RSS

Monthly Archives: April 2013

நான் வயதானவன்.

mohamed ali jinnahநான் வயதானவன்.
நான் வயதானவன் என்று என்றும் நினைப்பதில்லை

நான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது இறுதி ஆண்டு பேராசிரியர் அனைவரையும் ஒரு கேள்வி கேட்டார் .
‘மேற்கொண்டு என்ன செய்வதாக உங்கள் திட்டம். என்ன ‘என்று.
ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள் .
நான் சொன்னது ‘இந்த ஆண்டு தேர்வில் வெற்றி அடைவதுதான்’ எனது திட்டமென்றேன்

வாழும் வயதான காலத்தில் காட்டில் உள்ள கலாக்காயை விட கையில் உள்ள பலாக்காயை  உபயோகப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும் .கிடைப்பதை வைத்து பயனடைய பழகிக் கொள்வது சிறப்பு

இறைவா  உன்னை நேசிக்கும் நிலை அதிகமாகிவிட்டது .அதற்கு உன்னை தொழுது வாழ
இன்னும் எனக்கு வயது கொடு என இறைவனை இறைஞ்சுவேன் Read the rest of this entry »

Advertisements
 

Tags: , ,

உதவியும் உபகாரமும்

p13_24522033 உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, உடன் பிறந்தார் ,சுற்றத்தார் என  சுருங்கிவிடாமல் அனைத்து மக்களுடன் மட்டுமல்லாது இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும்   உதவியும் உபகாரமும்  விரிவாக்கப் படவேண்டும்.   உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் .உதவியும் உபகாரமும்
பிரதியுபகாரம் அல்லது நன்றியை எதிர்நோக்கி செயல்பட்டதாக இருக்கக் கூடாது.

“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
‘என்று தருங்கொல்?’ எனவேண்டாம் “- ஔவை.
எதிர்பார்த்தது கிடைக்காமல் போக அத்தகைய எண்ணம் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தரக் கூடியதாக அமைந்து விடும். செய்யும்  நற்காரியங்கள் அனைத்தும் இறைவன் அருள் நாடியும் நம் மன திருப்திக்காகவும் இருக்க வேண்டும் .அதனை இறைவன் விரும்புகிறான் அதனால் அது நம் கடமையும் உள்ளடக்கியதாக உள்ளது என்ற நோக்கம் இருக்க வேண்டும்.
. Read the rest of this entry »

 

Tags: , , ,

செல்வந்தர்களே!

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்யமுடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. Read the rest of this entry »

 

பொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும்

பொருள் உள்ளவரை போற்றுவதும் பொருள் அற்றவரை மதியா தன்மையும் மக்கள் மனதில் இக்காலத்தில் பரவி வருகின்றது . மற்றவர் மதிக்க வேண்டும் அல்லது புகழ பெற வேண்டும் என்ற மனநிலை வேண்டி நாம் செல்வம் சேர்க்க வேண்டிய நிலை வேண்டாம் .இருப்பினும் நம் நம் வாழ்கைக்கு தேவையான செல்வதை நாம் சேர்ப்பது நமக்கு அவசியமாகின்றது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் ,வாழ்வின் முதுகெலும்பு போன்றது.  அது இல்லாமல்  நாம் ஏறுநடைபோட முடியாது. பொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும் .அன்பு நெறியில் அறநெறியில்  அடையாத பொருள் அழிந்து விடும் அதனை அடைந்தவரையும்அழிந்து விடும்.செல்வம் வந்த வழியும் முறையானதாக இருக்க வேண்டும் திருடி தர்மம் செய்வது போல்  சிலர் செல்வத்தை தவறான வழியில் சேர்த்து பின்பு முறைபடுத்தி அதனை நல வழியில் செலவு செய்ய முனைகின்றனர். தவறாக பெற்ற செல்வதை வைத்து தர்மம் செய்து இறையருள் முயல்வது இறைவனால் அங்கீகரிக்கப் படமாட்டாது.   நல் வழியில் செல்வம் கிடைக்க அதனை நல்வழியில் செலவு செய்து இறைவனது அருளையும் பெறலாம். நல்ல காரியங்களுக்காக நன்கொடை அளித்து படிக்க முடியாத ஏழை மாணவர்கள் படிப்பதற்கு இயன்ற பொருளுதவி செய்து அவர்களை படிப்பதற்கு ஊக்குவிக்கலாம் .கல்வி பெறாத நாடு முன்னேற்றம் அடைய முடியாது
Read the rest of this entry »

 

Tags: ,

அம்மா என்னும் அன்பை நேசி!

mother3அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி
……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?
அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம்
……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்
அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே
…..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே
அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட
….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே!

அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
……அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால்
…..பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர்
இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம்
…..ஈடில்லா அம்மாவின் அன்பு வெள்ளம்
என்புக்கும் தோலுக்கும் அம்மா ஈந்த
…..இணையில்லாக் குருதியாலே நாமும் வந்தோம்! Read the rest of this entry »

 

Tags:

உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உர்.

12709_3931686972964_2030681894_nநீங்கள் ஒரு மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களா என்பது உங்கள் தனிப்பட்ட கொள்கையைப் பொருத்தது .ஆனால் மார்க்கம் வாழ்கையின் முக்கிய முடிவை தீர்மானிக்கக் கூடியது என்பது உண்மை . ஒரு முக்கியம் வாய்ந்த நகரம் இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் இஸ்ராலியர்களுக்கும் (யகூதியர்களுக்கும்) முக்கியம் வாய்ந்தது. அந்த நகரம் எது? அதனை அனைவரும் அறிந்துக் கொள்வது சிறப்பு.

நசிரியாவிற்கு அருகில் உள்ளது உர்.   பாக்தாத்திற்கு தெற்கில்  365 km   தூரத்தில் உள்ள உர் மிகவும் புகழ்பெற்ற சரித்திர முக்கியத்துவமாக உள்ளது உலகம் உள்ளவரை அதன் புகழ் மங்காது மற்றும் மறையாது. அதற்கு முக்கிய காரணம் இப்ராஹீம்( Abraham )நபி பிறந்து வளர்ந்த ஊராய் இருப்பதால்.  இப்ராஹீம்( Abraham )நபி . பிறந்தது 1996 B.C.
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் உள்ள உர் என்ற ஊரில் இப்ராஹீம் நபி பிறந்தார்.
வர்த்தகத்துக்கும் தொழிலுக்கும் மையமாக அந்நகரம் திகழ்ந்தது.

 

Tags: ,

முழுநிலாவின் ஒளிவீச்சில் ஓடி வந்து பார்த்து மகிழும் நான் விடிவெள்ளியையும் தேடுகின்றேன்

imagesஎன் கண்களில் தூசிப்  பட்டு கண்ணீர் வந்தாலும் பதறிப்போய் கண்களை துடைத்து விட்டு அன்பைக் காடடும் என் மக்கள் உங்களோடு வந்து விட்டார்களே அதனால்தான் உங்களையே பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். நீங்கள் என்னை விட்டு போய்  விடாதீர்கள்!

இழந்த மக்களை மறைந்த உறவுகளை நினைவுறச் செய்து  வற்றாத ஜீவ நதியாய் நீரைக் கொடுத்து வரும் நதி வற்றிவிடுமோ என்று மனம் ஊசலாடுகிறது

நீங்கள் புறப்பட்டு விடுவீர்கள் உங்களுக்கு அழைப்பு வர அந்த அழைப்பு எனக்கும் வந்து சேரும் அதுவரை ஒன்று கூடி உறவாடி மகிழ்வோம்

ஒருவருக்கு ஒரு பொருள் வந்து சேருவதற்கு முன்னே அதனை விற்க முடியுமோ நான் உங்களிடத்தில் வந்து உறவு கொள்வதற்குள் நீங்கள் என்னை விட்டு அகன்று விடாதீர்கள்

முழுமை பெற்று வரும் முகநூலில் பலதரப்பட்ட மக்களாய் பல்வேறு கருத்துகளைக் கொண்டு அங்குமிங்கும் ஓடி ஆடி விளையாடும் அழகை முழுநிலாவின் ஒளிவீச்சில் ஓடி வந்து பார்த்து மகிழும் நான் விடிவெள்ளியையும் தேடுகின்றேன் நிலாவின் ஒளி வீச்சு குறைந்து மறைந்து திரும்புவதுபோல் உங்கள் நிலைமையையும் காண நான் நிலைகுலைந்துப் போகின்றேன் . Read the rest of this entry »

 

Tags: , , ,