தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்! ஜைனுல் ஆபிதீன்

thumb.phpஇந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?”

‘ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.”

‘உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?”

  • ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும்போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.”

    ‘தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?”

    ‘சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது. நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச்செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், ‘இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.
    தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம். இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
    .”
    ”தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?”

    தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பான்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்? நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலைசெய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.”
    Source : http://muthupet.org/?p=7471

  • நாம் நடத்தும் ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும்!

    61216_491206724297182_881956615_nஅவதூறுகளுக்கு பதில் கூறுவது,பிறரால் நடத்தப்படும் பத்திரிக்கைகளைச் சார்ந்து நிற்பது என்பன ஒரு நிரந்தரத் தீர்வல்ல.எதுவுமே செய்யாதிருப்பதை விட அதையாவது செய்யலாம் என்ற அளவில் அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
    ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு மத,வர்த்தக, அரசியல் பின்னணி இருப்பதால் தங்களின் நலன்களை பாதிக்கும் செய்திகளை அவர்கள் வெளியிட மாட்டார்கள் எனவே கீழ்க்காணும் கூறுகளை உள்ளடக்கிய பத்திரிக்கைகள்,சேனல்கள் ஆகியவை நமக்குத் தேவை.

    * சாதி, மத,இன, மொழி,தேச உணர்வுகளுக்கு அப்பால் நின்று உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் கட்ட வேண்டும்.

    * சாதி, மத வட்டார வெறியைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.

    * ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ,பலவீனமான மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

  • * வதந்திகளையும் யூகங்களையும் வெளியிடக் கூடாது. பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுவதை விட்டு விட வேண்டும்.

    * எல்லா வகையான அநீதிகள், சுரண்டல்கள்,தீமைகள் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வேண்டும்.

    * ஆபாசம், மது,சூது, வட்டி,புகை, வன்முறை போன்ற ஒழுக்கச் சிரழிவுகளை ஊக்குவிக்கும் வகையில் செய்திகளோ விளம்பரங்களோ இடம் பெறக் கூடாது.

    சுருங்கக் கூறின்,நடுநிலையோடும் நம்பகத்தன்மையோடும் எல்லாத் தரப்பினரும் விரும்பக்கூடிய, பார்க்கக்கூடிய தரமான பத்திரிக்கையாக,சேனலாக இருக்க வேண்டும்.இதனைச் செய்ய பொருளாதாரம் ஒரு தடையல்ல.ஆர்வமும் அக்கறையும் துடிப்பும் உள்ளவர்கள் இணைந்து செயலாற்றினால் இது சாத்தியமே.

    45506_404672782950577_447308059_nகருத்து தந்தவர்
    வலையுகம் ஹைதர் அலிvaliykum - 07-10 new 1

  • சாயல்கள்!

    father-and-daughterஎன் அன்பு மகளே!

    நீ
    முகத்தில் அம்மாவின் சாயல்
    அகத்தில் அப்பா

    உடல் வடிவில் அம்மா
    உள வியலில் அப்பா

    உன்
    விழிகள் அம்மாவின் சாயல்
    பார்வையோ அப்பாவின் கோணம்

    பெண்மையிலும் மென்மையிலும் அம்மா
    உண்மையிலும் தன்மையிலும் அப்பா

    நடையுடை பாவனையில் அம்மா
    நடைமுறை தோரணையில் அப்பா

    அன்பிலும் பண்பிலும் அம்மா
    வசிப்பிலும் வாசிப்பிலும் அப்பா

    உன்னில்தான் எத்துணை சாயல்கள்!

    இறைமறை நீ ஓத
    வசனங்களை உன் வாயுரைக்க
    உன்
    இனிய குரலில்
    இசையின் சாயல்

    தொழுகைக் கம்பளத்தில்
    தளர்க் குப்பாயமணிந்து
    உனைப்
    படைத்தவன் முன்பாக
    பணிவாகக் கைகட்டியது
    நன்றியின் சாயல்

  • அடுத்தவர் வலியுணர்ந்து
    ஆறுதல் சொல்வதில் – நீ
    அன்பின் சாயல்;
    படித்ததைப் பிறர்க்கு
    பக்குவமாய்ச் சொல்வதில்-நீ
    பண்பின் சாயல்

    மாற்றான் பார்வையைப்
    மட்டுப்படுத்தவும்
    கயவர் நோக்கத்தைக்
    கட்டுப்படுத்தவும்
    ஹிஜாபுக்குள் குளிர் நிலவாய்
    நீ
    அழகின் சாயல்

    மெத்தென்ற நடையிலும்
    கத்தாத குரலிலும்
    கண்ணியத்தின் சாயல்

    வாழ்வியலில் நீ
    வான்மறை சொல்லும்
    மாதுவின் சாயல்

    வாதிப்பதில் நீ
    வாக்குகள் மாறாத
    நீதியின் சாயல்

    ஈடேற்றம் வேண்டி
    இறைஞ்சிடும் மகளே
    இரவிலும் பகலிலும்
    இயல்பாய் வாய்க்கட்டும்
    இஸ்லாத்தின்
    ஒழுங்கியல் சாயல்

    உலக மகளிர்க்கு நீ
    உதாரணமாயிரு
    உண்மை மார்க்கத்தின்
    எல்லா சாயல்களும்
    இருக்கட்டும் உன்னில்

    ஓரிறைக் கொள்கையில்
    தியாகங்கள் செய்த
    நபித் தோழியர் சாயலில்
    தொடரட்டும் பயணம்

    மகளிர்க்கு மார்க்கத்தை
    மறவாமல் எத்தி வை
    இஸ்லாத்தின் சாயலில்
    இலங்கட்டும் இவ்வையகம்!

    – சபீர்
    http://www.satyamargam.com/articles/arts/lyrics/2144-father-and-daughter.html

  • அவன் ஒரு தியாகியா !?

    foreign jobஅயல் நாட்டு மோகம் யாரைத்தான் விட்டுவைத்தது. அதற்க்கு நம் நாட்டவர்களில் அநேகமானவர்கள் பலிகடாவாக ஆகியுள்ளோம்.எத்தனை விதமாக எடுத்துச்சொன்னாலும் எள்ளளவும் நம்மவர்கள் அதன் பின் விளைவுகளைப்பற்றி நினைப்பதில்லை.. காரணம் மோகத்தின் உச்சியில் மூற்ச்சையாகிப்போன நம் வெளிநாட்டு ஆசை. அதை சுவாசித்தாக வேண்டும் என்ற ஏக்கப்பெரு மூச்சு நிற்காத வரை என்றும் ஓயாது இந்த அந்நிய நாட்டு மோகம்.

    இவ்வுலக வாழ்க்கையை வளமாக்கி வாழும் நோக்கில் காசை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு வயோதிகர்களாய் தாயகம் வந்து தனது இளமையை இழந்த ஏக்கத்தில் நோய்வாய்ப்பட்டு மறிக்கும் பாவப்பட்ட மனிதன் என்றுதான் சொல்ல முடியும். அத்தகையோர் ஒரு விதத்தில் தியாகி என்று சொன்னால் அது மிகை அல்ல என நான் நினைக்கிறேன்.

    அயல் நாட்டு அனுபவங்களை அளவிட்டுச்சொல்ல முடியாது. உலகின் அநேக நாட்டவர்கள் ஒன்று கூடும் சங்கமமாக திகழ்கிறது இந்த அயல் நாடு.! ஆகவே அதிக அனுபவம் இந்த அயல் நாட்டில் தான் கிடைக்கப்பெறுகிறது. கைநாட்டுக்காரர்களெல்லாம் கம்பியூட்டருடன் விளையாடக் கற்றுக்கொடுக்கும் பூமி இது. இவ்வாழ்வின் ஒருபகுதி இன்பமாய் இருந்தாலும் இன்னொரு பகுதி துயரமானதே.! இதனால் ஏற்ப்பட்ட இளமைகால இழப்பை எத்தனை கோடியை கொட்டிக்கொடுத்தாலும் திரும்பபெற முடியாது. ஆனால் அதன் அருமை அறியாது சுருக்கி வாழத்தெரியாமல் ஆடம்பரமும், அடுக்கி வைத்த சீட்டுக்கட்டைப்போல் குடும்பப்பிரச்சனைகளையும் தலையில் அடுக்காய் சுமந்து கொண்டு நமது வாழ்க்கையை நாமே தொலைத்துக் கொள்கிறோம் என்பதே மெய்யாகும்.

  • எந்த வேலையானாலும் பரவாயில்லை நான் வெளிநாட்டிற்க்குப் போகிறேன், என்று பெருமைப்பட்டுக்கொண்டு வேலைவாய்ப்புடன் வெளிநாடு செல்லும் கட்டிடத் தொழிலாளிகள், துப்பரவுத்தொழிலாளிகள் மற்றும் கிளினிங் கம்பெனிகளில் வேலைசெய்ய வருபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியாவையாக உள்ளது. நான் கேள்விப்பட்டவரை இவர்களது சம்பளம் குறைவாக இருப்பது மட்டுமல்லாது ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டை என்று சொல்லுமளவுக்கு தங்குமிடம் சாப்பாடு என்று அந்தந்தக் கம்பெனியர்கள் கொடுத்தாலும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் உருவுகிற மெழுகுவர்த்தியாகத்தான் தனது வாழ்நாளை உருக்கிக் கழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இதைப்பற்றி சொல்வதானால் இப்பகுதி போதாது. புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும்.

