RSS

Monthly Archives: January 2010

உயிரே உயிரே உருகாதே


மனபாரம் அதிகமாவதால்
மருந்துக்கு பதிலாக
விசமென்று தெரிந்தும்
விதைக்கிறாய்
உன் உதட்டில்

உதடு காய்யும்போதெல்லாம்
நாக்கால்
உமிழ்நீர்கொடுத்து உதவுகிறாய்
அதை
உள்வாங்கிய குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறது
உன்குடலை
Read the rest of this entry »

Advertisements
 

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (5)

இளம் வயதில் முஹம்மது அலி ஜின்னா

[ இதுவரை நீங்கள் படித்த யாவும் ஜின்னா சாகிபின் காரோட்டி ஆஸாத், அவரைப்பற்றி கூறிய நினைவலைகள். இனி காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் அவர்களைப்பற்றி (எழுத்தாளர் குத்புத்தீன் அஜீஸ் அவர்கள் எழுதிய) சுருக்கமான வரலாற்றைப்பார்ப்போம்.] காய்தேஆஸம் முஹம்மது அலி ஜின்னா 1876- ல் பிறந்தார். தன் வாழ்நாள் முழுவதும் நல்ல முஸ்லீமாக வாழ்ந்தார். ஆகஸ்ட் 14, 1947 ஆம் வருடம் அன்றைய தினத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய நாட்டை உருவாக்கிய பின்னர் 1948- ல் இஸ்லாமிய வரலாற்றிலேயே மிகச்சிறந்த முஸ்லீம்களில் ஒருவராக மறைந்தார்.

அவரது பெற்றோர், ஜின்னாபாய் பூஞ்சா அவர்களும், மிதி பாய் அவர்களுமாவர். இவர்கள் இஸ்னா அஹாரி (கோஜா முஸ்லீம்)-இன் வழியாளர்கள். இவர்களும் நல்ல முஸ்லீம்களாக இருந்தனர். இஸ்லாமிய நெறிகளையும் இன்னும் மற்ற பாடங்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு, முக்கியமாக மூத்த மகனான ஜின்னாவுக்கு கற்றுத்தந்தனர்.

கராச்சியிலுள்ள மதரஸாவில் சேர்க்கப்பட்ட முஹம்மது அலி ஜின்னா

புகழ்பெற்ற புரவலரும், கல்வியை பரப்பியவருமான ஹஸன் அலி இஃபிண்டி தலைமையில் இயங்கிய சிந்தி முஹம்மதன் அஸோஷியேஷன் நடத்தி வந்த சிந்து மதரஸாவில்தான் முதன் முதலில் கராச்சியில் முஹம்மது அலி ஜின்னா சேர்க்கப்பட்டார். ஹசன் இந்த பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன், அலிகாரில் இருக்கும் எம்..ஓ கல்லூரிக்குச் சென்று அங்கு சர் ஸைய்யது அஹ்மத் கானுடன் பேசினார். சிந்தி மதரஸாவின் பாடத்திட்டங்களில் இஸ்லாமிய படிப்புகளும், குர் ஆன் படிப்பும் சேர்க்கப்பட்டது. இங்குதான் ஜின்னா இஸ்லாமிய கல்வியைக் கற்றார். அவரது சிறு வயதில், ஜின்னா அவர்கள் பம்பாய் சென்று தனது அன்பான அத்தை மாமா ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அவர்கள் ஜின்னாவை அன்சுமான்இஸ்லாம் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் இஸ்லாம் பாடத்திட்டத்தில் ஒரு பகுதி. ஜனவரி 1893 ஆம் ஆண்டு இங்கிலாந்த்துக்குப் புறப்படும் வரை, ஜின்னா கராச்சியில் இருக்கும் சர்ச் மிஷன் பள்ளியில் படித்தாலும், தொடர்ந்து இஸ்லாமிய கல்வியையும் கற்று வந்தார்.

முஹம்மது அலி ஜின்னாவின் திருமணம் 16 வயதில் ஜின்னாவுக்கும் 14 வயது நிரம்பிய எமிபாய் என்பவருக்கும் கத்தியவாரில் இருக்கும் கனேலியில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. ஜின்னாவின் தாயார், தன்னுடைய மகன் இங்கிலாந்து செல்வதால் அங்கு எந்த இங்கிலாந்து பெண்ணின் வசமும் சென்று விடாமல் இருப்பதற்காக இந்த திருமணத்தை அவசர அவசரமாக நடத்தினார். கராச்சியில் அவரது பிள்ளைப்பிராயம் முழுவதும் ஜின்னாவின் பெற்றோர் அவரது இஸ்லாமிய அடையாளத்தையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அவர் நன்கு உணருமாறு செய்தனர்.

லண்டனில் இருக்கும் லண்டன் விடுதியில் அவர் 3 வருடம் சட்டப்படிப்பு படிக்கும் காலம் முழுவதும் (ஏப்ரல் 1893- ஜூலை 1986), பல வேளைகளில் அவர் கிழக்கு லண்டனில் இருந்த சின்ன மஸ்ஜிதுக்கு செல்லக் கூடியவராக. பல தங்கள் இருக்கும் இந்தியாவில் சட்டத்தொழில் செய்வதற்காக, தன்னுடைய சட்டப் படிப்பின் பகுதியாக இஸ்லாமிய சட்டத்தையும் கற்றுத்தேர்ந்தார். அவர் ஏற்கெனவே சர்ச் மிஷன் பள்ளியில் கராச்சியில் படிக்கும்போது கிறிஸ்தவ மதத்தைப் பற்றி கற்றிருந்தார். அவருக்கு இந்து மற்றும் ஃபார்ஸி நண்பர்களும் இருந்தார்கள். அவர்களிடமிருந்து அவர்களது மதங்களையும் அறிய ஆர்வமுள்ளராக இருந்தார். ஒழுக்கமுள்ள வாழ்க்கை

அவரது , கூறுவதுபோல, இளம்வயதில் ஜின்னா மதுவையோ பன்றிக்கறியையோ தொட்டதேயில்லை. இங்கிலாந்திலும் அவற்றைத் தொடமாட்டேன் என்று தன் பெற்றோரிடம் உறுதி கூறிவிட்டே அவர் இங்கிலாந்து சென்றார். ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய பாகிஸ்தானின் ஜின்னா என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சி அவரது குணவலிமைக்கும் ஒழுக்கத்துக்கும் சாட்சி சொல்வதாகும். Read the rest of this entry »

 

Tags: , , , , , , , ,

911 Twin Towers Terrorism நேரடி உணர்வுகளின் கவிக்கோலம்

By அன்புடன் புகாரி

நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் – செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்

பார்க்கவும் வீடியோ.

நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் – செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்
 

Tags: , ,

மனிதனின் பல்வேறு வளர்ச்சி நிலைகள்!

குர்ஆன் கூறும் கருவியல் : தொடர் 3: –

கனடா நாட்டில் உள்ள டொரண்டா பல்கலைக்கழகத்தில் மனித உடற்கூறு இயல் துறையின் தலைவராக (Head and Chair Person of the Department of Anatomy) இருப்பவர் தான் பேராசிரியர் டாக்டர் கீத் மூர் (Dr. Keith Moore). இவர் கருவியல் (Empryology) துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர் ஆவார். இவர் எழுதிய ‘Developing Human’ என்ற கருவியல் பற்றிய நூல் உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பாடபுத்தகமாக (Reference Book) இருக்கிறது.

நன்றி :http://suvanathendral.com/portal/?p=226

குர்ஆன் கூறும் கருவியல் சம்பந்தமான வசனங்களுக்கான விளக்கங்களை இவரிடம் கேட்டபோது, ‘தாயின் கருவில் குழந்தை எப்படி வளர்கின்றது என்பதை மைக்ரோஸ்கோப் என்ற கருவி இல்லாமல் அறிந்து கொள்ளவே முடியாது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் மைக்ரோஸ்கோப் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், 18-ஆம் நூற்றாண்டு வரை கருவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு மைக்ரோஸ்கோப் பயன்படுத்தப்படவில்லை’

மேலும் டாக்டர் மூர் கூறுகையில்: –

‘மனிதக்கரு வளர்ச்சியானது (Development of Embryo) பல்வேறு வளர் நிலைகளைக் (Stages) கொண்டது என்ற அறிவியல் உண்மையை கி.பி. 1940 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் நாம் பெற்றிருக்கும் கருவளர்ச்சி பற்றிய தற்கால அறிவை சில ஆண்டுகளுக்கு முன்னரே பெற முடிந்தது. ஆனால், குர்ஆன் “தாயின் கர்ப்பப்பையில் மனிதக்கரு பல்வேறு நிலைகளில் வளர்கின்றது” என்பதை கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே கூறியது என்னை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தியது என்றார். Read the rest of this entry »

 

Tags: , ,

நான்கு மெழுவர்த்திகள் நமக்கு கற்று தரும் நம்பிக்கை !!!

by பூங்குன்றன்.வே

ஓர் இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் ரம்மியமான அழகோடு ஒளிவீசி கொண்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அந்த நான்கில் மூன்று பேச ஆரம்பித்தன.

