RSS

Monthly Archives: May 2016

ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா

Kathir Vel

ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா

———————————————-

(விஜய் மல்லயாவை விளாசுவது லேடஸ்ட் ஃபேஷன். ’என் சாம்ராஜ்யத்தின் வசதிகளை அனுபவித்த ஊடகர்களின் லிஸ்ட் நீளமானது’ என்று அவர் லண்டனில் பேட்டி கொடுத்த நிமிடத்தில் இருந்து, பாரம்பரிய வெகுஜன ஊடகம் அடக்கி வாசிக்கிறது. அப்பாவி சமூக ஊடகம் தொடர்ந்து அடிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் எந்தளவுக்கு வாழ்க்கையை அனுபவிக்க முடியுமோ அதற்கு மேலேயே பார்த்துவிட்டார் விஜய் மல்லயா. சிக்ஸ் மெஷின்: ஐ டோன்ட் லைக் க்ரிக்கெட்… ஐ லவ் இட் என்ற தலைப்பில் க்ரிஸ் கெய்ல் எழுதியுள்ள புத்தகம் அவருடைய சுயசரிதையாக இருந்தாலும், அதில் மல்லயாவின் சித்திரம் மலைக்க வைக்கிறது. ஏழையாக பிறந்து இன்று உலக புகழ் பெற்ற க்ரிக்கெட் வீரராக திகழும் கெய்லின் முதல் புத்தகம் இது. பிபிசியின் தலைமை விளையாட்டு எழுத்தாளர் டாம் ஃபோர்டிசுடன் இணைந்து எழுதியுள்ளார். 288 பக்கம் கொண்ட பெங்குயின் பிரசுரம் ஜூன் 2 வெளியாகிறது. அதன் சில பகுதிகளை டைம்ஸ் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அதிலிருந்து…) Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on May 31, 2016 in 1

 

நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை.

 

அப்துல் கையூம்

நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை. என்னைச் சுற்றி நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் நகைச்சுவையாகவே எனக்கு தென்படுகிறது. மனதுக்குள் எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பது ஒரு உற்சாகத்தை தரும் என்பதென்னவோ நிஜம்.

பஹ்ரைனில் நான் எதிர்கொண்ட நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லை.

இந்தியாவிலிருந்து வந்த ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காரில் சென்றேன். பெட்ரோல் பங்கில் 5 தீனார் நோட்டை நீட்டி “மும்தாஜ்” என்றேன்.
“யாருங்க அந்த மும்தாஜ்? ” என்றார் நண்பர்.
“உயர் ரக பெட்ரோலுக்கு பேரு மும்தாஜ்; அதோ இன்னொன்று தெரிகிறதே அது குறைந்த ரகம்” என்றேன்.
“அப்ப அதுக்குப்பேரு ஷகிலாவா?” என்றார்.
எனக்குள் எழுந்த சிரிப்பை அடக்க வெகு நேரம் பிடித்தது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 27, 2016 in 1

 

வயல் வரப்புகளும்

12705549_1674219609499000_4107770838228843719_n
வயிறு பரப்புகளும் ….
வளமுற்ற மண்ணில்
கலப்பை தூக்கி
நாற்றுகளை நாட்டி
களைப்பை நீக்கி
களிப்பை மூட்டி …
ஏறுதனை பூட்டி
உழுது பயிரிட்டு
சேறுதனை மிதித்து
அறுவடை நெல்லெடுத்து
சோறுதனை பொங்கிட … Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 25, 2016 in 1

 

அறிவாயோ – நீ ….!

கூரிய நாவினால்
நெஞ்சை குத்திக் கீறி
ஈரத்தைத்
தேடுகிறாய் – நீ
உன்மத்தின் விளிம்பில்
தொக்கி நின்று கொண்டு
பொறுமையை
சோதிக்கின்றாய் – நீ
ஒன்றும் இல்லாததில்
ஓராயிரம் குறைகளை
தோண்டித்
துருவுகிறாய் – நீ
சாகச சரிவுகளில் நின்று
சாமர்த்தியம் நிமிர்த்துவதாய்
தலையடிக்க
விழுகிறாய் – நீ
விவாத்தில் அமர்ந்து
தனித்துக் கூவி
விதண்டா வாதம்
செய்கிறாய் – நீ Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 24, 2016 in 1

 

சதாநேரமும் கனவு கவிதைகளோடு!

