RSS

Monthly Archives: February 2012

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

சமீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் அமைப்பான “Inter-Parliamentary Union”, சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்.

துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள்.

தொடர்ந்து படிக்க…http://www.ethirkkural.com/2012/02/blog-post_28.html

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Advertisements
 

Tags: , ,

படிக்கட்டுகள்… ஏற்றம் ..

வாக்கு கொடுத்தல்.

எந்த விதமான விசயமாக இருந்தாலும் சரி வியாபார விசயங்கள் என்று வந்து விட்டாலே ‘வாக்கு” என்பது மிக முக்கியம். இதில் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் அதே முக்கியத்துவம்தான். ஏனெனில் வாக்குக்கு பணமதிப்பீடு என்று ஒன்று இருக்கிறது.

பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவை எந்த அளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இனிமேல் அப்படியே அந்தரத்தில் தான். உங்கள் நல்ல பெயர் கெட்டு குட்டிச்சுவராக எளிதான வழி….’ கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் நடந்து பாருங்கள்” . இதை ஏன் இவ்வளவு நெகட்டிவ் ஆக எழுதி புரிய வைக்க வேண்டும் என நினைக்கலாம். இதில் ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயர்களும் புயலில் அடித்துக்கொண்டு போகும் மரம் மாதிரி நம் பெயரும் வேரோடு அறுத்து எறியப்படும் எனும் நிதர்சனம்தான்.

தொழிலில் மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும் வாக்கு மிக முக்கியம். தொடர்ந்தாற்போல் உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளைகள் கேட்கும் பொருட்களை ‘ வாங்கித்தர்ரேன்’ என சொல்லி அதை வாங்கி கொடுக்காமல் இருந்து பாருங்கள்… வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்ப்பு கூட நமக்கு இருக்காது.

 • இன்னும் சொல்லப்போனால் சில பெரிய தொழில்களில் எத்தனையோ ப்ராஜக்ட் நடந்தேராமல் போனதற்கு காரணம் அதை வழிநடத்தும் அந்த கார்ப்பரேட் லீடர்களின் வாக்கு சுத்தமில்லாமல் இருப்பதுதான். இங்கு [மலேசியாவில்] சில நிறுவனங்கள் சாலை / நெடுஞ்சாலை கட்ட கான்ட்ராக்ட் எடுக்கும்போது அதற்கான அறிவிப்பு பலகையில் [Project Board] இல் வேலை தொடங்கும் தேதி / முடிவுறும் தேதி என குறிப்பிடுவார்கள். அதில் இப்போதைக்கு 100 % ப்ராஜக்ட், முடிவுறும் தேதிக்கு முன்னால் ப்ராஜக்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடுவிடுகிறது. இங்குள்ள இது போன்ற நிறுவனங்கள் ‘முடிவுறும் தேதி” க்குள் வேலையை முடிப்பதைத் தனது நிறுவனத்தின் கெளரவமாக கருதுகிறார்கள். நிறுவனங்களுக்கே இப்படி என்றால் ‘உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.

  Image maker

  நமது எண்ண ஒட்டங்களை ஒரு வெண்திரைக்கு ஒப்பிடலாம். அதில் நீங்கள் என்ன விதமான காட்சிகளையும் ஓட்டலாம்.

  * ஒரே சோகம் / பணப்பற்றாக்குறை.
  * ‘என்னை நிந்தித்து விட்டார்கள், / “என்னை வச்சி முன்னேறி என் முதுகில் குத்திட்டாய்ங்க!!” [பேக்ரவுன்ட் ம்யூசிக் யாரை வேண்டுமானாலும் நீங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் ]
  * அல்லது
  * நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
  * எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
  * எனக்கு நல்ல குடும்பத்தையும்,நண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.

  இப்படியும் காட்சிகளை திரும்ப திரும்ப ஓட்டலாம் . The CHOICE is YOURS.

  வாழ்க்கையில் முன்னேர ஏணிமரத்தையும் , எஸ்கலேட்டர்களையும் நாம் தயாரித்துக்கொண்டிருக்கும்போது நம் கைகள் நமக்கு ‘பள்ளம்’ தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கு நம் கைகள் என சொன்னது நமது எண்ணத்தை.

  முதன் முதலில் நாற்காலி எப்போது கண்டு பிடித்து இருப்பார்கள்?. தரையில் உட்கார்வதில் சிரமத்தை உணர்ந்த போது. அந்த நாற்காலியை வடிவமைத்தவர் நிச்சயம் நம்பியிருப்பர். நாற்காலியில் உட்கார்ந்தால் சிரமம் குறையும் என்று..அப்படியானால் நாற்காலியை செய்து முடிக்குமுன் அதன் தோற்றத்தை அவர் பார்க்க முடிந்தது. அப்படித்தானே?….அப்படி யென்றால் உங்களின் சந்தோசமான / ஆரோக்யமான / வசதியான வாழ்க்கையை பார்க்க உங்களினாலும் முடியும். அப்படி பார்க்க முடியவில்லை என்றால் தடையின் காரணம் நாமாகத்தான் இருக்க முடியும். பதிலை வெளியில் தேடி புண்ணியமில்லை எனவே நீங்கள் எப்படி உருவாகப்போகிறீர்கள் என்பதை புத்தாக்கம் [CREATE] செய்வதும் “நீங்கள்” தான். Creativity யின் வகைகளை பிறகு வரும் வாரங்களில் படிக்கலாம்.

  உங்களைப்பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து ரிஜிஸ்டராகும் ப்ராசஸ் Sub conscious Mind க்குள் பதிவாகி விட்டால் அதை மீறி நீங்கள் செயல்படுவதில்லை. மற்றும் தொடர்ந்து எண்ணப்படும் எண்ணங்கள் செயலுருவமாகிறது. எனவே மனைவியை கைநீட்டி அடித்துவிட்டு சில [வீர] கணவன்மார்கள் “திடீர்னு’ ஆத்திரம் வந்துடுச்சி என்பதெல்லாம் போலீஸ் பயன்படுத்தும் Lie Detector கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.

  Image Maker ல் எளிய வழியும் உண்டு. அதுதான் copycat. மற்றவர்கள் செய்வதை அப்படியே செய்து முன்னேறுவது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அது வொர்க் அவுட் ஆகாது என அர்த்தமில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அப்படியே அதை நாமும் செய்வது. இதற்கு நாம் ஒருவரை Mentor ஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் எப்படி தொழில் செய்யும்போது பேசுகிறார்/ எப்படி உடை உடுத்துகிறார் / இப்படி எல்லாவற்றையும் ஈயடிச்சான் காப்பியடிப்பதுதான் இதன் சிஸ்டம். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைக்கும் சாதனை களை ஒரு 70% நிறைவேற்றிவிடலாம். ஒன்றும் செய்யாமல் வழியும் தெரியாமல் ‘பேய்முழி” முழித்துக் கொண்டிருப்பதற்கு இது தேவலாம் எனும் ரேஞ்சில்தான் பெரும்பாலான விற்பனை நிறுவனங்கள் Multi Level Marketing / தொழில்துறைகள் / வெள்ளைக்காரர்களின் செமினார்கள் சொல்லிக்கொடுக்கிறது.

  எனக்கு ஏன் இதில் உடன்பாடில்லை என்கிறேன் என்றால்.. நமது வேலைகளில் தனித்தன்மை போய்விடும். உங்களுடைய ஸ்டைல் என்று எதையும் சொல்ல முடியாது.

  எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை ” Second Best’ என்று சொல்லும்” அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான்.

  உங்களை தாழ்த்தி அவரை உயர்த்தி இறைவன் படைத்திருப்பான் என்று சொல்ல / எழுத என்னால் முடியாது.

  மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை , ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.

  ஏற்றம் தொடரும்…
  -ZAKIR HUSSAIN
  http://adirainirubar.blogspot.com/2012/02/8_28.html

   
 • Tags: , ,

  ”அறிவின் திறவுகோல்” அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்…!

  ”அறிவின் திறவுகோல்” அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்!
  குழந்தைகள் பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள்.

  அவர்களுக்கான பிடித்தது பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு குழந்தைகளுக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது. பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.

  தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள். இளம் வயதுபிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வளர்ந்தபின் தான் அப்பாவின் கண்டிப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதை உணர முடியும்.

 • இந்த குழந்தைகள் அப்பாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

  நான்கு வயதில் குழந்தைகள்: ஆ! என் அப்பாவை போல ஒருவர் உண்டோ இந்த உலகில் எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.

  ஆறு வயதில் அதே குழந்தை: அடடா, என் அப்பாவிற்கு தெரியாத விஷயமே கிடையாது! என்று நினைக்கிறது.

  பத்து வயதில்: ”ஒ..அப்பா நல்லவர்தான்! ஆனால் ரொம்ப முன்கோபகாரர். ஆனால் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்துகூட இவருக்கு தெரியவில்லையே! ஹூம்.”

  பன்னிரெண்டு வயதில்: நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா என்னிடம் நல்லபடியாகதானே நடந்து வந்தார்….ஆனால் இப்போது ஏன்………. இப்படி?

  பதினாறு வயதில்: சே! அப்பா சுத்த கர்னாடகப் பேர்வழி. காலத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தரியவில்லை சொன்னாலும் புரியவில்லை….

  பதினெட்டு வயதில்: இதென்ன! வர வர இந்த அப்பா ஏன் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். ஒரு விபரமே தெரியாதவர்.

  இருபது வயதில்: அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் தாங்க முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை காலம் வாழ்ந்து வருகிறாளோ?

  இருபத்தைந்து வயதில்: என்ன எதெற்கெடுத்தாலும் எதிர்ப்புதானா? எப்போதுதான் இந்த அப்பா உலகத்தை புரிந்துகொள்ளப் போகிறாரோ? கடவுளே நீ தான் என்னை காப்பாற்றனும்.

  முப்பது வயதில்: (கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்கு அப்புறம்): அப்பா எப்படித்தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனைகளை சமாளித்தாரோ (ஆச்சிரியம்)

  முப்பத்தியைந்து வயதில்: ஒ மைகாட்! வர வர இந்த சிறுபையனை சமாளிக்கவே முடியவில்லையே! நாங்களெல்லாம சிறுவயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்! இப்பபாரு… வாலுங்க இது

  நாற்பது வயதில்: ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களை அப்பா சொல்லி கொடுத்தார். இப்போது நினைத்து பார்த்தாலும் குழந்தைகளை அப்பா எப்படி கண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் எனபது மிகவும் அதிசயமாகவே இருக்கின்றது.

  நாற்பதைந்து வயதில்: எங்கள் குடும்பத்தில் உள்ள ஆறு பேர்களையும் அப்பா எப்படித்தான் வளர்த்து ஆளாக்கி முன்னுக்கு கொண்டு வந்தாரோ என்பதை நினைத்தால் மிகவும் வியக்கதக்கதாகவே இருக்கின்றது.

  ஐம்பது வயதில்: இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கே மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அப்பா எங்களை வளர்க்க நிச்சயமாக படாதபாடு பட்டிருப்பார்.

  ஐம்பதைந்து வயதில்: அப்பாவிற்குதான் எவ்வளவு முன்யோசனை. எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இந்த வயதிலும் அவர்எவ்வளவு கட்டுப்பாட்டுடன் தன் காரியங்களை செய்து வருகிறார்.அவரல்லவா மனிதன்.

  அறுபது வயதில்: (கண்ணீருடன்) உண்மையில் என் அப்பாவை போல இந்த உலகத்தில் தலைசிறந்த மனிதர் யாரும் இருக்கவே முடியாது.

  இளைஞர்களே… இளைஞிகளே!

  நாமும் வருங்காலத்தில் தந்தையோதாயோ ஆவோம் என்பதை மனதில் வைத்து, குழந்தைகளுக்கு எந்த தாய் தந்தையும் கெடுதல் செய்ய மாட்டார்கள் என்பதையும் மனதில்வைத்து நம்மை இந்த உலகில் உலவவிட்ட நம் தாய் தந்தையிடம் பண்புடனும் பணிவன்புடனும் நடந்து கொள்வோம்.

  அன்புடன்,

  மதுரை தமிழ்காரன்
  Source : http://nidur.info/

   
 • Tags:

  ஒரு நாளைக்கு ஒரு தரம்


  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்
  182. ஒரு நாளைக்கு ஒரு தரம்

  பல்லவி
  ஒருநாளைக் கொருதரம்
  ஒருநொடிப் பொழுதேனும்
  உன்னைப் படைத்தவனை
  எண்ணிச் சுகித்த துண்டோ? மனமே! (ஒரு)

  அநுபல்லவி
  திருநாளும், தேரும்என்று தேடி யலைந்தல்ல
  சிந்தனை அலையாமல் தியானத்தில் நிறுத்தியே (ஒரு)

  சரணங்கள்
  விடியுமுன் விழித்தனை
  வெளுக்குமுன் வீட்டை விட்டாய்
  வெவ்வேறாம் இடத்துக்கு
  வெளவால்போல் ஓட்டமிட்டாய்
  உடலும் மனமும் சோர்ந்து
  ஓய்ந்திட வீடுவந்தும்
  உண்ணும் பொழுதுங்கூட
  எண்ணம் நிலைப்பதில்லை. (ஒரு)

  அரைக்காசுக் கானாலும்
  ஒருநாள் முழுதுங்காப்பாய்
  ஆயிரம் பேரையேனும்
  அலுப்பின்றிப் போய்ப்பார்ப்பாய்
  உரைப்பார் உரைகட்கெல்லாம்
  உயர்ந்திடும் செல்வனை
  உன்னுள் இருப்பவனை
  எண்ணிட நேரமில்லை! (ஒரு)

  சிலநாளைக் கதிகாரம்
  செய்யும் ஒருவர்க்கஞ்சிச்
  செய்யச்சொல் வதையெல்லாம்
  செய்வாய்நீ பல்லைக்கெஞ்சி;
  பலநாளும் ஜென்மமெல்லாம்
  பாலிக்கும் அதிகாரி
  பரமனை நினக்கவும்
  ஒருகணம் உனக்கில்லை! (ஒரு)

  ‘நாளும் கிழமை’யென்று
  நல்லவர் உரைத்தாலும்
  ‘நாளைக்கு ஆகட்டும்
  வேலை அதிகம்’என்பாய்!
  பாழும் பணத்தைத்தேடிப்
  படும்பாடு கணக்கில்லை.
  பகவானை எண்ணமட்டும்
  அவகாசம் உனக்கில்லை! (ஒரு)
  Source : http://library.senthamil.org/243.htm

   

  Tags:

  முதல் காதல், முதல் கவிதை


  காதல் தொடர்பான சொற்கள் நான்கைந்தை வரிசையாக சொல்லிப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன். ‘கவிதை’ என்கிற சொல்லை கண்டிப்பாக சொல்லியிருப்பீர்கள். காதலுக்கும், கவிதைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கவிதை எழுதாத அல்லது எழுத முயற்சிக்காத காதலன் எவனுமே உலகில் இல்லவே இல்லை. உலகின் முதல் காதலன் மட்டுமல்ல. முதல் கவிஞனும் ஆதாமாகத் தான் இருக்கக்கூடும்.

 • பெண்களுக்கு நிஜமாகவே கவிதை பிடிக்குமா என்கிற சந்தேகம் எனக்குப் பல வருடங்களாக உண்டு. கடும் குளிரடித்த, வெக்கையால் தொப்பை தொப்பலான, கோரஸாக கொசுக்கள் ரீங்காரமிட்ட.. என்று பலவகைகளில், காலப்பருவங்களில் வேறுபட்ட ஏராளமான இரவுகளை வீணடித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்து, அடித்துத் துவைத்து யோசித்ததில் ஒரே ஒரு உண்மை சட்டென்று பல்பிட்டது. நியாயமாக பார்க்கப் போனால் ‘யுரேகா’ என்று கத்திக்கொண்டு அம்மணமாக அன்று இரவு நான் தெருவுக்கு ஓடி வந்திருக்க வேண்டும். மாறாக ‘காயத்ரீ’ என்று அப்போது லவ்விக் கொண்டிருந்த ஃபிகரின் பெயரை உரக்கச் சொல்லிக் கொண்டே ஓடினேன். அதிர்ஷ்டவசமாக லுங்கி மட்டுமாவது இடுப்பில் இருந்தது. “மாரியாத்தா எம்புள்ளைக்கு பேய் புடிச்சிடிச்சி” என்று என் பின்னாலேயே அம்மாவும், “கிறுக்குப்பய மவனே!” என்று அப்பாவும் ஓடிவந்ததும் நினைவிருக்கிறது.

