மழையும் சுடும்

934992_473327492745985_2016270399_nமழை வந்தால் …

மனிதர்களுக்கு மகிழ்ச்சி !

அதுவும் இரவு நேரத்து

இதமான மழையில்

கூரை நனைந்து

சுவர்கள் குளிர்ந்து

தரையும் தணுத்து…

போர்வைக்குள் புதைந்து விட்டால்

விடியலும் வெறுப்பாகும் !

மரங்களில் கூடு கட்டி

குஞ்சுகளோடு குடியிருக்கும் Continue reading “மழையும் சுடும்”

கவிதைக்குப் பொய்யழகு

1சுனாமியின் வேதனையை ஒரு கவிதையாய்க் கொட்டினால் பாருப்பா, சோகத்தில் ஆதாயம் தேடுகிறான் கவிஞன். இவனுக்கு இப்படிப் பொய்யாய் புலம்பியே பழகிப்போச்சு என்கிறார்கள் அறியாத சிலர். சுனாமியின் தகவல் வந்ததிலிருந்து, கண்கள் கரைபுரண்டோட செய்திகள் கேட்பதிலேயே தவிப்போடு இருந்தேன். சுனாமிக்கு உண்மையான காரணம் என்ன அதை எப்படித் தவிர்க்கமுடியும் என்ற என் சிந்தனை
எங்கெங்கோ சென்றது.

நேற்று முதல் காரியமாக அதிகாலையிலேயே, இந்து நாளிதழ் நிவாரண நிதி மூலமாக நிதியளித்தேன். நேற்று நடு இரவில் என் மனதில் தங்கிய சோகம், சிந்தனை, உணர்வுகளின் அலைக்களிப்பு எல்லாம் கவிதையாய் வெளிவந்து கொட்டின.

ஓவ்வொருவருக்கும், ஒவ்வொரு வடிகால். கவிஞனின் வடிகால் கவிதை. துக்கம் என்பது அழுகையால் மட்டும் வருவதில்லை. கவிதையாலும் வரும். களிப்பில் வருவதுதான் கவிதை என்பது தவறான நினைப்பு. இதுபோன்ற தருணங்களில் வரும் கவிதைகள் வார்த்தை தேடி அலையாது. உணர்வுகளை அப்படியே கொட்டும்.

கவிஞர்கள் உணர்வுகளால் ஆனவர்கள். பிணங்களைத் தின்று புகழ் தேடமாட்டார்கள். கவிஞன் என்பது அரிதார முகம் அல்ல. அது ஒரு மன இயல்பு. கவிஞன் தன்னை மீறிய உணர்வுகளால் ஆளப்படுபவன்,
அதைக் கவிதைகளில் இறக்கிவைக்கிறான். அது மிகை என்றும் கவிதைக்குப் பொய்யழகு என்றும்
கவிதை என்பதே பொய் என்றும் கூறுகிறார்கள் சிலர். Continue reading “கவிதைக்குப் பொய்யழகு”

மின்சாரம் – அப்படீன்னா என்னங்க !?

 

22-power-cut-300 மின்சாரம் – ஆட்சியை மாற்றுகிறது, ஆளுபவர்களை மாற்றி பேச வைக்கிறது, இருட்டை அழைக்கிறது, கொசுவுக்கு வரவேற்பு வைக்கிறது, உரைந்த ஐஸ்-ஐ உருக வைக்கிறது… இப்படியாக சொல்லிக் கொண்டே போனாலும், இன்றைய சூழலில் நமதூரில் மட்டுமா தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு தலை விரித்தாடுகின்றது இதற்கு காரணம்தான் என்ன?

இதற்காக கார் எடுத்துகிட்டு போய் அப்பர் மலையேறி தனிமையில் யோசிக்க வேண்டியதில்லை, முதலில் தேவைக்கு  அதிகமாக நாம் மின்சாரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம். அதற்கு காரணம் பெரும்பாலான எலக்ட்ரானிக் (மின்னனு) சாதனங்கள் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால் மின்சாரத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அடுத்ததாக அரசும்  உற்பத்தியை அதிகரித்து இருக்க வேண்டும்  ஆனால் முந்தை, இன்றைய அரசுகள்  அதைச் செய்யவில்லை. அவ்வாறு அரசு  செய்யாததால் ஆறு அறிவு  படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான்.

மின்சாரம் மின்சாரம் என்ற கூக்குரல்! ஆனால், மின்சாரம் அப்படின்னா என்ன  ? Continue reading “மின்சாரம் – அப்படீன்னா என்னங்க !?”

நொச்சி வந்தாச்சி

நொச்சி வந்தாச்சி
nochi treeஅரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் ‘நொச்சி’.

நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சி செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்தைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே கூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டல பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும் கொடை நொச்சி செடி.
Continue reading “நொச்சி வந்தாச்சி”

அது ஒரு குடைக் காலம்

941389_468657489879652_1544889649_nமுன்னொரு காலத்திலே நடந்து போனவங்க குடை பிடித்து நடந்தார்கள். அது மழையா.. வெயிலா எதுவாக இருந்தாலும் சரிதான். மனிதர்கள் குடையோடு நடந்தார்கள்.

குடை .. ஒரு ஆளுமையின் சின்னம். கொடையின் அடையாளம்..நாட்டாமையின் செங்கோல். குடை கையில் இல்லாவிட்டால் சிலருக்கு நடையே வராது.

குடை … ஆளுக்கு ஆள் வித விதமாக பயன்படுத்தப்படும் . பணக்காரனுக்கு குடை பிடிக்க பணியாள் உண்டு. மழை பெய்தால் பணியாளர் மழையில் நனைந்து கொண்டு எஜமானர் நனையாமல் குடை பிடிப்பார்.. அத்தனை எஜமான விசுவாசம் . எத்தனைபேர் மழையில் நனைந்தாலும் செல்வந்தர்கள் குடையின் கீழ் யாரும் ஒதுங்க முடியாது. பண்ணையார்கள் குடை பிடித்தபடி வந்து தங்கள் வயலில் வேலை செய்யும் பெண்களை

அதட்டுவார்கள். மலையாள தம்புரான்களும் தம்புராட்டிகளும் இரவிலும் பகலிலும் குடையின் கீழ் பரிவாரங்களோடு பவனி வருவார்கள். உயர் சாதியைத் தவிர இதர சாதியினர் குடை பிடிக்கக் கூடாது என்ற தடையும் குடைக்கு இருந்தது. Continue reading “அது ஒரு குடைக் காலம்”

வேண்டுதல் வேண்டுமா?

தேவைகள் உள்ளவனே மனிதன். தன் தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை கொண்டவனும் அவன். ஆனால் எது தன் தேவை என்று அறியாதபோது அவன் தோல்வியுறுகிறான். தேவையறிந்து திட்டமிடுதலே எதிலும் முதல்படி. காரியம் என்பது கடைசிப்படிதான்.

வேண்டுதல் என்பது தேவையறிந்து திட்டமிடுவதைப் போன்றது. நிறைவேற்ற சிரமம் தரும் தேவைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு இவற்றைச் செய்யவேண்டும் என்று உறுதி செய்துகொள்வதுதான் வேண்டுதல்

இந்த ஆற்றை எப்படியாவது கடந்துவிடவேண்டும் என்று நினைத்து முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர் இந்த ஆற்றைக் கடக்க இறைவா எனக்கு அருள்செய் என்று கூறிக்கொண்டு முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர். இந்த இருவருமே தன் தேவையைத் தன்னிடமே உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. Continue reading “வேண்டுதல் வேண்டுமா?”

விட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்

931185_530100097053628_424824118_n
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.

இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன?

நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படு வதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.

நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.

உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது. Continue reading “விட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்”

தாய்

246433_522380837776948_1364810777_nதன்னலம் கருதாது சேய் நலம் கருதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்

தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்
தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்

தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்
முடியும் மெய்யான மெய் தாய்

எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்

உடலில் உயிர் உள்ளவரை என்றும்
ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய்

மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை

மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்

உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை

உலகில் யாரை மறந்தாலும் மகன்களே
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்

ravi.gifகவிஞர் இரா .இரவி

என்னடா காதல் இது ?

என்னடா காதல் இது ?
——————————-

என்ன இது காதல் ?

மகரந்தச் சேர்க்கைக்காய்
மலர்கள் மீது
வந்தமரும்
வண்ணத்துப் பூச்சிகளாய்,

ஹார்மோன்களின்
காட்டுக் கத்தலில்,
பூவுக்குள்
பூட்டிக் கொள்ளும் மோகத்தில்,
இருட்டுக் கதவுகளை
நோக்கிய
குருட்டு ஓட்டம் தானே இது !

மறுப்பீர்களா ?

சீண்டல்களை
சிரச்சேதம் செய்துவிட்ட
ஒரு காதல் ஜோடியைக்
கைகாட்ட இயலுமா
உங்களால் ?
Continue reading “என்னடா காதல் இது ?”

நெருப்பு

12neruppuஊனும் பசியில் உயிரும் பசியில்
நோயும் பசியில் மருந்தும் பசியில்
பசியின் விசைக்கு மூலம் உண்டா
பசியைப் பார்த்த விழிகள் உண்டா

நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்

வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம் Continue reading “நெருப்பு”