RSS

Monthly Archives: January 2011

வெட்கப்படுவதற்கு வெட்கப்படு.

பெண்களை கண்டால் பார்வையைத் தாழ்த்து ஆனால் வெட்கம் வேண்டாம்.  வெட்கம் என்பது ஆண் பெண்  இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று .ஆனால் அந்த பெண் உன்னை நாடி நேசிக்கிறாள் என்பதனை நீ அறிவாயா!
இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும் . அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி  விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம்  ஏன் வெட்கப்படவண்டும் ! Read the rest of this entry »

Advertisements
 

Tags: , ,

வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்பு சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

. இதற்கு “தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்கிற அழகான பொருள்.

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று சொல்லும் பொழுது நாம் அவருக்கு
வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு  என்று பதில் சொல்வது நமது கடமையாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள். Read the rest of this entry »

 

Tags: , ,

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?

ங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து’ எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்..  காதால் கேட்பதும் பொய்..  தீர விசாரித்தறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை, அதற்குரிய தெளிவான அறிவை அல்லாஹ் நமக்கு வழங்கினாலேயொழிய! Read the rest of this entry »

 

Tags: , ,

நாடு முன்னேற தாயின் பங்கும், தாயின் மேன்மையும் !

தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல்  வேண்டும் .
உலகிலே .அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன குழ்ந்தை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள்.தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தன பிள்ளை சிறந்து விளங்க ஆசைப்படுவாள் .இதற்கு அடிப்படை தாய் கல்வி கற்றவளாய் இருப்பது இன்றியமையாதாகும் .   அம்மாவிடம் அறிவின் முதிர்ச்சி இல்லையெனில் அவள் வளர்க்கும் குழந்தையின் அறிவின் வளர்ச்சிலும் முழுமை  இல்லாமல் போகும் .அறிவின் ஆற்றல் இல்லாத தாய், கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தால்  நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும் . தந்தை பொருள் ஈட்ட வீடு விட்டு நீங்கி நிற்கும் நிலையில்  தாய்தான் தன பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கும் நிலை .அறிவு பெற்ற குழந்தையாக மாற்றும் பொறுப்பு அவளிடமே உள்ள நிலையில் அந்த தாய்மை கொண்ட அம்மாவுக்கு அறிவும் கல்வியும் அவசியம் .பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று. சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய் பாசம் காட்டுவதோடு நில்லாமல் தனது பிள்ளைகள் சிறந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அந்த தாய் பெற்றிருக்கும் கல்விதான் அஸ்திவாரம்,அடித்தளம் . Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 25, 2011 in video

 

Tags: , , , ,

விரைவில் முதல்வர் பதவியிலிருந்து விலகல்: கருணாநிதி!

முதலமைச்சர் என்று சொல்லும்போது, நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்று சொல்லுகிற நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், – தலைவர் என்று சொல்வதில் தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மகன் டாக்டர் கோகுல கிருஷ்ணனுக்கும், மதுரை யாதவா கல்லூரி தாளாளர் நவநீதகிருஷ்ணன் மகள் டாக்டர் பாரு பிரியதர் ஷினிக்கும் சென்னை காமராஜர் அரங்கில் இன்று திருமணம் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:

நம்முடைய மத்திய உள் துறை அமைச்சர் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக் கொண்டார். ஆகவே, நான் இயல்பாக பெண் வீட்டுக்காரனாக என்னை ஆக்கிக் கொண்டு இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்தி – மணமக்களை வாழ்த்த வந்திருக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தின் பெருமக்களையும், வாழ்வதற்கு வகை கண்டு நம்முடைய கடமையை ஆற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

தம்பி பெரிய கருப்பன் அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று ஆற்றி வருகின்ற பணிகள் என்னை மாத்திரமல்ல – ஆன்மீகப் பெருமக்களை மிகமிக பெருமையிலே, மகிழ்ச்சியிலே ஆழ்த்தக் கூடியவையாக இருக்கின்றன. இவரை எப்படி நான் – எந்தப் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து, அறநிலையத் துறை அமைச்சராக ஆக்கினேன் என்று நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் வியப்பு தெரிவித்தார்கள். Read the rest of this entry »

 

Tags: ,

காப்பி அடிப்பது குற்றமா ?

ஏற்கனவே ஒருவர்  எழுதியதை அப்படியே மாறாமல் திருப்பி எழுதுவது அல்லது செய்வது என்பது காப்பி அடிப்பது என்று பொருள் படலாம் .

படம் எடுப்போர் தழுவல் முறை கையாள்வர் .
யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்- என்று கமல்ஹாஸன் சொல்வார் .அது அவர் நம்புவது.   அது அவர் தன்னம்பிக்கை .அந்த திறமையை எங்கிருந்து பெற்றார் .அவர் சொல்வார் `பரம்பரை ஜீன்ஸ் வழி வந்தது அல்லது வளர்த்துக் கொண்டது` என்று.   வளர்த்துக் கொள்ள வழி வகுத்தவர் யார் ?கதைக்கு ஏற்றபடி இப்படி நடிக்க வேண்டும் என்று  நடிக்க சொல்லிக்கொடுத்தவர்  யார் ! டைரக்டர் பின் ஏன் ! இதுவும் ஒரு வகை காப்பிதான்.

என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் ஆனால் காப்பி அடிப்பது தவறு என்று மட்டும் சொல்லாதீர்கள் . சில நாடுகளில் புத்தகம் அல்லது கால்குலேட்டர் வைத்துக்கொண்டு  தேர்வு எழுத அனுமதிகின்றாகள் . காப்பி அடித்த மாணவர் மீது நடவடிக்கை அதனால் அவர் மனம் உடைந்து இறந்தார் என்ற செய்தி வேண்டாம் . ஆசிரியர் தன் மாணவனை அல்லது தகப்பன் தனது மகனை பார்த்து சொல்வது “ஏன்டா இப்படி இருக்கே மற்றவரை பார்த்தாவது உன்னை மாற்றிக்கொள் ” இதற்கு என்ன பொருள்? தனித்துவம் வேண்டாம் நல்லதனை காப்பி செய்துகொள் என்பது உள் அடங்கும். இன்டர்வியு என்று உள்ளது .அப்பொழுது அவர் தன்னை தயார் படுத்திக்கொள்வார்.
கல்லூரியில்  படிக்கும் பொழுது தேர்வுக்காக மட்டும்தான். பின்பு படிப்பதுதான்  அறிவினை பெறுவதற்காக இருக்கும். Read the rest of this entry »

 

Tags: , , ,

இதயத்தில் இனிக்கின்ற…

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். ‘இதயம்’ என்று துவங்கி ‘மொழி’ என்று முடிகிறது. பின் ‘தமிழ்’ என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் ‘மொழி’ என்னும் சொல்லிலேயே துவங்கி ‘இதயம்’ என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.

இதயத்தில் இனிக்கின்ற
மொழி – தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம் Read the rest of this entry »

 

Tags: