ஏன் அமெரிக்கா STEM பட்டதாரிகள் உருவாக்க தோற்கிறது -விளக்கப்படம்

வேகமாக  வளர்ந்து வரும் ஐக்கிய அமெரிக்க தொழிற்சாலைகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
ஏன் மாணவர்கள் ஸ்டெம் (STEM )பக்கம் திரும்பவிலை ? ஒருவேளை சிரமமா ? அல்லது  வேறு ஏதாவது?  அதன் காரணத்தினை  வெளிப்படுத்துவது இந்த அழகான   கையால் வரையப்பட்ட விளக்கப்படம்.  பாருங்கள்.

STEM Shortage
Created by: Online Engineering Degree

by mail from Tony Shin
 

கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்!

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் ஃபிலிமிஸ்சின் கரீம் மொரானி, குர்காவ் ஃப்ரூட் அண்ட் வெஜிடபிள் ப்ரைவைட் லிமிடட் இயக்குனர்கள் ஆசிஃப் பாவ்லா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரையும் ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளையில், முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுராவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

கனிமொழி, சரத்குமார் உள்பட ஜாமீன் வழங்கப்பட்ட 5 பேரும் தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரண்டு பிணைத்தொகையை செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரைவேட் நிறுவன இயக்குநர் ஆசிப் பால்வா மற்றும் சஞ்சீவ் அகர்வால் ஆகிய 6 பேரின் ஜாமீன் மனு டிசம்பர் 1-ம் தேதி விசாரிக்கப்படும் என முன்பு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள் 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து, தங்கள் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்குமாறு 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கனிமொழியின் ஜாமீனுக்காக வழக்கறிஞர் அல்தாஃப் அகமது வாதிட்டபோது, “உச்ச நீதிமன்றம் 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என முறையிடுகிறீர்களா? உயர் நீதிமன்றம் மற்ற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாமா?” என்று உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி கேள்வி எழுப்பினார்.

பின்னர், ஏனைய 5 பேரின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன்வைத்ததும், கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக வெள்ளிக்கிழ்மை நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த மனுக்களை இன்று மீண்டும் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Source : http://www.inneram.com

அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும்.

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்துக் கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நிலைப்பாட்டுக்கு எதிராக பல நாடுகள் அணிதிரண்டன. அமெரிக்க நிலைப் பாட்டுக்கு மிகக் குறைந்த ஆதரவே கிடைத்தது. இது மற்றுமொரு அடியாகும்.

அமெரிக்காவின் துதிபாடிகளில் ஒருவரான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஐக்கிய நாட்டு உரையில் அமெரிக்காவை வாங்கு வாங்கு என வாங்கியுள்ளார். பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஆப்கான், ஈராக், லிபியா விவகாரத்திலும் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது மற்றுமொரு அடியாகும்.

Continue reading “அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்”

கிழவியானாலும் மனைவியை நேசி! (நற்றிணை! பாடல் & உரை)

திருமணம் முடித்து இல்லறம் நடத்தச் செல்லும் பெண்களுக்கு வாழ்வியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. வாழும் வீட்டில் வறுமை. தனிக்குடித்தனத்தால் வரும்படி போதாமை. பொருளீட்டாத கணவன். மாமியார், நாத்தனார் தேவைக்கான பிடுங்கல். பலவகைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பணம் காய்க்கும் மரமாக பெண்ணின் பெற்றோர் மாறவேண்டிய நிர்ப்பந்தம். மதம், சாதி பிரித்துப்பார்க்கவியலா நிலையிருக்கிறது. எல்லோரது வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் காரணீகள். சங்ககாலப் பெண் இதனை எவ்வாறு எதிர்கொண்டாள்? 2,000ம் வருடம் முந்திய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.
“கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தாதை கொழுஞ் சோறுள்ளாள்’’. Continue reading “கிழவியானாலும் மனைவியை நேசி! (நற்றிணை! பாடல் & உரை)”

இஸ்ரேலில் கூகிள் அதிக முதலீடு!

