RSS

Monthly Archives: June 2013

முடிந்தால் என்னை பிடியுங்கள் CATCH ME IF YOU CAN

தம்மாத்தூண்டு நாடுதான். உலக வரைபடத்தில் கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மக்கள் தொகையே மொத்தமாக ஒன்றரை கோடிதான். ஆனாலும் அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. முந்தாநாள் கியூபா, நேற்று வெனிசூலா. இன்று ஈக்குவேடார். அமெரிக்காவின் காலுக்கு கீழே அமர்ந்திருக்கும் இந்த தென்னமெரிக்க குட்டி நாடுகள் அமெரிக்காவுக்கு குழிபறித்துக் கொண்டிருப்பதே வாடிக்கை ஆகிவிட்டது.

edwar-snowdenயானையைப் பார்த்து எலி சவால் விடும் கதையை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முன்பாக எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞரைப் பற்றி நாம் மேலோட்டமாக தெரிந்துக் கொள்வது அவசியம். முப்பதே வயதுதான். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர். சி.ஐ.ஏ.,வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை ஊடகங்களுக்கு தந்துவிட்டார் என்று இவர்மீது குற்றச்சாட்டு. அரசுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பொதுவாகவே இவர் அமெரிக்க அரசு எதிர்ப்பாளராகதான் அறியப்படுகிறார்.

 • இண்டர்நெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களோடு அமெரிக்க அரசு ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் மனைவியிடம் சாட்டிங்கில் ‘சாயங்காலம் போண்டாவும், சட்னியும் டிஃபனுக்கு ரெடி பண்ணி வை’ என்று சொல்வதைக்கூட அமெரிக்க அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எளிமையாகப் புரிந்துக் கொள்வோம். வேடிக்கையாக சொன்னாலும் இதுவும்கூட சாத்தியம்தான். அப்படியெனில் மற்ற நாடுகளின் அதிமுக்கியமான ரகசியங்களின் கதி என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

  இதன் அடிப்படையில் ‘ஒட்டுமொத்தமாக மக்களின் இண்டர்நெட் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணிக்கிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் அதனிடம் இருக்கிறது’ என்பதுதான் இவர் கசியவிட்ட ரகசியம். ஏனெனில் இந்த ரகசியத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஸ்நோடனும் ஒருவர். ‘நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதை செய்யவேண்டியிருக்கிறது. வேறொன்றும் குறிப்பிடத்தக்க உள்நோக்கம் இல்லை’ என்று அமெரிக்க அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

  obamaஇதுவரை பிரச்சினை இல்லை. அடுத்து பதிலுக்கு ஸ்நோடன் சொன்னதுதான் அமெரிக்காவை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. “வளரும் நாடுகளின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா கண்காணிப்பதற்காகவே இந்த ரகசியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது” என்று ஒரு போடு போட்டார். உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிய வேண்டியதாயிற்று. இந்த ரகசியம் வெளியாகி விட்டதால் மற்ற நாடுகளுடனான நல்லுறவு பாதிக்கப்படக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. நாளையே மன்மோகன்சிங்கோடு ஒபாமா சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது “என்னோட மெயில் எல்லாத்தையும்தான் நீங்களே பார்க்குறீங்களே, உங்களுக்குத் தெரியாத ரகசியமா..” என்று நம்ம சிங் கேட்டுவிட்டால், ஒபாமாவின் பாடு என்ன ஆகும்?

  எனவேதான் ஸ்நோடனின் மீது அமெரிக்கா கொலைவெறி கொண்டிருக்கிறது. ‘சிக்கினால் பிரியாணிதான்’ என்று உணர்ந்த ஸ்நோடன் ஹாங்காங்கிற்கு அடைக்கலம் நாடி பறந்துவிட்டார். “பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்ட குற்றவாளி உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார். அவரைப் பிடித்து வையுங்கள்” என்று அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு தகவல் அனுப்பினார்கள். “இதோ உடனே தேடிப்பிடித்து கொடுக்கிறோம்” என்று அமெரிக்காவோடு பேசிக்கொண்டே, அவரை மாஸ்கோவுக்கு பாதுகாப்பாக விமானம் ஏற்றி அனுப்பி விட்டார்கள் சீனர்கள். ஸ்நோடனை ஒப்படைக்கும்படி இப்போது ரஷ்யாவிடம் கெஞ்சியும் மிரட்டியும் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோ இந்த விவகாரத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். “ஸ்நோடன் எங்கள் நாட்டுக்கு வந்தது நிஜமாகவே எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்ய மண்ணில் அவர் எந்த குற்றமும் புரியாத நிலையில் அவர் மீது நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என்று அப்பாவியாக கேட்கிறார்.

  “மக்களுடைய கருத்து சுதந்திரத்துக்காகவே உயிரைப் பணயம் வைத்து இத்தியாகத்தை செய்திருக்கிறேன்” என்று கூறும் ஸ்நோடன், கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் நாடு ஒன்றில் அடைக்கலம் பெற விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். ஐஸ்லாந்துதான் அவருடைய சாய்ஸ். ஆனால் ஐஸ்லாந்து நாட்டு சட்டவிதிகளை காரணம் காட்டி அவருக்கு அடைக்கலம் தர இயலாது என்று அந்நாடு தயங்குகிறது.

  இங்கேதான் வருகிறது ஈக்குவேடார். மாஸ்கோவில் ஸ்நோடன் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் வாயிலில் ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தின் கார் நின்றிருந்தது என்பதை அமெரிக்க ஊடகங்கள் போட்டோவோடு ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்நாட்டின் அயலகத்துறை அமைச்சர் ரிகார்டோ பாட்டினோ, ஸ்நோடன் தங்கள் நாட்டில் அடைக்கலம் பெற விண்ணப்பித்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

  ஏற்கனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் லண்டனில் இருக்கும் தங்கள் தூதரகத்தில்தான் ஈக்குவேடார் கடந்த ஓராண்டாக அடைக்கலம் தந்து வருகிறது. ஸ்வீடன் அரசாங்கம் அவரது மீது பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய அலைந்துக் கொண்டிருக்கிறது. இது டம்மி காரணம். ஒருவேளை ஸ்வீடன் அவரை கைதுசெய்தால் அமெரிக்காவிடம்தான் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பல்லாண்டு தூதரக பரிமாற்ற ரகசியங்களை தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது.

  Rafael-Correaஅமெரிக்காவின் எதிரியான அசாஞ்சேவை ஏற்கனவே பாதுகாத்துவரும் ஈக்குவேடார், இப்போது ஸ்நோடனை பாதுகாக்க நினைப்பதுதான் அமெரிக்காவுக்கு கடுப்பு. தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களை தேடித்தேடி பாதுகாப்பதால் ஈக்குவேடாரை அமெரிக்கா கடுமையாக எச்சரித்திருக்கிறது. “ஒழுங்கீனமாக நடக்கும் நாடுகளை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது” என்று ஈக்குவேடாரை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை குழுவின் தலைவரும், செனட்டருமான ராபர்ட் மெணண்டெஸ் குமுறியிருக்கிறார். இந்த எச்சரிக்கையை இடக்கையால் புறந்தள்ளியிருக்கிறது ஈக்குவேடார். அந்நாட்டின் அதிபர் ரேஃபல் கோர்ரியா “மற்ற நாடுகளின் அழுத்தங்களையும், மிரட்டல்களையும் கண்டு அஞ்சமாட்டோம்” என்று பதிலுக்கு சவால் விட்டிருக்கிறார். இச்சந்தந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர் அடுத்த சாவேஸாக உருவெடுத்துவிடுவாரோ என்று அமெரிக்காவுக்கு அச்சம்.

  இந்நிகழ்வுகளால் உலக அரசியல் மீண்டும் சூடேறிப்போய் இருக்கிறது. உலகநாடுகளை வேவு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டிருப்பதால் அமெரிக்கா இவ்விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. அமெரிக்காவின் இந்த பலகீனத்தை பயன்படுத்தி ஈக்குவேடார் தொடைதட்டி சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் நிகழ்வுகளை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கின்றன.

  yuvakrishnaஎழுதியவர் யுவகிருஷ்ணா
  Source : http://www.luckylookonline.com/2013/06/catch-me-if-you-can.html

  Advertisements
   
 • Tags: , , ,

  கேரளம் புதுமையைத் தந்ததது பிரமிக்க வைத்தது

  ama_2கேரளத்துப் பக்கம் போனேன் பிரமிக்கவில்லை
  கேரளத்து பெண்டிரைக் கண்டேன் மயங்கவில்லை

  சமஉரிமை பேசுபவர்களைக் கண்டேன் அயரவில்லை
  சமத்துவம் பேசுபவர்களைக் கண்டேன் அதிசயிக்கவில்லை

  கேரளத்து பெண்டிர் அணியும் ஆடைகளைக் கண்டேன்
  கேரளத்து பெண்டிர் அணியும் நகைகளைக் கண்டேன்
  ஒரு கையில் மணி காட்டும் கைக் கெடிகாரம்
  ஒரு கையில் ஒரே ஒரு தங்க வளையல்
  கழுத்தில் ஒரு சிறிய தங்க சங்கிலி
  அணியும் ஆடை சாதாரண ஆடை
  தினம் குளித்து தலை முடியின் நீர் காய லேசான வருடல்

  இவர்களுள் யார் செல்வந்தர் ! யார் வசதி குறைவானவர்!

  கண்டேன் ! கண்டேன் ! இங்கு சமத்துவம் கண்டேன்
  பிறருக்கு காட்டிக் கொண்டு பெருமை கொள்ளும் பொல்லாங்கு மனமில்லை

  கேரளம் புதுமையைத் தந்ததது பிரமிக்க வைத்தது

  Adaminte Makan Abu Malayalam Full movie

   

  Tags: , , , ,

  பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்

  75178_535471276479074_1717261488_n
  அ. முஹம்மது கான் பாகவி

  முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்துபோனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

  ஆனால், இன்று -நாடு பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகள் மட்டுமே திட்டமிட்டுப் பெற்றுக்கொள்கின்றனர். சிலருக்கு ஒன்றே ஒன்று போதும் என்ற எண்ணம்.

  பொருளாதார நெருக்கடி பற்றிய அச்சம், குழந்தை வளர்ப்பிலே முளைத்துள்ள அவநம்பிக்கை, வாழ்க்கையை அனுபவிக்க அதிகக் குழந்தைகள் தடையாகிவிடுவர் என்ற தவறான எண்ணம், பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள துணிவின்மை, எல்லாவற்றையும்விட உலகமயமாக்கல் பெற்றெடுத்த நுகர்வுக் கலாசாரம் முதலான பிற்போக்கு அம்சங்களே ஒற்றைக் குழந்தை நாகரிகத்திற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

 • வாரிசுகள் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாகச் சுருங்கிவிட்டதால் பெற்றோரின் மொத்தப் பாசமும் ஒன்றிரண்டு குழந்தைகள்மீது மழையாகப் பொழிகிறது. பெற்றோரின அன்பு மழையில் குழந்தைகள் குளித்து, திக்குமுக்காடுகின்றனர். செல்லமோ செல்லம். கண்டிப்பு தேவைதான்; சிறிது பாசமும் காட்டுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் உபதேசித்த நிலை மாறி, பாசம் காட்ட வேண்டியதுதான்; கொஞ்சம் கண்டிப்பும் தேவை என்று உபதேசிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

  இளைய தலைமுறை பெற்றோர்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள்; பிள்ளைகள் கேட்பதையெல்லாம் தகுதிக்கு மீறி வாங்கிக்கொடுக்கிறார்கள். ஏன்? எதற்கு? என்று கேட்பதுகூட இல்லை. அல்லது அப்படி கேட்கத் தயங்குகிறார்கள். எங்கே மகன், அல்லது மகள் நம்மை மதிக்கமாட்டார்களோ! நம்மீது கோபப்பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

  பிள்ளைகள் எங்கே போகிறார்கள்; யாருடன் பழகுகிறார்கள்; வீட்டில் சாப்பிடவோ நேரத்திற்கு உறங்கவோ வருவதில்லையே, ஏன்; ஒழுங்காகப் படிக்கிறார்களா? என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்; அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் சண்டைபோட்டு வாங்கும் பாக்கெட் மணியை என்ன செய்கிறார்கள்… என்றெல்லாம் விசாரிப்பதை, இளைய தாய் அல்லது தந்தை அநாகரிகமாகக் கருதுகின்றனர்; பிள்ளைகள் இந்த விசாரணையை அவமானமாகப் பார்க்கின்றனர்; தங்கள் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்று எண்ணுகின்றனர்.

  இன்றைய பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுவதும் கொந்தளிப்பதும் பெற்றோர்களின் இந்தக் கண்டுகொள்ளாமைக்கு ஒரு காரணம். இன்றைய புதிய தலைமுறைக்கு அறிவுரை என்றாலே நஞ்சு. ஏன் மதிப்பெண் குறைந்து போய்விட்டது என்று கேட்டுவிட்டால், தற்கொலை முயற்சி, தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. ஆசிரியர் திட்டிவிட்டால் பழிவாங்கும் வெறி. நினைத்ததை அனுபவிக்க முடியாவிட்டால், பார்ப்பவர்மீதெல்லாம் எரிச்சல். தவறான உறவுகள், நடத்தைகளைக்கூட யாரும் கண்டித்துவிடக் கூடாது என்ற இறுமாப்பு.

  முடிவு, பொறுப்பற்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. நிதானமோ விவேகமோ இல்லாத, வேகம், சுயநலம், கட்டுப்பாடற்ற போக்கு ஆகிய விரும்பத் தகாத குணங்கள் கொண்ட ஒரு படை வளர்ந்துவிட்டது. மூத்தவர்கள் இவர்களின் நிலை கண்டு அஞ்சிக்கொண்டிருக்க, இவர்களின் வாரிசுகன் எப்படியிருப்பார்களோ என்ற கலக்கம் சீர்திருத்தவாதிகளை வாட்டிக்கொண்டிருக்கிறது.

  செலவினங்கள்

  தேவைக்காகச் செலவு செய்வது ஒரு ரகம்; தகுதியை உயர்த்திக் காட்ட, நண்பர்களைத் திருப்திப்படுத்த செய்யப்படும் ஆடம்பர வீண்செலவு இன்னொரு ரகம். இன்றைய பிள்ளைகளின் செலவினங்கள் இரண்டாம் ரகம்.

  அலைபேசி, அவசரத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. அலைபேசியில் சாதாரணமானது முதல் சிறப்பம்சங்கள் நிறைந்த உயர்தரமானதுவரை தொகைக்கேற்ப பல ரகங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. அதற்காக 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பிளாக்பெர்ரிதான் வேண்டும் என்று பிள்ளைகள் அடம்பிடிக்கலாமா?

  அலைபேசியில், பேசப்பேச விநாடிக்கு விநாடி பணம் செலவாவதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அரட்டையடிப்பதற்கெல்லாம் அலைபேசியைப் பயன்படுத்திவிட்டு, மாதந்தோறும் ரூ.800க்கும் 1000க்கும் ரீசார்ஜ் செய்யப் பெற்றோரிடம் பணம் கேட்பது என்ன நியாயம்? தவறான பயன்பாடுகள் வேறு.

  வீட்டில் அறுசுவை உணவு காத்திருந்தாலும், உணவகங்களில் சாப்பிடுவதை விரும்பும் பிள்ளைகளை என்ன சொல்ல? அரும்பாடுபட்டுச் சமைத்து வைத்துவிட்டுப் பிள்ளையை எதிர்பார்த்திருக்கும் தாய்க்கு இவன் சொல்லும் பதில், நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டேன். ஏன்? என்று கேட்கக்கூடாது. கேட்டுவிட்டால் வீட்டில் ஒரே களேபரம்.

  ஹோட்டல் உணவு பணத்திற்கு மட்டுமல்ல; உடல் நலத்திற்கும் கேடு. அங்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய், பொடிகள், தரமற்ற பொருட்கள் எல்லாம் சேர்ந்து இளமையிலேயே முதுமையை உண்டாக்கிவிடும். இது தேவைதானா?

  மேற்கத்திய உணவு வகைகளெல்லாம் நம் நாட்டு சுகாதார உணவுகளுக்கு முன்னால் நிற்காது. அந்த உணவுகளால் காசுதான் கரையுமே தவிர வயிறும் நிறையாது; ஊட்டமும் கிடைக்காது. போதாக்குறைக்கு, வயிற்றுக்குக் கேடுவேறு.

  பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லாத புதுப்பழக்கம்; மேற்கத்திய காலாசாரத்திற்குத் தவறான வழியில் பிறந்த சவலைக் குழந்தை. இன்று பிள்ளைகள் தங்களின் பிறந்தநாளை வெகு விமரிசையாகக் குடும்பத்துடன் கொண்டாடுவது மட்டுமன்றி, நண்பர்களின் பிறந்த நாளுக்காகச் சக்திக்கு மீறி பரிசுப் பொருட்களை அன்பளிக்கின்றனர்.

  பரிசுப் பொருளாவது உபயோகமானதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. உயர்ரக மது பாட்டில்கள், கேமராக்கள், ஆபாச புத்தகங்கள் என மனிதனைக் கெடுக்கும் நச்சுப் பொருட்கள். பொதுவாக பிறந்தநாள், புத்தாண்டு தினம், காதலர் தினம் போன்ற களியாட்டங்களில் நண்பர்கள் ஒன்றுகூடிவிட்டாலே குடியும் கும்மாளமும்தான். இந்த அநியாயத்திற்கும் பெற்றோர் மறுக்காமல் பணம் தர வேண்டுமாம்!

  POCKET MONEY

  ‘கைச்செலவுக்கு’ (Pocket Money) என்ற பெயரில் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தரும் பணம்தான் எல்லாத் தவறுகளுக்கும் பெரும்பாலும் காரணமாகிறது. பெற்றோரின் வருவாய்க்குச் சம்பந்தமில்லாத தொகையைப் பிள்ளைகள் கேட்பதும் அதைப் பெற்றோர்கள் வழங்குவதற்காகக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் ஒரு பகுதியைச் செல்லமாக ஒதுக்குவதும் இப்போது நாகரிகமாகிவிட்டது.

  ஏதோ மாத ஊதியம் வழங்குவதைப் போன்று ஐயாயிரம், பத்தாயிரம் என்று பாக்கெட் மணி தரக்கூடிய பெற்றோர்கள், பிள்ளைகளைத் தாங்களே படுகுழியில் தள்ளுகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்போது நீங்கள் காட்டும் செல்லம், நாளை உங்கள் செல்வங்களை மீளாத் துயரத்தில் சிக்கவைத்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

  இவ்வாறு தகுதிக்கு மிஞ்சி செலவழித்துப் பழகிவிடும் பிள்ளைகள், ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லி பணம் பறிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பணம் கேட்க முடியாத நிலை ஏற்படும்போது, சொந்த வீட்டிலேயே திருட ஆரம்பித்துவிடுகிறார்கள். தெரிந்தும் இதைக் கண்டிக்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள். நூறு, இருநூறு என்று ஆரம்பிக்கும் இத்திருட்டு ஆயிரக்கணக்கை எட்டிவிடுவதுண்டு.

  பெற்றோரின் அனுமதியும் இசைவும் இன்றி வீட்டில் ஒரு ரூபாய் எடுத்தாலும் அது திருட்டுதான்; ஆயிரம் எடுத்தாலும் திருட்டுதான். சொந்த வீட்டில் குறைந்த தொகையில் தொடங்கும் திருட்டு உறவினர் வீடு, நண்பர்கள் வீடு, மாணவர் விடுதி என எல்லா இடங்களிலும் தொடர வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் முளையிலேயே இப்பழக்கத்தைக் கிள்ளி எறிய வேண்டும்.

  தீர்வுகள்

  பிள்ளைகள் புரிந்துகொள்ளாமலும் விவரமில்லாமலும் நடந்துகொள்வதற்கு ஒருவகையில் பெற்றோர்களே காரணம். சிறுவயதிலிருந்தே குழுந்தைகளுக்குச் சில ஒழுக்க நடைமுறைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

  இதனால்தான், நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருவருக்கு இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்:

  உன் பிள்ளைக்கு ஒழுக்கம் கற்பிப்பாயாக! அவனுக்கு என்ன ஒழுக்கம் சொல்லிக்கொடுத்தாய்; என்ன கல்வி கொடுத்தாய் என உன்னிடம் (மறுமையில்) விசாரிக்கப்படும். அவ்வாறே, உன் பிள்ளை உன்னிடம் எப்படி நடந்துகொண்டான்; உனக்கு என்ன நன்மை செய்தான் என்று அவனிடம் விசாரிக்கப்படும். (பைஹகீ)

  முதலில் பணத்தின் அருமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். தந்தை பிள்ளையிடம் நட்போடு பழகி, ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கத் தான் படும் பாட்டைச் சொல்லிக் காட்ட வேண்டும்; அப்பணம் வீணடிக்கப்படும்போது தனக்கு ஏற்படும் வலியைப் புரிய வைக்க வேண்டும். நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்; குழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுதான் முதல் தவறே. திட்டாமல், சபிக்காமல், பக்குவமாக, நளினமாக எடுத்துச்சொல்லும்போது எந்தப் பிள்ளையும் புரிந்துகொள்வான்.

  பணத்தைத் தேவைக்குமேல் செலவழிப்பது -அதாவது விரயம் செய்வது- எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்கிக் கூற வேண்டும். அவ்வாறே, சிக்கனத்தின் சிறப்பையும் சேமிப்பின் அவசியத்தையும் உள்ளத்தில் பதிக்க வேண்டும்.

  நல்லடியார்களின் நற்பண்பு குறித்துத் தெரிவிக்கும்போது பின்வருமாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

  அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்யமாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள்; அதற்கு இடைப்பட்ட (நடு)நிலையாகவே அ(வர்களின் செலவான)து இருக்கும். (25:67)

  மற்றொரு வசனம் இவ்வாறு கூறுகின்றது:

  உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை (இறைவன்) நேசிப்பதில்லை. (7:31)

  நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். (17:27)

  சேமிப்பின் அவசியம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  எந்த வீட்டாரிடம் பேரீச்சம்பழம் (சேமித்து) வைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பட்டினி கிடக்கமாட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

  பணம் கையாளும் முறை

  அடுத்து நிதியைக் கையாளும் முறையையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு செய்து அழித்துவிடுவது பெரிதன்று; வேண்டிய தேவைகளுக்கு மட்டுமே செலவழிப்பதும் வேண்டாதவற்றைத் தவிர்த்துவிடுவதும்தான் பெரிய சாதனை ஆகும்.

  பெருமைக்காகச் செலவழிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. நண்பர்களும் உறவினர்களும் ஆச்சரியப்படும் அளவுக்குச் செலவு செய்வதால் யாருக்கு என்ன நன்மை? வீண் பிதற்றலுக்குத்தான் இது உதவுமே தவிர, உருப்படியான எந்தப் பயனும் இதனால் விளையப்போவதில்லை. அதே நண்பர்களும் உறவினர்களும் முன்னால் போகவிட்டுப் பின்னால் என்ன விமர்சனம் செய்வார்கள், தெரியுமா? தலைக்கனம் பிடித்தவன்; ஊதாரி; உருப்படாதவன் என்றுதான் உங்களை அவர்கள் எடைபோடுவார்கள்.

  நபிமொழி ஒன்றைப் பாருங்கள்:

  உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள்; அதில் விரயமோ பெருமையோ (பகட்டோ) கலந்துவிடாமல் இருக்கும்வரை. (இப்னுமாஜா)

  இருவரின் உணவு மூவருக்குப் போதும்; மூவரின் உணவு நால்வருக்குப் போதும் (மனம் இருந்தால்). (புகாரீ)

  இந்தியாவில் நுகர்பொருள் செலவின புள்ளி விவரக் கணக்கு (2007-08) ஒன்று கூறுவதைப் பாருங்கள்:

  இந்தியர் ஒருவர் செலவழிக்கும் 100 ரூபாயில் 22 ரூபாய் மட்டுமே அத்தியாவசிய செலவாகும்; 48 ரூபாய் பகட்டுச் செலவுகள் ஆகும். கல்விக்கு ரூ. 2.60; மருத்துவம் ரூ. 5.70 செலவிடப்படுகிறதாம்; பகட்டுச் செலவுகளில் ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும் ரூ. 10.50 செலவு செய்கின்றனராம்!

  நுகர்வுக் கலாசாரம், மேலைநாடுகளைப் பின்பற்றி அநியாயத்திற்குப் பிள்ளைகளை அலைக்கழித்துவருகிறது. ஊடகங்களில் செய்யப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து இளைய தலைமுறை சொக்கிப்போகிறது; ஏமாந்துபோகிறது. விளைவு பெற்றோரின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது.