 

Taj Deen

சிரிப்பதோர் கவிதை
அழுவதோர் கவிதை
முறைப்பது முணங்குவது கவிதை
காட்டுக்கத்தல் மௌனப் பேச்சு மட்டுமின்றி
உறங்குவதும் விழிப்பதும் கூட கவிதை
உண்ணுவதும் கவிதையென்றால்
உண்ணா நோன்புமோர் கவிதை!
காதலென்றைக்கும்
வாழும் ஜீவகவிதை இங்கே! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 24, 2016 in 1

 

ஏன்தான் வருகிறதோ இத்தனை சீக்கிரம் தேர்தல் தினம்..?

ஏன்தான் வருகிறதோ
இத்தனை சீக்கிரம்
தேர்தல் தினம்..?
காமெடியாய் போய்க்கொண்டிருந்த
கலகலப்பு நாட்கள்
கடினமாய் நகரும்..!
இலவசங்களின்
பரவசங்கள்
இல்லாமல் போகும்..!
துட்டுப்பட்டுவாடா
அற்றுப் போகும்..!
முச்சந்தி மீண்டும்
முழுசாய் இருளில் மூழ்கும்..!

கோஷங்கள் தொலைந்து
வேஷங்கள் களைந்து
கரைவேஷ்டிகள் இனிமேல்
காணாமற் போகும்..!
ஏன்தான் வருகிறதோ
இத்தனை சீக்கிரம்
தேர்தல் தினம்..?
சேரிக் குழந்தைகளை
வாரி அணைத்து முத்தமிடும்
பாரி வள்ளல் பரம்பரைகள்
கார் ஏறி ஊர் போகும்
பவனி வந்த ரதங்கள்
பணிமனைக்குள் முடங்கும்..!
சாகஸம் நடத்திய
சர்க்கஸ் கூடாரங்கள்
சந்தடியின்றி வெறுமையாய் காட்சிதரும்..!
ஓயாது ஒலித்த
ஒலிபெருக்கி சப்தத்தில்
பழகிப்போன பச்சிளங் குழந்தைகள்
உறக்கமின்றி தவியாய்த் தவிக்கும்…!!
ஏன்தான் வருகிறதோ
இத்தனை சீக்கிரம்
தேர்தல் தினம்..?!!!

12806201_1139195576099811_3254877277526373746_n
அப்துல் கையூம்

 

 
Leave a comment

Posted by on May 13, 2016 in 1

 

என் உம்மாவின் நினைவாக…./அபூ ஹாஷிமா

13151534_1020433758035353_3805614079945652340_n

என் உம்மாவின் நினைவாக….
எனக்கு பத்து வயதாக இருக்கும்போதே விளையாட்டில் நிறைய ஆர்வம் வந்து விட்டது.
என் பெரியம்மா மகன் அண்ணன் ஜமால்தான் எனக்கு குரு.
அவன்தான் எனக்கு விளையாட்டு கற்றுத் தந்தான்.
விளையாட்டென்றால் …
பார் விளையாடுவது
கர்லா கட்டை சுற்றுவது
பளு தூக்குவது போன்றவை.
நல்ல விளையாடிக் கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் …
அண்ணன் ஜமால் அவன் அண்ணன் அமானுடனும் நண்பர்களுடனும் கன்னியாகுமரி கடலுக்கு குளிக்கப்போனான்.
மாலை நேரம் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது பெரிய அலையொன்றில் சிக்கிக் கொண்டான் .
கடல் இழுத்துச் சென்றுவிட்டது.
மறுநாள் உடல்தான் கரை ஒதுங்கியது.
வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் மரண அதிர்ச்சி அதுதான்.
அதன் பிறகு ஒரு வேகத்தோடு அவன் கற்றுத் தந்த விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும்போது உடல் கட்டுமஸ்தாய் மெருகேறியது.
காலையிலும் மாலையிலும் கடுமையான பயிற்சி செய்தேன்.
அப்போது எங்கள் வீட்டில் மாடுகளும் வளர்த்தார்கள்.
மாடுகளுக்கு கொடுக்க பருத்திக்கொட்டை அரைத்து பால் கொடுப்பார்கள்.
எனக்கும் அதில் ஒரு கப் பால் கிடைக்கும்.
அதுபோக ஊற வைத்த கொண்டைக் கடலை , ருசியான தேங்காய் புண்ணாக்கு எல்லாம் சாப்பிடுவேன்.
அதாவது …
மாடுமாதிரி . Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 10, 2016 in 1