முதல் மெழுகுவர்த்தி “அமைதி” :
இவ்வுலகில் அமைதி என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் சண்டை,வன்முறை, தீவிரவாதம்,கடன் என இருக்கின்றன.அப்படிப்பட்ட உலகில் நான் வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

இரண்டாவது மெழுகுவத்தி “உண்மை”:
இவ்வுலகில் உண்மை என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் பொய்,குழு சண்டை,தேர்தல் வாக்குறுதி, இலவசம் என்றே இருக்கின்றன.அதனால் இங்கு வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

மூன்றாவது
மெழுகுவத்தி “அன்பு”:
இவ்வுலகில் அன்பு என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும்  என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி நானும் அணைந்து போனால்தான் இம்மக்களுக்கு புத்தி வரும்,அறியாமை என்கிற இருளில் கஷ்டபடட்டும் என்றபடி தன்னை அணைத்துக்கொண்டது.

இந்த மூன்றும் அணைந்த நிலையில் ஒரு மழலை அந்த அறைக்கு வந்து,அணைந்திருந்த அந்த மூன்று மெழுகுவர்த்திகளை பார்த்தபடி எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியிடம் சென்றது.மூவரும் ஏன் இப்படி அணைந்தனர் என வினவியது. Read the rest of this entry »

 

Tags: , , , ,

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை

Posted by அபுல் பசர்

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை

இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். “உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்’ என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.
முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.

ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும். Read the rest of this entry »

 

Tags: , , , , ,

நாகூர் ‘புறா’ணம்

pigeon

நாகூர் தர்காவுக்குள் நான் கண்ட காட்சி இது. வெளியூர்க்காரர் ஒருவர் புறாவை விடுதலை(?) செய்வதற்கு நேர்த்திக்கடன் செய்துக் கொண்டார் போலும். காசு கொடுத்து புறாவை வாங்கி, கையை வானுக்குத் தூக்கி பறக்கவிட்டார். நாலடி கூட பறந்திருக்காது. தரையில் வந்து அமர்ந்துக் கொண்டது.

“சே! இதைக் கூட ஒழுங்காக பறக்கவிட நமக்குத் தெரியவில்லையே!” என்று தன்னைத்தானே அவர் நொந்துக் கொண்டிருக்க வேண்டும். இம்முறை சரியாக பறக்க விடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு, ‘தம்’ பிடித்துக் கொண்டு, கைகளை கூடிய மட்டும் பின்னுக்கு இழுத்து, பலம் கொண்ட மட்டும் கைகளை மேலாக தூக்கி மீண்டும் பறக்க விட்டார். இம்முறை ஒன்றிரண்டு அடி கூடுதலாக பறந்தது. ஆனால் மறுபடியும் கூண்டின் மேலேயே வந்து ஜாலியாக அமர்ந்துக் கொண்டது.

இவ்வளவு மோசமான ஆட்டக்காரராக இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். காசு கொடுத்தது தண்டமாகி விட்டதே என்று நினத்தாரோ என்னவோ தெரியாது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தைப்போல அவர் தன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் இருந்தார்.

இந்த முறை புறாவை பலமாக பிடித்துக் கொண்டார். ஒலிம்பிக் பந்தயத்தில் குண்டு எறியும் போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரரைப் போல காட்சி தந்தார். கைகளை தாராளமாக அகல விரித்துக் கொண்டார். இன்னும் சற்று முயற்சி செய்தால் அவரேகூட பறந்திருக்கலாம்.

முக்கி, முனகி, மூச்சைப்பிடித்துக் கொண்டு மும்முரமாக இம்முறை பறக்க விட்டார். அது மறுபடியும் பறந்து வந்து பக்கத்தில் இருந்த மினாராவில் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துக் கொண்டது.

“இந்த மனிதன் உலகம் புரியாத மனுஷனாக இருக்கிறானே” என்று புறா தன் மனதுக்குள் நினைத்து பரிதாபப்பட்டிருக்கக் கூடும். வீட்டுக்கு நான் வந்ததும் என் மனதில் பட்டதை கிறுக்கி வைத்திருந்தேன், படித்து பார்த்தபோது கவிதை போன்று இருந்தது.

எல்லையிலா வானம்
இவைகளுக்கிருந்தும்
இரண்டடி ஆக்கியது
என்ன நியாயம்?

சிறைப்பட்டுப் போகவோ
சிறகுகள்? Read the rest of this entry »

 

Tags: , , , , , , ,