    அடுத்து சுதந்திரமாய் வேலைதேடிப்பெற்று கூட்டாக ரூம் எடுத்து தங்கியிருக்கும் இவர்களது நிலை சற்று வித்தியாசமானவை. அயல்நாட்டு வாழ்க்கையில் பெறப்படும் அனுபவத்தில் பெரும்பங்கை வசிப்பது இந்த ”பேச்சுலர் அக்கமன்டேசன்” வாழ்க்கையேயாகும்.!. அதைப்பற்றி கொஞ்சம் இங்கே பகிர்ந்து கொள்வோம். அயல் நாட்டில் பணிபுரியும் அனைவரும் அறிந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு துயரமான, வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவ வாழ்க்கை தான் இந்த பேச்சுலர் அக்கமன்டேசன். இங்கு பெரும்பாலும் அவரவர்கள் உறவுக்காரர்களாகவும், ஊர்க்காரர்களாகவும் இல்லையெனில் அவரவர் மொழிக்காரர்களாகவும் ஒன்று கூடி வசிப்பதையே விரும்புகிறார்கள். தாம் தமது குடும்பங்களையும் உறவுகளையும் பிரிந்து வந்தவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலாக இப்படி ஒன்றாக நம் சொந்தபந்தங்களுடனும் ஊர்க்காரர்களுடனும் வசிக்கிறோம் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் இவ்வாழ்க்கையை விட மோசமானதொரு தியாக வாழ்க்கை எதுவுமிருந்து விட முடியாது.

    பத்துக்கு பதினாறு வரை நீள அகலம் கொண்ட ரூமில் குறைந்தது எட்டு முதல் பத்து நபர்கள் வரை ஈரடுக்கு கட்டிலில் படுத்தெழுந்து பல மகிழ்ச்சிகளையும் இன்னல்களையும் மாறி மாறி சந்தித்து காலத்தை கழித்து வருகின்றனர். இங்கு பிரதான எதிரியாக மூட்டைப்பூச்சி முதலிடம் வகிக்கிறது..மூட்டைப்பூச்சி இல்லாத ரூமே இல்லையென்று சொல்லுமளவுக்கு குறைவில்லாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது. நாம் கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டு சேமிக்கும் இரத்தத்தை நாம் கண் அயர்ந்ததும் அது கண்விழித்து எடுத்துக்கொண்டு நம்மோடு இணைந்து நிறைந்து வாழ்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

    அடுத்துச்சொல்வதானால் பழக்கவழக்களின் தன்மை நாம் ஊரில் இருந்தகாலத்தில் பழகிய நமது நட்புக்கள் மற்றும் சொந்த பந்தங்களின் குணமும்,எண்ணமும்,பழக்கவழக்கமும், சுத்தமும், சுயரூபமும் ஆச்சரியப்படுமளவுக்கு இவ்வாழ்க்கையில் தான் அவரவர்கள் எப்படிப்பட்டவர்களென முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

    இவ்வாழ்க்கையில் நல்ல நேர்த்தியான நட்பு பலமிழந்து தற்க்காலிகமாக பழகும் போலி நட்பே முழுபலத்துடன் இருந்து வருகிறது.ஊரில் இருந்த காலத்தில் ஏற்றத்தாழ்வு என்றால் என்னவென்று தெரியாமல் பழகிய பழக்கமெல்லாம் இவ்வாழ்வில் எள்ளளவும் எதிர்பார்க்கமுடியாது அவரவர் பணிபுரியும் பதவியும், பெறப்படும் சம்பளம் [(வருமானம்.?] செல்வாக்கு இதனை அடித்தளமாக கொண்டே மனிதர்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

    இன்ன பல மன உளைச்சலிலும், மன விரக்தியிலும் ஒவ்வொரு நாள் பொழுதும் ஓடை நீராய் கரைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.பணிச்சுமை, கடன் சுமை, கடமைச்சுமை அலுவலக கெடுபிடி, குடும்பத்தை பிரிந்து தனிமையின் ஏக்கம், உடல் நிலையின் ஒத்துழையாமை, சுயதேவைகள், சொல்லமுடியா துன்பங்கள் எண்ணிலடங்கா இன்னபல இன்னல்களுக்கு மத்தியில் இவ்வாழ்க்கையை மேற்கொண்டிருப்பது இது ஒரு வகையில் பெரும் தியாகச்செயலே !

    இப்படிப்பல இன்னல்களுக்கு மத்தியில் குடும்பத்தை காப்பாற்றுவதற்க்ககவும், பெற்றோர்களின் பிரச்சனைகளை போக்குவதற்காகவும், மனைவி மக்களை கஷ்டப்படாமல் சந்தோசமாக வைத்துக்கொள்வதற்க்ககவும், சகோதரிமார்களை மணம் முடித்துக்கொடுப்பதற்க்காகவும் சகோதரர்களுக்கு உதவுவதற்காகவும், தன் பிள்ளைகளை உயர்படிப்பு படிக்கவைப்பதற்க்காகவும் தனது உன்னத வாழ்நாளை இந்த அயல் நாட்டில் கழித்து அர்ப்பணித்து சுக இன்ப துன்பங்களை முழுமையாய் அனுபவிக்காது முதுமையடைந்து மரணத்தை அணைக்கும் இம்மனிதனும் ஒரு வகையில்…

    அவனும் ஒரு தியாகி தானே !?

