RSS

Monthly Archives: February 2011

ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு!

83வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் கோலாகலமாக துவங்கியது. போட்டியில் கலந்துகொள்ளும் திரைப்படங்களில் பங்கேற்ற நட்சத்திர கலைஞர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு நடைபெற்றது. இவ்விழாவில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தி கிங்ஸ் ஸ்பீச் எனும் திரைப்படம் 4 விருதுகளையும், தி சோஷியல் நெட் வொர்க் எனும் திரைப்படம் 3 விருதுகளையும், தி ஃபைட்டர் எனும் திரைப்படம் 2 விருதுகளையும் தட்டிச்சென்றன.

சென்ற வருடம் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஆண்டும் பெறுவார் என எல்லோராலும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு நழுவிப்போயிற்று.

இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் முக்கியமானவை சில : Read the rest of this entry »

Advertisements
 

Tags:

மனைவி மீது வெறுப்பால் பெண் விமானி விமானத்தை இயக்க பயணி ஆட்சேபம்

பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று விமானப் பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று 90 நிமிடங்கள் தாமதமானது. இது பற்றி வந்துள்ள செய்தி: 

நேற்று காலை 8.10 மணிக்கு டெல்லியிலிருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானபோது பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 மணிக்கு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் உள்ளே சென்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். Read the rest of this entry »

 

Tags: ,

நன்னீர் தேடும் நச்சு வேர்கள் – ஓரினச்சேர்க்கையாளர்கள்

உலக அருவருப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி
அருவருப்புகளின் அணிவகுப்பு நடத்தினால் எப்படி இருக்கும்?

புழக்கடையில் புரளும் இந்தப் புழுக்களின் அருவருப்பைச்
காதோரம் கேட்கும்போதே கோடி கோடி கம்பளிப் பூச்சிகள்
உடுத்தாத உடலில் ஊர்வதைப்போல கூசிச்சாகிறது மனசு.

இன்றைய பொழுதுகளில் துரிதமாய் வளரும் நாச வேலைகளுள்
மிக முக்கியமானதாய் இருப்பது அருவருப்புகளின்
உச்சக் கரைகளையும் உடைத்தெறிந்த ஓரினச்சேர்க்கையே.

மண்ணில் மனிதர்களாய்ப் பிறந்த பலரும் இதுபற்றிப்
பேசுவதற்கோ கேட்பதற்கோ அருவருப்புப் பட்டுக்கொண்டு
கூச்ச ஓடங்களாய் நாகரிகக் கரைகளில் ஒதுங்கிவிடுகிறார்கள்.

ஆனால் இதன் வளர்ச்சி பற்றிய அறிவு
அவர்களிடம் போதுமானதாக இல்லாவிட்டால்,
அது அவர்கள் வீட்டுக் கதவுகளையே லாவகமாய்த்தட்டி
சட்டென்று உள்நுழைந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. Read the rest of this entry »

 

Tags: , ,

யதார்த்த மயக்கம்!

படுப்பதுவோ…
போர்த்துவதுவோ…
கண்ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,

நடந்ததுவும்…
நடப்பதுவும்…
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும் மனச்
சலனங்கள் ஓய்வதே…
உறக்கம்!

திறந்த கண்களும்…
பரந்த பார்வையும்…
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு,
Read the rest of this entry »

 

Tags: , ,

பெண் இல்லையேல் நீயுமில்லை.. byகவிஞர் இரா. இரவி

பெண் இல்லையேல்
நீயுமில்லை
நானுமில்லை
ஊருமில்லை
உலகுமில்லை
பெண் பிறந்தால்
பேதலிப்பதில்
நியாயமில்லை
பெண் என்ன?
ஆண் என்ன?
பெண்ணே
இல்லாத
உலகத்தில்
வாழமுடியுமா?
உங்களால்…
எல்லோருமே
ஆண் பெற்றால்
எவர்தான்
பெண்பெறுவது
ஆணைப்
பெற்றதால்
அவதிப்பட்டவர்
கோடி
பெண்ணைப்
பெற்றதால்
பெருமையுற்றவர்
கோடி
மணமானதும்
மறப்பவன் ஆண்!
மணமானாலும்
மறக்காதவள்
பெண்!
ஓருபோதும்
வருந்தாதே
பெண்ணிற்கு.

நன்றி : பெண் – கவிஞர் இரா. இரவி

 

 

Tags:

நெஞ்சுக்கு நீதி by ரபீக்

நெஞ்சுக்கு நீதி

“நெஞ்சில் உங்களுக்கு ஈரம் ஊறுகின்ற காரணத்தினாலேதான் நீங்கள் எவ்வளவு கொடுமையான வியாதிகளையும் எவ்வளவு பார்க்கத்தக்க, முடியாத, இயலாத மோசமான வியாதிகளையும் நீங்கள் குணப்படுத்த ஒரு நோயாளியின் அருகே செல்கிறீர்கள் என்றால், நெஞ்சிலே இருக்கின்ற ஈரமும் அந்த ஈரத்தின் காரணமாக ஏற்படுகின்ற இதயக்கசிவும் தான் இதற்க்கெல்லாம் காரணம்.
இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து இன்று நேற்றல்ல -காலம் காலமாக மருத்துவத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கபடுகின்ற பயிற்சி எது என்பதை உணர்ந்து அந்த பயிற்சியையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு மனிதனை வாழவைக்க வேண்டும். அதற்க்காகத்தான் இந்த தொழிலை இன்றைக்கு கற்றிருக்கிறோம் ………”
(தினத்தந்தி01-03-2010)
இது தமிழக முதல்வர் 28 -02 -2010௦ அன்று சென்னை மருத்துவக்கல்லுரியின் 175வது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய மருத்துவக்கல்லுரியின் அடிக்கல் நாட்டு விழாவின் நிகழ்ச்சியில் மாணவர்களை பாராட்டியோதோடு மட்டுமல்லாமல் எப்படி மருத்துவர்களாக வெளியே வரவேண்டும் என்று கூறிய அறிவுரை தான்.
இதனை பிரசுரித்த பத்திரிக்கைகளின் மை காய்வதற்கு முன்னே முதல்வர், இன்னுமொரு கண்டிப்பான செய்தியினை – மக்களின் மனதில் அறுவருப்பினை ஏற்படுத்திய செய்தியினைப் பற்றிய செய்தியினையும் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது.
“……………………..குற்றங்கள் நடைபெறும்போது அவை எப்படி நடத்தப்பட்டன, எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதை சான்றாக காட்ட, காட்டப்படும் படங்கள், செய்திகள் அளவுக்கு மீறி விடுகிறது.
அவற்றை படங்களாக பார்த்திடும் இளையோர்கள் நெஞ்ச்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும் ……………………..” என்று ,தினமலர் 05-03-2010) ஊடகத்துறையினருக்கு கண்டிப்பு குரல் கொடுத்திருக்கிறார்.
முதல்வர், இளையோர் நெஞ்சங்களையும், அவர்தம் உளப்பாதிப்பைப்பற்றியும் மேலும் நாளை உலகை ஆளப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியும் கவலை கொள்வதைப்போலவே, இன்று எல்லா மருத்துவர்களும், ஆய்வாளர்களும் – தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் தரம் பற்றியும் அதனால் ஏற்படும் உளரீதியிலான பிரச்சினைகள் பற்றியும் கட்டுரைகள் வாயிலாகவும், கருத்தரங்குகள் வாயிலாகவும் தங்கள் கருத்துக்களையும் வேதனைகளையும் வெளிப்படுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மருத்துவர்கள், முதல்வர் சொன்ன அந்த நெஞ்சின் ஈரம் மற்றும் அதன் இதயக்கசிவின் காரணமாக. Read the rest of this entry »
 

Tags: , , ,

இளகிய மனம் இறுதி வரை வேண்டும்.

ஒருவன் தன் உழைப்பால் வரும் வருமானத்திலிருந்து சிறுக,சிறுக சேமித்து அதன் மூலம் வாங்கிய தன் புதிய காரை புதுப்பொழிவுடன் என்றும் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அதை மிகவும் பாதுகாப்பாக ஏதோ வைரக்கல்லை பட்டை தீட்டி மெருகூட்டுவது போல் மெல்ல, மெல்ல அன்றாடம் துடைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் காரை துடைத்துக்கொண்டிருக்கும் சமயம் அங்கு வந்த அவனுடைய நான்கு வயதே நிரம்பிய மகன் காரின் மறுபுறம் சிறுபிள்ளைக்கே உரிய விளையாட்டுத்தனத்தில் ஒரு கல்லை எடுத்து காரில் கிறுக்கி விட்டான்.
அதைக் கண்ட காரின் முதலாளியான அவன் தந்தை என்ன செய்திருக்க வேண்டும்? தன் பிள்ளையை செல்லமாக கண்டித்து (இது மனிதர்களின் மனோபாவத்திற்கேற்ப (சாந்தமான குணம்) வேறுபடும்) அல்லது அதற்கு ஒரு படி மேலே போய் கடின சொல் மூலம் கண்டித்து லேசாக அவனைத்(அ)தட்டி அனுப்பி இருக்க வேண்டும்.
தன் மகனின் கையைப் பிடித்து கதறக்கதற தன் கையில் வாகனத்தின் பாகங்களை கழற்ற பயன் படுத்தப்படும் ஆயுதம் இருக்கின்றது என்று கூடப்பாராமல் அடித்து விட்டான் ரத்தம் சொட்ட, சொட்ட தண்டித்து விட்டான் அவன் ஈன்றெடுத்த அந்தப் பாலகனை “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழியை நிரூபிப்பவனாக.
பிறகென்ன ‘அழுதாலும் குழந்தை அவள் தானேப் பெற வேண்டும்” என்பது போல் அவன் பெற்றப் பிள்ளையல்லவா அந்த பாலகன்?. அச்சிறுவனை ரத்தம் சொட்ட, சொட்ட தன் காரிலேயே அள்ளி போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறான்.
மருத்துவமனையில் தன் மகனின் கை நரம்புகள் மிருகத்தனமான அடியால் துண்டிக்கப்பட்டு வேறு வழியின்றி கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இறுதியில் அகற்றி விடுகின்றனர். பாவம் அந்த பச்சிளம் பாலகன். Read the rest of this entry »
 

Tags: , , ,