தமிழ் வழிக் கல்வி -சிறுகதை

தமிழ் வழிக் கல்வி
கணேசன். வாடகை ஆட்டோ ஓட்டுநர். மீட்டருக்கு மேல் ஒரு ரூபாய் கூட வாங்காத நாணயமான ஆட்டோக்காரர். சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து, தினசரி வருமானத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் எத்தனையோ குடும்பங்களில் கணேசனின் குடும்பமும் ஒன்று. அக்குடும்பங்களில் நாளைய உணவு என்ன? என்பதை இன்றைய வருமானமே தீர்மானிக்கும்.

இந்த நிலைமை கணேசனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் தான். வாழ்வின் யதார்த்தத்தையும், சிக்கனத்தின் சிறப்பையும் அறிந்திருந்த கணேசனின் மனைவி லட்சுமியின் மனதிலும், கணேசனின் மனதில் இருந்ததைப் போன்றே வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நிரம்பியிருந்தது. கணவன், மனைவிக்கிடையேயான நல்ல புரிதலும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும், லட்சுமியின் ஊக்கமும் கணேஷனை இன்று ஒரு டெம்போ டிராவலருக்கு உரிமையாளராக்கியிருக்கிறது. தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நடுத்தர வர்க்க நிலையினை அடைந்திருந்தான் கணேசன். Continue reading “தமிழ் வழிக் கல்வி -சிறுகதை”

என்ன செய்யப்போகிறோம்?

muthu1_2972970fபடைப்பாளிகள் எப்போதுமே பாவப்பட்டவர்கள் தான் என்றும், மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? என்றும் இயக்குனர் தங்கர்பச்சான் வேதனையுடன் கூறியுள்ளார்.

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்த நிலையில், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூங்காத தூக்கம்

தலையில் இடி விழுந்ததுபோல் என்று சொல்வார்களே, அது இதுதானா?. கல்லூரியில் படிக்கிறான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பாதான் 1993-ம் ஆண்டில் எனது “வெள்ளைமாடு” நூல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தினார். 24 மணி நேரமும் எழுத்து, சிந்தனை, புத்தகம் என்றே அலைந்தவன். என்னை உரிமையுடன் கண்டிப்பவனும், இறுதிவரை எனக்கு உண்மையாய் இருந்தவனும் தம்பிதான். Continue reading “என்ன செய்யப்போகிறோம்?”

அடிமையராய் வாழ்ந்தபோதில் அடக்கு முறைகள்

Fakhrudeen Ibnu Hamdun

அடிமையராய் வாழ்ந்தபோதில் அடக்கு முறைகள்
….அன்றாடத் துயரோடு மிகுந்த இன்னல்
துடிதுடித்தோம் துயர்நீங்கிச் சிறக டிக்க
….தூய்மையான தன்னாட்சி துலங்கச் செய்ய
விடியலையே எண்ணித்தான் வேள்வி செய்தோம்
….ஒருநூறா ஆயிரமா உயிர்கள் நீத்தோம்
முடிவினிலே பூத்துவந்த சுதந்தி ரத்தை
….முறையாகப் பேணுவதில் குறைகள் வைத்தோம்.
செந்நிறத்துக் குருதிதன்னை நீராய் ஊற்றி
….செழிப்பான ஓர்பயிரை உழவு செய்து
கண்ணிருக்கக் களைவாரோ ஊரில் யாரும்
…. கருத்தான விடுதலையைச் செய்கின் றாரே!
அந்நியரின் ஆதிக்கம் அகல வேண்டி
….அயராத போராட்டம் நாளும் கண்டும்
கண்ணியத்தில் பிறருக்குக் குறைகள் வைத்தால்
….களையதுபோல் விடுதலையும் குறையாய்ப் போகும்.

Fakhrudeen Ibnu Hamdun

விருப்பங்களும் – விமர்சனங்களும்

இன்றும் – எல்லா புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ் களையும் படித்த பின், சிலவற்றை நான் விமர்சனம் செய்வதுண்டு. அதற்கான தேர்வு குழு, அதை பரிசீலத்த பிறகே அந்த விமர்சன ங்கள் குறிப்பிட்ட பத்திரிகைகளில் பதிவாகின் றன.மற்றவை புறந்தள்ளப்படுகின்றன.
ஆனால் சோசியல் மீடியாக்கள் வந்த பின்னர் பத்திரிகை விமர்சனங்கள் பற்றி இப்போது எவரும் கண்டு கொள்வதில்லை.அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகள் கூட டிவி பக்கம் இப்போது நெருங்குவதில்லை. சூடு பறக்கும் விவாதங்கள் கூட கேட்க ஆட்களின்றி பெட்டிக்குள் முடங்கி விட்டன.
பெரும்பாலான பிரபல டிவி சானல்களும், பத்திரிகைகளும் மூடுவிழா காண தயாராகி வருகின்றன. இந்தியாவிலும் விரைவில் இந்நிலை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதையே ஆய்வறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன.
தனிமனித சுதந்திர உரிமைகள் நிலை பெற இப்போது சோசியல் மீடியாக்கள் அதிகம் உதவி புரிகின்றன.பிறர் தரும் கபட கருத்துக்களை ஏற்றுக் கொள்ள, இன்றைய இளம் தலைமுறை தயாராக இல்லை. மூளைச் சலவைகளும், கருத்து திணிப்புக்களும் இனி இளைய தலைமுறையிடம் எடுபடாது.
பேஸ்புக் – இந்த மாற்றம் நிகழ துணைபுரிகறது. Continue reading “விருப்பங்களும் – விமர்சனங்களும்”

காய்ந்த சிறகு ஒன்று..

காய்ந்த சிறகு ஒன்று
என் காலடியில் கிடந்தது

குனிந்து எடுத்து
என் கைகளில் ஏந்தினேன்

ஒரு
முத்தம் பதித்தேன்

அடுத்த நொடி
காய்ந்த சிறகின் மேனி
தங்கநிறமானது

சருகின் உடைந்த ரேகைகளில்
பசுமையின் ஒளி ஏறிச்
சீராகின Continue reading “காய்ந்த சிறகு ஒன்று..”