மதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!

துரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை, 2-இன் – ஒன் குக்கர், இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், http://www.satyamargam.comவயரில்லாத  ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

 

சாதாரண எலக்ட்ரீஷியனாக நிலையில்லாமல்  கிடைக்கும் இடங்களில் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டு வரும் அப்துல் ரஜாக்,  தான் வசிக்கும் பகுதியில் வாகனங்களில் டயர்கள் அதிக அளவில் திருட்டு போவதை அறிந்தார். அதனைத் தொடர்ந்து இத் திருட்டுக்களைத் தடுக்க “சேஃப்டி லாக்’ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனத்தைத் தயாரிக்க இவருக்கு செலவான தொகை வெறும் இருநூறு ரூபாய் மட்டுமே.

இதைக் குறித்து அப்துல் ரஜாக் செய்தியாளர்களிடம் பேசுகையில் “மோட்டார் பைக், கார் சக்கரத்தில் உள்ள நட்டுகள் எவரும் கழற்றும் விதத்தில் வடிவமைக்கப் பட்டு இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. Continue reading “மதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!”

ஆளுமை சக்தி அடைய மனிதன் படும் பாடு !

ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.  சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும்  சக்தி.அறிவின் அடித்தளம்.  இத்தனையும்  சேர  முயற்சி என்ற உந்தும் சக்தி  தேவை.

ஆல மரத்தின் விதை சிறுது ஆனால் அது உண்டாக்கும் மரம் பெரிது. உடலின் உருவத்திற்கும் அவன் பெற்றிருக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை .மெலிந்த மேனியும், அழகற்ற  தோற்றம் கொண்ட எத்தனையோ பேர் சிறப்பான  ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும்  நாம் பார்க்கின்றோம் .ஆள் பாதி ஆடை  பாதி என்று எண்ணி  தன்னிடம் உள்ள ஆளுமையினை குறைத்து விடக்கூடாது.
நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது  என்று நம்பி அதனை வெளிக்கொணர  செயல்படுங்கள் .உங்களைவிட தாழ்ந்தவர் உங்களை ஆட்சி செய்வதனை பாருங்கள். அந்த ஆற்றலுடம் ஆளுமை சக்தி பெற்று ஆட்சிக்கு  வந்த பின் நம்மை அவர்கள்   ஆட்டி படைக்கும் வேதனையும் நாம் அனுபவிக்கவில்லையா ! அந்த ஆட்சி தொடர அவர்கள் ஈடுபடும் தவறான முறைகளில் மாட்டி அவதிப்படுவோர் பலர் . Continue reading “ஆளுமை சக்தி அடைய மனிதன் படும் பாடு !”

திருமணம் செய்து கொள்ள ஆசை !

திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவோர் எண்ணும் எண்ணங்கள் பல .

அயல் நாட்டில் திருமணத்திற்குக் காத்து இருப்போர் விரும்புவது .      இந்திய பெண்ணாக அதிலும் தமிழ்நாட்டு பெண்ணாக இருக்க வேண்டும் ! அவள்   கூட்டு குடும்பத்தில் வாழ்ந்ததினால் குடும்ப பாங்குடன் நடந்து கொள்வாள்.இது ஒரு காலம். தமிழ்நாட்டில்தான் அதிகம் சீர் வரிசைகள் கிடைக்கும் ,இப்படி சில காலம் ஆனால்  படித்த திறமையான அனுசரித்து போகும் முற்போக்கு பெண்கள் இப்பொழுது அங்குதான் உள்ளனர்   என்ற நிலை மாறிவருவதால் (நல்லதனை நினைப்போம் )

அயல் நாட்டில் திருமணப் பெண் ஆடை அலங்காரத்தினை பார்த்து அது போல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது!அதற்கு சில நாடுகளை பார்ப்போம்

சவுதி  அரேபியா மணப்பெண்ணின் ஆடை

பாகிஸ்தான் மணப்பெண்

பலஸ்தீனியன்  மணப்பெண்  (தஞ்சை தமிழ் முஸ்லிம் பெண் போன்று)

இராக்கிய   மணப்பெண்

அரப்  எமிரேட்ஸ்  (UAE)மணப்பெண்

மலேசியன் மணப்பெண்

இந்தோனேசியா மணப்பெண்

நைஜீரியன் மணப்பெண்

சைனா மணப்பெண்

ராக் மணப்பெண்

தமிழ்நாடு மணப்பெண்

புதுமை விரும்பி மணப்பெண்

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, இரண்டு மலைப்பாம்புகளுக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் கம்போடியாவில் நடந்தது

திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும்போது நல்லதை நாடுவோம், Continue reading “திருமணம் செய்து கொள்ள ஆசை !”

விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது !

இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,

1 டீ – ரூ 1.00

சூப் – ரூ 5.50

தால் – ரூ 1.50

மீல்ஸ் – ரூ 2.00

சப்பாத்தி – ரூ 1.00

சிக்கன் – ரூ 24.50

தோசை – ரூ 4.00

வெஜி.பிரியாணி – ரூ 8.00

மீன் – ரூ 13.00

இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான். அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம். அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும் தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள்.

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா.

by mail From:    Faizur Hadi

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

imagesCADG3MNW

முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.

இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம். Continue reading “உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?”

புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல

புகாரி என்று எழுதுவதைவிட புஹாரி என்று எழுதுவதுதான் அரபி மொழியின் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டதாகச் சொல்ல முடியும். நான் இலக்கணம் படித்தவனல்ல புஹாரி சார். ஆனால் வீம்புக்காக புகாரிதான் சரியென வாதிடுபவர்களை தமிழ் வெறியன் என்றுதான் நான் சொல்வேன். அவர்கள் தமிழை வளர்ப்பது போல பாவ்லா செய்யலாம். புஹாரி என்று கா வுக்கு பதிலாக ஹா போட்டு எழுதுவதால் தமிழ் அழிந்து விடும் என நினைப்பது பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல. இந்த தமிழ் அறிஞர்களின் பிரச்சனைக்குள்ளே நான் புக விருப்பமில்லை. என் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன் அவ்வளவுதான். கிரந்தம் என்கிறதெல்லாம் தெரியாமலேயே தமிழை என் உயிராக நேசிக்கிறேன்.. ஆனால் ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் உயபோகிக்கும், அவற்றையும் தமிழாகச் சேர்த்துக் கொள்ளும் பொதுநோக்கு மனம் படைத்தவன், வெறியில்லாத தமிழன் அவ்வளவுதான். முதலில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா, கான்வெண்டில் பாபா பிளாக் ஷீப் பாடுகிறார்களா என்று பார்க்கட்டும் புஹாரி சார்.

முதலில் புஹாரி என்பது அரபு மொழியின் சரியான உச்சரிப்பு ஆகாது. Bukhari بخاری என்பதுதான் இமாம் புகாரியின் பெயர். இது புஹாரி என்பதைவிட புகாரி என்பதற்குத்தான் அதிக நெருக்கமானது.

காண்க:http://en.wikipedia.org/wiki/Muhammad_al-Bukhari
Continue reading “புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல”

இறைவனிடம் ஒரு நேர்காணல் – by இராஜ. தியாகராஜன்

முன்பு இணையத்தில் நண்பரொருவர்  அனுப்பி வைத்த சுட்டியின் வாயிலாகக் கண்ட இறைவனிடத்து ஒரு நேர்காணல் என்ற ஆங்கிலக் கட்டுரையை மொழிமாற்றம் செய்து வன்தட்டிலே மூலத்துடன் சேமித்து வைத்திருந்தேன்.  வன் தட்டுப் பற்றி கரிந்ததனால், இரண்டுமே போனது.  கவிஞர் கரிசலாரின் (கரிசல் குளத்தான் அவரகளின்), “கடவுள் வந்தார்” என்ற கவிதை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் என்னுடைய கையடக்க வன்வட்டிலும், பேனா வட்டிலும், சில குறுவட்டுகளிலும் முனைந்து தேடுகையில், நான் மொழியாக்கம் செய்தது மட்டும் கிடைத்தது.  இதை முகநூல் அன்பர்களுக்காக பகிர்கிறேன்.

 

இந்த படைப்பின் முழு முயற்சியும் எனதல்ல  என்றாலும், இதன் சொல்லாட்சி, வரிகளின் அமைப்பு, பாநயமான அடுக்குகள் என்னுளத்தில் உதித்தவையே.  வேறெவருக்காவது ஆங்கில மூலம் கிடைக்குமெனில் அனுப்பித் தாருங்கள்.  இனி நேர்காணலுக்கு:

இறைவனிடம் ஒரு நேர்காணல்:

இறைவன் கேட்டார்,

“ஆக என்றன் செவ்வி உனக்கு வேண்டும்?”

அதற்கு நானும்,

“ஆம் அய்யனே! என்றும், எப்போதும், யாங்கணும்

நீக்கமற நிறைந்திருக்கும் உமக்கு நேரமிருப்பின்………..!”

இறைவன் புன்னகைத்தார்,

“எனது காலம் முடிவற்றது;

என்ன வினாக்கள்  கேட்கப் போகிறாய்?”

நான் கேட்டேன்,

“உங்களின் மேன்மைப் படைப்பான

மாந்தரினத்தின் எச்செய்கைகளால்

நீங்களே விந்தையடைந்தீர்கள்?”

இறைவன் சொன்னார்:

“மழலைப் பருவத்தலிருக்க மனமின்றி

விரைவில் வளர்ந்திடவே எண்ணுகிறார்;

ஆனால் வளர்ந்த பின்னோ

மீண்டும் மழலையாய் ஆகிடவே ஏங்குகிறார்.

உடல்நலமே கெட்டழியப் பொருளைத் தேடுகிறார்;

ஆயின் பின்னாளில் உடல்நலம் பேணவே

தேடிய பொருளையெல்லாம் செலவும் செய்கிறார்.

 

வருங்காலத்தை எண்ணியேங்கி,

நிகழ்வையும் தொலைப்பதனால்,

நேற்று-இன்று-நாளை ஏதுமின்றியே வாழ்கிறார்.

இருக்கும்வரை முடிவேயற்றவர் போல்,

எல்லாமே எமதென்று புவியகத்தில் வாழ்கிறார்;

ஆனால் அந்தி வருகையிலே,

ஏதுமற்ற ஏதிலியாய் மீளாத்துயிலில் வீழ்கிறார்.”

இதைச் சொல்லி இறைவன் என்கைகளைப் பற்றினார்; எங்களிருவரின் இடையில் ஒரு கண மௌனம். உறுத்தும் உண்மைகள்; உறைக்கும் உண்மைகள்; Continue reading “இறைவனிடம் ஒரு நேர்காணல் – by இராஜ. தியாகராஜன்”

மேலாண்மை சரிவுகள் — by டாக்டர் ஹிமானா சையித்


உறவினர் ஒருவர். அவருக்கு நடுத்தரவயது கனத்த குரல் கம்பீரமான உடல்வாகு!

கடைத்தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்த என்னைக் கைதட்டி அழைத்தார்.

அருகில் சென்றேன்.

“என்னுடன் வா” என்று சுருக்கமாகச் சொன்னார்.

சின்னப் பள்ளிவாசல் காம்பவுண்டு சுவர்ப்பக்கம் செல்லும் வரை ஒன்றும் பேசவில்லை.
குழப்பத்துடன் அவருடன் சென்றேன்.

சுவரில் கரியால் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தைச் சுட்டிக்காட்டி,”இதை எழுதியது நீதானே?”என்று கேட்டார்.

“இல்லை” என்றேன்.

அது ஒரு கொச்சையான வாசகம்.

ஆனால்,அதற்கருகில் எழுதப்பட்டிருந்த ஒரு நாடக விளம்பரத்தைச் சுட்டிக் காட்டி “இது நான் எழுதியது” என்றேன்.

அவர் குரலைஉயர்த்தி பயங்காட்டினார்.

அந்த தப்பான வாசகத்தை நான் எழுதவில்லை என்பதை உறுதிபடச் சொன்னேன்.நாடக விளம்பரம்,
நான் அப்போது எழுதி, வீட்டுத் தெருத்திண்ணையில் அரங்கேற்றப் போகும் நாடகத்துக்கானது என்றும், அதை நான் தான் எழுதினேன் என்றும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னேன்.
கொஞ்ச நேரம் எழுத்துக்களை ஊன்றிப் பார்த்துவிட்டு,கீழே கிடந்த ஒருகரித்துண்டை எடுத்துத் தந்து,சுவரில் ஓரிரு வார்த்தைகள் எழுதச் சொன்னார்.

அந்த எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தபிறகு சமாதானமாகி, “சரி, நீ போ…! ஆனால், இனிமேல் சுவரில் எழுதும் கெட்ட பழக்கத்தை-அது எதற்காக என்றாலும் விட்டு விடு” என்றார். “நீ எழுதியது குற்றமற்ற வாசகம்தான் … என்றாலும், அதற்கருகில் கொச்சையாய் எவனோ ஒருத்தன் எழுதிய பழியும் உன் மீது விழுகிறது பார்த்தாயா? ” என்று விளக்கமும் சொன்னார். Continue reading “மேலாண்மை சரிவுகள் — by டாக்டர் ஹிமானா சையித்”

2010 in review

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

About 3 million people visit the Taj Mahal every year. This blog was viewed about 47,000 times in 2010. If it were the Taj Mahal, it would take about 6 days for that many people to see it.

 

In 2010, there were 798 new posts, growing the total archive of this blog to 1,104 posts. There were 310 pictures uploaded, taking up a total of 17mb. That’s about 6 pictures per week.

The busiest day of the year was June 7th with 438 views. The most popular post that day was மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்.

Where did they come from?

The top referring sites in 2010 were tamilmanam.net, tamilish.com, tamil.net, thiratti.com, and tamilveli.com.

Some visitors came searching, mostly for மனைவி, கர்ப்பம் தரிக்க, கர்ப்ப காலத்தில், and திருமூலர் திருமந்திரம்.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் June 2010
2 comments

2

கர்ப்பம் தரிக்க எந்த நேரம் நல்ல நேரம்!! January 2010

3

நல்ல மனைவி அமைய July 2010
2 comments

4

கர்ப்ப காலத்தில் ஸ்கேன். June 2010
1 comment

5

கள்ளக்காதல் – கள்ளக்கனியே அள்ளச்சுவையே February 2010