இறந்த காலம் / தாஜ்

10649579_716615151741564_7065781324321695253_nதன் பேரழிவின்
உயிர்வதை யெண்ணி
அடிமரம் அழும்.
நின்றுப் படர்ந்து
நிழல் காத்தக் காலத்தினை
குரலற்றத் துடிப்பில்
நோந்து கொள்ளும்.
சாய்த்துப் பிளந்த
கோரக் கரங்களின்
ஆராஜகத்தை
மங்கும் ஜீவன் வியக்கும்.
Continue reading “இறந்த காலம் / தாஜ்”

முகநூலில் ரஹீம் கஸாலி கஸாலி ஸ்டேட்ஸ்

பணமும், மதுவும், அரசியலும் நல்ல நண்பர்களுக்கிடையே நுழைந்தால் அந்த நட்பில் விரிசல் விழுந்துவிடும்.

முன்பெல்லாம் பிரசவம் என்றால் பிரசவம் மட்டுமே. சுகப்பிரசவம், சிசேரியன் என்பதெல்லாம் மருத்துவமனைகள் வந்த பின்பு தான்.

கருவுற்றிருக்கும் மனைவி ஒரு உயிரை மட்டும் தான் வயிற்றில் சுமக்கிறாள் வெளியே தெரிந்து. ஆனால் கணவனோ இரண்டு உயிரையும் நெஞ்சில் சுமக்கிறான் வெளியே தெரியாமல்.

காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னை அப்டேட் செய்து கொள்வதால்தான் 375 – வயதாகியும் இன்னும் சென்னை பொலிவுடன் திகழ்கிறது.

திருமணத்தில் தாலி கட்டும் முகூர்த்த நேரத்திற்குக்கூட லேட்டா வருபவர்கள், சாப்பாட்டு பந்திக்கு மட்டும் கரக்டான டைமுக்கு வந்துடுவாங்க.

பூனைக்கு உடம்பு சரியில்லாம போனால் எலிகள் எகத்தாளம் செய்யுமாம்.

கதை இருக்குன்னு சொல்லி கதையே இல்லாம படம் எடுத்து திட்டு வாங்கறதை விட, கதை இல்லேன்னு தைரியமா சொல்லி ஆனால் படத்தில் கொஞ்சம் கதையை வைத்து பாராட்டு வாங்கிடலாம்.
Continue reading “முகநூலில் ரஹீம் கஸாலி கஸாலி ஸ்டேட்ஸ்”

நகைச்சுவை பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் கிருபானந்த வாரியார்

10632697_696379070440825_9061653783014916592_nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் …
மனதில் நிற்கும் மாமனிதர் !
இந்துமதக் கொள்கைகளில் முத்தெடுத்து
அதை
நல்லதமிழ் சொல்லெடுத்து
மக்களுக்கு வழங்கியவர் !
எந்த மத மக்களுக்கும் சொல்லால் செயலால் தீங்கிழைக்காத மனிதநேயப் பண்பாளர் !
தன் வாயினிக்கும் வார்த்தைகளால் மக்களை வாஞ்சையோடு வாரியணைப்பவர் !
Continue reading “நகைச்சுவை பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் கிருபானந்த வாரியார்”

அழுக்கு !

அழுக்கினில் ஆயிரம் வகையுண்டு
அடுக்கடுக்காய் கேட்டு
அறிவது நன்று

அகத்தின் அழுக்கு
அன்பை முறிக்கும்
புரத்தின் அழுக்கு
புகழைக் கெடுக்கும்
Continue reading “அழுக்கு !”

‘கவர்’போட்டு மூடியிருக்கே……….????!!!! .

10527673_10152642464206575_8683057042573913078_nஇராத்திரி காரை நல்லா தானே நிறுத்திட்டு வந்தேன்; காலையில் ‘கவர்’போட்டு மூடியிருக்கே……….????!!!! .

குழப்பத்தோடு கிட்ட போனால் பக்கத்தில் கட்டிடத்திற்கு ‘பெயின்ட்’அடிக்கிறார்களாம்.
பாதுகாப்பு முன்னேற்பாடாம்!(துபாயில்)

எங்களுக்கு இதெல்லாம் புதுசுங்க!!!

  • கவர் போட்ட கார் பற்றி பதிவு
    flower45————————————————– Continue reading “‘கவர்’போட்டு மூடியிருக்கே……….????!!!! .”
  • உரத்த சிந்தனை !

    உரத்த சிந்தனை !

    அழுக்குகளின் சுமை களைந்து, இலேசாகி, உயரப் பறக்கும் மனசுகளின் கண்களுக்கு, இந்த பூமிப்பந்து; வெடித்துச் சிதறி வீழ்ந்த ஒரு மண்ணுருண்டை மாத்திரமே தானென்றும், அதில் வாழும் உயிரினம் அத்தனையும்; வடிந்து வீழ்ந்து வெடித்த விந்துத் துளியின் சதை உருண்டைகள் மாத்திரமே தானென்றும் விளங்க வரும் !
    ————————
    உரத்த சிந்தனை – 2

    பனி உறைய மலை முகடுகளும், மழை பொழிய கார் மேகங்களும், பசி தீர்க்க கனி வகைகளும், தாகம் தீர்க்க அருவிகளும், மனம் லயிக்க மலர் தோட்டங்களும், அழகு ரசிக்க அற்புத பறவைகளும், இடம் ஒதுங்க எழில் குடில்களும், இனம் பெருக்க பெண் துணையும், அதில் பூத்த மலர் பார்த்து மனம் மகிழ்ந்து, வாழும் வாழ்வை மணமாக்க, இயற்கையாம் பேரின்ப கடவுளின் நினைப்பையும் தன் எண்ணத்தில் கொண்ட, அன்றிருந்த இன்ப நிலை, அற்புத நிலையன்றோ, ஆண்டவனும் உகந்த அழகான நிலையன்றோ?

    இது நிலையில், ஆண் என்பவன், வலுவும், வேகமும், வேட்டைத் திறனும், வேட்கை தீவிரமும், பகுத்தறியும் திறனும் கொண்டவனாக இருக்கும் நிலையிலேயே புருஷ இலட்சணங்களுக்குட்பட்டவன் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆணின் கடமை, பலகீனப் பெண்ணை பாதுகாப்பதும், ஏற்றெடுத்த பெண்ணை ஏற்றமுடன் வைத்திருப்பதும்தான். வித்துக்களை விதைப்பதும், நல்முத்துக்களை அறுவடை செய்வதும், அவைகளுக்குண்டான அத்தனையையும் தன் நிலைக்கொப்ப செய்து கொடுப்பது என்பதும் ஆதாரக் கடைமை எனும் நிலையில், சார்ந்திருக்கும் உறவுகளின் தேவைக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்வது ஆணுக்கான உயர்வு நிலை. ஆண் என்பவன், பாதுகாப்பின் அடையாளம், பாதுகாப்பவன் என்கிற நிலையில், இயற்கையே வரம் கொடுத்த சற்றே ஒவ்வாத உடல் கூறுகளையும், போலி சமிக்சைகளை வெளிப்படுத்தும் திறனும் கொண்டவன் அவன், ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் அடங்காத மனசுள்ளவன், தன்னை மயங்க வைத்த மயக்கங்களை திடமாக இன்னொரு நாளில் எட்டி உதைப்பவன். உயிர் கொல்லும், பேரலைகளின் ஆழம் தெரிந்ததினால், நீந்தி கரை சேருபவன், தன்னைச் சார்ந்தவரையும், மற்றவரையும் கரை சேர்ப்பவன். அவன் பூனை நடை நடக்கும் ஒய்யாரனாய் இருக்க வேண்டுமென்பதில்லை, களைத்துப் போன ஒரு சிங்கத்தின் தளர்ந்த நடை கொண்டவானாக இருந்தாலும் போதும், அதுவே, அவன் ஆண்மையின் பேரழகை காட்டிக் கொடுத்து விடும் !
    Continue reading “உரத்த சிந்தனை !”

    சிரிச்சிகிட்டே வர்ர மச்சான்

    உன்னநான் கட்டிக்கிட்டு
    என்னாத்த சுகங்கண்டேன்
    நகையுண்டா நட்டுண்டா
    காதலயும் கழுத்துலயும்
    பேருண்டா பெருமையுண்டா
    ஊருகுல்ல உலகத்தில
    ஓடாத்தேஞ்சு போனேன் -அழுக்கு
    துணி துவைச்சு போட்டே
    மெழுகா உருகிப்போனேன் -கறியும்
    சோறும் ஆக்கி போட்டே
    ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
    வர்ர மச்சான் Continue reading “சிரிச்சிகிட்டே வர்ர மச்சான்”

    குறைபாடு குழந்தைகளிடம் அல்ல

    10550948_903330573027853_3904629875477593467_n7054_903331119694465_3811296765653217991_n10363930_903331229694454_4300865206281918951_n10460784_903331383027772_7523667502037705987_n10553345_903331063027804_3394246963991921802_nகற்றல் குறைபாடு உள்ள பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயம். எத்தனை பேருக்கு அந்த குறைபாடு இருக்கிறது என்பதில் ஒவ்வொருவரும் முரண்படுவது அந்த கவலையை அதிகரிக்கும் விஷயம்.

    லே(ர்)னிங் டிசபிலிடி (எல்டி) என்பதை கற்றல் குறைபாடு
    என அரசு குறிப்பிடுகிறது. 2ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டறிய மாநிலம் தழுவிய ஆய்வு நடத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ, மெட்ரிக், ஆன்லோ இண்டியன் ஆகிய அனைத்து வகை பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்படும்.

    சென்னை நகரில் 200 மாணவர்களை சோதித்ததில், 40 பேருக்கு எல்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது 20 சதவீதம். உலக அளவில் 12 சதவீத குழந்தைகளுக்கு எல்டி இருப்பதாக ஒரு ஆய்வில் அறியப்பட்ட்து. ஆனால் அதை நடத்தி 4 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அந்த சதவீதம் 20 ஆக உயர்ந்து இருக்கலாம் என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அப்படி பார்த்தால் சென்னையில் இப்போது தெரிய வந்துள்ள 20 சதவீதம் சரியாக தோன்றுகிறது.
    Continue reading “குறைபாடு குழந்தைகளிடம் அல்ல”

    இன்டர்நெட் நண்பர்கள்/ Internet Friends

    T.Vஇன்டர்நெட் நண்பர்கள்/ Internet Friends
    வரலாற்றில் எல்லாம் இன்டர்நெட் மயம்!

    ஒரு தனிப்பட்ட இணையதளம் உருவாக்க தற்போது எளிய வழியாக உள்ளது. இதனால் நீங்கள் முழுமையாக நவீன உலகில் உங்களை பங்கேற்க வழி வகுக்கின்றது மற்றும் நீங்கள் விரும்பினால் அதனை ஆதாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பினை அளிக்கும். ஒரு தனிப்பட்ட இணையத்தளம் உங்களது சமூக கருத்துக்களை பரப்புவதற்காக சிறந்த வழியாகவும் அமையலாம்.. தனிநபர் தளங்கள் அமைதியான மிகவும் பயனுள்ள கருவியாக இருக்க முடியும்.
    ஒரு மகத்தான இந்த நம்பமுடியாத தொழில்நுட்பத்தின் மூலம், நாம் ஒருவரை ஒருவர் பற்றி அறிந்து கொள்ள வாய்புகள் அதிகம். நிச்சயமாக மின்வெளி மூலம் – உலகம் முழுவதும் மக்களை சந்தித்து , இன்டர்நெட் தகவல் சாதனம், தகவல் நவீன தகவல் சாதனங்களும் இன்டர்நெட் மூலம் நடைபெறும் ஒருவருக்கொருவர் புரிந்து, மற்றும் வெளிப்படையாக நேரடியாக மனித பொதுவான பந்தம் உருவாக்கிக் கொள்ள முடியும். Continue reading “இன்டர்நெட் நண்பர்கள்/ Internet Friends”

    தான்தோன்றித்தனம் ….!

    மண்டையை அரித்து , தூளாக்கி
    வாசம் வீசும் சந்தனக் குச்சிகள்
    மத வழி பாடுகள் தொடர்க்கம் மரணச் சடங்கு வரை
    சுவாசங்கள் நூகர்கின்றன..!

    மனிதச் சிந்தனைகள்
    நாடி நரம்புகளில் தேங்கிக் கிடக்கின்றது

    உள்ளத்து உணர்வுகளில் வரண்ட உஷ்ணம்
    சுவாசத்தின் குடலிலிருந்து
    வேதனையின் வலியை மூச்சுக்கலாய் இழுத்துச்செல்கின்றது
    Continue reading “தான்தோன்றித்தனம் ….!”