RSS

Monthly Archives: January 2016

இப்படி ஒருபாடல் இதுவரை வெளிவர இல்லை என்று நினைக்கிறேன்

கவிஞர் அஸ்மின்

நான் எழுதியுள்ள இந்தப்பாடலில் வாரத்தின் 7 நாட்கள் வருடத்தின் 12 மாதங்கள் அடங்கியுள்ளன. பாடலுக்குள் காதல் கருவாகி குழந்தை உருவாகி நிற்கிறது எப்படி என்று பாருங்கள்.நான் அறிந்தவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒருபாடல் இதுவரை வெளிவர இல்லை என்று நினைக்கிறேன் இருந்தால் சொல்லுங்கள்.
பல்லவி
ஆண்:
ஞாயிறே ஞாயிறே
நானுந்தன் ஞாயிறே….
வாழ்கிறேன் உயிர்
வாழ்கிறேன்
நீவிடும் மூச்சிலே…
திங்களே
செவ்வாய் சுகம்தானா
புதனிலே
வியாழன் கிடைப்பானா
வெள்ளியாய் அவனும் வந்தால்
போகும்
சனிதானா…. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on January 28, 2016 in 1

 

என்னமோ தெரியவில்லை…

சிறுபான்மையினர் மீது
சீரிய அக்கறை
தலித் மக்கள் மீது
தனிப்பெரும் பரிவு
ஈழத்து தமிழர்மீது
இணையில்லா பிரியம்
தமிழக மீனவர்மீது
தன்னிகரில்லா பாசம் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 24, 2016 in 1

 

அழகான கண்ணிமைகளில் .. அழுகைப்பூ பூத்திருக்கு !…

-ஜே .பானு ஹாரூன்

=======================

அழகான கண்ணிமைகளில் …
அழுகைப்பூ பூத்திருக்கு !…
விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் …
விண்ணிலே பூத்திருக்கு !…
தனித்த வெண்ணிலவாய் …
வெள்ளிகளின் மத்தியிலே ..
உண்ணா நோன்பிருந்து ..நீ ,
உடல் வருத்தி லாபமென்ன ?…
சத்தியமாய் பாதைமாறா …
உத்தமியாய் வாழ்ந்திருந்தாய் !…
சங்கோஜம் நிறைந்தவளாய் …
செல்வியாய் வளர்ந்திருந்தாய் !..
எதற்குமே குறைவில்லை …
எண்ணி மனம் பூரித்திருந்தாய் !.. Read the rest of this entry »

 

பொங்கல் வாழ்த்துகள்!

Hilal Musthafa

சங்கம் பலப்பலக் கண்ட தாய்த் தமிழே!
பொங்கும் இலக்கண இலக்கியப் பாக்கியம்
எங்கும் நிறைத்த இனித்த அமிழ்தே!
சிங்கம் நிகர்த்த வீரம் கொழித்த
தங்கத் தமிழர் வாழ்வின் செழிப்பே!
அங்கம் முழுதும் அன்பு கனிந்த
மங்கள மகிமை மணக்கும் மருக்கொழுந்தே! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 14, 2016 in 1

 

காலைப் பனித்துளி கதிர்களில் ஆட–அதை

Malikka Farook

12509719_1039457909423517_2599623278447761769_n

காலைப் பனித்துளி கதிர்களில் ஆட–அதை
கண்ட என்கண்கள் கும்மாளம் போட
மகிழ்வென்னும் சோலைக்குக்குள்
மகிழம்பூவாய்,,,

சூரியனின் சூடு சுல்லென்று சுட –அதை
சில்லென்ற காற்று வருடி விட
சுறுசுறுப்பாகுமுடல்கொண்டு
பறக்கும் சிட்டாய்

அந்திவானம் மஞ்சள் அரைக்க
அதை அவசரமாய் கறுத்த மேகம் மறைக்க
மூடியிருந்த முக்காட்டை கிழித்துக்கொண்டு
எட்டிப்பார்க்கும் ஒளிக்கதிராய்,,, Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 11, 2016 in 1

 

ஞானம் பிறந்த கதை

-Vavar F Habibullah

12400679_10205471969747147_2665696046202029579_n

ஞானம் பிறந்த கதை
(A DROP IN THE OCEAN)
காட்சி ஒன்று…
இளம் துளி ஒன்று, கடலை சந்திக்க ஆர்வம் கொண்டது.
யார் நீ ?
பொங்கி எழுந்த
கடல் கேட்டது.
நான்
ஒரு
பெரும்
துளி.
இளம் துளி, பதில் சொன்னது.
“நான்”
செத்த பின்
நீ
வா.
பதில் உரைத்து விட்டு சீறிய பெருங்கடல்,
உள் வாங்கிக் கொண்டது. Read the rest of this entry »

 

சாலையோர சாயாக் கடைகளில்…

Abu Haashima

12522932_944465472298849_8503999941609191904_n

சாலையோர
சாயாக் கடைகளில்
உள்ளி வடை
மிளகாய் பஜ்ஜி
வாழைக்காய் பஜ்ஜி
உருளைக் கிழங்கு போண்டா
முட்டை போண்டா
உளுந்து வடை
பருப்பு வடை
மோதகம்
அதிரசம்
பணியாரம்
ஏத்தம்பழ அப்பம்
ஆட்டுக்கால் கேக்
சாப்பிடும் வாலிப வயோதிக அன்பர்களே!
சுடச்சுட பொரித்து வைக்கப்படும் பலகாரத்தை பார்த்த உடனேயே
உங்கள் வாயில் எச்சில் ஊறுதா ?
கடைக்காரர் துண்டு பேப்பரில் பலகாரம் வைத்துத் தருகிறாரா ?
அதில் பஜ்ஜியை அல்லது வடையை வைத்து எண்ணெயை பிழிகிறீர்களா ?
அதன் புறகு ருசித்து சாப்பிடுகிறீர்களா ?
சபாஷ் …
நல்லா சாப்பிடுங்க.
நீங்க வடையை வைத்திருக்கும்
பேப்பர் இருக்கே பேப்பர் …
அது … Read the rest of this entry »