விவசாயிகளின் போராட்டம் …

விவசாயிகளின் போராட்டம் …

வாரங்கள் நான்காய்
சாதனை விவசாயிகளின்
வீரங்கள் நிறைந்த
வேதனை போராட்டங்கள்
தொடருது தில்லியிலே ….
விதைத்து சாகுபடி
செய்திடும் விவசாயிகளை
வதைத்து சாகும்படி
அறிவுறுத்தும் நடுவணரசு …. Continue reading “விவசாயிகளின் போராட்டம் …”

மொழிமின் (அத்தியாயம் – 2)

social-mediasஎன் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு நல்ல பண்பை, குணத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டிவிடுவார்.
புகழாரம் இருக்காது, நம்மைக் குளிர்வித்து அதில் அவருக்கு ஆதாயம் தேடும் எந்த நோக்கமும் இருக்காது. பிரதியுபகாரம் எதுவும் எதிர்பாராத நாலு நல்ல வார்த்தைகள். அவ்வளவுதான். Continue reading “மொழிமின் (அத்தியாயம் – 2)”

மொழிமின் (அத்தியாயம் – 1)

communicationதகவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று பேசி காதல் வளர்ப்பதிலிருந்து போர் மூட்டி குண்டு போடுவதுவரை தகவல் தொடர்பு பிரமாண்ட சக்தி வாய்ந்த தொழில் நுட்பம்.
கணவன்-மனைவி, உறவு-நட்பு, வீடு-நாடு, வேட்பாளர்-வாக்காளர் என்று அனைவரும்-அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதற்குத் தகவல் தொடர்பு அவசியம். ‘அது என்ன தகவல் தொடர்பு?’ என்று அவசரப்படுபவர்களுக்குச் சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ கேட்க வேண்டும்’ என்று பாட்டு பாடலாம். ஆனால் அவ்வளவு தானா அது? Continue reading “மொழிமின் (அத்தியாயம் – 1)”

திருத்தங்கள் தேவைப்படும் தேர்தல் சட்டம்

* Shahjahan R
கடந்த ஆண்டு நான்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் எழுகின்ற பிரச்சினைகள் பலவும் இந்தத் தேர்தலின்போதும் எழுந்தன, சில பிரச்சினைகள் முடிந்து விட்டன, சில அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் பின்னணியில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் எந்த அளவுக்கு ஆற்றல் கொண்டவையாய் உள்ளன, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமாய் இருக்கிறது, தேவைப்படும் மாற்றங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.
தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வரும் தன்னாட்சி அமைப்பாகும். நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், குடியரசுத் தலைமை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் கொண்ட உச்ச அமைப்பு அது. குடியரசுத் தலைவருக்கும்கூட பதிலளிக்கும் கட்டாயம் அதற்குக் கிடையாது. ஒரு தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் நீக்க முடியும். தேர்தல் நேரத்தில் தேர்தல் தொடர்பான எல்லா அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். தேர்தல் முடிந்த பிறகே நீதிமன்றத்தின் கதவைத் தட்ட முடியும். Continue reading “திருத்தங்கள் தேவைப்படும் தேர்தல் சட்டம்”

சாளரத்தில் பூத்திருக்கும் பூ ….!

ராஜா வாவுபிள்ளை

சாந்தமாய் பூத்திருக்கும்
ஆதவனை பார்த்திருக்கும்
மன்னவன் வரும்வரை காத்திருக்கும்

கண்கள் படபடக்கும்
இதழ்கள் விரிந்திருக்கும்
ஆசை கொண்டு ஆழ்ந்திருக்கும் Continue reading “சாளரத்தில் பூத்திருக்கும் பூ ….!”

ஏங்க…

story final
“ஏங்க….”

அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு…” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?”

“உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள்.

நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு. Continue reading “ஏங்க…”

தோல்விகளைக் கொண்டாடு

தோல்விகளைக் கொண்டாடு
*
ஒரு வெற்றி என்பது
பல தோல்விகளால் ஆனது
நண்பா
தோல்விகளின் சுமைகளைத்
தூக்கித் தூக்கி
தோள்வலிமை உயர்த்தி உயர்த்தி
ஒரு நாள் நீ உன்
வெற்றியை ஏந்தி நிற்பாய்
ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றி கிடைக்கவில்லை
என்று நீ புலம்புவது அறிவீனம்
ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றியின் ஒரு பகுதி
உனக்குக் கிடைக்கிறது என்பதால்
உண்மையில்
நீ உன் தோல்விகளைக்
கொண்டாடவே வேண்டும் Continue reading “தோல்விகளைக் கொண்டாடு”