    51mmx51mmஅதிரை மெய்சா
    Source : http://nijampage.blogspot.ae/2013/07/blog-post_780.html?utm_source=BP_recent

  • தேடல்கள் .. ..

    imagescaf024u3தேடல்கள் புதிதல்ல..

    வாழ்க்கையே நமக்கு
    வரிசையாய் தேடல்கள்தானே?

    இரையைத்தேடியும்
    இறையைத் தேடியும்
    இலக்கைத் தேடியும்
    இலக்கங்களைத் தேடியும்
    கலைந்து போகும் காலங்கள்

    பிறந்த பொழுதிலிருந்து
    தேடத் தொடங்குகிறோம்

    தவிக்கின்ற பசிக்கு
    தாயின் மார்புக்குள்
    முகம் புதைத்து
    மாய்ந்து மாய்ந்து
    சேயொன்று
    வாய் குவித்து
    எதையோ தேடும் .. ..

    தேடல் நாடகம்
    அங்குதான் தொடக்கம்

    மரணப் படுக்கையிலே
    மல்லாந்து படுத்திருக்கும்
    தகப்பனின் விழிகள் ..

    சாகும் தருவாயில்
    தேகம் உயிர்ப் பிரிய
    கண்கள் வெளிர
    கைகள் தளர
    ஓடிக் களைத்திட்ட
    உடற் சூடு தணிய
    நாடி நரம்புகள்
    ஆடி ஒடுங்கிட
    மூச்சுக் காற்று
    முனகலுடன்
    பிரியமானவர்களை கண்டு
    பிரியாவிடை கூறுதற்கு
    கண்கள் அலைபாயும் .. ..

    அது – ஒரு மனிதனின்
    இறுதித் தேடல்

  • தேடலுக்கு எல்லை உண்டா?
    என்றால் இல்லை ..
    தேடலுக்கு வானமே எல்லை

    தேடலுக்கு வயது உண்டா?
    என்றால் இல்லை
    தேடலுக்கு மரணமே எல்லை

    வீடு போ.. போ.. என
    விடை பகர
    காடு வா.. வா .. என்
    கரம் கொடுக்க
    மண்ணறைக்குள்
    மறையும் வரை
    தொடரும் தேடல்

    திருவிழா நெரிசலில்
    திசைமாறிய சிறுவர்களை
    வலைபோட்டு தேடும்
    ஒலிபெருக்கி அறிவிப்பு
    மட்டுமா தேடல்?

    திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
    தேடித் தேடி அலைந்தேனே என்று
    கண்ணபிரானைத் தேடி
    கவிதையிலே பொருள் வடித்த
    கவிராஜன் பாரதியின்
    தேடலும் ஒரு தேடல்

    பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
    ராஜ்ஜியத்தை ஆள்பவனை

    இருக்குமிடத்தை விட்டு
    இல்லாத இடம்தேடி
    எங்கேயோ அலைகின்றாய்
    ஞானத் தங்கமே என்று

    பரம்பொருளின் தேடலை
    பாட்டாக வடித்தானே
    ஒரு ஞானக் கிறுக்கன்
    அவன் தேடலும் ஒரு தேடல்

    தேடும் நேயர் நெஞ்சங்களில்
    குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும்
    உணவளிப்பவன் என

    பாறைக்குள் ஒளிந்திருக்கும்
    தேரைக்கும்
    பக்குவமாய் இரையை
    பகிர்ந்தளித்தானே அந்த
    முக்காலமும்அறிந்த
    முழுமுதற் அரசன்

    அவனைத் தேடுதல்
    அது ஆன்மீகத் தேடல்

    முகவரிகள் தொலைந்தனவோ
    முகிலினங்கள் அலைகிறதோ
    முகவரிகள் தொலைந்ததினால்
    அது மழையோ? – இது ஒரு
    தீந்தமிழ்க் கவிஞனின்
    தேடல் கற்பனையின்
    ஊடகப் படிமம்

    தேடலும் ஒரு சுகம்

    காதலாகட்டும்
    கைகளின் சில்மிஷமாகட்டும்
    கவிதையில் மறைந்திருக்கும்
    கருத்தாழம் ஆகட்டும்

    தேடலும் ஒரு சுகம்

    ஆய கலைகள்
    அறுபத்தி நான்கிலும்
    தேடாத சுகங்கள்
    ஆயிரம் உண்டு

    எல்லா தேடலும் சுகமா?
    என்றால் இல்லை …

    சில தேடல்கள்
    சில்லென்று ரத்தத்தை
    உறைய வைக்கும் …
    உள்ளத்தை உருக வைக்கும்
    நெஞ்சை பிழிய வைக்கும்..
    இதயத்தை நெகிழ வைக்கும்

    புல்புல்கள் இசைக்கும்
    காஷ்மீர மண்ணில்

    மனதைக் கல்லாக்கி
    மடிந்த உடல்களை
    இடிந்த இடிபாடுகளiல்
    ஒடிந்த கை கால்களோடு
    விடிய விடிய ஒவ்வொன்றாய்
    உருவி எடுத்தோமே – அது

    உலகத்தை அழ வைத்த தேடல்

    இறுதிப் பயணமென அறியாமல்
    இரயில் பயணம் செய்தவரை

    ஆந்திர மண்ணில்
    ஆற்றில் தத்தளித்த
    அகோர பிணங்களை
    அலசித் தேடினோமே – அது

    அனைவரையும்
    அதிர வைத்த தேடல்

    கிளிஞ்சல்களைத் தேடிய
    கடற்கரை மணலில்
    கிழிந்துப் போன
    மனித உடல்களைத்
    தேடினோமே

    அது அகிலத்தையே
    அலற வைத்த தேடல்
    ஒரு சிலம்பின்
    தேடலில் பிறந்ததுதான்
    சிலப்பதிகாரம்

    ஒரு சீதையின்
    தேடலில் பிறந்ததுதான்
    இராமாயணம்

    ஒரு கணையாழியின் தேடலில்
    காப்பியமானதுதான் சாகுந்தலம்

    லைலாவைத் தேடிய
    மஜ்னுவின் தேடல்
    காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
    காப்பியத் தேடல்

    ஞானத்தின் தேடலில்தான்
    ஒரு சித்தார்த்தன்
    புத்தனானான்

    கலிங்கத்துப் போரில்
    குருதி படிந்த மண்ணில்
    தேடிய தேடலில்
    சாம்ராட் அசோகன்
    புத்த துறவியானான்
    வார்த்தைகளின் தேடல் கவிதை
    வர்ணங்களின் தேடல் வானவில்
    வாலிபத்தின் தேடல் காதல்
    வயிற்றுப்பசியின் தேடலே
    வாழ்க்கையின் ஓட்டம்

    யமுனை நதி தீரத்தில்
    ஒரு சலவைக்கல் சங்கீதம்

    அது மும்தாஜின் நினைவால் எழுந்த
    ஒரு முகலாய அரசனின் தேடல்

    காதல் தோல்வியென்றும்
    கடன் தோல்வியென்றும்
    காரணங்கள் காட்டி

    மரணத்தின் தேடலில்
    மடிந்த கோழைகள்தான்
    எத்தனை எத்தனை?

    ஜீவியும், விஜியும், சில்க்கும்
    ஷோபாவும், மோனலும்

    தவறான தேடலின்
    சரியான உதாரணங்கள்

    எல்லோரும்
    எங்கேயோ
    எதையோ ஒன்றை
    எப்போதும் தேடுகிறோம்

    இழப்பினாலும் தேடல் வரும்
    தேவையினாலும் தேடல் வரும்

    வாழ்க்கையே தேடல்
    தேடலே வாழ்க்கை

    மண்ணைத் தேடியதில்
    கண்டது வைரம்

    கடலைத் தேடியதில்
    கிடைத்தது முத்து

    விடியல்களைத்தேடும்
    முதிர்க் கன்னிகள்

    முதியோர் இல்லத்தில்
    முடங்கிக் கொண்டு
    முழுமையான பாசத்தை தேடும்
    முதுமையுற்ற பெற்றோர்கள்

    புன்னகையை தனக்குள் தேடும்
    பொட்டிழந்த இளம் விதவைகள்

    ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
    ஒவ்வொருத்தனின் தேடல்தானே

    அரசியல்வாதிகளiடம்
    ஓழுக்கத்தை தேடுகிறோம்
    அகப்படவில்லை

    தேர்தலில்
    நியாயத்தை தேடுகிறோம்
    தென் படவில்லை

    மனிதனிடம்
    மனித நேயத்தை தேடுகிறோம்
    மருந்தளவும் கிடைக்கவில்லை

    imagesஅப்துல் கையூம்
    vapuchi@hotmail.com
    http://abdulqaiyum.wordpress.com/2008/01/18/203/#comment-200

  • எழுத்தால் போட முடியாத எடை ………கவிஞர் வாலி

    எழுத்தால் போட முடியாத எடை
    1005212_494519933960074_181621172_n
    ………கவிஞர் வாலி

    பாடம் பயில நான்

    பள்ளிவாசல் புகுந்த

    பிராயந்தொட்டு

    தொழுகை புரிய

    பள்ளிவாசல் புகுவாரோடு

    பழகி நின்றவன்!

    அவர்களது அன்பை

    ஆரா அமுதமாய்

    தின்றவன் !

