இரவுகளின் தாகித்த நாவு..!

இரவுகளின் தாகித்த நாவு..!
கொசுவலைக்கும் சுவற்றிற்கும் நடுவே
சிக்கிக்கொண்ட கொசுக்களை
ஏறக்குறைய கொன்றாயிற்று.
கட்டிலுக்குக் கீழேயும்
அலமாரியின் சந்துகளிலும்
எலிகள் நடத்துகின்றன
ஒரு சின்ன சாம்ராஜ்ஜியம். Continue reading “இரவுகளின் தாகித்த நாவு..!”

அந்த நாள் ஞாபகம்!

Vavar F Habibullah

டாக்டர்.ஜபருல்லா..
சில நண்பர்களை அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது. அந்த நாட்களில் தன் வெண்கல குரலால், பாடகர் சவுந்தரராஜன் தத்துவ பாடல்களை
அதே தொணியில் பாடி தன் நண்பர்களை மகிழ்வித்த வித்தகர் அவர்.
அம்பை சவுந்தரராஜன் என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு.
பாடி பில்டிங் தொட்டு மருத்துவத்தின் அனைத்து துறைகளிலும் தனித்துவம்
பெற்ற சர்வகலா வல்லவர் அவர். கல்லூரி சேட்டைகளிலும் அவர் பாணி
அலாதியானது.இவர் கலந்து கொள்ளாத மிஸ்டர் மெடிக்கோ போட்டிகள்
மதுரை மருத்துவக் கல்லூரியில் அரங்கேறியதில்லை. Continue reading “அந்த நாள் ஞாபகம்!”

நாங்கள் ஒன்றுப்பட்டக் குடும்பம்.

Mohamed Salahudeen

சிங்கப்பூர் பரப்பளவில் மிகச் சிறிய நாடுதான் ஆனால் உலகின் பல பெரிய நாடுகள் இந்த நாட்டிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமானத் திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது.
எங்கே மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கே மக்களின் செயலூக்கமும் திறனும் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது.
இங்கே மூன்று இன மக்கள், நான்கு பெரும் மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், பிணக்குகள் இல்லை.
மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் அரசு அக்கரையோடுச் செயல்படுகிறது.
மக்களிடமும் அந்த எண்ணம் இருக்கிறது.
நான் பயணித்தக் காரில் காரோட்டி வந்த சீனப் பெண்மணி சொன்ன வார்த்தை இது.
” we are united family la”
நாங்கள் ஒன்றுப்பட்டக் குடும்பம்.
கேட்பதற்குத்தான் எத்துணை மகிழ்ச்சியாய் இருக்கிறது. Continue reading “நாங்கள் ஒன்றுப்பட்டக் குடும்பம்.”

கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…

no-valentines-dayகலாச்சாரத்தில் கலப்படம்
காதலர் தினம்…
தமிழ்க் கலாச்சாரத்தின்
தற்கொலை முயற்சி!

இந்தியப் பண்பாட்டின்மீது
இறங்கிய இடி!

வெள்ளைக்கார வேடன்
விரித்து வைத்த வலை
இதன்
கண்ணியில் சிக்கினால்
கற்புதான் விலை! Continue reading “கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…”

மொழியை இயல்பாகக் கற்றுக் கொள்கிறார்கள்

எங்கள் பகுதியில் தரையில் கடைப்பரப்பி அரிவாள்,கோடரி போன்றவற்றை அங்கேயே உருவாக்கி விறபனைச் செய்துவரும் வட நாட்டினரைக் கண்டேன்.
சரி இவர்கள் என்ன மொழியில் பேசி விற்பனைச் செய்கிறார்கள் என்று அறியும் ஆவலில் தமிழிலேயே விலைக் கேட்டேன்.
அரிவாள் 450 ரூபாய் என தமிழிலேயே விலைச் சொன்னார். நன்றாக தமிழ் பேசுறீங்களே, எந்த ஊர், தமிழ் நாட்டுக்கு வந்து எவ்வளவு நாளாச்சு என்றுக் கேட்டேன்.
ஒரு வருஷம் ஆச்சு என்றார்.
தேவை என்று வரும்போது அந்த மொழியை இயல்பாகக் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தி அந்த மொழியைப் புழக்கத்தில் கொண்டு வர ஒருக்காலும் முடியாது.

10665123_10152747318201565_6451689015853090555_n

Mohamed Salahudeen

ஜாலிலோ ஜிம்கானா….’

புளா மைம்பாத்துமா (மைதீன்ஃபாத்திமா)நாளக்கி
தக்கலெக்கு ஒரு கலியாணத்துக்கு போணும் கூடவருவியாளா?எனது மாமி(அத்தை)பக்கத்துவீட்டு
பெரியம்மாவிடம் கேட்டாள்.
ஒன்னைல்லாளா உளிச்சிரிக்காங்கோ நான் எப்டிளா கூடவாறது?
அதுல ஒண்ணுமில்லளா
எனக்க மாப்பிள்ளக்க குடும்பத்துலதான்.நான் உன்னை உளிக்கியேன்
(அழைக்கிறேன்)கொறச்சல்
(கூச்சம்)படாம வாளா.
சரி வாறேன்.வண்டிக்கு சட்டம்கெட்டியாச்சா?
மாமி
என்னை அழைத்தாள்.மோனே இஞ்சவா,அம்பலத்து கிட்ட முத்துக்கண்ணுக்க வண்டியெ பாத்து நாளக்கு காலத்தெ எட்டர மணிக்கு தக்கலெக்கு போணும்ணு
சட்டங்கெட்டீட்டுவா.(வண்டியை புக்பண்ண). Continue reading “ஜாலிலோ ஜிம்கானா….’”

இயற்கையை பாதுகாப்போம்🌳🙏

இயற்கையை பாதுகாப்போம்🌳🙏

பொதுவாக எல்லாருடைய ஆசையும் என்ன?

எதைத் தொட்டாலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதானே?

*நாம் வெற்றியை மட்டுமே நினைத்து உழைத்தால், கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல்* என ஏராளமான விஷயங்கள் நமக்குள் வந்துவிடும் !

இலக்கின் மீது ஒரு கண்ணை முழுமையாக வைத்துவிட்டால் பாதி குருடறாகிறோம் என்கிறது ஜென் தத்துவம்.

அடுத்த ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்? Continue reading “இயற்கையை பாதுகாப்போம்🌳🙏”

உள்ளாட்சி உங்களாட்சி – 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு

unnamedவலைத்தமிழ் செய்தி மடல் 09 பிப்ரவரி, 2018
உள்ளாட்சி உங்களாட்சி – 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு
கிராமசபைகளை வலுப்படுத்த நாம் மேற்கொண்ட பயணத்தை குத்தம்பாக்கத்திலிருந்து துவக்கத் திட்டமிட்டோம். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் இந்தக் கிராம பஞ்சாயத்து நமக்கு மிகவும் பரிச்சயமான ஊர். அதுமட்டும் காரணம் அல்ல. மக்களை அதிகாரப்படுத்தும் பல முயற்சிகளுக்கு அவ்வூர் துவக்கமாக இருந்திருக்கிறது. இப்பயணமும் அங்கிருந்தே துவங்க வேண்டுமென எண்ணினோம். Continue reading “உள்ளாட்சி உங்களாட்சி – 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு”