ஒன்றரை நூற்றாண்டு மக்களாட்சி உடைப்பும் புதிய மக்களாட்சி உருவாக்கமும்

இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாய் நடைமுறையிலிருக்கும் மக்களாட்சி வடிவத்தில் மக்களுக்கு எதுவும் கிடைத்ததில்லை. அரைத்த மாவையே அரைக்கும் தேர்தல், வாக்களிப்பு, ஆட்சி மாற்றம் என்ற சனநாயக உத்திகளால் வெகுமக்கள் மாவும் பெறவில்லை, தோசையும் பெறவில்லை. பூ, காய், கனி, கிளைகள் என செழுப்பம் தர வேண்டிய மக்களாட்சிச் செடியினை அரிக்கும் வேர்ப்புழு எது என்பதை இக்கட்டுரை பதிவு செய்கிறது.

5.1.2011 அன்று தொலைக்காட்சி செய்திகளை உருட்டிக் கொண்டிருந்தது.

      காமன்வெல்த் போட்டிகளில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கல்மாதியின் வீடுகளில், அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை. தொடர்ந்து சி.பி.ஐ அலுவலகத்தில் கல்மாதியிடம் நேரில் விசாரணை

      போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் இத்தாலிய தொழிலதிபர் குவத்ரோசிக்கும், இந்தியர் தரகர் வின்சத்தாவுக்கும் ரூ 41 கோடி கமிஷனாக (கையூட்டு) வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெற்ற 41 கோடி ரூபாய்க்கு வருமான வரி கட்ட வேண்டுமென வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது.

      முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாயிருந்த கே. ஜி. பாலகிருஷ்ணனின் இளைய சகோதரர், இரு மகன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாய் சொத்து சேர்த்ததாக கேரள அரசு வழக்கு. இவர்களைப் பினாமிகளாக்கி சொத்துச் சேர்த்த கே. ஜி. பாலகிருஷ்ணன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீடிக்கக்கூடாது என டில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு

– மூன்று செய்திகளையும் ஒரே நேரத்தில் கக்கிக் கொண்டிருந்தது ஒரு நல்ல தொலைக்காட்சி. பார்த்துக்கொண்டிருந்த அம்மா சொன்னார்.

‘சொத்து சேத்தாங்க, சொத்து சேத்தாங்கன்னு சொல்லிக்கிட்டதானே இருக்காங்க. ஒருத்தன் கிட்டயாவது சொத்தைப் பறிச்சாங்கன்னு இருக்கா? சனங்க பாத்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருக்கலாம்’’

அண்மையில் வெளியான இதுபோன்ற செய்திகள் சிந்தனைக்குரியவை. அவை குறித்து சாதாரண அந்தப் பெண் சொன்னதும் நம் கவனத்தில் எடுக்க வேண்டியவை. மக்களாட்சி செயல்முறைக்கு வந்த கடந்த 60 ஆண்டுக் காலமாய் வெளியாகும்

செய்திகளின் ஒரு வரலாற்று தொடர்ச்சி இது. நமது ஊழல்கள் பாரம்பரியம் மிக்கவை. இந்தியா பெருமை கொள்ளத் தக்க பாரம்பரியங்களில் இதனை முதலாவது இடத்தில் கொள்ளலாம்.

1958-ல் நேரு, இந்தியப் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையிலிருந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியின் முந்த்ரா ஊழல், 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சியில் நடைபெற்ற மாருதி கார் -நகர்வலா ஊழல்கள், 1987-ல் ராஜிவ் காந்தியின் போபர்ஸ் பீரங்கி ஊழல், 1989-ல் நரசிம்மராவ் ஆட்சியின் தொலைத்தொடர்புத்துறை, சர்க்கரை இறக்குமதி, பங்குச் சந்தை, ஹவாலா ஊழல்கள், 1994-ல் சர்க்கரை ஊழல், 1996-ல் உர இறக்குமதி, மாட்டுத் தீவன ஊழல், 1997-ல் நிலபேர பங்கு ஊழல், 2002-ல் வீட்டு வர்த்தக ஊழல், 2006-ல் பஞ்சாப் சிட்டி சென்டர் மோசடி, 2008-ல் வருமானவரி ஓய்வூதியக் கொள்ளை, 2010-ல் ஐ. பி. எல் கிரிக்கெட் ஊழல் என்று ஆண்டு தவறினாலும் தவறாத ஊழல், மோசடிகள், கொள்ளைகள் அரங்கேறி வருகின்றன. பருவமழை பொய்த்தாலும் பொய்க்கலாம், ஊழலும் கொள்ளையும் பொய்க்காது என்ற புதுமொழியை சமகால ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு, 2-ஜி அலைக்கற்றை மோசடிகள் மெய்ப்பித்துள்ளன. அந்த சாதாரண பெண்மணி கேட்டது போல், எத்தனை நடந்திருந்தாலும், எவரிடமிருந்தும் சொத்து பறிக்கப்பட்டதாகவோ யாரொருவரும் தண்டனை பெற்றதாகவோ இல்லை. ஆட்சி மன்றங்களும், வழக்கு மன்றங்களும் பாதுகாப்புக் கேடயங்களாய் இருக்கின்றன. முன்னாள் தமிழக நிதியமைச்சர் நெடுஞ்செழியன், ‘‘வழக்கு முடிந்து தீர்ப்பு வருமுன்னே நான் இறந்து போய்விடுவேன்’’ என்று சொன்னது போல், பலர் இறந்து போயிருக்கிறார்கள்

மக்களாட்சி அரசியலை எத்திசையில் கொண்டு செல்வது என்ற உயர்ந்த முடிவை எட்ட வேண்டிய தருணமிது.

உலகில் மக்களாட்சி நடைமுறைக்கு வந்தது 1871ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் பின்னரே. பிரெஞ்சுப் புரட்சியின் தொடர்ச்சியாய் உருவான ‘பாரிஸ் கம்யூன்’ இதற்கு ஒரு காரணமாய்-மூல காரணமாய் அமைந்தது. மக்களின் அதிகாரம் (கம்யூன்) நிலை நாட்டப்பட்ட பிரெஞ்சுப் புரட்சியில் ஆலைகள், நிறுவனங்கள் போன்ற முதலாளிகளின் கையிருப்புகளை கைப்பற்றிய மக்கள் அவர்களே நிர்வகிக்கத் தொடங்கினர். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கைவசப்படுத்தியவர்கள் அதைக்கொண்டு செலுத்தும் நிர்வாகத் திறன் பெற்றவர்களாயில்லை. அதில் போதிய பயிற்சி பெற்றவர்களும் அரிதாக இருந்தனர். அதிகாரத்தைக் கையாள்வது, தக்க வைத்துக் கொள்வது தொடர்பாய் அவர்களுக்கு பரிசோதனைக் காலமாக ஆகியது. இந்த இடைவெளியில் ஆளும் வர்க்கத்தினர் மீண்டும் அதிகார பீடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பாரிஸ் கம்யூன் என்ற மக்கள் நிர்வாக அமைப்பின் தோல்விக்கு, இது மட்டுமல்ல. மக்களதிகாரம் என்றநெருப்பு தங்களை முழுமையாகச் சூழுமுன் அதிலிருந்து தப்பிக்கும் ஒரு உபாயத்தை பிரித்தானிய ஆளும் வர்க்கம் முன் வைக்கிறது.

‘‘உங்களுக்கு அதிகாரம்தானே வேண்டும். அதைத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் மூலம் பெறுவீர்கள்’’ Continue reading “ஒன்றரை நூற்றாண்டு மக்களாட்சி உடைப்பும் புதிய மக்களாட்சி உருவாக்கமும்”

புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சு.

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலை.. புலவர் முஸ்தபா பேச்சு
அபுதாபியில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் ஒலி, ஒளி குருந்தகடு வெளியீடும் இன்னிசை மாலையும் நிகழ்ந்ததில் ஒரு பகுதி

ஈ.வே.ரா. பெரியாரின் வாழ்த்து மடல்

“தாருல் இஸ்லாம்” என்ற வாரப் பத்திரிகையையும், இதன் ஆசிரியர் திரு. தாவூத்ஷா, பி.ஏ., அவர்களையும் நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும் நாம் கழிபேருவகை அடைகின்றோம்.

 

“தாருல் இஸ்லாம்” பத்திரிகையும், இதன் ஆசிரியரும் நம் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். நாம் எப்படி இந்து சமயத்தில் மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால், சாத்திரங்களின் பெயரால், புராணங்களின் பெயரால், பழக்க வழக்கங்களின் பெயரால் நடைபெறும் புரட்டுகளை வெட்ட வெளிச்சம் ஆக்குகின்றோமோ, அத்தன்மைத்தே “தாருல் இஸ்லாம்” பத்திரிகையும் இதன் அறிவிற்சிறந்த ஆசிரியரும் தம் சமயத்தின் பேரால் உள்ள புரட்டுகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழித்து, மக்கள் அறிவு வளர்ச்சியையும், சுய மரியாதையையும் அடையத் தம்மாலான முயற்சி செய்து வருகின்றார்கள்.

இந்நிலையிலும் இக்கொள்கையிலும் உள்ள பத்திரிகைகளோ, பத்திரிகாசிரியர்களோ பாமர மக்களின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் எளிதில் பெற்றுவிட முடியாது என்றே சொல்ல வேண்டும். எனினும், உறுதியும் பயமின்மையும் பிடிவாதமும் கொண்டு நடந்து வந்தால், மக்கள் உண்மை நிலை உணரத்தக்க அறிவுநிலை அடைந்தவுடன் அக்கொள்கைகள் பயனளிக்காமற் போகாவென்பது நமது துணிபு.

இம்முடிவுக்கு எடுத்துக்காட்டாக நமது “தாருல் இஸ்லாம்” பத்திரிகையையும், இதன் ஆசிரியருமாகிய நமது நண்பர் ஜனாப் பா.தாவூத்ஷா சாகிபு அவர்களையும் சொல்லலாம். எப்படியெனின், ஜனாப் தாவூத்ஷா அவர்கள் நமது நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான பத்திரிகாசிரியர்கள் போல யாதொரு கொள்கையுமற்று வெறும் வயிற்றுப் பிழைப்பையும் தம் சுயநல வாழ்க்கையையுமே கருத்தாகக் கொண்டு பத்திரிகை நடத்த முன் வந்தவரல்லர். இவர் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர். அதிகாரத்தில் மதிக்கத் தகுந்ததான மாஜிஸ்திரேட் உத்தியோகத்தில் இருந்தவர். நாட்டினுடையவும், சமூகத்தினுடையவும் சுய மரியாதைக்குப் பெரிய ஆபத்து நேர்ந்திருக்கின்றது என்பதை அவர் உணர்ந்தவுடன் சட்டென்று தம் உத்தியோகத்தை ராஜிநாமா கொடுத்து உதறித் தள்ளிவிட்டுச் சற்றும் முன்பின் யோசியாமல் பொதுத் தொண்டில் இறங்கிவிட்டவர். இவர் இதுவரை உத்தியோகத்திலேயே இருந்திருந்தால் குறைந்த அளவு மாதம் 600, 700 ரூபாய் சம்பளம் பெறக்கூடிய ஒரு டிப்டி கலெக்டராகவாவது, பிரசிடென்சி மாஜிஸ்திரேட்டாகவாவது வந்திருப்பார். Continue reading “ஈ.வே.ரா. பெரியாரின் வாழ்த்து மடல்”

காங்கிரசுடன் கூட்டணியை முறிக்க வேண்டும்: தி.மு.க.வினர் ஆவேசம்

“காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறிக்க வேண்டும்” என்று திமுக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் ஆவேசமாகக் கூறியுள்ளனர்.

 

கோவையில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் காங்கிரசுடனான கூட்டணி குறித்தும் பேசினர். தி.மு.க. எம்.பி.க்கள் கைது செய்யப்பட காங்கிரஸ்தான் காரணம். எனவே கூட்டணியில் தொடர வேண்டாம் என்று தி.மு.க.வினர் ஆவேசமாக பேசினார்கள்.

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. முக்கிய அங்கம் வகிக்கின்ற போதிலும் மத்திய அரசின் வசம் உள்ள காங்கிரஸ் உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.ஐ. தி.மு.க. எம்.பி.க்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ் கட்சி தெரிந்தே துரோகம் செய்துள்ளது. எனவே காங்கிரசுடன் கூட்டணியைத் தொடரக் கூடாது என்று மேலும் சிலர் கூறினர். காங்கிரசார் தி.மு.க.வினர் மூலம் பலன் அடைந்து விட்டு தி.மு.க.வைக் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

காங்கிரசுடனான உறவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேறு சில தி.மு.க.வினர் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.

Source : http://www.inneram.com/

சமச்சீர் கல்விக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தொடர்ந்து, இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை  விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த திங்கள்கிழமையன்று சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்கான  சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டே தொடங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இத்தீர்புக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கக் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால் தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும் 1 முதல் 10 வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கும் எதிர் வரும் ஆகஸ்டு 2ஆம் தேதிக்குள், பாடப் புத்தககளை வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின்  இறுதி விசாரணை எதிர்  வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : http://www.inneram.com

மனைவி என்னும் துணைவி

மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி

Continue reading “மனைவி என்னும் துணைவி”

திமுகவுக்கு ஜால்ரா அடிக்க என்னால் முடியாது: இளங்கோவன்

தூத்துக்குடி வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தபோது கூறியதாவது:

காமராஜர் தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியவர். இன்று இளைஞர்கள் சிறந்த கல்வி கற்று 50 ஆயிரம், 60 ஆயிரம் என சம்பளம் வாங்கும் நிலையில் உள்ளனர் என்றால் இதற்குக் காரணம் காமராஜர்தான்.