    என் ஒவ்வொரு பருவத்திலும்

    எனக்கு

    ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்

    இஸ்லாமிய இனத்தவர்

    அவரெலாம் – தண்ணீர் கலவா

    தாய்ப்பால் மனத்தவர் !

  • இன்றைய என் ஏற்றம்

    அவர்களிட்ட பிச்சை

    இதைச் சொல்ல

    எனக்கில்லை லஜ்ஜை !

    எல்லா சமயமும்

    எல்லாச்சமயமும்

    பேசுவது அன்பு

    பேணுவது அறம்

    இதை ஒர்ந்தார்க்கு

    இயல்பாகக் கைவரும்

    சமயப் பொறை எனும்

    இமயப் பொறை !

    இந்தப் பொறை இருப்பின்

    இச்சமயம்

    அச்சமயம் என

    எச்சமயமாயினும்

    எவரும்

    அச்சமின்றி வாழலாம்

    என்பதை உணர்ந்து

    வாழ்ந்திடும் மன்பதை !

    கவிவேந்தர் மு.மேத்தா

    காவியமாய் வரைந்த

    நபிகளார் வரலாற்றை

    வரிவிடாமல் படித்தவன்

    படித்து –

    பரவசத்தில்

    புளகாங்கிதம் எய்தி

    விழிப்புனலை வடித்தவன் !

    அருளார்ந்த

    அத்தனும் அன்னையுமான

    அப்துல்லாவும் ஆமினாவும்

    இருளார்ந்த உலகிற்கு

    ஓர்

    இரவியை ஈந்தனர்

    அங்கனம் ஈர்ந்ததால்

    அவர்கள் மரித்த பின்னும்

    மக்கள் மனங்களில் மீந்தனர் !

    அண்ணலார் அவர்கள்

    என்பு தோல் கொண்டு

    எழுந்து வந்த

    அன்புரு !

    மறம் தன்னை

    புறம் காண வந்த

    அறம் !

    காலணி அணிந்து

    தர்மம் நடந்த

    நூலணி !

    மனிதம் என்னும்

    வடிவில் வந்த

    புனிதம் !

    பயிர் உய்ய பெய்யும்

    வான் மழைபோல்

    ஞாலத்தின்

    உயிர் உய்யப் பெய்த

    ஞான மழை !

    உலகு வணங்கும்

    உயரிய விழுமங்களின்

    மொத்தக் குழுமம்

    தகிக்கும் பாலையில்

    தவிக்கும் வேர்களுக்கான

    தண்ணீர்த் தடாகம் !

    கதியற்றோர் கண்ணீரைத்

    துடைக்க வந்த

    பூந்துவாலை !

    விட்டொழிக்க வேண்டிய

    வெற்றுச் சடங்குகளை

    சுட்டெரிக்க வந்த

    செந்தணல் சுவாலை !

    எவ்வுயிரும்

    ஏற்று நிற்கும்

    செவ்வுயிர் !

    சுருங்கச் சொன்னால்

    அண்ணல் நபிகளார் அவர்கள்

    இவ்வுலகிற்கு

    இறைவன் தந்த கொடை !

    தூரிகையால்

    தீட்ட முடியாத ஓவியம் !

    யாப்பதிகாரங்களால்

    காட்ட முடியாத காவியம் !

    வார்த்தைகளால்

    சுட்ட முடியாதவர்

    வானம் போல்

    எட்ட முடியாதவர் !

    பகை புகுந்த நெஞ்சத்தார்

    பார்வையில் படாமல்

    குகை புகுந்த குணாளரை

    கதீஜா மணாளரை

    காத்து நின்றது – ஒரு

    கருஞ்சிலந்தி ! அது –

    வாய் நூலால்

    குகைக்கு

    வாய்ப் பூட்டுப் போட்ட

    அருஞ்சிலந்தி !

    ஆறறிவிடமிருந்து – ஒரு

    பேரறிவை

    ஆன்றறிவில்லாத ஒரு

    மூன்றறிவுக் காத்தது

    அதனால் அதற்கு

    அழியாப் புகழ் பூத்தது !

    நபிகளார் பற்றி

    நாளெல்லாம் சொல்லலாம்

    சொல்லச் சொல்ல

    இன்னும்

    சொல்லாததாய் இருக்கும்

    சொல்லலாம் !

    நன்றி……நமது முற்றம் – மாத இதழ் – ஜூலை -2007

    தகவல் தந்தவர் Abu HaashimaAbu Haashima Vaver

  • நோன்பு கஞ்சி என்னும் அமிர்தம்!

    kanjiகொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி
    ……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்
    துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற
    ……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு
    இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்
    …….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே
    கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்
    ……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே!

    பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும் சேர்த்துப்
    …பக்குவமாய் வெட்டிவைத்துக் கொண்டவுடன் பின்னர்ப்
    பிச்சுப்போ டுவதற்கு மணந்தருமாம் மல்லிக்கீ ரையையும்
    …பிரித்துவைத்துக் கொண்டவுடன் பாத்திரத்தை அடுப்பில்
    உச்சமிலாச் சூட்டினிலே காயவைத்துப் பின்னர்
    ….ஊற்றுங்கள் எண்ணெயையும் அப்பாத்தி ரத்தில்
    உச்சமாய்ச் சூடேறி கொதிக்கும் எண்ணெய்
    …உடனிடுக வெங்காயம் பச்சைநிற மிளகாய்!

  • வாசனைக்கூ ட்டுமேலம் கிராம்புடன் பட்டை
    ..வகையறாவும் இஞ்சிபூண்டு விழுதையையும் சேர்த்து
    ஓசையுடன் எண்ணெயிலே தாளிக்கும் வேளை
    …ஓரமாய் நிற்கின்ற தக்காளி சேர்த்து
    மேசையிலே காத்திருக்கும் பட்டாணி கேரட்
    …மெதுவாகக் கொட்டுங்கள் எண்ணெயின் சூட்டில்
    வாசனையும் நாசியையும் துளைக்கின்ற வரைக்கும்
    ..வாணலியில் கரண்டியினால் துடுப்பைப்போல் துழாவு!

    ஆட்டிறைச்சிக் கழுவியதைத் தேவைக்குக் கணக்காய்
    …அடுப்பிலிருக் கின்றஎண்ணெய்க் கொதியலில் கலந்து
    போட்டுவிட்டப் பின்னர்தான் ஊறியுள்ள கலவை
    …பருப்புவெந்த யத்துடனே அரிசியையும் கொட்டி
    தேட்டமுடன் வண்ணம்சேர்; அதற்காக ஒற்றைத்
    …..தேக்கரண்டி அளவுக்கு “மசாலாவின்” பொடியை
    போட்டவுடன் தண்ணீரைப் பாத்திரத்தின் பாதி
    ….பரப்பளவில் நிற்குமாறு ஊற்றியதும் மூடு!

    ஒருகொதியில் புகைமண்டி வருகின்ற வேளை
    …ஓரெலுமிச் சைப்பழத்தின் சாற்றையையும் பிழிந்து
    ஒருமுறையில் கிண்டியதும் பாத்திரத்தை மூடு
    …ஒருகுவளைத் தேங்காயின் பாலெடுத்துக் கொட்டு
    மறுமுறையில் இன்னும்வே கமாகவே துழாவு
    …மறுபடியும் தண்ணீரும் குறைவாகிப் போனால்
    மறுகொதியும் வருமளவுத் தண்ணீரை ஊற்று!

    மணக்குமல்லிக் கீரையிலை மேற்பரப்பில் கொட்டு
    ….மயக்கும்வா சனையுடனே புகைமண்டிக் காட்டும்
    கணக்காகத் தண்ணீரும் கலந்திட்டால் நோன்பு
    …கஞ்சியென்னும் அமிர்தமும் சொல்லிடுமே மாண்பு
    பிணக்கின்றிச் சுவைகூட்ட உப்பையும் அளந்து
    ….பிரியமுடன் இட்டுக்கொள்; மறவாமல் கலந்து
    சுணங்காமல் அடுப்பின்கண் சூட்டையும் குறைத்தால்
    …சுவைகுன்றா நோன்புகஞ்சி ஆயத்தமாகும் நிறைவாய்


    kalamஅபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

    “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
    அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
    வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
    மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

  • நாளை மறுநாள் நீ மடியப்போகும் நாள்

    021தனக்குள் தானே
    குழிதோண்டிக்கொண்டு
    கொத்துக் கொத்தாக
    உயிர்களைப் புதைத்து
    வெட்டியான் வேலையையும்
    சிரத்தையாய்ச் செய்து முடித்தது
    பூமி

    அந்த நிமிடம்…

    ஒரு மழலை
    தன் முதல் அழுகையை
    உலகுக்கு வெளியிட்டுக்
    கொண்டிருந்திருக்கலாம்

    ஒரு முதுமை
    கண்விழிப்போமா என்ற
    நிச்சயமின்மையில்
    உறங்கிக்
    கொண்டிருந்திருக்கலாம்

    ஓர் இளமை
    காதலியின் பனிமடியில்
    உயிர் மறந்து
    மயங்கிக்
    கொண்டிருந்திருக்கலாம்

  • ஒரு நடுத்தரம்
    பிழிந்தெடுக்கும்
    பிரிவுத் துயரால்
    பரிதவித்துக்
    கொண்டிருந்திருக்கலாம்

    ஒரு கைதி
    தலைமறைவாய்
    குகையொன்றில்
    வெந்து
    கொண்டிருந்திருக்கலாம்

    ஒரு துரோகி
    நாடுகளை ஏப்பம்விட
    திட்டம்தீட்டிக்
    கொண்டிருந்திருக்கலாம்

    பணம் இனம் மொழி மதம்
    நாடு நிலம் வீடு விருப்பம்
    இன்னபிற காரணங்களால்
    மனிதர்களை மனிதர்களே
    மென்று தின்னும் மரண விருந்துகள்
    நீக்கமற நிறைந்து எங்கும்
    நடந்து
    கொண்டிருந்திருக்கலாம்

    நாளை மறுநாள் நீ
    மடியப்போகும் நாளென்று
    இன்றே அறிவித்துவிட்டால்
    சாவு பயம் பிடித்தே
    மனிதன் செத்துப்போவானோ
    அல்லது
    இன்றைக்குச் சாவில்லை என்றே
    இன்னும் ஆட்டம் காட்டுவானோ

    நெற்றிப் பத்திரத்தில்
    மர்மமாய்க் குத்தப்பட்டிருக்கும்
    மரண முத்திரையை
    அறிந்தவனுக்கு அப்போதுதான் சாவு
    அறியாதவனுக்கோ எப்போதும் சாவு

    மறுநொடி மரணம் என்றால்
    பயத்தைவிடுத்து வேறு
    எதையெல்லாம் செய்வீர்களோ
    அதையெல்லாம்
    வாழும் அத்தனை நொடிகளிலும்
    செய்யுங்கள் மனிதர்களே

    சாவுக்குச் சொந்தமான உங்களை
    வாழ்வுக்குச் சொந்தமாக்கிக்
    கொள்ளுங்கள்

    163084_181057961919385_7644604_nஅன்புடன் புகாரி
    Source : http://anbudanbuhari.blogspot.in/2008/01/blog-post_4558.html

  • நானும், தாத்தாவும் வேப்பமரமும்.

    Vembuமேற்குப் பக்க
    வேப்பமர ழலில் தான்
    தாத்தாவின்
    மாலை நேர நாற்காலி,

    எனக்கோ,
    மின்விசிறிக் காற்று
    தலையைக் கலைக்க,
    தொலைக்காட்சி வெயிலில்.

    வேப்ப மரக் குச்சி தான்
    தாத்தாவின் பல்லுக்கு,
    எனக்கோ
    சுகாதாரத்தையும்
    சோதனைக் கூடத்தில்
    தயாரித்தால் தான் ஆகும்.

    தாத்தாவின்
    மூட்டு வலிச் சோர்வுக்கான
    மூலிகை எண்ணையை
    வேப்ப மரம் தான் தரும்,
    எனக்கு
    அரசு அனுமதி பெற்ற
    அயோடெக்ஸ் அனுமதி தான்
    மூட்டு வலியை
    விரட்டி வைக்கும்.

    தாத்தாவுக்கு
    சுகாதாரமில்லாத
    குளத்து நீர் குளியல் தான்,
    எனக்கோ
    சுதந்திரமான
    உள்ளறைக் குளியல்.

  • கலோரிகளைப் பார்க்காமல்
    நான்
    உண்பதில்லை,
    தாத்தாவுக்கு
    கலோரி என்ன என்பதே
    தெரிந்ததில்லை.

    இருந்தாலும்,
    தாத்தா
    எழுபது வயதிலும் பனையேறினார்,
    நான்
    இப்போதே படியேறத்
    தடுமாறுகிறேன்.

    aJoseph Xavier Dasaian

    (சேவியர் )

  • ஞானியும் தேவதையும்

    ஒரு தோல்வியைப் போல்
    என்னைக் கேள்வி கேட்கும்
    ஞானி வேறொன்றில்லை

    நல்ல வெற்றியைப் போல்
    எனக்குப் பதில் சொல்லும்
    தேவதையும் வேறொன்றில்லை

    சின்னச்சின்னத் தோல்விகளும்
    மனதில் பெரியப்பெரிய கேள்விகள்

    விடைதேடி விடைதேடி
    இறுகிப்போன இதயம்
    வெற்றி வந்து வாழ்த்துச் சொல்ல
    வான்நீலம் கிழியக்கிழிய
    சிறகடித்துப் பறக்கிறது

  • எத்தனையோ அறிஞர்கள்
    எப்படியெல்லாமோ கேள்வி கேட்க
    எதுவும் சரியாய்ச் சென்றதில்லை
    செவிகளுக்குள்

    ஆனால் தோல்வி வந்து
    ஒரு வினாத் தாண்டவமாட
    மனதின் அத்தனைக் கண்களும்
    மொத்தமாய் விரிந்து கொள்கின்றன
    அதிசயமாய்

    ஆயிரம் கருணை விரல்கள்
    ஆழ்மனப் புண்களில்
    அமுதவருடல் கொடுத்தாலும்
    ஒரு வெற்றி வந்து
    விருந்து படைத்தாலன்றி
    ஆறுதல் பூரணமாவதில்லை

    163084_181057961919385_7644604_nஅன்புடன் புகாரி

    http://anbudanbuhari.blogspot.in/2008/02/blog-post_7417.html