  நான் கண்டறிந்த உண்மை யாதெனில் பெண்களுக்கு ‘பாவனை’ அதிகம். சில விஷயங்களைப் பிடிக்கிறதோ இல்லையோ ரொம்பப் பிடிப்பதைப் போலவே பாவனை செய்வார்கள். சிவாஜி, மார்லன் பிராண்டோவையெல்லாம் மிஞ்சக்கூடிய நடிப்பு பெண்களுக்கு உண்டு. குறிப்பாக காதல் விவகாரங்களின் போது ஓவர் ஆக்டிங்குக்கு போய்விடுவார்கள். பெண்களுக்கு teddy bear பிடிக்கும் என்று கண்டறிந்து, காதலர் தினத்துக்கு பரிசாக முதன்முதலாக பரிசளித்த காதலன் எவனென்று கண்டுபிடித்து அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும். காதலனிடம் குழந்தைத்தனமான குணம் கொண்டவள் என்று வெளிப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு காதலியும் தனக்கு teddy bear பிடிப்பதாக நடிக்கிறாள். ஒரு பொம்மையின் விலை அநியாயத்துக்கு ஐநூறு ரூபாய் விற்கிறது சார். ஐஸ்க்ரீமே பிடிக்காத பெண் கூட “ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாமா?” என்று காதலித்ததும் கொஞ்சத் தொடங்கி விடுகிறாள். ‘அ ஆ இ ஈ’ படிக்கத் தெரியாத சர்ச்பார்க் பெண் கூட “ஐ லைக் பாலகுமாரன் ஸ்டோரீஸ்யா” என்று ஃபிலிம் காட்டுகிறாள். இதுமாதிரியான பாவனைகளில் ஒன்றுதான் அவர்களுக்குக் கவிதை பிடிப்பதும்கூட. அது எப்படி சார்? ஸ்டெல்லாவுக்கும் கவிதை பிடிக்கிறது, ஃபாத்திமாவுக்கும் கவிதை பிடிக்கிறது, பத்மினிக்கும் கவிதை பிடிக்கிறது. பெண்கள் எல்லோருக்கும் கவிதையைப் பிடிக்குமென்றால், கவிதைத் தொகுப்புகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி கவிஞர்கள் எல்லாம் அம்பானி ஆகியிருக்க வேண்டுமா, இல்லையா?

  கவிதை மீது இவ்வளவு obsession எனக்கிருப்பதை வைத்து, நான் ஒரு கவிஞனாகவோ அல்லது தீவிர கவிதை வாசகனாகவோ இருக்கக்கூடும் என்று இந்நேரம் நீங்கள் யூகித்திருக்கக்கூடும். உங்கள் மூளையில் தோன்றிய இந்த படிமத்தை உடனே delete keyயைத் தட்டி தயவுசெய்து அழித்துவிடுங்கள். குறிப்பாகக் காதல் தொடர்பான கவிஞர்களைக் கழுவில் ஏற்றவேண்டும், அந்தக் கவிதைத் தொகுப்புகளை நடுத்தெருவில் கொட்டி போகி எரிக்கவேண்டும் எனுமளவுக்கு நான் ஒரு கவிதை அந்நியன். இப்படிப்பட்ட என்னையே ஒருத்தி கவிதை மாதிரி எதையோ கிறுக்க வைத்துவிட்டாள் என்கிற கோராமையை எங்கு போய் சொல்வது?

  அது என்னுடைய வெற்றிகரமான முதல் காதல். முதல் முத்தமும் கூட என்று நினைக்கும்போது பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும்.. சனியன்.. இப்போது வெட்கம் பிடுங்கித் தொலைக்கிறது. மிகச்சரியாக பதினாறு வயதில் மலர்ந்த காதல். அந்த வயதில் வசீகரப்படுத்த வைக்கும் தோற்றப் பொலிவு எனக்கு இல்லாத நிலையில், அதை ஈடுக்கட்டும் வகையில், அவளை வசியப்படுத்த செய்த கோமாளித்தனங்களுக்கு அளவேயில்லை.

  பதிமூன்று வயதுப் பெண்ணுக்கு காதல் கவிதை பிடிக்கும் என்று யாராவது என் எதிரில் இப்போது சொன்னால், இடுப்பிலிருக்கும் ரிவால்வரை எடுத்து நெற்றிப்பொட்டை குறிவைத்து ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவேன். துரதிருஷ்டவசமாக காதல்வசப்பட்டிருந்த நான் அப்போது நம்பித் தொலைத்தேன். எனக்குள் இல்லாத கவிஞனை, இருப்பதாக எண்ணி பேப்பரும், பேனாவுமாக பாத்ரூம் போய் உட்கார்ந்தேன். அப்போது ஹைக்கூ பிரபலமாகிக் கொண்டிருந்த காலக்கட்டம். சுலபமாக எழுதிவிடக் கூடிய வடிவமென்பதால் ஹைக்கூவில் அவளை அசத்தலாம் என்பது என் திட்டம். எவ்வளவோ சிந்தித்தும், அவ்வப்போது சிறுநீர் வந்ததே ஒழிய, கவிதை வந்து தொலைத்தபாடில்லை. இரவு முழுக்க என் படைப்பாற்றலை பால் கறந்து முயற்சித்தும், படைப்புக்காம்புதான் இரத்தம் கட்டிக் கொண்டதே தவிர கவிதை சுரக்கவேயில்லை.

  தூக்கமின்றி எரிச்சலடைந்து சிவந்த கண்களோடு வகுப்பறைக்குச் சென்றால் மேத்ஸ் மாஸ்டர் எதையோ சுவற்றில் கிறுக்கி தாலியறுத்துக் கொண்டிருந்தார். கடைசி பெஞ்ச் என்பதால், டேபிளில் தலைவைத்து தூங்கிவிட்டேன். தூக்கம் வரத் தொடங்குவதற்கு முன்பே கனவு வந்துவிட்டது. கனவுக்கு நிறம் கருப்பு வெள்ளை. ஆனால் காதலிகள் வரும் கனவுகள் மட்டும் வண்ணமாய் தெரிவதாய் காதலன்களுக்கு அப்படியொரு மூடநம்பிக்கை. அன்றைய கனவில் வெள்ளுடையில் அவள் வந்தாள். அசத்தலான குரலில், மொழியில் ‘ஐ லவ் யூ’ சொன்னாள். பறக்கும் முத்தம் தந்தாள். ஒரு கதாநாயகனைப் போல ஸ்டைலாக அவளை நெருங்கினேன். கண்களாலேயே பேசினேன். அவள் நாணினாள். கோணினாள். உதட்டோடு உதட்டை நெருக்கமாக கொண்டுச் செல்ல அவள் விலகினாள். வற்புறுத்தினேன். ‘ணங்’கென்று மண்டையில் கொட்டு வைத்தாள். கனவென்றால் வலிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சுறாத்தனமாக வலித்தது. அனிச்சையாக ‘அனிதா’வென்று கத்திக் கொண்டு தலையைத் தடவ, இன்ஸ்டண்ட் பூரி மாதிரி டீக்கடை பொறை சைஸில் நடுமண்டை வீங்கியிருந்தது. கனவு எது, மெய் எது என்று புரியாத தருணம் அது. கண் திறந்துப் பார்த்தால் கட்டை டஸ்டர் வைத்து என் நடுமண்டையை பதம் பார்த்திருந்தார் மேத்ஸ் மாஸ்டர்.

  (அதையடுத்து நடந்த சோக நிகழ்வினை சொன்னால் இக்கட்டுரையின் காதல் சுவை கெடக்கூடும். என்னுடைய ரொமான்ஸ் மூட் ஸ்பாயில் ஆகும். எனவே அடுத்த மூன்று பாராகிராப்புகளை இங்கே தணிக்கை செய்கிறேன்)

  அந்தக் கனவால் விளைந்த பயன் யாதெனில், ஓரிரவு செலவிட்டும் என்னால் எழுத முடியாத கவிதையை ஓரிரு நொடிகளில் கண்டுகொண்டேன். அவள் பெயரைவிட சிறந்த கவிதையை என்னால் எழுதிவிட முடியாதென்று தெளிவு கண்டேன்.

  வகுப்பறைக்கு வெளியே முட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குப்பையாக கீழேக் கிடந்த ஒரு காகிதத்தில் என்னுடைய முதல் காதல் கவிதையை எழுதினேன்.

  அனிதா..
  இரு இமைகளை
  இறுகமூடி
  தேன்சுளை உதடு விரித்து
  Honey தா!

  (சுபம்)

  கட்டுரை ஆசிரியரின் பின்குறிப்பு : வாசகர்களே! இந்தக் கவிதை அனிதாவுக்கு பிடிக்கவில்லை, வாசித்துவிட்டு நம் இன்ஸ்டண்ட் கவிஞரின் முகத்தில் கொத்தாக காறி உமிழ்ந்திருப்பாள் என்பதையெல்லாம், அச்சு பிச்சுவென்று இம்மாதிரி ஆரம்பத்தில் சில காதல் கவிதைகளை எழுதிய நீங்களே இன்னேரம் யூகித்துவிட்டிருப்பீர்களே? விடுங்க பாஸூ. ALL IS WELL.

  (நன்றி : பண்புடன்.காம் காதலர்தின ஸ்பெஷல்)
  எழுதியவர் யுவகிருஷ்ணா

  என்னைப் பற்றி!
  ஆளப்பிறந்தவன் – ஆத்திரப்பட மாட்டேன்!
  Source : http://www.luckylookonline.com/2012/02/blog-post_16.html

   
 • Tags: , ,

  கம்ப்யூட்டர் டிப்ஸ் – புதியவர்களுக்காக

  by அப்துல் பாசித்

  கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினி வந்துவிட்டது. இதனால் கணினி பற்றித் தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர் டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.

 • 1. திரையில் உள்ளவற்றை பெரிதுப்படுத்திப் பார்க்க Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு + பட்டனை அழுத்துங்கள். சிறிதுப்படுத்த Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு – பட்டனை அழுத்துங்கள். அல்லது Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு மவுசில் உள்ள சக்கரத்தை முன்பக்கம், பின்பக்கம் நகர்த்தி செய்யலாம்.

  2. ஏதாவது ஒரு வார்த்தையை Select செய்வதற்கு அதன் மேல் டபுள் க்ளிக் செய்தால் Select ஆகிவிடும். ஒரு பாராவையே Select செய்வதற்கு அதில் தொடர்ச்சியாக மூன்று க்ளிக் செய்தால் அந்த பாரா (Paragraph) Select ஆகிவிடும்.

  3. இணையத்தளங்களை பார்க்கும் போது பக்கத்தின் மேலே செல்வதற்கு Page Up பட்டனையும், கீழே செல்வதற்கு Page Down பட்டனையும் பயன்படுத்தலாம். அல்லது கீழே செல்வதற்கு Space Bar பட்டனையும், மேலே செல்வதற்கு “Shift + Space Bar” பட்டன்களையும் பயன்படுத்தலாம்.

  4. ஒன்றிற்கும் மேற்பட்ட திரைகளை திறந்து வைத்திருக்கும் போது, ஒரு திரையில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு “Alt + Tab” பட்டங்களை அழுத்தவும்.

  5. நீங்கள் கோப்புகளை Delete செய்தாலும் அது Recycle Bin பகுதியில் இருக்கும் வரை அழியாது. அங்கு சென்று Empty Recycle Bin என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

  6. நீங்கள் அழிக்க நினைக்கும் கோப்புகளை Recycle Bin பகுதிக்கு செல்லாமல் முற்றிலுமாக அழிக்க நினைத்தால் “Shift + Delete” பட்டங்களை அழுத்தவும்.

  7. இணையத்தளங்களின் முகவரிகளைக் கொடுக்கும் போது முழு முகவரியையும் கொடுக்கத் தேவையில்லை. .com என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து “Cntrl + Enter” பட்டன்களை அழுத்தினால் போதும். மேலும் .net என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து “Shift + Enter” பட்டன்களை அழுத்தினால் போதும்.