கூகிள் நிறுவனம் அதிக பயனீட்டாளர்களைப் பெற்று இணைய உலகில் கொடி கட்டி பறக்கிறது. யூடூப்(youtube), ஓர்குட்(orkut) போன்ற வலைதளங்கள் அவற்றில் சில. கூகிள் நிறுவனங்கள்  ஏற்கனவே பல்வேறு இஸ்ரேலிய யூத தொழில் நுட்ப வலைதளங்களை வாங்கி தன்னுள் பெற்றுள்ளது. மேலும் தற்போது இஸ்ரேலில் உள்ளதன து  அலுவலகத்தில் ‘Incubator’ (அடை காக்கும் கருவூலம்) என்ற பெயரின் கீழ் புதிய 20 இணைய மதிப்பு கூட்டிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இஸ்ரேலிய யூத பல்கலைகழங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கூகிளின் இஸ்ரேலிய முதலிடு இஸ்ரேலிய யூதர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தொடர்ந்து இஸ்ரேலில் கூகிள் நிறுவனம் தனது முதலீட்டை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் இரண்டாவது பெரிய நகரமான ‘டெல் அவிவ்'(Tel Aviv)வில் கூகிள் தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான அலுவலகத்தையும் நிர்வகித்து வருகிறது. Continue reading “இஸ்ரேலில் கூகிள் அதிக முதலீடு!”

ஏழாம் அறிவு: பற்றி சீனத் திரைப்படம்!(வீடியோ)

“முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்.” என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.

“போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக” கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.

Dim lights

அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.

முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்கள் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

தகவல்(மின்னஞ்சல் வழி):   malathi.arulmani

Source :http://www.inneram.com/

காதல் படுத்தும் பாடு!

காதல் படுத்தும் பாடு!

[ காமப்பசி வயிற்றைப் பிசையும் போது அதற்காகக் காத்திருக்க மனமில்லாத மனிதன் விபச்சாரத்திலும் விழுகிறான்.. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதினால், அவள்/அவன் மேல் இருக்கும் ஆசை குறைந்துபோகத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. மறுபடி அவளைத் தேடினாலும் உடலுறவுக்காகவே தேடுவாய், திருமண உறவின் பந்தம் அர்த்தமற்றதாகிவிடும். கற்பை அழித்துவிட்டு கன்னியைக் காப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. கற்பைத் தின்றுவிட்டு உடலை வீசிவிடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்து

விடாது இருங்கள்.

திருமணத்திற்கு முன் தவறான உடலுறவினால் கரு உண்டாகிவிட்டால் என்ன செய்வது? கலைத்துவிடவேண்டியதுதானே என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். கருவும் ஒரு உயிர் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்; கருக்கலைப்பு ஒரு கொலை என்பதை மறந்துவிடக்கூடாது. கருவைக் கலைத்துவிட்டு கனவிலும், நினைவிலும் துன்பப்படுவோர் அநேகர். உனது தவறான உறவினை மறைக்க ஒரு உயிர் பலி கொடுப்பது நியாயமாகுமா? அந்த நரபலியினை இறைவன் அங்கீகரிப்பானா? அதற்குப் பதில் செய்யப்படாமல் போகுமா? தவற்றிற்கு உடனடி நிவாரணம் தேடும்போது இவைகள் நினைவில் வருவதில்லை.

 

உடலுறவினால் கன்னி என்ற அந்த தன்மை அழிந்துவிடுமல்லவா?! வாலிபனிடத்தில் பாலுறவு கொள்ளுவதால் பெண் மாத்திரம் கற்பழிக்கப்படுவதில்லை, உறவு கொண்ட அந்த வாலிபனும் கற்பழிக்கப்படுகிறான். விபச்சாரிகள் மட்டும் உலகில் இல்லை விபச்சாரன்களும் உண்டு. சட்டங்களை மனிதன் தனக்கு சாதகமாக வளைத்துக்கொண்டதால் விபச்சாரன்கள் என்ற பதம் உபயோகத்திலில்லாமற் போய்விட்டது. திருமண வாழ்க்கையில் இணையவிருக்கும் மனைவிக்காக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியவைகளை அசுத்தப்படுத்துவது நியாயமாகுமா?]

குறிப்பு: இந்த கட்டுரையை பொறுமையுடன் முழுவதும் வாசியுங்கள்; பாதியில் நிறுத்திவிட்டால் முழு கருத்தும் உங்களுக்கு புரியாமல், ஒரு பக்கமாக நீங்கள் சிந்திக்கும் வாய்ப்பு உண்டு.

காதல் காற்று

 

வாலிபப் பருவத்தில் அடியெடுத்து வைக்கின்ற சகோதரிகளாகிய உங்கள் மேலும், சகோதரர்களாகிய உங்கள் மேலும் காதல் காற்று வீசுவது தற்போது வழக்கமாகிப்போனது. காதலியின் பெயரையோ நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதிலும், காதலிக்காவிட்டால் வெறுமை என மனதுடன் காதலிப்பதிலும் பெருமை கொள்ளுகின்ற காலம் இது.