  விளம்பரத்தில் எதைக் காட்டினாலும் அதை உண்மை என்று நம்பும் பேதமைதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடே. அவர்கள் கோடிகோடியாய் சம்பாதிப்பதற்காகச் சாமானிய மக்களை விளம்பரத்தால் கிறங்கவைக்கிறார்கள். விளம்பரங்கள் போலியானவை என்பதைப் புரியாத மக்கள் பணத்தை விரயம் செய்கிறார்கள்.

  ஆக, பணத்தின் அருமை, அதைச் சம்பாதிப்பதில் சிந்தும் வியர்வை, அதைக் கையாளும் முறை, சிக்கனத்தின் தேவை, சேமிப்பின் அவசியம், விரயத்தின் விளைவு, பகட்டின் படுதோல்வி போன்ற எதார்த்தங்களைச் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்; செய்முறைப் பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.

  ஏன், பையன் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவனின் வரவு-செலவு கணக்கைப் பெற்றோரிடம் அவன் ஒப்படைப்பதே அவனது எதிர்காலத்திற்கு நல்லது.

  தயவு செய்து இதையெல்லாம் தாழ்வு என்று கருதாதீர்கள். பிள்ளைகளே! நிச்சயம் இதுதான் உயர்வுக்கு வழிவகுக்கும்.
  அ. முஹம்மது கான் பாகவி
  Khan Baqavi 4


  http://khanbaqavi.blogspot.in/2013/02/blog-post.html

   
 • இனம்இனத்தோடு…!

  man n darknessபிறிதொரு
  பின்னிரவில்
  ஈரவெளிச்சமும்
  தூரவெளிச்சமுமென
  மின்கம்பங்களைக்
  கடந்துநடக்கயில்

  நீண்டும்குறுகியும்
  பெருத்தும்மெலிந்தும்
  என்பாதம்
  தொட்டடுத்தேவந்து…

 • வெளிச்சவிளிம்புகளிலும்
  வீட்டினுள்ளும்
  கலங்கியும்தெளிந்தும்
  மங்கியும்மடிந்தும்…

  ஆயினும்,

  தொடர்ந்தேவந்த
  என்நிழல்…
  மனைவிஉறங்கும்
  சயனஅறைசென்று
  விளக்கனைத்ததும்
  உக்கிரஇருளில்…

  இனம்இனத்தோடு!
  கவிதை யாத்தவர் கவிஞர் சபீர்
  Source : http://almighty-arrahim.blogspot.com/2013/06/race-and-ethnicity-sabeer.html#.UckdjthjNiZ

   
 • தம்பதியர்களே ! ப்ளீஸ் தூங்கிடாதீங்க !?

  masha_Allahமாநிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. தத்தா பாட்டி, அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தக்கை, மாமா அத்தை, மச்சான் மச்சி,  பெரியப்பா சித்தப்பா, பெரியம்மா சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உறவுதான் கணவன் மனைவி உறவு.

  நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை கணவன்மார்கள் பொருள் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து வெளி ஊர்களிலும், வெளி நாடுகளிலும் வசித்து வருகின்றனர். உள்நாடுகளில் இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தை பார்த்துவிட்டு போவது வழக்கம், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை வந்து பார்த்து விட்டு மீண்டும் திரும்பிச் செல்வது வழக்கம் இன்னும் சிலர் குடும்பத்தோடு அங்கு இருப்பதும் உண்டு,  இன்னும் சிலர் இதையும் கடந்து ஊருக்கே வராமல் உடம்பில் இருக்கின்ற பலம் குன்றும் அளவுக்கு சம்பாத்தித்து, தலை முடியெல்லாம் வெழுத்து, பற்களெல்லாம் பழுதாகி, முகத்தோற்றம் உருமாறி, அடையாளம் சிதைந்து குழைந்து ஊர் வருவதும் உண்டு, இன்னும் சிலர் ஊர் வராமலேயே அப்படியே போய்விடுவதும் உண்டு, இதையும் கடந்து வேறு தகாத உறவுகளோடு திருட்டுத்தனமாக வாழ்வதும் உண்டு, இப்படி பல சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது.

  இவைகளுக்கு மத்தியில் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் குடும்பத் தலைவியாகிய மனைவிகளே கவனித்து கொள்ள வேண்டும்.
  அன்று கணவன், குடும்ப நலம் மற்றும் சூழ்நிலைகளை அறிய மனைவிக்கு கடிதம் எழுதுவார், கடிதம் மனைவியின் கைக்கு கிடைக்க தொலை தூரத்திற்கு ஏற்ப கடிதம் இரண்டு நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் ஆகிவிடும்.

  மனைவின் பதில் கடிதமும் கணவனுக்கு மேலே சொல்லப்பட்ட நாட்களில் சென்று விடும், வீட்டில் வேலையாக இருந்தாலும் கணவனின் கடிதம் வரும் நாள் நெருங்க நெருங்க கடிதத்திற்காக காலை பத்து மணி முதல் தபால் காரரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்த மனைவிகளும் உண்டு, தபால் காரர் வீட்டு வாசலில் கிர்ர்ர்ரிங்-டிர்ர்ர்ன்-கிர்ர்ர்ரிங்-டிர்ர்ர்ன் என்று சைக்கிள் மணியை அடித்து விட்டு கதவின் இடைவெளியில் கடிதத்தை போட்டுவிட்டு சென்று விடுவார், ஓடோடிப்போய் அந்த கடிதத்தை எடுத்து அவரசர அவசரமாக பிரித்து படிப்பார்கள், ஒரு முறை அல்ல மீண்டும் மீண்டும் அந்த கடிதத்தை பிரித்து படித்து படித்து பதில் எழுதுவதுவார்கள், தபால் காரர் சைக்கிள் மணி அடிக்காமல் சென்று விட்டால் அன்றைய தினம் பைத்தியம் பிடித்தார் போல் இருப்பார்கள். அன்று கணவனும் மனைவியும் தங்கள் எண்ணங்களை இப்படித்தான் எழுத்து வடிவில் பரிமாறிக் கொண்டனர். அந்த நாட்களில் மட்டுமல்ல இன்றுகூட நாம் கடிதங்களையும், தபால் பெட்டியையும் மறக்க முடியாது.

  இடைப்பட்ட காலத்தில் தொலை தொடர்பு துறையில் எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., போன்ற வசதிகள் லேன்ட் லைனில் வரவே கடிதத் தொடர்பு என்பது நின்று போய், நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலை வந்து விட்டது. இப்படியாகப்பட்ட காலத்தில் கணவனிடம் இருந்து எந்த நேரத்திலும் தொலைபேசி அழைப்பு வரும் என்று இருந்த மனைவிகளுக்கு வெளியில் வேலைகள் ஏதும் இருந்தால் வேலைகளை முடித்துவிட்டு விறு விறுவென்று வீடு வந்த மனைவிகளும் உண்டு, இப்படித்தான் இடைப்பட்ட காலத்தில் கணவனும் மனைவியும் தங்கள் எண்ணங்களை குரல் வடிவில் பரிமாறிக் கொண்டனர். இவ்வளவு நவீன வளர்ச்சியிலும் பழைய மாடல்களில் உள்ள தொலைபேசி கருவிகளை உபயோகிப்போர்கள் இன்றும் உண்டு, அதையும் மக்கள் மறந்து விட வில்லை.

  இன்று நவீனங்களின் அபார வளர்ச்சியினால், மொபைல் போன், இணையம், மேசை கணினி என்று அழைக்கப்படும் டெஸ்க் டாப், மடிகணினி என்று அழைக்கப்படும் லேப்டாப், கையடக்க கணினி என்று அழைக்கப்படும் டேப்லெட், ஐபோன், கேமரா போன், இன்டர்நெட் வசதி உள்ள போன், வெப் கேமரா, ஸ்கைப்பே, கோகுல் டாக், கேபிள் உள்ள இன்டர்நெட், கேபிள் இல்லாத ஒயர்லெஸ் இன்டர்நெட், இன்னும் அனேக புதுப் புது வசதிகள் நம் அனைவரையும் தினம் தினம் மாறி மாறி சுற்றி வந்து நம் எல்லோரையும் ஆட்கொண்டுவிட்டாலும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்து கொண்டு தொடர்பு கொண்டு குரலோடு முகத்தோடு முகம்பார்த்து உடல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகி விட்டது.

  கணவனிடம் இருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரும் என்ற நிலையில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அப்படியொரு அழைப்பு வந்தால் தான் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே போட்டு விட்டு  அழைப்பில் போய் உட்கார்ந்து விடுகின்றனர். வீட்டில் உள்ள மற்றவர்கள் டிவி சீரியல்களில் படு உற்சாகமாக அதிலே மனதை பறிகொடுத்து வாயை ஆஆவென்று பிளந்து கொண்டு தன்னை மறந்து விடுகின்றனர். இதினாலே பல நேரங்களில் நடக்கும் சம்பவங்களை பாருங்கள்.

  அடுப்பில் ஏதாவது கொதித்துக் கொண்டு இருக்கும் அது பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து எரிவாயு சமையல் அறை முழுவதும் பரவக்கூடிய சந்தர்ப்பம் உண்டு, மின் அடுப்பாக இருந்தால் மின்சாரம் கசிந்து பாத்திரம் முழுதும் மின்சாரம் பாய்ந்து இருக்க சந்தர்ப்பம் உண்டு, கிரைண்டரில் ஏதாவது தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்தால் அதுவும் வழிந்து வீணாகக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டார் இயங்கிக் கொண்டிருந்தால் அதுவும் வழிந்து நீரும் மின்சாரமும் விரயமாக சந்தர்ப்பம் உண்டு, இன்னும் ஏகப்பட்ட சம்பவங்கள் அசம்பாவிதமாக நடக்க சந்தர்ப்பம் உண்டு. இதற்கெல்லாம் காரணம் குடும்பத்தார்களின் அலட்ச்சியப் போக்கு. இது மாதிரி அலட்ச்சியப் போக்கினால் நடக்கும் சம்பவங்களை பல ஊடகங்களின் மூலமாக நாம் அறிகின்றோம்.

  மனைவிக்கு அழைப்பு கொடுக்கும் கணவன், மறு முனையில் மாணவியின் குரல் ஹலோ என்று கேட்டதும் கொஞ்சுவதற்கு முன், எரிவாயு அடுப்பு, மின் அடுப்பு, கேஸ் சிலிண்டர், மின் மோட்டார், கிரைண்டர், வீட்டின் கதவு, மின் விளக்குகள், எமர்ஜென்சி விளக்குகள், சாவிகள் இது மாதிரி சாதனங்களை முதலில் விசாரித்து அவைகள் முறையாக இருகின்றனவா என்று வினவ வேண்டும், அப்படி வினவும் பட்ச்சத்தில் மனைவி உஷாராகி கொஞ்சம் லைனில் இருங்கங்க பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்வார்கள், திரும்பி வந்ததும் உங்கள் நேரம் தானே, இஷ்டம்போல் பேசலாம்.

  அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் பொறுப்புடன் வீட்டு சாதனங்களைக் குறித்து ஒரு பட்டியல் போட்டு உங்கள் மனைவி இடத்தில் கொடுத்து தினமும் கவனிக்கும்படி சொல்லுங்கள். மனையின் ஒய்வு நேரம் அறிந்து போன் பண்ணுங்கள், சமையல் நேரங்களில், பிள்ளைகளை பள்ளிக்கு தயார் படுத்தும் நேரங்களில், இறை வழிபாட்டில் இருக்கும் நேரங்களில் போன்ற நேரங்களை அறிந்து போன் பண்ணும் நேரங்களை சரி செய்து கொள்ளுங்கள், வீட்டு சாவிகளை ஒரே இடத்தில் வைத்து பழக வேண்டு, பல இடங்களில் வைத்து பழகினால் அவசரமான நேரங்களில் சாவியை தேடுவதில் சங்கடப்படவேண்டிவரும், நீங்கள் வீட்டுக்கு போன் பண்ணும் நேரமெல்லாம் இது குறித்து விசாரிக்க மறக்க வேண்டாம். மனைவிமார்களும் கணவனோடு எல்லா விஷயத்திலும் ஒத்துழைத்துப் போக வேண்டும்.

  JAMAL-002‘மனித உரிமை ஆர்வலர்’
  K.M.A. ஜமால் முஹம்மது.
  Consumer & Human Rights.
  S/o. K.M. Mohamed Aliyar (Late)
  Source : http://nijampage.blogspot.in/2013/06/blog-post_11.html?utm_source=BP_recent

   

  Tags: , ,

  எனக்கு மட்டும் அஞ்சாறு வருஷம் முன்னாடி ஃபேஸ்புக் ஐடி இருந்திருந்தா..

  ராஜா ஒரு வேலையில்லாத பட்டதாரி. அம்பத்தூரில் இருந்த ஒரு கால்சென்டருக்கு நம்பிக்கையோடு இண்டர்வியூக்கு சென்றான். இவனை நேர்முகம் செய்தவருக்கு ராஜா மீது முழு திருப்தி.

  “உன்னை கால்சென்டர் எக்ஸிக்யூட்டிவ்வாக வேலையில் சேர்த்துக் கொள்கிறேன். ஃபேஸ்புக் ஐடி சொல்ல முடியுமா. நீ யார் எப்படிப்பட்டவன் என்று ரெஃபர் செய்ய வசதியாக இருக்கும்” என்றார்.

  “என்னிடம் கம்ப்யூட்டர் இல்லை. இண்டர்நெட்டும் பயன்படுத்துவதில்லை. எனவே எனக்கு ஃபேஸ்புக் என்றாலே என்னவென்று தெரியாது” என்று பதிலளித்தான் ராஜா.

  “ம்ஹூம். சமூகத்தோடு எந்த தொடர்புமில்லாத உனக்கு கால்சென்டரில் எப்படி வேலை கொடுக்க முடியும்? இந்த ஒரு காரணத்துக்காகவே உனக்கு வேலை இல்லை” என்றார் இண்டர்வியூ செய்த எச்.ஆர்.மேனேஜர்.

  • மனம் வெறுத்துப்போய் திரும்பினான் ராஜா. அவனுடைய பாக்கெட்டில் முன்னூறு ரூபாய் மட்டுமே இருந்தது. மனம் போன போக்கில் கோயம்பேடு பக்கமாக சுற்றிக் கொண்டிருந்தான். மார்க்கெட் பக்கம் போனபோது தக்காளி மூட்டை மூட்டையாக இறங்கிக் கொண்டிருந்தது. முன்னூறு ரூபாய்க்கு தக்காளி வாங்கினான். அருகிலிருந்த பெரிய அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்குள் நுழைந்தான். ஒவ்வொரு கதவாக தட்டினான்.

   “சீஃப் ரேட்டுலே தக்காளி வேணுமா ஆண்ட்டி. தோட்டத்துலே இருந்து இப்போதான் பறிச்சிக்கிட்டு வர்றேன்” – பேண்ட், சட்டை போட்டு இன் செய்து மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் மாதிரி ஒரு காய்கறிக்காரனை அவர்கள் முன்பு பார்த்ததே இல்லை. அவனது தோற்றத்துக்காகவே அவனிடம் தக்காளி வாங்கினார்கள். மூன்று மணி நேரம் கழித்து அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியே வரும்போது ராஜாவின் பாக்கெட்டில் அறுநூறு ரூபாய்க்கும் மேலே இருந்தது. சம்பாதிக்கும் வழி எதுவென்று ராஜாவுக்கு தெரிந்துவிட்டது. தன்னுடைய வேலை இதுதானென்று அடையாளம் கண்டுகொண்டான்.

   அடுத்த சில ஆண்டுகளில் ராஜா சென்னையின் முக்கியப்புள்ளி. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ப்ரெஷ்ஷான காய்கறிகளை விற்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் செயினின் முதலாளி. பிசினஸ் விஷயமான மீட்டிங்குக்காக ஒரு முறை ஹைதராபாத் போயிருந்தான். அங்கே இவனை சந்தித்தவர் மொபைலை நோண்டிக்கொண்டே கேட்டார். “உங்க ஃபேஸ்புக் ஐடி சொல்லுங்களேன். பிரெண்டா ’ஆட்’ பண்ணிக்கறேன்”

   ”எனக்கு ஃபேஸ்புக் ஐடியெல்லாம் இல்லீங்க. ஆக்சுவலா ஈமெயில் கூட கிடையாது. கம்ப்யூட்டரை யூஸ் பண்ணவும் பெருசா தெரியாது”

   “ஒரு ஈமெயில் ஐடி கூட இல்லாம இவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னட்டா ஆயிருக்கீங்களே? நீங்க மட்டும் ஈமெயில் எல்லாம் யூஸ் பண்ணி இருந்தீங்கன்னா பில்கேட்ஸை எல்லாம் மிஞ்சிட்டிருப்பீங்க” பாராட்டும் தொனியில் அவர் சொன்னார்.

   “நீங்க வேற. எனக்கு மட்டும் அஞ்சாறு வருஷம் முன்னாடி ஃபேஸ்புக் ஐடி இருந்திருந்தா, நான் இன்னேரம் ஒரு கால்சென்டர் எக்ஸிக்யூட்டிவாதாங்க இருந்திருப்பேன்”

   கதையின் நீதி : நீச்சல்குளத்தில்தான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை

   yuvakrishnaதகவல் தந்தவர்

   ஆளப்பிறந்தவர் -ஆத்திரப்பட மாட்டார் !

   Yuva Krishna யுவகிருஷ்ணாவைப் பற்றி அறிய கீழ் உள்ள லிங்கை சொடுக்குங்கள்
  • http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE

   

   
  Leave a comment

  Posted by on June 20, 2013 in 1

   

  Tags: , ,

  சமத்துவம் பேணப்பட வேண்டும்

  writeS.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
  இலங்கைத் திருநாட்டில் வாழும் சகல இனங்களும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இன்று சில இனவாத சக்திகள் சமூக சமத்துவத்தின் சாவு மணி அடிக்கவெனத் துடிக்கின்றன. மக்களின் பக்கமும் அவர்கள் பக்கமே குவிந்துள்ளது.

  முஸ்லிம் தேசத்திற்குள் ஏற்பட்டுவரும் ஒரு ஏற்றத் தாழ்வை சமூக சமத்துவமின்மையை இங்கே தொட்டுக் காட்டலாம் என நான் நினைக்கின்றேன். அண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கலந்து கொண்ட மாணவர்களில் சுமார் 60 மாணவியர்களும் 10 மாணவர்களும் இருந்தனர். பொதுவாக இலங்கைப் பல்கலைக்கழக நுழைவில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே உள்ளது. ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

  ஆனால் முஸ்லிம் சமூகத்தில் பல்கலைக்கழக நுழைவில் ஆண்-பெண் வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்குமிடையிலான வித்தியாசமாக உருவெடுத்துள்ளது.