  8. முக்கியமான சில குறுக்கு விசைகள்:

  Cntrl + A – அனைத்தையும் Select செய்வதற்கு
  Cntrl + C – Copy செய்வதற்கு
  Cntrl + X – Cut செய்வதற்கு
  Cntrl + V – Paste செய்வதற்கு

  9. ஏதாவது சுட்டிகளை(Links) வேறொரு புதிய Window அல்லது Tab-ல் பார்க்க அதன் மேல Righ click செய்து “Open link in new tab” அல்லது “Open link in new window” என்பதை க்ளிக் செய்யலாம்.

  10. கணினி திரையில் தெரிபவற்றை ஸ்க்ரீன்ஷாட் (ScreenShot) எடுப்பதற்கு உங்கள் கீபோர்டில் PrtSc (Print Screen) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே கணினியில் திரையில் உள்ளவைகள் Copy ஆகிவிடும்.

  பிறகு MS Paint-ஐ திறந்து Cntrl+V அழுத்தி Paste செய்யுங்கள். திரையில் தெரிந்தவை படமாக வந்துவிடும். அதில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் மாற்றங்கள் செய்து, பின் Save கொடுங்கள்.

  கணினி அடிப்படைகளை ஆங்கிலத்தில் எளிதாக தெரிந்துக் கொள்வதற்கு: http://tech.tln.lib.mi.us/tutor/welcome.htm

  புதிய ப்ளாக் அறிமுகம்:

  ஆன்ட்ராய்ட் பற்றி எழுதுவதற்காக Park Android என்ற தனி ப்ளாக் தொடங்கியுள்ளேன். தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது. இறைவன் நாடினால் இதில் ஆன்ட்ராய்ட் பற்றிய செய்திகள், அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.

  தள முகவரி: www.parkandroid.com
  Source : http://www.bloggernanban.com/2012/02/computer-tips.html

   
 • Tags:

  கமலுடன் இணையும் ரஜினி – மீண்டும் மருதநாயகம்

  தனது கனவுப்படமான மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் பேசியுள்ளார்.

  இத்தனை நாள் தாமதத்திற்குப் பிராயசித்தமாக தனது ஆருயிர் நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த்தையும் அதில் பிரதான பாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  மும்பை இதழொன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை கமல் அளித்துள்ளார்

  மருத நாயகம் யூசுப்கான் என்பவர் மதுரையை ஆண்ட குறுநில மன்னர். அவருடைய வரலாற்றை படமாக எடுக்க கடந்த 15 வருடங்களுக்கு முன்பே கமலஹாசன் முயன்றார். பிரிட்டிஷ் அரசியே வந்து தொடங்கிவைத்த அப்படம் எடுக்கும் திட்டம் பின்னர் பொருளாதாரம் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கே படத்துக்கான முதலீடாக 50 கோடி ரூபாய்கள் தேவை என்று கமலஹாசன் கூறியிருந்தார்.

 • மீண்டும் தொடங்கப்பட உள்ள இப்படத்தில் “மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். . இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது.

  ரஜினி கமலை சேர்த்து நடிக்க வைத்தால் சரிவருமா? என்று எல்லோரும் யோசித்துக்கொண்டேயிருக்கிறார்கள். சிலகாலமாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் ஆரம்ப காலங்களில் நாங்கள் இருவரும் பத்துப் படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்திருக்கிறோம்.” என்ற கமல் “ரஜினி கமல் இணைந்து நடிப்பு” என்ற பூனைக்கு தானே மணி கட்ட முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  எப்படியும் கமல்தான் மருதநாயகம் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பார். அப்படியானால் ரஜினிக்கு அதைவிட முக்கியத்துவம் குறைவான வேடமாகத் தானிருக்கும். அதை ரஜினி ஏற்றுக்கொள்வாரா? நட்புக்காக ரஜினி ஏற்றுச் சம்மதித்தாலும் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? என்பது இங்கே வினாக்குறியே.
  Source : http://www.inneram.com/news/cinema-news/marutanayakamagainkamal-rajini-3114.html

   
 • Tags: