ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தாக அனைவர்க்கும் சொன்ன வரிகளிவை:

கும்மியடிப் பெண்ணே கும்மியடி…..
(வெண்டளையான் வந்த பன்னிருசீர் கும்மிப் பாடல்)
================================================
ஒன்று முணர்வுடன் என்று
முலகினில் உத்தமர் வாழ்ந்திடவே
…..ஊழல் ஒழிந்தினி ஓங்க
லுயர்வுடன் உண்மையும் ஆர்த்திடவே
இன்று பெருகிடும் கள்ள
மெரித்திடக் கற்றவர் நேர்வழியில்
…..என்றும் நடந்திட வேண்டு
மெனக்கரம் கொட்டியே கும்மியடி!
விண்ணி லொளிர்ந்திடும் வண்ணம்
மிளிர்ந்திடும் வானவிற் கோலமதாய்
…..மின்னி மறைந்திடும் மாந்தர் Continue reading “ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தாக அனைவர்க்கும் சொன்ன வரிகளிவை:”

‘குங்குமம்’ இது எங்கள் குடும்பம்.

‘குங்குமம்’ வார இதழுக்கு முதன்மை ஆசிரியராக பொறுப்பேற்று இன்றுடன் 12 மாதங்கள் நிறைவடைகின்றன.
புதிதாக ஒருவரையும் ‘குங்குமம்’ வார இதழ் பணிக்கு எடுக்கக் கூடாது என்ற முடிவுதான் இப்பொறுப்பு அளிக்கப்பட்டபோது மனதில் விழுந்த முதல் விதை.
ஏனெனில் ஆசிரியர் மாறும்போதெல்லாம் ‘தங்களுக்கு உகந்த நபர்களை உடன் அழைத்து வருவார்கள்’ என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இப்படி செய்யும்போது ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் துவண்டு போவார்கள். தங்கள் முக்கியத்துவம் குறைகிறதோ என்ற அழுத்தம் அவர்களை பாடாய்படுத்தும்.
இப்படி நம்மால் நேரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனெனில், இது ஏற்கனவே சீரும்சிறப்புமாக வாழும் குடும்பம். புதிய அங்கத்தினராக நுழைபவன் நான் மட்டுமே. ஒரு வருகை முற்றிலுமாக குடும்பத்தை சிதைத்து விடக் கூடாது.
அனைத்தையும் தாண்டி பத்திரிகையாளர் பணிக்கு வருபவர் மீது எப்போதுமே கரிசனம் உண்டு. வேறு எந்த வேலையும் கிடைக்காமல் ஒருவரும் இந்த வேலைக்கு வருவதில்லை. போலவே சம்பளத்துக்காகவும். பணம்தான் பிரதானம் என்றால் வேறு வேலைக்கு சென்றிருப்பார்களே…
இதையும் மீறி ஜர்னலிசம் துறைக்கு வருகிறார்கள் என்றால்… அதற்கு காரணம் உள்ளுக்குள் எரியும் கனல்தான். ஏதோவொரு கனவு வழிநடத்துகிறது. ஏதோ ஒன்றை நம்மால் செய்ய முடியும் என நம்புகிறார்கள். அதற்காக ஒவ்வொருவரும் ஒரு பாதையை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த வழியில் அவரவரை பயணப்பட வைத்தால் போதும்.
இந்த முடிவுக்கு எங்கள் எம்டியும் ஒப்புதல் அளித்தார்.
‘குங்குமம்’ ஆசிரியர் புள்ளி, இந்த இடத்திலிருந்துதான் தொடங்கியது. அதற்கு ஏற்பவே ‘குங்குமம்’ குடும்பத்தினரும் அமைந்திருந்தார்கள்.
எங்களால் ‘முதலாளி’ என அன்புடன் அழைக்கப்படும் நா.கதிர்வேலனை நா. கதிர்வேலன் ‘குமுதம்’ வார இதழில் பணிபுரிந்த காலம் முதலே தெரியும். சினிமா நிருபர் என பரவலாக அறியப்படும் அவருக்குள் இன்னொரு முகம் உண்டு. அது தீவிரமான சிறுபத்திரிகை வாசிப்பு. மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த அவரது இந்த முகத்தை பொது வெளியில் அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு செய்தோம்.
இப்படித்தான் தீவிர இலக்கியவாதிகளின் நேர்காணல் வெளிவரத் தொடங்கியது. Continue reading “‘குங்குமம்’ இது எங்கள் குடும்பம்.”

கோடைக்கு இரை ஈரம் – எம்.ரிஷான் ஷெரீப்

ed2b6da7d17a8faff26e7b23941b5648--national-parks-mother-nature.jpgயானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்
புறக்கணித்துவிட்ட
இலையுதிர்த்த விருட்சங்களில்
பௌர்ணமி நிலவு
கோடையை வாசித்தபடி வானில் நகரும்

வனத்தில்
புள்ளி மான்கள் நீரருந்திய
குட்டைகள் வரண்டு விட்டன

அகோரச் சூரியன் தினமும்
தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்
பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்
தன் மென்பரப்பையிழந்து
வெடிக்கத் தொடங்கி விட்டது Continue reading “கோடைக்கு இரை ஈரம் – எம்.ரிஷான் ஷெரீப்”

தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்…

தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்…
பனிக்காலத்தில் போர்வையாய் இருந்துவிடு

தாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்
தாளாத துயரத்தில் நான் படும் பாடு நீ அறிவாயோ!
பகற்பொழுதும் கனலாய் சுடுகிறது
பனிக் கொட்டும் இராக்காலமும் அனலாய் சுடுகிறது
படிந்துள்ள தூசியை துடைத்து வைப்பாய்
படிந்துள்ள தூசி நாசியை நெருடுகிறது
உன் நினைவில் என் இமைகள் மூடுமோ!
நீ இல்லாத இராக்காலம் கனாவாய் கழிகிறது
நீ இல்லாத இருளில் சுருண்டு கிடக்கிறேன்
நீ கிளப்பிய வேகத்தை
நீ திரும்புவதிலும் வேகத்தைக் காட்டு Continue reading “தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்…”

ஆரம்பமே அமர்களம்தான் …….

சிலமாதங்களுக்குமுன்புதான் நமது மயிலாடுதுறை ஒன்றிய அளவில் நடைப்பெற்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான கணினி தொழில்நுட்ப போட்டியில் நமதூர்(நீடூர்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் முஹம்மது ரிஜா முதல் இடத்தை பிடித்தார்.எல்லோரும் மகிழ்ந்தோம்
அடுத்த சிறுவனும் நமதூரே ……..
மயிலாடுதுறை *ஐடியல் பள்ளியில்* G2 ( இரண்டாம் வகுப்பு) படித்து வரும் மு.முஃபித் ரஹீம் கடந்த 29.10.2017 அன்று மயிலாடுதுறை *எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில்* *TAMILNADU STUDENTS OLYMBIC ASSOCIATION* சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 8 வயது உட்பட்டோர் *வில்வித்தை*(ARRCHERY) – *இந்திய அம்பு* ( INDIAN BOW) பிரிவில் *வெண்கலம்* (BRONZE)வென்று மாநில போட்டியில் பங்கேற்க்க தகுதி பெற்று நேற்று(10.12.2017) மயிலாடுதுறையில் தமிழக அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் (GOLD) வென்று 2018 ல் ஜனவரி மாதம் *ஹரியானா* மாநிலத்தில் நடைபெற இருக்கும் *தேசிய அளவில்* நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளார். Continue reading “ஆரம்பமே அமர்களம்தான் …….”

சாரல் வீசிய வீராணம் ஏரி…! ☔

by. Samsul Hameed Saleem Mohamed
“காவிரியும், கொள்ளிடமும் கரை புரண்டு வந்தாலும் வீராணம் ஏரியின் விப்புகளுக்குக் காணாது” எனத் தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு.
ஆம்…! அந்த ஏரியை கண்டபோதே உணர்ந்தேன் இப்பழமொழி எவ்வளவு உண்மை என்று! லால்பேட்டையை தொட்டடுத்து தொடங்கி சேத்தியாதோப்பு வரை வியாபம் கொண்டு பரந்து விரிந்த வீராணத்தின் கரையோர என் பயணம் கரைகாணா இன்பத்தை, களிப்பை அள்ளித்தந்தது என்றால் அது மிகையில்லை!
வான்வழி பறந்து அயல்நாடு நாடி வர, நான் கொண்ட தரைவழி பயணத்தில் அன்று சிறு தள்ளாட்டம், தடுமாற்றம்..! காரணம் காரிருள் சூழ் வானமும், அதன் வழி கருமை கொண்ட மேகமும், கடுஞ்சினம் கொண்ட இடியும், வெட்டிய மின்னலும் என்று சீற்றம் கொண்டு சீரியது பருவமழை!
என் ஊர்தி வந்த வழி நெடுகும் ஓயாத நீரிரைப்பு! மதியம் அகன்று அந்திமப் பொழுது தொடங்கும் வேளையில் வெளிச்சம் விலகி எண்ணெய் கவிழ்ந்த வெள்ளை காகிதத்தின் வண்ணத்திற்கு ஒப்பாய் மாறத் துவங்கியது மாலைநேரம்! Continue reading “சாரல் வீசிய வீராணம் ஏரி…! ☔”

கடற்கரை தாகம்

குளிர்காலம் எனக்கு மிகவும் பிடிக்கும். குளிர்ந்த காற்றைத் தழுவிக் கொண்டு, மணலில் கால்கள் பதித்து நடக்கும்வேளையில் இந்த மண் மனதின் பாரங்களை மறுக்காமல் வாங்கிக்கொள்கிறதென்று உணர்கிறேன். நள்ளிரவுப் பொழுதைத் தூய்மையான இந்தக் கடற்கரை நல்லிரவாக்கிக்கொண்டிருக்கிறது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என எல்லோரையுமே வானந்தொடும் இந்தக் கடற்கரை வசீகரித்து வரவழைத்து இரவின் மடியில் தாலாட்டிக்கொண்டுதானிருக்கிறது.
சொன்னால் அசந்துபோவீர்கள்! Continue reading “கடற்கரை தாகம்”

நாணயம் – நன்றி இவை இரண்டும் எனது மந்திரச் சொற்கள். நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்.’

12243084_940987969304280_6632634808486392539_nசென்னையில் யாரையுமே அவருக்குத் தெரியாது. வீதியோரத்தில்தான் அவரது வீடு ஆனது. கையில் காசு கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள உணவுச்சாலைகள், பயணமுககவர்நிறுவனங்களில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என்று துரத்திவிட்டர்கள். தோல்விமேல் தோல்வி. பசியுடன் எழும்பூர் தொடருந்து நிலையத்தில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பின்பைக்களவுக்காரர்கள் என விளிம்புநிலை மனிதர்களுடன் படுத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் தொடருந்து நிலைய வீதியோரத்தில் படுத்திருந்தபோது படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்து பார்த்தால், அங்கே படுத்திருந்தவர்களை எல்லாம் சந்தேக கேஸ் போடுவதற்காக கா.துறைக்காரர்கள் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தனர். அடுத்து ஜெயிலுக்குப் போகப்போவது நிச்சயமானது. அவர், சடாரென்று ஓட்டம்பிடித்தார். கா.து ஒருவர் துரத்தினார். கா.து காரரால் அந்த இளைஞரைப் பிடிக்க முடியவில்லை. Continue reading “நாணயம் – நன்றி இவை இரண்டும் எனது மந்திரச் சொற்கள். நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்.’”

*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*

இளம் வயது மாது ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான மாது ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது மாதின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் மாதினை நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த இளம் மாதிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் மாதிடம், “ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்,” என ஆதங்கப்பட்டார். Continue reading “*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*”

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

17190776_10211907304018583_1956564108605795167_n
ஒரு சின்ன கற்பனை.

பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.

அவை –

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் ” உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி –
“முடிந்தது கணக்கு” என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? Continue reading “ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.”