்லது தனியார் துறைக்கு மாற்றப்பட வேண்டும். இதனை ஒழுங்கு படுத்துவது, கட்டுப் படுத்துவது ஆகிய பணிகள் மட்டுமே அரசின் கடமையாக இருக்க வேண்டும்” எனக் கூறுகிறது.

  மனிதர்களுக்கும், சுற்றுச் சூழல் தூய்மைக்கும் தேவை யான குறைந்தபட்ச நீர் வழங்கல் கூட தனியாரின் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என இக் கொள்கை வரைவு குறிப்பிடுவதிலிருந்தே நாட்டின் நீர் வளம் முழுவதும் வணிகச் சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது உறுதியாகிறது.

  இந்த கொள்கைகள் ஏற்கப்பட்டு அமுல்படுத்தப்படுமானால், இனிமேல் தண்ணீர் என்பது அரசின் சேவை என்ற தலைப்பில் வராது குடிநீர் வழங்கு துறை இனி குடிநீர் வழங்கல் கண்காணிப்புத் துறையாக மாறிவிடும் .

  இப்படி தனியாரை புகவிட்டால் சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ஆதாயமில்லாமல் அவர்கள் ஆத்தைக்கட்டி இறைப்பார்களா?

  அதைத்தான் அறிக்கையின் பிரிவு 7 பேசுகிறது.

  ஒரு சொட்டு தண்ணீர் கூட காசில்லாமல் யாருக்கும் வழங்கப்படக் கூடாது என இப்பிரிவு வலியுறுத்துகிறது. இதற்காக உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இன்னும் விசித்திரம். விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று நேரடியாக சொல்லாமல் தண்ணீருக்கு ஆகும் செலவை திரும்பப் பெறுவது என்று கூறுகிறது. (RECOVERY OF TOTAL COST). முழுச்செலவையும் பயனாளிகளிடமிருந்து திரும்பப் பெற வேண்டுமாம். இனி கையில் பணம் படைத்த செல்வந்தரே குளிக்க முடியும் – குடிக்க முடியும். யார் வீட்டு திண்ணையிலும் போய் உட்கார்ந்து அம்மா குடிக்க கொஞ்சம் தண்ணி தா! தாயே! என்று கேட்க இயலாது.

  மானியமாகவோ, இலவசமாகவோ தண்ணீரை வழங்கும் அரசின் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றியமைக்க வேண்டுமென்றும் அப்படி மானியமாகவும் இலவசமாகவும் கொடுப்பதால் அதன் உண்மை மதிப்பை உணராமல் வீணடிப்பதை தடுக்க முடியும் என்று இக்கொள்கை வரைவில் பத்தி 7.5 குறிப்பிடுகிறது.

  இந்த அறிவிக்கையின் பத்தி 9.5 இந்திய நாட்டின் அடிப்படை வாழ்வாதாரத் தன்மைக்கு எதிமறையானது. “இனி வரும் தண்ணீர் திட்டங்கள் விவசாயத்தையும், குடிநீர் வழங்கலையும் மட்டும் முக்கிய நோக்கங்களாக கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக பலநோக்கு திட்டங்களாக வரையறை செய்ய வேண்டும்” என்று கூறுகிறது.

  பலநோக்கு திட்டங்கள் என்றால் என்ன? ஒரு விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள விவசாய நாட்டில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்றும்- ஏழைகள் நிறைந்த பூமியில் இலவச குடிநீர் இல்லை என்றும் கூறிவிட்டு பலநோக்கு திட்டங்களுக்கு தண்ணீரை விற்க வேண்டும் என்றால் அந்த பலநோக்கத்தில் அடங்குவது பன்னாட்டுக் கொள்ளைக் கூட்டத்தின் கேளிக்கை விடுதிகள் , பெரும் முதலீட்டில் உருவாகும் தொழிற்சாலைகள், தண்ணீரில் வாசனையையும், கழிவறை கழுவப்பயன்படும் இரசாயனங்களையும் ஹராமான சாராயத்துளிகளையும் கலந்து விற்று காசாக்கும் தந்திரங்களும் என்றுதானே அர்த்தம்?

  இந்த 2012-க்கான கொள்கை வரைவின் 6.3, 6.4 ஆகிய பத்திகளைப் படிக்கும் போது 2002–க்கான அறிக்கையும் ஒப்பிட்டு படிக்க வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை மாசுபடுத்துபவர்கள் அப்படி மாசுபடுத்தியற்கான குற்றத்துக்கு பொறுப்பாளர்களாக்கப்பட்டு, தூய்மைப்படுத்துவதற்காக ஆகும் செலவையும் ஏற்கவேண்டுமென்பது 2002-ன் அறிக்கையில் சொல்லப்பட்டது (POLLUTER TO PAY) . ஆனால் இப்போது அது மாற்றப்பட்டு நீர் நிலைகளை சாக்கடையாக்கும் முதலாளி வர்க்கத்தை காப்பாற்றும் விதத்தில் அரசே ஊக்குவிப்பு வழங்கி, நீர் சுழற்சி முறையை (RECYCLING) செய்யவேண்டுமென்று 2012-ன் அறிவிக்கை கூறுகிறது.

  இதில் கூறப்பட்டுள்ள ஒரு காரசாரமான அம்சம் என்னவென்றால் இதுவரை மாநில அரசின் அதிகாரப்பட்டியலில் இருந்துவரும் தண்ணீரை மத்திய- மாநில அரசுகளின் கூட்டு அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது முழுக்க மத்திய அரசின் பட்டியலுக்கோ எடுத்துச் சென்று விடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பதுதான். இதனால் நதிகள் தேசியமாக்கப்பட்டு விடும். ‘கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற கதையாகிவிடும்.

  நதிகள் தேசியமாகப்பட்டு விட்டால் நதிகளின் மேல் மாநிலங்களின் பிடிப்பு தளர்ந்து நாடு முழுதும் சீரான நதிநீர் பங்கீடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று இதற்கு ஆதரவான வாதம் வைக்கப்படுகிறது. வாய்ப்புதான் உள்ளது என்று சொல்லலாமே தவிர வாய்க்குமா என்று சொல்ல முடியாது. மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளும் என்று நம்புவது கனவு மாளிகைக்கு கால் கோள்விழா நடத்துவதற்கும், காதர்சா குதிரையின் மேல் பணம் கட்டுவதற்கும் ஒப்பானது. அரசியல் காரணங்களால் – அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மத, இன, மொழியினரின் செல்வாக்கால் மாநில உரிமைகள் மத்திய அரசு காலில் போட்டு மிதிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

  இதற்கு உதாரணம்- தமிழ்நாடே.

  ஏற்கெனவே ஆற்று நீர் பங்கீட்டின் இறுதி அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும் போதே தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதைக் கண்டு வருகிறோம். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய சிக்கல்களில் நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல் படுத்த வேண்டிய தனது சட்டக் கடமையைக் கைகழுவி விட்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழிக்க எண்ணுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசியல் காரணங்களால் இந்திய அரசு தயங்கி நிற்பதை பார்க்கிறோம். வானளாவிய அதிகாரம் கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் செல்லுபடியாகவில்லை.

  மாநில அரசுகளில் கைகளில் நதிநீர் அதிகாரம் இருந்தால் மாநில நலன் கருதி அந்தந்த மாநிலங்கள் தங்களின் தேவைகளுக்காக போராட முடியும். அந்த அதிகாரமும் பறிக்கப்பட்டு விட்டால் முதலாளித்துவத்தின் கைப்பாவையாக மாறிவரும் மத்திய அரசு “உனக்கும் பேப்பே, உங்க அப்பனுக்கும் பேப்பே” என்று காட்ட வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டு மல்லாமல் நமது அனுபவம், எந்த ஒரு இயற்கை வளமும் மக்களின் பொது உரிமை என்ற நிலையிலிருந்து அரசுடமை என்று மாற்றப்படும்போது அது தனியாருக்கு விற்கப்படுவதற்கு வழிதிறந்து விடுவதாக அமைந்துவிடுகிறது. சுரங்க முறைகேடுகளால் சுரண்டப்பட்ட நாட்டின் செல்வம் கருப்புப் பணமாய் அவதாரம் எடுத்தது எப்படி?

  மிகச்சுருக்கமாக இந்த அறிக்கையைப் பற்றி கருத்துக்கூற வேண்டுமானால் தண்ணீரையும் பெருவணிக தனியாரிடம் தாரைவார்த்துவிட முயலும் அரசின் அவசரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே கூறவேண்டும்.

  ஏற்கனவே “அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்“ என்ற ஒரு கட்டுரையை இந்த தளத்தில் பதிந்து இருக்கிறேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன்.

  “இந்திய பொருளாதார கொள்கைகளை வகுப்பவர்கள் யார் ? நாம் நம்பிக் கொண்டிருப்பது போல் நமது நிதி அமைச்சகம் அல்ல. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஜி-8 அமைப்பில் உள்ள நாடுகளும், அந்த நாடுகளின் பன்னாட்டு நிருவனங்களின் நிர்வாகிகளுமே. உலக வங்கியில் என்றைக்கு கடன் வாங்க நாடு கை நீட்டியதோ அன்றே அவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடவும் , கூறும் கொள்கைகளை அமுல்படுத்தவும் நாம் தயாராகி விட்டோம். உதாரணத்துக்கு உலகவங்கியின் வற்புறுத்தலால் மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தபட்டதாக வெட்கமில்லாமல் சட்ட மன்றத்தில் அறிவிக்கின்றனர் அனைத்து மாநில ஆட்சியாளர்கள். இதனால் நமது நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மாண்பு , மக்களின் இயல்பு – பொருளாதார வழக்கில் கூறப்போனால் நுகர்வோர் கலாச்சாரம் (CONSUMER CULTURE) ஆகியவற்றின்மேல் தாக்குதல் தொடுக்கும் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன.”

  என்று குறிப்பிட்டதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு நாம் விவாதிக்கும் இக் கொள்கை வரைவு தண்ணீர் வள ஆதிக்கத்தை விரும்பும் பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் நிழல் ஆட்களால் உருவாக்கப் பட்ட கொள்கை வரைவு ஆகும்.

  இந்த விஷயத்தை கொஞ்சம் கவனமாகப் படியுங்கள். – அதாவது

  உலக வங்கியின் கீழ் நீர் ஆதாரக்குழு 2030 (2030 WATER RESOURCES GROUP) என்கிற அமைப்பு ஒன்று இயங்குகிறது.
  இந்த அமைப்பு “தேசிய நீர் ஆதாரத்திட்ட வரைவு ஆய்வு- சீர்திருத்ததுக்கான திசைகாட்டி “(NATIONAL WATER RESOURCES FRAME WORK- STUDY & ROAD MAPS FOR REFORMS) என்று ஒரு அறிக்கையை தயார் செய்து இந்திய அரசின் திட்டக்குழுவுக்கு வழங்கியது.
  அறிக்கையை தயார் செய்த நீர் ஆதாரக்குழு 2030- என்கிற அமைப்புக்கு மூணுவேளை சோறு போட்டு- மசால்வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தது – அதாவது இந்த அமைப்புக்கு நிதிவழங்குவது பெப்சி, கோக், கார்கில், யூனிளிவர், மெக்கன்ஸி ஆகிய பன்னாட்டு பெருங்குழுமங்கள் ஆகும்.
  கடந்த 2011 அக்டோபர் 11 அன்று இந்தியத் திட்டக் குழுவிற்கு மேற்சொன்ன நீர் ஆதாரக்குழு அளித்த “திசை வழி அறிக்கை” தான் சொல் மாறாமல் அப்படியே “தேசிய நீர்க் கொள்கை 2012“ என்ற தலைப்பில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

  இந்த சூட்சுமம் இப்போது புரிகிறதா? வேறென்ன வேண்டும். ?

  கோக், பெப்சி, கார்கில் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள் தண்ணீர் வணிகத்திலும் வேளாண்மை மற்றும் உணவுப் பொருள் வணிகத்திலும் கோலோச்சி வருபவை. அவர்களது நிதி ஆதரவு பெற்ற ஆய்வுக் குழு அறிக்கை அப்படியே இந்திய அரசின் கொள்கை வரைவாக வெளி வந்திருப்பதிலிருந்தே இக்குழுமங்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள பாசப்பிணைப்பும் அதன் வலைப் பின்னலும் தெளிவாகும். அன்னியர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்று இனியும் யாரும் சொல்ல முடியுமா? அரசியல் விடுதலை பெற்று இருக்கலாம்- பொருளாதார விடுதலையும் உண்மையில் பெற்றுவிட்டோமா?

  “நள்ளிரவில் பெற்றோம் –ஆனால் இன்னும் விடியவே இல்லை” என்று ஒரு கவிஞர் கூறியது உண்மையே. இன்னும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வக்கற்ற அரசுகள் நாட்டின் மூலவளங்களை முதலாளிகளுக்கு தாரை வார்க்க கச்சை கட்டி நிற்கின்றன.

  இந்த தேசிய நீர்கொள்(ல்)கையின் வரைவு அறிக்கை சொல்லுக்குச் சொல் கண்டனத்துக்கும், எதிப்புக்கும் ஆளாக்கப்பட வேண்டியதாகும். இதை வரைவு நிலையிலேயே முறியடிக்க வேண்டும். பொதுநல அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் இணைந்து இதற்கான எதிப்புக் குரல்களை எதிரொலிக்க வேண்டும்.

  கொஞ்சம் இருங்கள்! சுல்தான் காக்கா என்னமோ கேட்கிறார்கள்.

  “என்ன சுல்தான் காக்கா?”

  “இவ்வளவு நீங்கள் எழுதுகிறீர்களே- இது பற்றி நமது மத்திய மாநில அமைச்சர்கள், M. P, & M.L.A க்களுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்களா? அவர்கள் தினமும் போய்வரும் அகல நீள இரயில் பாதையே இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையே! இப்படி இணைய தளத்திலா தோண்டித் துருவி படிக்கப்போகிறார்கள்? விடுங்கள் காக்கா. நாம் ஊதுகிற சங்கை ஊதுவோம். விடியும்போது விடியட்டும்.”

  குறிப்பு : இந்த அறிக்கை சமபந்தமாக ஆங்கிலத்தில் எதிப்பு தெரிவிக்க விரும்பும் சமூக நல விரும்பிகள் இந்த இணையதளத்துக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிப் பதியலாம் nwp2012-mowr@nic.in

  -இபுராஹீம் அன்சாரி
  comments@adirainirubar.in
  Source : http://adirainirubar.blogspot.in/2012/04/blog-post_12.html

   
 • Leave a comment

  Posted by on April 16, 2012 in Uncategorized

   

  Tags: ,