  • பெண்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டுகின்றனர் என்ற மகிழ்ச்சியை மழுங்கடிக்கச் செய்யும் அளவுக்கு ஆண்களது கற்கும் ஆர்வம் குன்றிக் குறைந்து போயுள்ளது. சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திலிருந்தே இந்த வேறுபாடு வெளிப்பட ஆரம்பிக்கின்றது.மாணவர்கள் சாதாரண தரம், உயர் தரம் முடிந்ததும் உழைக்கும் மனநிலைக்குச் சென்றுவிடுகின்றனர். சிலரது குடும்ப நிலை அந்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அடுத்து முஸ்லிம்களில் அதிகமானவர்களிடம் உடனடியாக கையில் காசு புரள வேண்டும் எனன்ற எண்ணமே அதிகம் உள்ளது.

   கற்றுத் தேறி ஒரு அரசாங்க உத்தியோகத்தைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதில்லை. 20, 25 சம்பளம் தருவார்கள். அதை விட வெளிநாடு சென்றால் இப்போதே அதைவிட அதிகமாக உழைத்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போடுகின்றனர். முஸ்லிம் சமூகம் குறித்த நல்லெண்ணத்தையும் உயர்ந்த எண்ணத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் எழவில்லை. காசுதான் அனைத்தையும் தீர்மாணிக்கும் என்று நினைக்கின்றனர்.

   இந்த சிந்தனையின் விளைவால் 1300 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் ஒரு வர்த்தக சமூகமாகவே பார்க்கப்படுகின்றனர். வர்த்தகம் என்பது கேவலமானது அல்ல. இருப்பினும் எம்மை வர்த்தக சமூகம் என்ற இடத்திலிருந்து கல்விச் சமூகம் என்ற இடத்திற்கு நகர்த்த வேண்டியுள்ளது. இதை வளரும் இளம் சமூகம்தான் இலட்சியமாகவும், இலக்காகவும் கொண்டு எழுச்சியுடன் செயற்பட வேண்டும்.

   இன்று எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஆண்-பெண் கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வு பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.

   பெண்கள் பொதுவாக தம்மை விட அதிகம் படித்த ஆண்களை மணக்க விரும்புவர். ஆண்கள் தம்மை விட கொஞ்சம் குறைவாகப் படித்த பெண்ணைக் கரம் பிடிக்க விரும்பும்புவர். ஒரு சிலர் இதற்கு மாற்றமான மனநிலையில் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் மனநிலை இதுதான். எதிர்காலத்தில் படித்த முஸ்லிம் பெண்களுக்கு எமது சமூகத்தில் பொருத்தமான மாப்பிள்ளை இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.

   இது போன்ற சூழ்நிலையில் மார்க்கப் பற்றும் ஈடுபாடும் இல்லாத முஸ்லிம் பெண்கள் சிலர் அந்நிய ஆண்களுடன் வாழ்க்கை நடாத்தும் நிலை ஏற்படலாம். இதனால் மார்க்கத்துடன் ஈடுபாடு இல்லாத ஒரு புதிய தலைமுறை உருவாகும் ஆபத்து உள்ளது.

   மனைவி படித்தவளாகவும், கணவன் படிக்காதவனாகவும் இருக்கும் போது குடும்ப வாழ்வில் பலத்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனைவி சொல்லும் சில நல்ல அறிவுறைகளைக் கூட படித்தவள் என்ற திமிரில் பேசுகின்றாள் என கணவன் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.

   கணவன்-மனைவியருக்கிடையே தேவையற்ற “ஈகோ” பிரச்சினைகள் உருவாகவும், மனைவி சொல்லும் நல்ல விடயத்திற்குக் கட்டுப்பட்டால் கூட நான் என்னை முட்டாளாக எடுத்துக் கொண்டதாக ஆகிவிடுமோ என கணவன் அச்சப்படலாம்.

   படிக்காத கணவன் பெண்ணின் தொழில் ரீதியான தொடர்புகள் விடயத்தில் சந்தேகப்படலாம். தேவையில்லாத மனக்கசப்புக்கள் அதிகரிக்கலாம்.

   படித்திருக்கின்றேன், தொழிலும் இருக்கின்றது, படிக்காத கணவனுடன் வாழ்ந்து எதற்காக வதைப்பட வேண்டும்? தனித்திருப்போம் என்ற எண்ணம் பெண்ணிடம் மேலோங்கி நின்றால் தேவையற்ற விவாகரத்துக்கள் அதிகமாகலாம்.

   மனைவி கணவனை விட அதிக சம்பளம் பெறுபவளாக மாறும் போது அது சில குடும்பங்களில் கௌரவப் பிரச்சினைகளை உருவாக்கி கணவன்-மனைவி உறவைக் கசக்க வைக்கும். இப்படி இதைச் சூழ எண்ணற்ற பிரச்சினைகள் தலைதூக்கும் ஆபத்து உள்ளது.

   படித்தாளாவது பெருத்த சீதனம் இல்லாத மாப்பிள்ளை கிடைக்கலாம் என்ற எண்ணம் பெண் கல்வியல் வளர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. இந்த வளர்ச்சி வரவேற்கத்தக்கது என்றால் பெண்களுக்கு இணையாக ஆண்களும் கற்கும் போதுதான் அதன் உண்மையான பலாபலனை சமூகம் அடைய முடியும். அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று ஆரம்பத்தில் பெண்களின் கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தினர். இப்போது ஆட்டோ இருக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பிருக்க ஆணுக்கு எதற்குப் படிப்பு என்ற மனநிலை ஆண்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெருத்த தடையாக அமைந்துள்ளது. இந்த மனநிலை மாற வேண்டும். ஆண் பிள்ளைகளையும் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் பெற்றோருக்கு ஏற்பட வேண்டும்.

   தொலைக்காட்சி, சினிமா, நாகரீக மோகம், கூடாத நட்பு என இன்னும் பல அம்சங்கள் ஆண்களின் கல்வில் வீழ்ச்சியை உண்டு பண்ணி வருகின்றது. இதற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும்.

   ஏற்றத்தாழ்வு ஆண்-பெண் கல்வி விடயத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். இது குறித்து சிந்தித்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

   Source : http://www.islamkalvi.com/portal/?p=8958