காதலிப்பது தவறா? நான் வாழப்போகும் பெண்னை அல்லது வாலிபனை நான் ஏன் தெரிந்தெடுக்கக்கூடாது? என்ற பல தரப்பட்ட கேள்விகள் வாலிபப் பருவத்தில் உங்களுக்கு உண்டாகலாம். வாலிப வயதினை அடையும்போது எதிர்பாலரின் மேலான ஈர்ப்பு ஏற்படவே செய்யும். அந்த உணர்வு இறைவனின் படைப்பு; ஆனால், அதனை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளப் பழகவேண்டும். அழகினாலோ, அணிந்து வரும் ஆடைகளினாலோ ஈர்க்கப்பட்டு

விடக்கூடாது.

அவள்/அவன் யார்? என்பதை அழகிலோ, ஆடையிலோ அல்து அவளது ஒரு சில நடக்கைகளினாலோ, வார்த்தைகளினாலோ மாத்திரம் அறிந்துகொள்ள இயலாது. மனிதர்கள் முகத்தைத்தான் பார்க்கிறார்கள். மனிதனின் இதயத்தைக் காணும் சக்தி உலகத்தில் எவருக்கும் இல்லை.

அழகையும், ஆடைகளையும் கண்டு மசிந்து காதலில் விழும் பலரால் திருமண வாழ்க்கையினை மகிழ்ச்சியாகத் தொடர இயலவில்லை; காரணம் இதயத்தை அறியாமல் அவர்கள் இடறிவிழுந்ததால். எந்த ஒரு வாலிபனும், வாலிப பெண்ணும் தன்னிடத்திலுள்ள கெட்ட பழக்க வழக்கங்களையும், தோல்விகளையும், பலவீனங்களையும் வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. காதலியின் நினைவினால் தன்னை மறந்து படிப்பினை இழந்து அவனையே நினைத்து வாழ்க்கையை அழித்து எப்படி வாழ்வது? என்று கேள்விக்குறியோடு எதிர்காலம் நின்றுவிடக்கூடாது. Continue reading “காதல் படுத்தும் பாடு!”

தமிழகம் என்ன சவுதி அரேபியாவா? வி.ஹி.பரிஷத் ஆவேசம்!

முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் நாளில் மாடு, ஒட்டகம் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் என்ன சவுதி அரேபியாவா?” என மதுரை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி எழுப்பியுள்ளது.

நாளை நவம்பர் 7 ஆம் தேதி முஸ்லிம்களின் பண்டிகை நாள். இந்நாளில் மிருகங்களை அறுத்து ஏழைகளுக்குத் தானம் வழங்குவது அவர்கள் வழக்கம். இந்நிலையில், மதுரை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாடு, ஒட்டகங்களைப் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, மதுரை மாவட்ட வி.ஹி.பரிஷத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“கோவில் நகர் மதுரையில் பண்டிகையின் பெயரால் ஆடுகளைக் கண்ட இடத்தில் வெட்டத் தடை உள்ளது. 16 வயதுக்குட்பட்ட மாடுகளை எங்குமே வெட்டக்கூடாது என்கிறது பிராணிவதைத் தடைச் சட்டம். ஆடுகளை வெட்டுவதற்கும் கோழிகளை அறுப்பதற்கும்கூட மாநகராட்சி அனுமதி பெற்ற ஆடுவதைக் கூடம் உள்ளது. Continue reading “தமிழகம் என்ன சவுதி அரேபியாவா? வி.ஹி.பரிஷத் ஆவேசம்!”

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

by இப்னு ஹம்துன்

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறையோ இதுவோ இப்பிறையோ?

இல்லை இல்லை தேய்ந்திடுதே!
முறையாய் பெரிய கதிர்கூட
முழுதாய் மறையுது அந்தியிலே
நிறைந்த சிந்தை இபுறாஹீம்
நெஞ்சில் பூத்த தேடலிலே
இறையின் மார்க்கம் விளங்கியதே
இம்மை வாழ்வு சிறந்திடவே!

கனவில் கண்டார் பலியிடவே
கருணை பரிசாம் இளம்மகனை!

நினைந்தே உறுதி பெற்றிட்டார்
நிச்ச யமிது இறையாணை!
அணைத்தே மகனை கேட்டாரே
அவரும் ஒப்பத் துணிந்தாரே
புனையா உண்மை தேடிடுவோம்
புரிந்தால் நன்மை நமக்கன்றோ

அறுக்கத் துணிந்தார்; அறவில்லை
அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை
பொறுத்துப் பார்த்தார் இபுறாஹிம்
பேரிறை அளித்தான் ஆடொன்றை.
சிறந்த எண்ணச் சோதனைக்கே
செய்த வழியாம் அக்கனவு
துறப்பீர் பாசம் பற்றெல்லாம்
தூயோன் இறையின் ஆணைக்கே!

உற்ற துணையை, சிறுமகவை

ஒன்றும் இல்லா ஊரொன்றில்
பற்றை அறுத்து விட்டுவிட்டார்
படைத்தோன் இறைவன் சொன்னபடி!
சுற்று முற்றும் ஒன்றுமில்லை
சுகமாய் வாழ ஏதுமில்லை
பெற்ற மகவும் பரிதவிப்பில்
பெண்ணும் பெற்றார் பெருந்துன்பம்

சற்றே நில்லும் என்கணவா!
சடுதி விரைந்து செல்லுமுன்னே
“பற்றை அறுத்துப் போவதெல்லாம்
படைத்தோன் ஆணை? பண்பிதுவா?”
குற்ற மின்றி கேட்டுவிட்டார்
குமைந்தே சொன்னார் “இறையாணை”
மற்ற விளக்கம் வேண்டாமல்
மாண்பாம் இறையே போதுமென்றார்

தாகத் தவிப்பில் சிறுகுழந்தை
தாயும் செய்ய ஏதுமின்றி
ஏகன் இருக்கப் பயமற்று
எங்கும் நீரைத் தேடிவர
போக வரவும் பொழுதாக
புரண்டு உதைத்து குழந்தையழ
மேகம் கூட உதவாத
மென்மை அறியா பாலைவனம்.

காணக் கிடைத்த மலைகளிடை
கடுகி நடந்தார் தொங்கோட்டம்
கானல் என்று அறியாமல்
கண்ட நீரைக் காணவில்லை
வானம் பார்த்தார் வழியில்லை
வாழ்வில் இதுபோல் துயரில்லை
காண வந்தார் குழந்தையினை

கண்டார் ஊற்றைக் காலடியில்!

பெருகப் பெருகும் நீரன்று
பெரியொன் இறையோன் கருணையது
உருகிப் போனார் உளமாற
உண்மை இறையைப் புகழ்ந்தாரே!
நெருங்கிச் சொன்னார் நீரிடமே
நில்நில்! நீரும் நின்றதுவே
உருக்கும் நிகழ்விது உணர்த்திடுதே

உண்மை இறையை சார்ந்திடென்றே!

———————————————————————

(நில்நில் = ஸம்ஸம், (வற்றாத, இயற்கை நீரூற்று)

(தொங்கோட்டம் = அரபியில் ‘சயீ’ – இருமலைகளுக்கிடையே ஓடி நீர்த் தேடல்)

இப்னு ஹம்துன்

Fakhrudeen Ibnu Hamdun

30 இலட்சம் முஸ்லீம்கள் இன்று சவூதி மினாவில் குழுமினர்

மினா : சவூதியில் உள்ள மினாவில் பக்ரீத் பெருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாளை ஒட்டி 30 இலட்சம் முஸ்லீம்கள் அரபா மைதானத்தில் இன்று குழுமினர். யாத்ரீகர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹஜ் பெருநாளுக்கு முதல் நாள் சவூதி மினாவில் உள்ள அரபா மைதானத்தில் ஹஜ்ஜூக்கு புனித பயணம் செய்யும் யாத்ரீகர்கள் ஒன்று குழுமுவர். 30 இலட்சம் நபர்களில் இந்தியாவிலிருந்து சென்ற 2 இலட்சம் நபர்களும் அடங்குவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஜ் புனித பயணத்துக்கு வந்த இந்தியர்களில் இது வரை 75 நபர்கள் இயற்கையாக மரணித்து மக்கா மற்றும் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அரபாவில் ஒன்று கூடியுள்ள ஹாஜிகள் இன்றிரவை சவூதியில் உள்ள முஜ்தலிபா எனும் இடத்தில் கழித்து பின்பு ஹஜ்ஜின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகிய ஆடு, ஒட்டகங்களை குர்பானி கொடுப்பார்கள் என்றும் சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

Source : http://www.inneram.com

அரஃபா மைதானம் (நேரலை)
  ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதை நேரலையில் காணும் வகையில் சத்தியமார்க்கம்.காமின் “வலைக்காட்சி” பகுதியில் இக்ரா டிவி இணைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய லிங்க்: http://www.satyamargam.com/iqraa-live