9 ஆண்டுகள் ஆட்சி செய்து 3 பிரதமர்களை உருவாக்கியவர். சிலர் காமராஜர் ஆட்சியைத் தருகிறேன் என்று கூறுகின்றனர். இதனை எப்படி காங்கிரஸ்காரர்கள் பொறுத்துக் கொள்ள முடியும். காங்கிரசை யாரும் அழிக்க முடியாது. பெரிய பாரம்பரியம் அதற்கு உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதிலிருப்பவர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு.

ஆனால் காங்கிரசிலிருந்து வெளியே சென்றால் எங்கும் மரியாதை கிடைக்காது. திமுகவுடன் கூட்டணி தேவையில்லை என்றும் உள்ளாட்சித் தேர்தலிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் தொண்டர்கள் விரும்புகின்றனர்.

திமுகவுக்கு சில பேர் ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பதைப்போன்று என்னால் ஜால்ரா அடித்து கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து மத்திய அமைச்சர் வாசனிடம் பேசியுள்ளேன். தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்துவேன். காங்கிரசிலுள்ள முக்கியப் புள்ளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம். அனைவருக்கும் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று நமது செல்வாக்கை மக்களிடம் நிரூபிப்போம். Continue reading “திமுகவுக்கு ஜால்ரா அடிக்க என்னால் முடியாது: இளங்கோவன்”

தூய்மை – 100%

தூய்மை – 100%

தங்கம் என்பது ஒரு தனிமையான கனிப்பொருள்: உலக மக்கள் யாவராலும் போற்றப்படும் உலோகம். உலக நாடுகள் அத்தனையும் தங்கள் புழக்கத்திலுள்ள நாணயமாற்று விகிதத்தை இந்தத் தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிட்டே நிலைநிறுத்துகின்றன. இப்படிப்பட்ட விலையுயர்ந்த மதிப்புமிக்க உலோகம் 100க்கு 100 தூய்மையுடன் நமக்குக் கிட்டுவதில்லை. ஒரு துண்டு தங்கத்தை நாம் எத்தனை வகையான ரசாயன சுத்திகரிப்புக்கு அதி கவனத்துடன் உட்படுத்திய போதினும், காற்றில் மிதக்கும் தூசு, உருக்கும் கருவியிலுள்ள அழுக்கு அல்லது புழுதி அதில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. எனவேதான், Continue reading “தூய்மை – 100%”

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – அவன் யாருக்காக கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – அவன்

யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை

ஊருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை

ஊருக்காக கொடுத்தான்
Continue reading “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – அவன் யாருக்காக கொடுத்தான்”

வரி உயர்வு – சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல்: கருணாநிதி

பட்ஜெட் தேதி அறிவித்த பின்னர் வரிகளை உயர்த்தியிருப்பது சட்டசபை உரிமையைப் பாதிக்கும் செயல் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கை வருமாறு:

கேள்வி:-ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கும் வகையில் ஜெயலலிதா அரசு திடீரென வரி விதிப்பில் மாற்றத்தைச் செய்துள்ளதே?

பதில்:-ஜெயலலிதா அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 4-ம் நாள் காலை 10.40 மணிக்கு பேரவையிலே வைக்கப்படுமென்று ஆளுநரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அது ஏடுகளின் வாயிலாக தெரிவிக்கப்பட்டும் விட்டது.

வழிவழியாக பின்பற்றப்பட்டு வரும் சட்டப்பேரவை மரபுகளின்படி சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், அதற்குப்பிறகு அரசின் முக்கிய அறிவிப்புகளோ – நிதித்துறையில் வரிகள் தொடர்பான மாற்றங்களோ செய்வதில்லை. அப்படி செய்யப்படுமானால் அது அவையின் உரிமையை பாதிக்கக்கூடியதாகும். ஆனால் இன்றைய நாளேடுகளில் ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கும் வகையில் வரி விதிப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு அது இன்று முதல் (12-7-2011) அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் ரூ.1200 கோடி அளவிற்கு மதுபானங்களின் மீதான வருவாய் கூடுதலாக கிடைக்குமளவிற்கு அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. புதிய மருத்துவ திட்டம் ஒன்றும் தொடங்கப்படவுள்ளதாக முதலமைச்சராலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பேரவையின் உரிமையை பாதிக்கின்ற செயல்களாகும். தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக இந்த அளவிற்கு வரி உயர்வே செய்யாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் ரூ.3,900 கோடிக்கு வரி விதிப்பு. மக்களே தேடிக்கொண்ட கொடுமை இது. Continue reading “வரி உயர்வு – சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல்: கருணாநிதி”